Tuesday, January 24, 2017

போராட்டத்தில் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா?

Image result for காவல்துறை உங்கள் நண்பன்காவல் நிலையத்தை எரித்தது போராட்டக்காரார்கள் அல்ல என்று போலீஸே சொல்கிறது என்றால், இதன் பின்னால் இருப்பது அரசியல்வாதிகளா? கட்சிகளா? சமூக விரோத சக்திகளா?தமிழக காவல்துறை என்றும் மாறாது.எட்டு நாட்கள் நம் மாணவர்கள் காவலர்களை தனக்குள் ஒருவராக நினத்து உணவு, தண்ணீர் அனைத்தும் கொடுத்து வந்தார்கள். அவர்களை இன்று விரோதிகளை போல காவல்துறை அடித்து நொருக்குகிரது.தமிழக காவல்துறையில் நல்லவர்கலும் இல்லை, நன்றி உள்ளவர்களும் இல்லை.கேட்டால் எங்கள் கடமை இது என்பார்கள். அதே கர்நாடக கலவரம் நடந்த போது அந்த மாநில காவல்துறை அந்த மாநில மக்கள் மீது எந்த வன்முறையையும் பிரயோகிக்கவில்லை.அப்போதும் நம் மக்கள் மீது தான் நம் காவல் துறை நடவடிக்கைகள் எடுத்து கைது செய்தது. 50 ஆண்டுகள் முன்பு படிக்காத பாமரர்களைஎப்படி காவல்துறை கையாண்டதோ அப்படியே தான் இன்று படித்த அறிவு சார் சமூகத்தையும் காவல்துறை கையாளுகிறது.தமிழக காவல்துறையில் காவலர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அறிவுசார் சமூகத்தில் நாமும் வாழ்கிரோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நிறைய காவல்துறை அதிகாரிகள் மேடைகளில் சிறப்பாக மக்களுக்கு நல்ல உபதேசம் வழங்குகிறார்கள். அதனை முதலில் அவர்களும் அவர்கள் துறையில் உள்ளவர்களும் கடைபிடிக்க வேண்டும்.மொத்தத்தில் நம் சமூகம் கற்றுள்ள,கடைபிடிக்கிற நாகரீகத்தை இன்னும் நம் காவல்துறை கற்றுக்கொள்ளவில்லை என்பது வருந்த தக்கது.Image result for வன்முறையில் ஈடுபடக் கூடாது

தமிழக காவல்துறையின் மிக கீழ்த்தரமான செயலை இதன் மூலம் அரியாலாம்


வீடுகளை உடைப்பது, வாகனங்களை எரிப்பது, அப்பாவி பொது மக்களை அடிப்பது.. இதையெல்லாம் யார் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? ரவுடிகள் மற்றும் தீவிரவாதிகள் என்று நீங்கள் சொன்னால் உடனடியாக இந்த காணொளியை பாருங்கள். சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள நடுக்குப்பம் பகுதியில் இந்த கொடுமைகள் அனைத்தையும் செய்தது சென்னை காவல்துறை. இனி பொதுமக்களுக்கு இந்த காவல்துறை மீது எவ்வாறு நம்பிக்கை வரும்?


1)கர்பினி பெண்ணின் சிசுவை கொலை செய்தது.

2)ஏழைகளின் ஆட்டோவை தீ வைத்து கொளுத்தியது.

3)போராட்ட கலத்தில் பெண்ணின் ஆடையை கிழித்து அரை நிவாரணம் படுத்தியது.

4)மாணவர்கள் மீது கொலைவெரி தாக்குதல் நடத்தியது.

5)மதத்தின் பெயரால் அப்பாவி வாலிபரை எட்டுபேர் சேர்ந்து தாக்கியது.

6)சம்மந்தமே இல்லாம தெருவுல நின்ன பைக்குகலை நொருக்கியது.

7)ஏழைகளின் குடிசையில் தீ வைத்தது அதுவும் பெண் போலீஸ்.


நம்புங்க காவல்துறை உங்கள் நண்பன்.
இதையென்னம் ஏன் மனித உரிமை ஆணையம் கண்டுக்கொல்லாம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் ஒன்றுமாட்டு புலப்படுகிறது நம் மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்த தமிழக அரசின்

செயலாகவே இதை நம் கருதலாம். யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது. ஆனால் ஒன்று மட்டும் நங்கள் கூறுவது, இந்த மீதம் உள்ள 4 ஆண்டோடு அதிமுக வின் அராஜகம் மொத்தமாக ஒழிந்து விடும் என்பது மட்டும் தீர்க்கமாக தெரிகிறது .


# நீதிபதிகளின் கண்கள் மூடப்பட்டு உள்ளதா?...

# மனித உரிமை ஆணையம் இந்த செயலுக்கு என்ன செய்யபோகிறது?

# சட்டம் ஒரு இருட்டறை என்பார்கள் அதில் வாதாடும் வழக்குறைஞ்சர்களே வெளிச்சம் என்பார்கள் அவர்களும் இதில் மவுனம் காக்க போகிறார்களா?... 
ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
Sunday, January 22, 2017

காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை !!


25,00000 இளைஞர்கள் 500 இடங்களில் அமைதியாக, காந்தீய வழியில் போராடி வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். உலகமே உற்று நோக்கி வியந்து நிற்கும் வகையில் வரலாறு படைத்திருக்கிறார்கள். இப்படியொரு தீப்பொறி அவர்களுக்குள் கனன்று கொண்டிருப்பதே வெளியில் தெரியாமல் பொத்தி வைத்திருந்தவர்கள் அதன் எல்லை மீறி இன்று பெருந்தீயாக கொதித்தெழுந்துள்ளார்கள். கங்கு கூட குளிர்த் தென்றலாய் அமைதி காக்கும் என்பதையும் உணர்த்தி, சரித்திரம் படைத்துள்ளார்கள். என் மனச்சாட்சியே எனக்குத் தலைவன், முகமூடியணிந்த எந்த தலைவனும் எங்களுக்குத் தேவையில்லை என்று ஒற்றுமையுடன் கூடி நின்று நினைத்ததை நடத்தி சாதனைப்படைத்து விட்டார்கள். புல்லுறுவிகளாக உள் நுழைய முற்பட்ட சாதி அரசியல்வாதிகளையும், அதனுள் விட்டிலாய் வீழ இருந்தவரையும் அடையாளம் கண்டு நாசூக்காக ஓரங்கட்டிய சடங்குகளும் அழகாக நடந்துள்ளன. வெகு இயல்பாக இளைஞரோடு இளைஞராக கலக்க இருந்த புல்லுருவிகளையும் நிதானமாக திறமையாக வெளியேற்றிய சாதனைகளையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இலக்கு நேர்மையானதாக, தன்னலமற்றதாக, நாட்டின் நலனை மட்டுமே கருத்தில்கொண்டதாக இருக்கும்பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதை மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளனர். குப்பை போடாமல், தீய சொற்களையும், தீய செயல்களிலும் ஈடுபடாமல் மனமுதிர்ச்சியுடன் நடந்துகொண்ட இந்த துள்ளிவரும் காளைகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பாடம் புகட்டியுள்ளனர். இதற்கு மேலும் திருந்தாவிட்டால் அடுத்து அவர்களின் நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதையும் தெளிவாகவே உணர்த்தியுள்ளார்கள். அண்டை மாநில இளைஞர்களும் தன்னார்வத்துடன் உதவிக்கு வரத் தயாராக இருந்ததன் மூலம் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் நம் நாட்டிற்குக் கிடைத்த வரம் என்றே பெருமை பொங்க கூறமுடிகிறது. சில புல்லுறுவிகள் நம் நாட்டுத் தலைவர்களை மரியாதைக் குறைவாகப் பேசியும், தேவையில்லாத செயல்பாடுகளில் இறங்கியும் உள்ளதற்கு இந்த மாணவச் செல்வங்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல என்பதையும் உணர்த்தியுள்ளார்கள். கூட்டத்தில் குளிர் காய்ந்துகொண்டு தங்கள் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்ட சுயநலவாதிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. மற்றபடி பாலின பாகுபாடின்றி எல்லோரும் ஓரினம் என்ற அறைகூவலோடு, பெண்களையும் கௌரவமாக நடத்தி, எந்தவொரு அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாகப் போராடி வெற்றி கண்டுள்ள இளைஞர்களை/மாணவச் செல்வங்களை எத்துணை பாராட்டினாலும் தகும். Image result for ஜல்லிக்கட்டுப் போராட்டம்
அவசரச்சட்டம் மத்திய அரசால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு தலைவரும் ஏற்றுக்கொள்வதற்காக அவருடைய பார்வைக்குச் சென்றுள்ளது. இன்று மாலைக்குள் ஆளுநரும் கையொப்பமிட இந்த அவசரச் சட்டமானது மாநில அமைச்சர் குழுக்களால் ஏற்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. நாளை அலங்காநல்லூரில் சல்லிக்கட்டு வீர விளையாட்டைத் தாமே துவங்கி வைப்பதாக தமிழக முதல்வர் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றே அதற்கான பணிகள் தொடங்கி மாவட்ட கலெக்டர் வாடிவாசல் வந்து பார்வையிட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதற்கான ஆரம்பப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.


இந்த போராட்டம் எதை காட்டுகிறது?
1.தமிழன் என்ற உணர்வு
2.பொறுமையின் எல்லை
3.பொறுமையின் உச்சம்
4.ஒருங்கிணைப்பு முறை
5.கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு,
6.தெளிவான கருத்துக்கள்
7.தன்னம்பிக்கை
8.மக்களின் சீற்றம்
9.உணர்வுகளின் குவியல்
10.உ ண்மை போராட்டம்
11.அரசியல் உதாசீனம்
12.மக்கள் ஒற்றுமை
13.மனித நேயம்
14.எதிர்பார்பில்லாத உதவி
15.தமிழின உணர்வு முன்னுரிமை
16.பெண்களின் முழு ஆதரவு
17.சமுதாய எழுச்சி
18.காவல்துறை ஆதரவு
19.அரசியல் கட்சிகளின் அதிர்ச்சி
20.சமூக வளைதளங்களின் தேவை.....
இப் போராட்டம் வெற்றியின் முகவரி!!
கண்ணியம் காத்த அனைத்து இளைஞர்களுக்கும் தமிழ் பண்பாட்டை உலகிற்கே உணர்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பாராட்டுதல்களும், வாழ்த்துகளும் தெரிவிக்கும் அதே நேரத்தில் மேலும் இதே ஒற்றுமையையும், அமைதியையும் என்றும் காத்து தமிழர் நலம் பேணுவோம் என்று உறுதியெடுப்போம்!

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

பெங்களூரு ஷாப்பிங் மால்களில்பதப்படுத்தப்பட்ட பால் !!!

Image may contain: textFair life என்னும் பதப்படுத்தப்பட்ட பால் பெங்களூரு ஷாப்பிங் மால்களில் சமீபத்தில் விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்தப் பாலில் அப்படியென்ன விசேஷம்?
இந்தப் பாலில் 50% அதிக புரோட்டீனும், 30% அதிக கால்சியமும், 50% குறைக்கப்பட்ட சர்க்கரையும் உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றையும் விட விஷேசமான செய்தி இதை தயாரிப்பது கோக கோலா நிறுவனம் என்பதுதான்! (இந்த நிறுவனத்தைப் பற்றி எழுதத் துவங்கினால் தட்டச்சு செய்து என் விரல்கள் ஓய்ந்து போய்விடும். அதைப் பின்னால் ஒருநாள் பிரித்து மேயலாம்.இப்போதைக்கு ஒத்தி வைக்கிறேன்)
கோககோலா நிறுவனத்தின் வட அமெரிக்க நிர்வாகி சேண்டி டக்ளஸ் கூறுகிறார், 'ஆசியச் சந்தையில் இந்தப் பால் விற்பனைக்கு வரும் போது கோலா நிறுவனம் பணமழையில் நனைந்து கொண்டிருக்கும். சாதாரண பாலை விட இரண்டு மடங்கு விலையில் நம்மால் அங்கு இந்த பதப்படுத்தப்பட்ட பாலை விற்பனை செய்துவிட முடியும். ஆனால் விளம்பரங்களின் மூலம் நாம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். முக்கிய நிகழ்வுகளின் விளம்பரத் தூதராக நாம் மாற வேண்டியது அவசியம். அதற்கு முன் பண்பாடு சார்ந்த விஷயங்களில் இருந்து மக்களை வெளியே கொண்டு வர வேண்டியது முக்கியமான பணி.'
சரி...அவர்கள் வியாபாரத்தை வளர்க்க அவர் பேசுகிறார். தொலையட்டும்.
இந்தப் பாலின் இலட்சணம் பற்றியும் நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
The china study என்பது ஒரு ஆய்வின் பெயர். அதைச் செய்தவர் காலின் கேம்ப்பல் என்பவர்.இந்தப் பாலை அவர் எலிகளிடம் பரிசோதனை செய்கிறார்.இந்தப் பாலில் இருக்கும் 50% அதிக புரோட்டீன் எலிகளுக்கு கேன்சர் நோயை வரவைக்கிறது. அதிர்ச்சி அடைந்த அவர் பதப்படுத்தப் படாத சாதாரண மாட்டுப் பாலை அந்த கேன்சர் பாதித்த எலிகளுக்கு மீண்டும் தந்து பரிசோதனை செய்கிறார். இப்போது அந்த எலிகளுக்கு கேன்சர் குணமடையா விட்டாலும் எதிர்ப்புத் திறன் கூடுவதைக் காண்கிறார்.
“From Grass to Glass” என்ற அவரது ஆய்வின் முடிவு இப்படிக் கூறுகிறது. ' பாலை பதப்படுத்துவதாகக் கூறி அதில் சர்க்கரையைக் குறைக்கிறேன்,புரோட்டீனை அதிகப் படுத்துகிறேன் ,கால்சிய அளவினைக் கூட்டுகிறேன் என்ற பெயரில் வேதியியல் வினைகளுக்கு உட்படுத்துவது கேன்சரில் கொண்டு வந்து விடுகிறது. பாலை இயற்கையாக எந்த வேதிவினைகளுக்கும் உட்படுத்தாமல் உண்பது மட்டுமே சரியானது.'
Fair life பால் The “real food” movement என்பதாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விற்பனை சர்வாதிகாரத்திற்கு எதிராக நம்மால் என்ன செய்துவிட முடியும்?
நாட்டு மாடுகளை இன்னும் வைத்துக் காப்பாற்றி வரும் நம் விவசாயிகளை இந்தச் சூறையாடலில் இருந்து எப்படி நாம் மீட்கப் போகிறோம்?
ஜல்லிக்கட்டுத் தடை என்பது கண்ணிற்குத் தெரியாத சிக்கலின் ஒரு முனை மட்டுமே!
மல்லுக்கட்டித் தான் தீர வேண்டும்!
நம்மால் முடியும் ...

Friday, January 20, 2017

தமிழினத்திற்கே இந்த போராட்டம் நல்லதொரு எடுத்துக்காட்டு !!

Image may contain: textImage result for கண்ணியம் காக்கும் இளைஞர்கள்நாமெல்லாம் தமிழன் என்பதில் பெருமை கொள்ள இதைவிட வேறு எந்த புரட்சியும் தேவையில்லை எங்கள் தலைவன் வளர்த்த பிள்ளைகள்   தமிழ்நாட்டிலும் உருவாகிவிட்டனர்    சகோதரர்களே !!

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட் தடையால் இந்தாண்டு நடக்க முடியாமல் போனது. ஜல்லிக்கட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் எந்த வித பலனும் ஏற்படவில்லை. இதையடுத்து அலங்காநல்லூரில் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 15ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சென்னை மெரினா, கோவை, சேலம், நெல்லை என பரவி தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டிற்காக போராடி வருகின்றனர்.

எங்க வேணாலும் போராட்டம் நடக்கலாம்..ஆனா இவ்வளவு அழகான ரசிக்க வைக்கும் போராட்டத்தை தமிழனால் மட்டுமே நடத்த முடியும்..

குப்பைகள் அகற்றம்
டிராபிக் க்ளியரன்ஸ்
பெண்களுக்கு பாதுகாப்பு
அனைவருக்கும் பட்டினியில்லா உணவு
அடிதடியில்லா அமைதி
வன்முறையில்லா வாதம்


அத்தனையும் அழகு..இந்த அழகை கற்பித்த ..இந்த நேர்த்தியை கற்பித்த கலாச்சாரத்தையா அழிக்க நினைக்கிறீர்கள்...???விடிய விடிய போராட்டம்
போராட்டம் நடத்தும் இளைஞர்கள் சற்றும் தளர்ச்சியடையாமல் தொடர்ந்து 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இரவு பகல் பாராமல் விடிய விடிய நடந்து வரும் இப்போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை எனவும், ஜல்லிக்கட்டிற்கான தடை என்பது நாட்டு மாட்டு இனங்களை அழிக்கும் செயல் எனவும், ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர்.


களத்தில் பெண்கள்
போராட்டத்தில் பெரும் அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மெரினா மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பெண்கள் என பலர் குடும்பத்துடன் வந்து பேராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர். குறிப்பாக தாய்மார்கள் கைகுழந்தையுடனும், கர்ப்பிணி பெண்களும் போராட்டக்களத்திற்கு வந்திருப்பது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் நேற்று சில கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தன. இந்நிலையில் இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது. இதுவரை கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்று இருந்த போராட்டத்தில் இன்று பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகர்கள் ஆதரவு

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நடத்தி வரும் இந்த போராட்டத்திற்கு இன்று பல தரப்பு வணிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆட்டோ, கால் டாக்ஸி போன்ற வாகனங்கள் எதுவும் இன்று ஓடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் லாரிகள், மணல் லாரிகள் ஓடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சிகள் போராட்ட அறிவிப்பு
இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும வகையில் அரசியல்கட்சிகளும் தங்கள் பங்கிற்கு போராட்டத்தை அறிவித்துள்ளனர். தி.மு.க., சார்பில் ரயில் மறியல் போராட்டம், த.மா.க., சார்பில் மனித சங்கிலி போராட்டம், இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த் மற்றும் இளைஞர்கள் போராட்டத்திற்கு ம.ந.,கூட்டணி ஆதரவு என அரசியல் கட்சிகளும் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது.

கண்ணியம் காக்கும் இளைஞர்கள்
லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே இடங்களில் கூடி உணர்வு ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டாலும் அவர்கள் தங்கள் போராட்டத்தில் கண்ணியத்தை காத்து வருகின்றனர். தங்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. மாறாக தங்கள் போராட்டம் நடத்தி வரும் இடங்களில் இருக்கும் குப்பைகளை தாங்களே அகற்றுவது, அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க போலீசாருக்கு உதவுவது என கூட்டம் சேர்க்கும் பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.


எந்தவித அசம்பாவித சம்பவங்களுக்கும் இடம் கொடுக்காமல் தமிழன் என்ற ஒரே உணர்வோடு அமைதியை போராடடம் தொடர வேண்டும். இது வெறும் ஜல்லிக்கட்டுக்கானது மட்டுமல்ல மழுங்கடிக்கப்பட்டு வந்த தமிழ் மரபுகளை தட்டி எழுப்பி உத்வேகம் கொள்ள செய்யும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

புதிய நல்ல தமிழின இளைய சமுதாயம் உலக இளைய சமுதாயத்திற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு....இக்கால சமுதாயம் எங்கே போய் கொண்டிருக்கிறது என்ற கடந்த சில ஆண்டு கேள்விக்குறிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாங்கள் நல்ல மனிதர்கள்,,,எங்களால் நல்ல சமுதாயத்தை மேலும் வருங்காலத்திற்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்....இவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்....உங்கள் போராட்டம் வெற்றி பெற்று கடந்த முப்பது, நாற்பது வருடங்களாய் திராவிட கட்சிகளால் தமிழன் இழந்த மானத்தையும், பெருமையும் மீட்கட்டும்....முத்துக்களை பிள்ளைகளாய் பெற்று இன உணர்வுடன் வளர்த்த ஒவ்வொரு பெற்றோருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,, பாராட்டுக்கள், சிரம் தாழ்ந்த வணக்கங்களும்..


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

Tuesday, January 17, 2017

ஜல்லிக்கட்டுக்காக போராட்டத்தில் அணிதிரட்டிய சமூக வலைத்தளங்கள் !!

சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே காமராஜர் சாலையின் நடைமேடையிலும், இணைப்புச் சாலையிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை காலை திடீரென போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தில் முதலில் குறைந்தளவு இளைஞர்களே காணப்பட்டனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகலுக்கு பின்னர் போராட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும், பீட்டா அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சிக் கூட்டத்தை மட்டுமே பார்த்து பழகிப் போன தமிழக மக்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது சமூக ஊடகத்தின் வலிமை முழுமையாகப் புரிந்தது.
Image result for அணிதிரட்டிய சமூக வலைத்தளங்கள்வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவது முதல், உணவின்றி தவித்து வருபவர்களுக்கு உணவு அளிப்பது வரை சமூக வலைதளங்கள் முக்கியப் பங்காற்றின. #Chennaifloods உள்ளிட்ட ஹேஷ் டேக்குகள் மூலம் பறிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்களால் முகம் தெரியாத எத்தனையோ பேர் காப்பாற்றப்பட்டனர். வாட்ஸ் அப் குழுக்கள், ட்விட்டர், பேஸ்புக் என சமூக வலைதளத்தை முழுமையாகப் பயன்படுத்தியவர்கள் இயற்கை பேரிடரிலிருந்து மக்களைக் காக்க தன்னெழுச்சியாக ஒன்றிணைந்தனர். சமூக வலைதளம் என்றாலே வீண் அரட்டைகள் என்ற நிலை மாறி அர்த்தமுள்ளதாக அன்றைய தினம் மாறியது.
இப்போது ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்த அளவுக்கு வீரியமிக்க அளவுக்கு வளர்ந்தற்கு சமூக ஊடகங்கள் தான் காரணம்.
#JusticeForJallikkattu #Jallikkattu உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து அது ட்விட்டரில் தேசிய அளவில் அதிகம் பேரால் பேசப்பட்ட ட்ரெண்டாக இன்று மாறியது.
சென்னை மெரினாவில் கடந்த 8ம் தேதி கூடிய கூட்டம் முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை ஊடக விளம்பரத்தாலோ, துண்டு பிரசுரங்கள் அல்லது வால் போஸ்டர்கள் மூலமாகவோ கூடிய கூட்டம் அல்ல. முழுக்க முழுக்க சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களைப் பெற்ற இளைஞர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.
ஸ்மார்ட்போன் பயன்பாடும், இணையத்தின் அசுர வளர்ச்சியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கையை அதிகரித்தது. அலங்காநல்லூர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரலும் சமூகவலைதளங்கள் மூலமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. சமூகவலைதளங்கள் மூலமாகவே இந்த செய்தியை அறிந்துகொண்ட இளைஞர்கள் சென்னை மெரினாவில் இரண்டாவது முறையாக ஒன்று கூடினர். 

Wednesday, January 11, 2017

ஜல்லிகட்டுக்கு முதல் முதலில் தடை வந்தது எப்போது ?

 • Related imageஜல்லிகட்டுக்கு முதல் முதலில் தடை வந்தது
  எப்போது தெரியுமா
  தெரியுமா தெரியுமா ...
  சாட்சாத் ....

  இரும்பு மனுஷி ...
  புரட்சி தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ..
  தமிழக முதல்வராக செங்கோல் ஏந்தி
  ஆட்சி செய்து கொண்டிருந்த போது தான்
  .
  29.03.2006 அன்று ....
  .
  ஜல்லிக்கட்டு புகழ் அலங்காநல்லூர் இருக்கும் அதே மதுரை மாநகரத்தில் இருக்கும்
  உயர்நீதி மன்றத்தில்
  நீதிபதி பானுமதி அவர்களால் அன்று தான் தடை செய்ய பட்டது
  .
  ஏப்ரல் மாதம் தீர்ப்பு வந்ததால் அந்த வருட பொங்கல் ஜல்லிக்கட்டு தப்பி பிழைத்து நடந்துவிட்டது
  .
  அதிமுக ஆட்சியில் 2006-லேயே, ஜல்லிக்கட்டு, காளை வண்டி பந்தயம் போன்றவற்றை நடத்தக் கூடாது என தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். என்பது செய்தி....

  இந்நிலையில்
  ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்று கூறி ஒருவர் தொடுத்த வழக்கில் ..
  வந்தவனுக்கு ஒண்ணு ...வராதவனுக்கும் ஒண்ணு என்பதை போல
  ரேக்ளா ரேசுக்கும் ...ஜல்லிகட்டுக்கும் சேர்த்து தடை விதித்தார் நீதிபதி பானுமதி அவர்கள்
  .
  ஜல்லிக்கட்டு தடைக்கு திமுகாவை குறை சொல்லும் ரத்தத்தின் ரத்தமே ...தொடர்ந்து படிங்க....

  இப்படி 2006 தடையை எதிர்த்து அதே மாதம் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது ..நல்ல காரியம் தான்....

  பிறகு தேர்தல் ...திமுக வெற்றி...

  2006 தடை இருந்த போதும் மறு பரிசீலனை செய்ய கோரி மனு கொடுத்து சிறப்பு அனுமதி பெற்று 2007ல் ஜல்லிக்கட்டு நடத்தியது ..திமுக....

  பிரச்சனை ஓய்ந்தது என்று நினைத்தால் ..
  விலங்குகள் நலவாரியம் 2007ல் மூக்கை நுழைத்து
  கொடுக்க பட்ட சிறப்பு அனுமதிக்கு எதிராக
  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது...

  இதை தொடர்ந்து ...மீண்டும் தடை
  தடை விதிக்க பட்ட நாள் 11.1.2008.....

  இதை எதிர்த்து 13.1.2008-ல் மேல்முறையீடு
  தமிழக அரசால் செய்யப்பட்டது.
  15.1.2008-ல் நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டை நடத்த
  உச்ச நீதிமன்றம் அனுமதித்தது.
  உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிகட்டை நடத்த அனுமதி பெற்ற கட்சி திமுக ...
  .
  2009-இல் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நெறிப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டது..அப்போதைய திமுக ஆட்சியால்
  பல நெறிபடுத்தும் வரைமுறைகள் கொண்டுவரப்பட்டது ...(இதன் காரணமாக 3000 இடத்தில் நடந்து வந்த ஜல்லிக்கட்டு வெறும் 34 இடத்தில் மட்டுமே நடந்ததாக வரலாறு ..பலர் நிபந்தனைகளை நடைமுறை படுத்த முடியாமல் ஜல்லிகட்டு நடத்துவதை நிறுத்தி கொண்டனர் )
  .
  இந்த நிபந்தனை ஜல்லிக்கட்டு திமுக ஆட்சியில் இருந்த 2010,2011 மற்றும் அதிமுக ஆட்சியில் இருந்த 2013,2014 வரை நடந்தது
  .
  இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சி இழந்த திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஜெயராம் ரமேஷ் தலைமையில் இருந்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் 2011 ல் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையையும் இணைத்து சுற்றறிக்கை வெளியிட்டது....

  அதை தொடர்ந்து திமுக கொடுத்த அழுத்தம் காரணமாக ...
  2014ல் ..ஜெயராம் ரமேஷை தொடர்ந்து பதவி ஏற்ற ஜெயந்தி நடராஜன் காளைகளை பட்டியலில் இருந்து நீக்கி அறிக்கை அளித்தார் ..
  இருப்பினும் அதை நீதி மன்றம் ஏற்று கொள்ள மறுத்துவிட்டது
  .
  இதனிடையே ...ஜல்லிக்கட்டு நிபந்தனைகள் கடைபிடிக்க படுகிறதா என்று கண்டறிய ..உச்ச நீதிமன்றத்தால் அனுப்பபட்ட குழு 2014-ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டில் காளையின் வாலை திருகுவது உள்ளிட்ட வதை செய்வதுபோன்ற புகைப்படங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
  இந்த குழுவில் Peta ஆதரவாளர்கள் இருந்தனர் என்பது குற்றசாட்டு இதனடிப் படையில்தான் 7.5.2014-ல் உச்ச நீதிமன்ற அமர்வு நிரந்தர தடை விதித்தது. இதனால் 2015-ல் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை.
  .
  peta உறுப்பினர்கள் கொண்ட குழு ஜல்லிகட்டுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுவதை அப்போதைய ஆட்சி கண்டுகொள்ள வில்லை என்பது ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் முன் வைக்கும் குற்றசாட்டு அப்போது யார் ஆட்சி என்று யாரும் விளக்க தேவை இல்லை என்று நம்புகிறேன்
  .

  2014 தேர்தலில் வெற்றி பெற்று பிஜேபி ஆட்சி அமைக்க பட்டது முதல் ஜல்லிக்கட்டு பிரச்னையை அக்கட்சியின் தமிழக MP பொன்னார் கையிலெடுத்து பிரச்னையை தீர்க்க முயல
  .
  மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் 7.1.2016 அன்று ஒரு அறிவிக்கையை வெளியிட்டது.
  இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது.
  அந்தக் காப்புரையில், உச்ச நீதிமன்றம் தனது 7.5.2014 நாளிட்ட உத்தரவில் குறிப்பிட்டுள்ள ஐந்து உரிமைகள் மற்றும் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தில் உள்ள கூறுகள் ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டுமென தெரிவித்தது.
  எனினும், ஒருசில அமைப்புகள் இந்த அறிவிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்ததில், 12.1.2016 அன்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது
  .
  அந்த தடை இன்று வரை தொடர்கிறது
  .
  இப்போது ...தன்னார்வ இளைஞர்கள் ..போராடி கொண்டிருக்க ..
  ஜல்லிக்கட்டு பிரச்சனை ..யார் முடித்து வைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்போடு காத்திருக்கிறது...

  எனினும் ...ஜல்லிக்கட்டு தடை வந்த போது எல்லாம் ஆட்சியில் இருந்தது அதிமுக தான் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மை...

  இப்போது கூட எள்ளளவும் சந்தேகம் வேண்டாம் கண்டிப்பாக நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு .....

Tuesday, January 10, 2017

பணத்தின் அருமையை நம் குழந்தைகளுக்கு உணர்வது உணர்த்துவது எப்படி?

Image result for பணம்ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.
ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்.
மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.
அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.
இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.
விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.
ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.
ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.
குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?
இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :
100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.
பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.
காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.
மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது.
தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? 
இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.
எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? 
100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?
 தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல் .

Thursday, January 5, 2017

சவுதில நாட்டில் ருசியான அல்பெய்க் கோழி பற்றிய தவகல் !!

Related image"அல் பெய்க்" சவுதில நாட்டில் ஜித்தா ,மெக்கா ,மதீனா,தாயிப் மற்றும் மற்றும் யான்பு  ஆகிய  ஊர்களில் வசிப்பவர்களுக்கு தெரியும் அல் பெய்க் ப்ரோஸ்டட் கோழியின் ருசி என்னவென்று .பொறித்த கோழிதான் 14 ரியாலுக்கு (ஒரு ரியால் 17.50 இந்திய மதிப்புக்கு) அரை கோழி ,பன் ,பிங்கர் சிப்ஸ்,கார்லிக் பேஸ்ட் ,சாஸ் ,ஒரு பாட்டில் தண்ணீர் தருவான் கொஞ்ச நாள் சாப்பிட்டால் போதும் போதைக்கு அடிமை ஆனா மாதிரி ஆயிடுவாங்க கால் தானாவே தேடி போக ஆரம்பிச்சிடும். கே எப் சி போன்ற சர்வதேச உணவு நிறுவனங்கள் கிட்ட கூட நெருங்க முடியாது அல் பெய்க் ருசிக்கு ,கே எப் சி ரெண்டும் அருகருகில் இருக்கும் நூறு பேர் வரிசைல நிற்பாங்க ஆனா கே எப் சி ல ஒருத்தர் கூட இருக்க மாட்டாங்க .
அல்பெய்க் உறுவாக்கியவர் துருக்கியை சார்ந்த ஓரு சமையல் கலைஞர் தான் இன்றழவும் ஓரு இடத்தில் மொத்தமாக வைத்து தான் அதன் கூட்டுகளை கலவை செய்து ஓரோ பகுதிக்கும் கொண்டு செல்வார்கள் ரியாத் ல இருந்து விமான டிக்கெட் எடுத்து சாப்பிட வருபவர்கள் ஏராளம் சவுதிகாரன் அமைதியா வரிசைல நிக்குற இராண்டாம் இடம் அல்பெய்க் தான் மேலும் ஏழை பணக்காரன் பாகுபாடு கிடையாது அனைவரும் வரிசையிலே நின்று வங்க வேண்டும் நம்ம ஊர்ல இருந்து வரும் விருந்தாளிகளுக்கு முதலில் வாங்கி கொடுப்பது அல்பெய்க் தான்.சவுதில நாட்டில் 54கிளைகள் உள்ளன.   
Image result for albaikசவூதி தலைநகர் ரியாத் ல "அல் பெய்க்" ஒரு பிரான்ச் ஓபன் பண்ண அனுமதி கேட்டு வருஷ கணக்கில் காத்து கொண்டு இருக்கிறார்கள் இன்று வரை அனுமதி இல்லை கிடைக்கவும் வாய்ப்பில்லை. முதல் காரணம் அங்குள்ள "கே எப் சி","மெக் டொனால்டு","பப்பா ஜோன்ஸ்" போன்ற உணவு நிறுவனங்களின் உரிமையாளர்கள் எல்லாரும் அந்நாட்டு இளவரசர்கள் ."அல்பெய்க்" உள்ள வந்தா மொத்த வியாபாரத்தை காலி செய்து விடுவார்கள் என்று பயம் . ராத்திரி 12 மணிக்கு சென்றாலும் கூட்டம் அலைமோதும் என்ன மாய மந்திரமோ தெரியவில்லை.
அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் வேகம் நான் இதுவரை பார்த்ததில்லை தொடர்ந்து அதே வேகத்தில் இருப்பார்கள் .பர்கர் ,மீன் பில்லட் ,செண்ட்விச் என்று எல்லாமே நன்கு வியாபாரம் ஆகும் ஹஜ் காலங்களில் மூன்று மணி நேரம் காத்திருந்து கூட வாங்கி செல்வார்கள் அப்படி என்றால் சுவை எப்படி இருக்கும் என்று கணித்து கொள்ளுங்கள் .இன்னும் சிலர் கூட ஐந்து ரியால் வைத்து கூடுதல் விலைக்கு விற்பார்கள் பக்கத்து ஊர்களில் அதுவும் விளம்பரம் செய்து திருநெல்வேலி சென்னையில் விற்பது போல் அதுவும் வாங்க ஆட்கள் கூட்டம் அலை மோதும் விளம்பரங்களில்.இன்னும் சிலர் டைரக்ட் பிளைட் இருந்தால் இந்தியா க்கு வாங்கி செல்வார்கள் ஓவனில் அல்லது இட்லி கொப்பரையில் சூடு செய்து சாப்பிடலாம் .எனக்கு தெரிந்து இப்படி ப்ரோஸ்ட்டட் கோழிக்காக இத்தனை வெறிபிடிச்சவங்கள 90' களின் ரஜினி கமல் ரசிகனா பார்க்கிறேன்.
கூடுதல் தகவல் நிறுவனத்தின் உரிமையாளர் தன்னுடைய வருமானத்தில் ஒரு உணவுக்கு 1 ரியால் என்ற விதம் ஜக்காத் (ஏழை வரி ) கொடுத்து விடுகிறார்.டலுக்கு தீங்கு விளைவிக்கும் இது போன்ற கோழிகளை தவிர்த்துக் கொள்வதே நல்லது. வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழியே சிறந்தது.

ஆக்கம் மற்றும்  தொகுப்பு  :  மு.அஜ்மல்  கான். 

Monday, January 2, 2017

IMO உபயோகிப்போர் கவனத்திற்கு! IMO வின் ஆபத்து…!

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒரு பக்கம் இருந்தாலும் சில தீய செயல்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன…

அந்த வரிசையில் உள்ள ஒன்று தான் imo இதன் மூலம் நாம் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்ய முடியும்…
இதில் என்ன ஆபத்து உள்ளது என்றால் நாம் நம்முடைய சொந்த உறவினர்களுடன் பேசுவதற்கே இது போன்ற அப்ளிகேசன்களை பயன்படுத்துகின்றோம் ஆனால் நம்முடைய நம்பர் யாரிடம் உள்ளதோ அவர்களுக்கும் நாம் imo வில் உள்ளோம் என்பதை தெளிவாக காட்டிவிடும்…
உதாரணமாக நாம் சவாரிக்கு உபயோகிக்கும் ஆட்டோ டிரைவர்களின் நம்பர்களை நம் குடும்ப பெண்கள் மொபைல் ஃபோனில் save செய்து வைத்திருந்தால் நம்முடைய தகவல்கள் அனைத்தும் எதிர் தரப்பில் உள்ள நபருக்கு தெரியும் அதாவது நாம் imo உபயோகிக்கின்றோம் என்பதை தெளிவாக அவர்களுக்கு காட்டிவிடும் இதன் மூலம் சில தவறான நபர்கள் இதை தவறான முறைக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் …
எப்படி என்றால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் கையில் மொபைல் ஃபோன்களை கொடுப்பது என்பது இப்போது சர்வ சாதாரணமாக உள்ளது…
குழந்தைகள் தெரியாமல் imo open செய்து அதில் உள்ள ஃபோன் சிம்பலை தவறுதலாக இலேசாக கையை வைத்தாலே போதும் உடனே கால் சென்றுவிடும் இது எதிர்தரப்பில் உள்ளவருக்கு தெரியாது குழந்தை தான் தவறாக கால் செய்துவிட்டது என்று மீண்டும் அதே நம்பருக்கு இந்த நபர் கால் செய்ய முயற்ச்சிக்க பிரச்சனை இங்கு தான் தொடங்குகின்றது …
எனவே உங்கள்வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் ஃபோன்களில் தேவையற்ற நம்பர்களை save செய்ய வேண்டாம் என வழியுறுத்துங்கள்…
சவாரிக்கு எடுக்கும் ஆட்டோ,கார் டிரைவர்களின் நம்பர்களை வீட்டில் உள்ள ஆண்களின் மொபைல் ஃபோனில் மட்டும் save செய்து கொள்ளுங்கள்…
சைத்தான் எவர் மூலமாகவும் வழிகெடுப்பான் எனவே பெண்கள் தங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத நம்பர்களை உடனே அழித்துவிடுங்கள்…
இன்னொரு விஷயம் imo வில் invite friends என்ற ஒரு option உள்ளது இதன் மூலம் imo வில் இல்லாத சில நபர்களை நாம் மெசேஜ் மூலம் imo விற்கு அழைப்பதே இதன் பொருள் விவரம் தெரியாத சிலர் இதனை தவறுதலாக உபயோகிக்கின்றனர் invite friends சென்று select all கொடுத்தால் போதும் நமது மொபைலில் உள்ள அனைத்து நம்பருக்கும் அதாவது அவர் Nokia 1100 உபயோகித்தாலும் சரி அவருக்கும் நம்முடைய invite msg சென்று விடும் இதற்கு imo ஒன்றும் Free option ஒன்றும் கொடுக்கவில்லை நாம் அனுப்பும் ஒவ்வொரு மெசேஜ்க்கும் நமது இருப்புத் தொகையிலிருந்தே
(BALANCE) பணம் வசூலிக்கப்படும் விவரம் தெரியாத சிலர் இதனை தவறாக உபயோகித்து தனது மொபைலில் உள்ள அனைத்து பேலன்சையும் இழப்பதை நாம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றோம் எனவே இந்த விஷயத்தை ஆண் பெண் இருபாலரும் கவனமாக கையாள வேண்டும் என்பதே நமது கோரிக்கை …!!!