Monday 18 December 2017

அருவி அப்படி என்னப்பா படத்துல... அப்டின்னு, கேக்குறீங்களா???


சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் அருவி.!ரொம்ப சிம்பிள் அருவிய நாம பாக்கும் போது ஒன்னு அதை ரசிக்க முடியும்.இல்ல வெறுமனே அதை பாத்துட்டு வர முடியும்.ஆனா அதை உணர்றது, அதில் நனைஞ்சா மட்டும் தான் புரியும்..அப்டி ஒரு உணர்வு தான் அருவி.

அருவி என்னும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சுவாரசிமான விஷயங்களின் தொகுப்பு தான் இப்படத்தின் கதைக்களம். ஒரு கோணத்தில் இருந்து பார்த்தால் இப்படம் அருவி என்ற பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை போல் இருக்கும். இன்னொரு கோணத்தில் இப்படம் அருவி சந்திக்கும் சுவாரசியமான சம்பவங்கள், அவள் கடந்து செல்லும் பாதையில் நிகழும் பிரச்சனை, அவள் சந்திக்கும் மனிதர்கள் என சமூகம் சார்ந்து பேசும் ஒரு கதையாக இருக்கும்.



ஒரு பொண்ணு சாதாரணமா, இருந்தவ ஒரு ரணத்துக்குள்ள போகும்போது உண்டாகுற வலி இருக்கும் பாருங்க..அருவி திரைப்படத்தின் இந்த மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணம் படத்தில் கதாநாயகியாக வாழ்ந்திருக்கும் அதிதி பாலன் என்பதில் துளிக்கூட சந்தேகமில்லை!அது தான் படத்தோட ஒன் லைன். 


அருவி பத்தி சொல்லனும்னா, நாம சாதாரணமா பாக்குற பக்கத்து வீட்டு பொண்ணு, நம்ம வீட்டு பொண்ணு, குறும்பு..எல்லாம் கலந்தவ.ஒரு திடீர் சம்பவம் அவ வாழ்க்கைய புரட்டி போடுது.உடனே அவ புரட்சி பண்ண போகல. வாழ போறா. பெயருக்கேத்த மாதிரி, ரொம்ப சுதந்திரமா வளந்தவ.அப்பா, தம்பி, டான்ஸ், friends, அப்டின்னு சின்ன வட்டம் அவ வாழ்க்கை.அதுல இருந்து வலியோட போறா. Friend வீட்டுக்கு போனா அங்க பிரச்சனை. உதவி பண்றேன்னு உபன்யாசம் பண்றவன் மூலமாவும் பிரச்சனை, வேலை குடுத்தவனாலயும் பிரச்சனை. இதை எல்லாம் சரி பண்ண tv சேனல் கு திருநங்கை தோழியோட போறா.அங்க நடக்குற விஷயங்கள் தான் படத்தோட பலம். அந்த எடத்துல தெரியுது அவ ஒரு HIV நோயாளி னு...நிற்க.... இதெல்லாம் சொல்லி டாகுமெண்ட்ரி படம் யோசிக்காதிங்க. அருவி உங்களை பகடி பண்ணி நெறய சிரிக்க வப்பா. அடுத்த நிமிஷம் கேள்வி கேப்பா...அதிதி பாலன் அப்டின்னு அந்த நடிகையாம், பேரே மறந்துடும் அருவி மட்டும் தான் தோணுது. ஸ்கூல் ல தன்னை கண்டிக்க வாத்தியார் கிள்ளுறார், பொண்ணுங்களுக்கு தெரியாதா good touch, bad டச், அருவி தன் கையை கழுவுரா.. சமுதாயத்தில் அப்டி பல பேர் பெண்களை ட்ரீட் பண்றாங்க. ஒரு dialouge அருவி friend சொல்றது, "இந்த பசங்க ஐஸ்வர்யா ராய் ரோடு ல வந்தா கூட சும்மா இருக்காணுங்க ஆனா அரவானிங்க வந்தா மட்டும் இப்டி பண்றாங்க"👌👌தன் பிறந்த நாளுக்கு wish பண்ற தம்பிய வாரி அணைக்குறா.. அதே தம்பி கிட்ட, அவளை பத்தி அம்மா அசிங்கமா சொல்லும் போதும், அப்பா அவளை நம்பா ம திட்டும் போதும். அதிதி நடிப்பு...ஆஹா....tv ஸ்டேஷன்ல துப்பாக்கி முனையில் எல்லார்கிட்டயும் game ஆடும் போது, 7ஆம் வாய்ப்பாடு கேக்குறது, விஜய் படத்துல நல்ல படம், எப்படி னு போதும்?..ஒரு length dialouge" இந்த சமூகம் என்ன சொல்லுது ....அப்டின்னு எல்லாம் உண்மையான முடிஞ்சு அரேஸ்ட் ஆகி இருக்கும் போது விசாரனைல அந்த பொண்ணு சிரிக்கும் பாருங்க இயக்குனர் புரிய வைக்கிறார், அருவி அன்பானவன்னு.. HIV நோயாளிகளை வலிகளை புரிய வைக்கும் போதும் இயக்குனர் நேர்த்தி புரியும்.அருவி climax ல அழுகும் போது சொல்றது, " எனக்கும் கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்து வாழனும் னு ஆசை..ஆனா அப்பா நான் தப்பு பண்ணல பா....உங்க குழந்தைக்கு அருவி னு முடிஞ்சா பெயர் வைங்க, எதித்து பேசு, தைரியமா இரு, எல்லார்கிட்டயும் அன்பா இரு னு சொல்லிகுடுங்க, " அப்டின்னு அருவி சொல்லும் போது கண்ணீர் துளிர்க்கும் பாருங்க அது தான் படத்தோட வெற்றி.அருவி சொல்லும் பாடம் ஒன்னு தான் மன்னிப்பும், பேரன்பும் எல்லாருக்கும் அவசியம்..பாட்டிலை சுத்தும் game கடைசியா அவ நேசித்த மனிதர்கள் முன்னாடி அவகிட்ட வரும் போது ...அந்த கள்ளம் இல்ல சிரிப்பு வரும்...அருவிக்கு கடைசியா அவ கேட்டதும் வருது.முதல் படத்திலேயே யாரும் ஏற்கத் துணியாத ஒரு கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து பல இடங்களில் கைதட்டல்களை வாங்கியிருக்கிறார் அதிதி.

சென்னையைச் சேர்ந்த அதிதி, பெங்களூரில் சட்டம் படித்தவர். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகமிருந்ததால் வக்கீல் தொழிலுக்குச் செல்லாமல் நாடகங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

சிரிப்பு, ஏக்கம், பயம் என ஒவ்வொரு உணர்வுகளையும், அலட்டல் இல்லாமல் அடுத்தடுத்து முகத்தில் காட்டி தேர்ந்த நடிகை என்பதை நிரூபிக்கிறார் அருவி.

இப்படத்தில் முகமது அலி பாய்க் என்ற ஹைதராபாத்தை சேர்ந்த தியேட்டர் ஆர்டிஸ்ட், அஞ்சலி வரதன் என்ற திருநங்கை , லட்சுமி கோபால் சாமி என்ற கன்னட நடிகை , மதன் என 20க்கும் மேற்பட்டர்வர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வாழ்த்துக்கள்.


இப்படம் வெளியாவதற்கு முன்னரே ஷாங்காய், மும்பை சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும், கேரளா தேசிய திரைப்பட விழாவிலும், தி ஹபிடேட் திரைப்பட விழா டெல்லி, தி பயோஸ்கோப் குளோபல் திரைப்பட விழா பஞ்சாப் என பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படம்..கண்டிப்பாக பெண்களுடன் சேர்ந்து அனைவரும் காண வேண்டிய படம்.

சினிமா விமர்சகர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் அதிகம் பாராட்டப்பட்ட அருவி திரைப்படம், தமிழ் சினிமாவின் காக்கப்பட வேண்டிய பொக்கிஷமாக மாறியிருக்கிறது.


ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment