Friday 1 September 2017

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் நீட்டில் முதல் 120 ரேங்க் வாங்கியவர்களின் பட்டியல்...

Image may contain: textமருத்துவப் படிப்பு சேர்க்கையில் நீட்டில் முதல் 120 ரேங்க் வாங்கியவர்களின் பட்டியல்...
இதில் எத்தனை பூணூல் OC வகுப்பினர் இருக்கிறார்கள் என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்...! அதே சமயம்.... மார்க்கங்களைச் சேர்ந்தவர்கள் எத்தனை என்றும் பார்க்கவும்...!

கடந்த வருடம் மருத்துவ இருக்கைகள் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 94. ஆனால் இந்த வருடம் 135.... இதுல எங்க தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ந
ீட் இருக்கு??! 

நிலைமை இப்படி இருக்கையில் பழைய குருடி கதவ தொறடி என்ற வழக்கத்தில் உள்ள பழமொழி போல பிராமணர்களை குறிவைத்து தாக்கி அவர்கள் மட்டுமே முன்னிலையில் இருப்பதாக சொல்லிகொண்டு மக்களை குழப்பி வழக்கம் போல் திராவிட கட்சிகளும், தமிழ் பிரிவினைவாத இயக்கங்களும், சீன கைகூலிகளும் குளிர்காய்கின்றனர். 

அடுத்த வாதம் OC வகையில் போன வருடம் 168 ஆனா இந்த முறை 515.. 

இவனுக எப்படி எல்லாம் மக்களை முட்டாளாக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு மிக சிறந்த உதாரணம். அதாவது அந்த 515 பேரும் BRAHMINS or UPPER (forward) CASTE'னு காட்ட முற்படுறாங்க. 

ஆனா உண்மையில் அதில் 

36 பேர் sc, 
201 பேர் BC, 
179 MBC. 

இதுபோக மீதி 99 பேர்ல தான் BRAHMIN, CHETTIAR உட்பட ஏனைய UNRESERVED and UPPER CASTES வருகிறார்கள். இதுல எங்க சமூக நீதிக்கு குல்லா போடப்பட்டுள்ளது.

அடேய் இன்னமும் நீங்கள் செய்யும் திருட்டு வேலைகளுக்கு செருப்படி கொடுத்துவரும் பாஜகவின் மீது தமிழக மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டுவதற்கு பல தில்லுமுள்ளு வேலையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறீர்கள்.

மேலும் தமிழக அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன திடம் இல்லாத பெண் அல்ல. தற்கொலையில் எதிர்க்கட்சிகளின் சதி இருக்கிறதா என்பதை புலனாய்வு செய்து மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. இதனை புலனாய்வு செய்வதற்காக மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டால் தவறில்லை.

இதன் மூலம் நீட் தேர்வை முடக்கும் வேலையை இவர்கள் ஊடக உதவியுடன் செய்து கொண்டு இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்திற்க்கு சென்று போராட காசு செலவு செய்து அனுப்பிய அரசியல் கட்சிகள் அவர்களின் நிர்வாக கோட்டாவில் இயங்கும் கல்லுரியில் இடம் வாங்கி தர மனமில்லை. 

மேலும் இந்த மாணவிக்கு இடம் கொடுக்காத தமிழக அரசியல்வாதிகள் நிர்வாகத்தில் உள்ள தனியார் கல்லுரிகள்:

ராமச்சந்திரா
எஸ் ஆர் எம்
சவிதா
மீனாட்சி
பாலாஜி
தன லட்சமி ஸ்ரீனிவாசன்
அன்னபூரான
கிருஸ்தவ மருத்துவ கல்லூரி
Acs மருத்துவ கல்லூரி
செட்டிநாடு
கற்பக விநாயகா
மாதா
மேல்மருவத்தூர்
PSG
ராஜா முத்தையா
ஸ்ரீ சத்திய சாய்
ஸ்ரீ மூகாம்பிகை
ஸ்ரீ முத்துக்குமார்
தாகூர்
வேலம்மாள்

என்று பல கல்லூரியில் இந்த பெண்ணுக்கு ஓர் இடம் இவர்களால் அரசு மருத்துவ கல்லூரி கட்டணத்தில் ஒதுக்க முடியாதா? அதை செய்யாமல் நீட் மீது பாய்வதன் காரணம் என்ன?

காரணம் என்னவென்றால் தனது அரசியல் கட்சி விளம்பரத்துகாகவும், ஓட்டுகளை பொருக்குவதற்காகவும் அனிதா என்ற ஏழைப்பெண் ஒருவருக்காக செய்துவிட்டால் மற்றவர்களும் கேட்பார்களே... அப்புரம் எப்படி கோடிக்கணக்கில் வருமானம் பார்ப்பது?

இதே அடிப்படையில்தான், அனிதா என்ற பெண் தமிழகத்தில் இருக்கும் சிலரின் தூண்டுதலின் நெருக்கடி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டு இறந்தாலும் அவர் ஒருவருக்காகவோ அல்லது தமிழக மாநிலத்திற்காக மட்டுமோ நீட் தேர்வு நீக்கப்பட மாட்டாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இவர்கள் அரசியல் செய்ய வேறு இடம் இருக்க, உயிர் காக்கும் படிப்பில் அரசியல் செய்வதை மத்திய, மாநில அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கத்தான் வேண்டும்.

நன்றி :கராத்தே வெங்கடேசன்,செந்தில் வடிவேலன் ,பாலாஜி வெங்கட்ராமன்.

No comments:

Post a Comment