Wednesday 22 February 2017

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் அதிகரிக்கும் சிசேரியன்கள்(cesarean delivery)!!!

Related imageதமிழகத்தில் 20 மருத்துவகல்லூரிகள், 26 தலைமை மருத்துவமனைகள், 240 தாலுகா மருத்துவமனைகள், 1,751 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 382 ஊரக குடும்ப நல மையங்கள், 110 பேறு காலத்திற்கு பின் கவனிப்பு மையங்கள், 108 நகர்ப்புற குடும்ப நல மையங்கள் என 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் இன்றும் பெரிய அறுவை சிகிச்சைகள் தொடங்கி பிரசவம் வரை தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் பணியை அரசு மருத்துவமனைகள் செய்து வருகின்றன.
குறிப்பாக நடுத்தர மற்றும் வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனைகளையே நாடி செல்லும் நிலை நீடித்து வருகிறது. இப்படி தனியார் மருத்துவமனைக்கு செல்பவர்களுக்கு 90 சதவீதம் சுகப்பிரசவம் ஆகக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் சிசேரியன் முறையிலேயே பிரசவம் நடக்கிறது.
காரணம் சுகபிரசவத்தை விட சிசேரியன் சிகிச்சை மூலம் வருவாய் அதிகம் வசூலிக்க முடியும் என்பதால் இதற்கே தனியார் மருத்துவமனைகள் அதிக முக்கியத்துவம் தருகின்றன. சாதாரண வியாதிக்காக தனியார் மருத்துவமனையில் செலவிட தயங்குபவர்கள் கூட பிரசவத்துக்கு தனியார் மருத்துவமனைகள் நிர்ணயிக்கும் கட்டணத்தை தயங்காமல் கட்டுகின்றனர். சுகப்பிரசவம் என்றால் கட்டணம் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே சிசேரியன் என்றால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கட்டணமாக வசூலித்து விடுகின்றனர். இதுதவிர குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறந்தால் அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று யாராவது கணித்தால் அந்த நேரத்தில் சிசேரியன் மூலம் குழந்தையை பிறக்க செய்யும் சட்டத்துக்கு புறம்பான செயல்களும் தனியார் மருத்துவமனைகளில் நடக்கிறது.
தேசிய குடும்ப நல சுகாதார அமைப்பின் மூலம் தமிழ்நாடு, ஆந்திரா உட்பட 15 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் மூலமாக பிரசவம் செய்வது அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த புள்ளிவிவர பட்டியலில், திரிபுராவில் தனியார் மருத்துவமனைகளில் 87 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 36.4 சதவீதமும் சிசேரியன் பிரசவம் நடக்கிறது.
இதேபோல், பீகாரில் தனியார் மருத்துவமனைகளில் 37 சதவீதமும், அரசு மருத்துவமனைகளில் 37.1 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் நடப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தமிழகத்தில் 36 சதவீதமும், தெலுங்கானாவில் 63 சதவீதமும் சிசேரியன் மூலம் பிரசவம் பார்க்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் 10 முதல் 15 சதவீத பிரசவங்கள் மட்டுமே சிசேரியன் முறையில் மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
சுகப்பிரசவமே ஆனாலும் வசூல் தனியார் மருத்துவமனைகளில் ஒரு சிலவற்றில் கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் செய்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு பரிசோதனை செய்கிறோம். என்ற பெயரில் குழந்தை பிறந்த பின்னர் 10 நாட்களுக்கு மேலாக தங்க வைத்துக்கொண்டு அதன்மூலமாக கட்டணம் வசூலித்து விடுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதில் குழந்தைகளுக்கு என்னதான் பிரச்னை என்றாலும் அதுகுறித்து கேட்டால் பதில் கிடைப்பதில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
தொகுப்பு : அ. தையுபா  அஜ்மல் .

No comments:

Post a Comment