Wednesday 15 March 2017

கொசு விரட்டி திரவத்தை நாம் வீட்டில் மீண்டும் உபயோகப் படுத்தலாம்!!

No automatic alt text available.வீட்டில் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.
ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.
அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி எடுக்கும் கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.
அதை விட கூடுதல் பயன்கள் ஏராளம். 50 மில்லி வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே (பதாஞ்சலியில் அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது).
மொத்த செலவே ரூ 11 மட்டும், ஒரு மாதத்திற்கு.
இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய். கடையில் வாங்கும் கொசு விரட்டியில் அல்லோத்ரின் எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.
இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள். யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள். ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள். நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு. அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.
இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில் சினிமா எடுக்கிறார்கள். மக்களை மயக்க விளம்பரம் எடுத்து கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.
ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.
நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொண்டால் குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து நமது விவசாயி பயனடைவான்.
இந்த விஷயத்தை நமக்குத் தெரிவித்த இந்தப் பெண்மணியைப் பாராட்டுகிறேன்.
நாம் அனைவரும் பயன் பெறவும், நாடு பயனடையவும் உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.
இந்த தகவலை பகிருங்கள். ஒரு பத்தாயிரம் பகிர்வுகள் நடந்தால் ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்தது குறித்து ஒரு இந்தியனாகிய நான் பெருமை அடைகிறேன் ..

No comments:

Post a Comment