Friday, December 30, 2016

சவூதிக்கு புதிதாக வருபவர்கள் கவனத்திற்கு - எச்சரிக்கை பதிவு,,,

Image result for taxi in jeddahகாசு கம்மியா இருக்கேனு ஏறுநீங்கனா சங்குதான் (பல வருசமா இந்த டெக்னீக்க தான் பாலோ பண்றாங்க )

ஒரு டாக்சியில் மூன்று பேர் இருப்பார்கள் நீங்கள் ஒரு இடத்தில் நிற்கும் பொழுது அந்த டாக்சி வரும் பொழுது நீங்கள் ஏறி விடுவீர்கள் விளையும் கம்மியாக சொல்லி உங்களை ஏற்றி கொள்வார்கள்
வண்டியில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல் நடிப்பார்கள் அந்த ட்ரைவரும் கூட்டு கள்ளன் தான்
பின்பு வண்டியில் உங்கள் பின் சீட்டில் உட்காந்து இருப்பவர் உங்களிடம் பேச்சு கொடுப்பார் உங்களுக்கு அரபி தெரிகிறதா இல்லை அரபு நாட்டுக்கு புதியவரா என தெரிந்து கொள்ள பேச்சு கொடுப்பார்கள் அரபி தெரியரில்லை சவுதி க்கு புதுசு என்று தெரிந்து விட்டால் போதும் உங்கள் கதி அதோகதிதான்
பிறகு முன் சீட்டில் உட்காந்து இருப்பவர் அவர் இடம் வந்து விட்டது என இறங்குவர் அவர் இறங்கும் பொழுது அவரை அறியாமல் காரின் உள் பணம் விழும் அது ஒரு நாடகம்
பிறகு உங்கள் பின்அ உங்களுடன் அமர்ந்து இருப்பவர் அதை எடுத்து கொள்வார் பிறகு உங்களிடம் சொல்வார் நீ இதை சொல்லி விட வேண்டாம் யாரிடமும் என கூறுவார்
நாம் இருவரும் இந்த பணத்தை பிரித்து கொல்ல்ல்ளலாம் என
பிறகு இறங்கி அவர் அந்த வண்டியை நோக்கி ஓடி வந்து என் பணம் காரில் விழுந்து விட்டது என டிரைவரிடம் முறை இடுவார் டிரைவர் பின் சீட்டில் உள்ள இருவரையும் சோதனை இடுவார் பணம் பின்னாடி கொடுத்து விடுவான் உடனே அவன் பணம் குறைகிறது என கூறி இவனிடம் தான் உள்ளது என உங்கள் மீது பலி போடுவான் பணம் இல்லை என்று சொன்னால் கையில் உள்ள செல் போன் பணம் எல்லா வற்றையும் புடிங்கி கொள்வார்கள்
சூடானி எமனி மக்ரபி போன்றவர்கள் டாக்சியில் ஏறும்பொழுது கவனமாக இருக்கவும் முடிந்தளவு அவர்கள் டாக்சியில் ஏறுவதை தவிர்த்து கொள்ளவும்
பங்காலி பாகிஸ்தானி காரில் மட்டும் ஏறுங்கள் அரபிகளின் காரில் ஏற வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு கிடையாது
பெரும்பாலும் அஜினபிகளை குறி வைத்து இந்த திருட்டு கும்பல் வழிப்பறி செய்கிறது
எனக்கு தெரிந்து இதுவரை பல பேர் ஏமாந்து உள்ளார்கள் இது போல் அதிகமாக சேர் செய்யுங்கள் புதிதாக வருபவர்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்
( குறிப்பு - உங்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்க போகிறது என்று தெரிந்தால்ஒன்றும் தெரியாதது போல் கலாஸ் ஒக்கப் சயாரா என கூறி உடனே இறங்கி விடுங்கள்)
இன்னொரு குறிப்பு - சவுதி பத்தி புகளுவிங்க திருட்டு நடக்குதுன்னு போடுரிங்கனு வந்துராதிங்க திருடர்களை பிடித்து கொடுத்தால் கை வெட்டு இதுதான் சவுதி சட்டம் போலிஸ் கையில் மாட்டினாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு - அதற்க்கு பயந்துதான் புதிதாக சவூதிக்கு வந்து அரபி தெரியாமல் திரு திருவென முளிபவர்களை குறி வைத்து திருடுகிறார்கள் மாட்டி கொள்ளாமல் இருக்க..

Thursday, December 22, 2016

உலகம் அறியா ரகசியங்கள் - நாட்டு மாடு நாட்டு மாடுகள் ஏன் முக்கியம் !!!!

Image result for நாட்டு மாட்டு பாலில நோய்நாட்டு மாடுகள் தான் அந்நாளில் இறையருள் நிரம்பிய இடத்தை கண்டுபிடிக்கும். தானாக பால் சொரிந்து. இதுபோன்ற சிற்பங்கள் பல கோவில்களில் காணலாம்.
இன்று தங்கள் இஷ்டப்படி கோவிலின் இடத்தை மாற்றுகிறார்கள். கோயிலின் புராதனம்-தொண்மை இதனால் அழிகிறது.
அந்நாளில் நாட்டு மாட்டின் தயிரையோ பாலையோ கலயத்தில் கட்டிக்கொண்டு அமாவசை போன்ற தினங்களில் கோவிலுக்கு செல்வார்கள்.
சென்னிமலையில் அந்த அபிசேக தயிரை பெரிய வெள்ளை துணியில் கட்டி வைப்பார்கள். அதில் உள்ள திரவங்கள் வடிந்து திட பால் பொருள் கிடைக்கும். அந்த மாவினை பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தினர்.
நாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது).
நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது.
கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது குறிப்பாக பன்றியின் மூலக்கூறை ஒத்தே இருக்கிறது.
இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது.
பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது.இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது.
ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது.
தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள ஸ்காலரில் தேடி படிக்கவும் (Read Google Scholars).
இன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்?
மேலும் நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது.
இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். கலப்பின பசுக்களின் பால் தாமச/ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல.
இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.
இன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள்.
சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் கானும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும்.
முற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான்.
நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம்.
திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம்.
இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.
நாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை! வீட்டில் வளர்க்க இயலவில்லை எனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள்.
நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.
மரபணு மாற்றப்பட்ட கலப்பின பசுக்கள் இந்தியாவுக்குள் திணிக்கப்பட்டன. இந்திய நாட்டு ரகத்தில் காங்கேயம் மாடு, பர்கூர் செம்மரை மாடு, பாலமலை மாடு, ஆலம்பாடி மாடு, பெரம்பலூர் மொட்டை மாடு, மணப்பாரை மாடு, தொண்டைப் பசு, புங்கனூர் குட்டை என பல்வேறு இனங்கள் உண்டு. மயிலை (சாம்பல் நிறம்) காரி (கருப்பு நிறம்) வெள்ளை, செவலை (மர நிறம்) எனப் பல நிறங்கள் பல வகைகள் இருக்கு.
ஆனா, ஜெர்சி, பிரிசியன் ரெட்டேன், சிவிஸ் பிரவுன் போன்ற அயல்நாட்டு இன மாடுகளைத்தான் சமீபகாலமா விவசாயிகள் விரும்பி வளர்க்கிறாங்க.
நாட்டு மாடுங்க நாள் ஒன்றுக்கு 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை குறைந்த அளவு பாலைத் தருவதாலும்,
பால் பற்றாக்குறை ஏற்படுவதாலும் சில மிருக இனத்திலிருந்து ஜீன் மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுப் பசுக்களில் இருந்து பால் உற்பத்தி செய்ய விவசாயிகளை அரசே ஊக்குவிச்சிக்கிட்டு வருது.
ஜெர்சி இன மாடுகளில் வேர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால, அதோட வெப்பம் பால், சிறுநீர் மூலமாத்தான் வெளியேறுது.
மேலும் இம்மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன. அதுமட்டுமில்லாம அயல்நாட்டு இன மாடுகளோட சாணமும், சிறுநீரும் மண்ணுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையையும் கொடுக்கிறதில்ல.
இதுவே நம்ம நாட்டு மாடுகள்ல வேர்வை நாளமும், திமிலும் இருக்கிறது மட்டுமில்லாம, சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
இவ்வளவு சிறப்புகள் நாட்டு மாடுகளில் இருந்தாலும் பால் அதிகமா கொடுக்கிற ஒரே காரணத்தினாலேயே அயல்நாட்டு இனங்களை இந்தியா முழுவதும் விவசாயிங்க வளர்த்துட்டு வர்றாங்க.
தற்போது தமிழகத்தில் காங்கேய மாடுகள் 80 சதவிகிதம் வரை அழிஞ்சு போயிடுச்சி. கடந்த 30 வருசமா காங்கேய மாடுகளிலிருந்து பால் கறந்து விற்றுவரும் எனக்கு, பாரம்பரியமிக்க நாட்டு இனம் அழிஞ்சிட்டு வர்றதைப் பார்த்து ரொம்பக் கஷ்டமா இருந்துச்சி.
இதனாலேயே பல நன்மைகள் கொண்ட நாட்டு மாடுகளில் அதிகப் பால் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி நம் இனங்களைக் காக்கலாம் என்ற எண்ணம் மனசுக்குள்ள வந்துடுச்சி.
அதனாலேயே தமிழகத்துல எந்த இடத்துல மாட்டுச் சந்தை, கண்காட்சி நடந்தாலும் தவறாமப் போய் கலந்துக்கிட்டு நல்ல காங்கேயமா பார்த்து வாங்கிட்டு வந்துடுவேன்" என்று கூறும் நடராஜன்,
மாட்டு வர்க்கத்தில் நல்ல வம்சங்களைக் கண்டுபிடித்து பால் அதிகம் கொடுக்கும் காங்கேயம் பசுவின் கன்றை, அதே அளவில் பால் கறக்கும் வேறு பசுவின் காளையுடன் இனப்பெருக்கம் செய்ய வைப்பதன் மூலம் அதிகப் பால் உற்பத்தி செய்யலாம்" என்கிறார்.
முஸ்லிம் அரசர்கள்:
முகலாய சாம்ராஜ்யத்தில்- பாபர் முதல் அகமத் ஷா வரை பசுவதை முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்தது.
இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவதில் பெயர் போன பாபர், தனது புத்தகத்தில் முகலாய அரசர யாரும் பசுவதையை ஆதரிக்க கூடாது என்று கடுமையாக வலியுருத்தி இருந்தார்.
மைசூர் சுல்தான்களான ஹைதரும், திப்புவும் கூட பசுக்கள் கொல்வதை தடை செய்திருந்தார்கள். மீறிபவர்களுக்கு கைகளை வெட்டும் கடும் தண்டனையும் விதித்திருந்தார்கள்!
ராபர்ட் கிளைவ்:
இந்தியாவின் விவசாயத்தை ஆராய்ந்த கிளைவ், மாடுகள் தான் இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து விவசாயத்தை அழிக்க முதன்முதலில் பசுவதைகூடங்களை உருவாக்கினான்.
காந்தி:
பசுவதையை தடுக்க சட்டம் இயற்ற வலியுறுத்தினார்.
நேரு:
சுதந்திர இந்தியாவில் முதல் நடவடிக்கை பசுவதை கூடங்களை மூடுவதே என்று சொன்ன நேரு, பின்னாளில் பசுவதையை நிறுத்த சொன்னால் பதவி விலகுவேன் என்று மிரட்டி பசுவதையை ஆதரித்தார்.
இந்திரா:
பசுவதைக்கு எதிராக கிளர்ந்த போராட்டத்தில் மக்களை துப்பாக்கி சூடு மூலம் கொன்று அடக்குமுறையை கையாண்டார்.
நம்மாழ்வார்:
பசுக்கள் நடமாடும் இயற்கை உர தொழிற்சாலைகள் என்பதை வலியுறுத்தி வந்தார். விலைமதிப்பில்லா பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை உரங்களை தரும், மரபு பசுக்கள் நமது சொத்து, அவற்றை காக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுருத்தி வந்தார்.
இன்று:
பணத்துக்காக இன்று மரபின பசுக்கள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.
பசுவதை என்பது வெளிநாட்டு சூழ்ச்சி என்பது தெரியாமல் அதற்கு ஆன்மீக சாயம் பூசி, ஆன்மீகத்தை எதிர்க்கிறேன் என்று நம்மவர்களே பசுக்களை அழிக்கிறார்கள்.
மனிதர்களை விட மாடுகள் அதிகம் இருந்த பங்களாதேசில் மாடுகள் அழிந்து இன்று குழந்தை பால் பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாளை நாம்!
நாட்டு மாடுகள் மற்றவர் கைகளில்..
பிரேசிலில் நம் நாட்டு மாடுகள் லட்ச கணக்கில் வளர்க்கபடுகின்றன.
இந்திய மாடுகளின் பெரிய கொலைக்களமான கேரளாவிலும் தமிழ்நாட்டு நாட்டுமாடுகளை கொண்டு சீரோ பட்ஜெட் பார்மிங் செய்ய கிசான்கேரளா மூலம் பயிற்றுவிக்கிரார்கள்.
பாகிஸ்தானில் கூட மரபுபசுவினன்களை காக்க தனி நிர்வாகமே உள்ளது.
நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்? திரு காசி பிச்சை அவர்களின் பேச்சு.
இவை மட்டும் இல்லாது அமெரிக்க - ஐரோப்பிய நாடுகள் பாரத்தின் நாட்டு மாடுகளை கொண்டு கலப்பினம் செய்து பயன்படுத்துகிறார்கள்.
ஆஸ்திரேலியா, நியுசிலாந்து நாடுகளில் நாட்டு மாடுகளில் கிடைக்கும் பாலுக்கென்று தனி சந்தையே உள்ளது!
நாட்டு மாடுகளை சுற்றியிருக்கும் பன்னாட்டு அரசியல்..???
இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு.
அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்’ போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.
விவசாயமும், மருத்துவமும் நாட்டுமாட்டை சுற்றி இருந்ததால் அதை அழிக்காமல் ரசாயன, பூச்சிகொல்லி மற்றும் பார்மா (ஆங்கில மருந்து) வியாபாரிகளுக்கு வேலை இருக்காது என்பதால் நாட்டு மாடுகளின் கொலைகளம் ராபர்ட் கிளைவால் தொடங்கப்பட்டது.
இருந்தும் பசுவை வைத்து வாழ்ந்து பழகிய இந்தியர்களிடம் இருந்து மாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சதிக்கு துணையாக இருந்து மக்களிடம் நோயை விதைக்கும் உழவுக்கு உதவாத கலப்பின மாடுகளை திணித்தார்கள்.
பால் அதிகம் கிடைத்ததால் பஞ்சத்தில் அடிபட்ட நம் உழவர்கள் கலப்பின மாடுகளை வைத்துக்கொண்டு, நாட்டு மாடுகளை ஒதுக்க துவங்கினர்.
நாளடைவில் நாட்டு மாடுகள் முக்கியத்துவம் இழந்து அழிவின் பாதையில் போய் விட்டன.
இதனால் இலவச இயற்கை உரங்களுக்கு மாற்றாக ரசாயன உரங்களையும் மருந்துகளையும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கலப்பின பசுவின் பாலால் அதிகரித்த சர்க்கரை நோய் முதலான நோய்களாலும் சத்து குறைவாலும் ஆங்கில மருந்தும் ஊட்ட சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் விற்பனை களைகட்டியது.
கலப்பின பசுக்களுக்கு தீவனம் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவால் அவற்றிற்கான மருந்துகள் என வெளிநாட்டினர் வியாபாரம் விரிந்தது.
தீவனதுக்காக இந்திய தானியங்கள் பெருமளவில் செலவிடபட்டதால் உணவு பொருட்கள் விலையும் எகிறியது.
பின்னால் வந்த இந்திய அரசாங்கமும் பல்வேறு காரணங்களால் பசுமை புரட்சி என்ற விஷ புரட்சி மூலம் அதற்கு மேலும் வலு சேர்த்தது.
வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் தயாராகும் வேப்பெண்ணை, வேப்பம்புண்ணாக்கு, வேர்மிகம்போஸ்ட், தொளுவுரம், கோகோ பீட் முதலான இயற்கை உரங்களை வாங்கிக்கொண்டு நமக்கு யூரியா போன்ற ரசாயன விஷங்களை விற்கிறார்கள்.
இனி வெளிநாட்டு நிறுவனங்கள் விற்க போகும் கழிசடைகளால் வரப்போகும் மரபணு கோளாறுகளுக்கும், கான்சர் போன்ற கொடிய நோய்களுக்குமான மருந்து நாட்டுமாடுகளிடம் இருந்தே கிடைக்கின்றன. அவை பாரதத்தின் சொத்து.
பால் அல்ல மாடே கலப்படம்தான்!
குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும்.
அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது.
முதலில் கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டு மாடாக இருந்ததால். சினை பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது.
இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது.
இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர்.
மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது.
மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர்.
பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது.
அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது.
வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது.
பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள் இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல் இருக்கிறது.
15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர்.
சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு. நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’ முறையில் குழந்தை பிறக்கிறது.
தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல். தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது.
ஆண்களுக்கு பெண்பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது. இவ்வாறு ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.
பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது.
ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது.
பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் (திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்…
அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல் (ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.
”ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட்.
ஏ1, ஏ2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார்.
அந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும், அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது.
அவர்கள் ஏ2 பாலைக் குடிப்பதாகவும் கண்டு பிடித்தார். பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார்.
தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள்.
கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில் 50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது.
அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1 பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம். கலப்பின மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு அரசு துடிக்கிறது.
வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன.
விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல் போகின்றன.
புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம் என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.
ஆதாரம் : ta.vikaspedia.in

Sunday, December 4, 2016

எந்தவிதமான பதட்டமும் இல்லாமல்மோடி நிகழ்த்திய பொருளாதார பேரழிவு-2 !!


"ஜப்பானுக்கு விமானம் ஏறிய மோடி படியில் நின்று புன்னகைத்தவாறு கையசைத்தத் தோற்றத்ததைப் பார்த்த போது, ஓர் அமெரிக்க சிப்பாய் இந்தியாவின் மீது அணு குண்டை வீசிவிட்டு பெருமிதத்தோடு தப்பி ஓடுவதைப் போலத் தோன்றியது." 
ஒரு பொருளாதாரப் சீரழிவை நிகழ்த்திவிட்டு எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் அவர் காணப்படுவதைப் போலவே அவரது தேச பக்தர்களும் இருப்பது ஆச்சர்யம்தான்.
இந்த இந்திய மக்கள் மீதான பொருளாதார தாக்குதலுக்கு மோடிக்கு துணையாக இருந்தவர் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்  உர்ஜித் படேல் .இவர்மோடியின் கட்டளைக்கு ஏன்,எதற்கு,இது சரிவருமா,இதை எப்படி திட்டமிட்டு மக்களுக்கு பாதகமின்றி செயல் படுத்தலாம் என்ரு எந்தவித கேள்வியும் கேட்காமல்,வழிமுறைகளை பிரதமருக்கு எடுத்துக் கூறாமல் மோடியின் கட்டலையை சிரமேற்கொண்டு செய்து மக்களை கொடுமைப்படுத்தி வருகிறார்.
நல்ல பொருளாதர நிபுணர் என்றால் ஒரு பெரிய திட்டம் கொண்டு வருகையில் அதை பலவழிகளிலும் சென்று அலசி,ஆய்ந்து நடைமுறைபடுத்த வேண்டும்.அதில் வரும் நல்லவற்றை மட்டும் பார்க்காமல் அதானால் பின்னர் நிகழக்கூடும் கெட்டவற்றையும் இனங்காண வேண்டும்.ஆனால் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர்  உர்ஜித் படேல் அதை எதையும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் இச்சீரழிவை அதிகப்படுத்தியதன் காரணம்.
அதற்கு  உர்ஜித் படேல் முன்பு பணிபுரிந்த அம்பானி நிறுவனத்தில் அதன் தலைவர் அம்பாணிக்கு தலையாட்டியே ஊதியம் பெற்றுவந்த முதலாளி விசுவாசம்தான் காரணமாக இருக்கும்.
500,1000 செல்லாது என்கையில் புதிய பணத்தை மக்களுக்கு வழங்க போதுமான அளவு அச்சிட வேண்டும்.6 மாத திட்டம் இது எனும் போது போதைய கால அவகாசம் இருந்திருக்கிறது.மேலும் கருப்புப்பணம் இன்னமும் நாட்டில் 500,1000 தாள்களாக மூட்டை,மூட்டையாகத்தான் பதுக்கியிருப்பார்கள் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கு,உலக பொருளாதர்த்தை கவனித்து வருபவர்களுக்கு இருப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.
அவை வெளிநாட்டு வங்கிகளில் டாலர்களாக,வெளி நாடுகளில் ஹவாலா மூலம் சொத்துக்களாக,தீவுகளாக,ஓட்டல்களாக ,பங்களாக்களாகவும்,இங்கும் சொத்துக்களாக பினாமி பெய்ரகளிலும்,நகைகளாகவும் இருக்கும் என்ற சின்ன விசயம் கூட தெரியாதவரா ரிசர்வ் வங்கி ஆளுநர்  உர்ஜித் படேல்?
தெரியும்.இருந்தும் இது போன்று கருப்புப்பணம் ஒழிக்க மோடியுடன் சேர்ந்து பணியாற்ற காரணம்.இவர்கள் முழு நோக்கம் பணமுதலைகளிடம் உள்ள கருப்புப்பணத்தை பாதுகாப்பது,வெள்ளையாக மாற்றுவது.
பெரும் முதலாளிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வது.அதானல் வங்க்களில் உண்டாகும் இழப்பை பொது மக்கள் சேமிப்புகளை வங்கியில் உடனே எடுக்க முடியாதபடி வைப்பு தொகையாக போட வைத்து அவற்றை சரி செய்வது என்பதுதான்.
வங்கியில் வைப்பாக போடும் பணத்தை இனி யாரும் அவசர தேவையின்றி எடுக்கப்போவது இல்லை.எங்கோ பாதுகாப்பாக இருக்கட்டும் என்ற எண்ணம் வந்து விடும்.
மொத்தத்தில் தான் ஆட்சிக்கு வர மோடி சொன்ன பண முதலைகளின் கருப்புப்பணத்தை மீட்பேன் தாரக மந்திரம் வெளிநாட்டில் இருந்து அல்ல.உள்நாட்டு மக்களிடமிருந்து என்று ஆகி விட்டது.மோடியை பொறுத்தவரை உள்நாட்டில் பொதுமக்கள் சேமிப்புதான் இப்போதைக்கு கருப்புப்பணம்.திருமணத்துக்கு 500,1000 தாள்களில் கடன் வாங்கி வீட்டில் வைத்திருப்பவர்கள்தான் கருப்புப்பண முதலைகள்.
இதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர்

மோடி எதற்காக புதிய கரன்சிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்தான்.. மக்களின் தேவைகளை பார்த்து அவற்றை தீர்ப்பதற்கு பதில் ,அவர்களின் தேவைகளை பேராசையாக மாற்றி தமது வெற்றியை பறித்துக் கொண்டதில் மோடிக்கு நிகர் மோடியே. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தைக் கொண்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் 15 லட்சம் ரூபாய் பிரித்துக் கொடுக்கப்படும் என்று மோடி மக்களிடம் பேராசையைத் தூண்டினார். 

மோடியால் ஏன் அப்படி சிந்திக்க முடிந்தது என்று இப்போது தேச பக்தர்கள் யாரும் கேள்வி கேட்பதில்லை.
கருப்புப் பணத்தை மீட்பேன் என்று சொன்னவர் திடீரென கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று மாற்றிப் பேசுவதில் உள்ள மோடியின் கையாலாகாதத் தனத்தையும், பேராசையையும் தேசபக்தர்கள் கணக்கில் சேர்ப்பதே இல்லை. பொருளாதாரப் புரிதல் சிறிதும் இல்லாத ஒரு பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் வெட்கப்படவுமில்லை.
கருப்புப் பணம் என்பது சிவாஜி படத்தில் காட்டப்படுவதைப் போல எங்கேயாவது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்ற அப்பாவியான புரிதலில் இருந்த மோடி மக்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டினார். 

பணம் என்றால் என்ன என்பதைப் பற்றின அடிப்படை அறிவுக்கூட இல்லாமல் அவர் இந்த புரிதலுக்கு வந்தார் என்பது ஒரு புறமிருந்தாலும், சுவிஸ் வங்கியில் அப்படித்தான் அடுக்கிக் வைக்கப்பட்டிருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டாரே அதுதான் நமது சாபக்கேடு.
சுவிஸ் வங்கி என்பது இந்தியப் பணங்களை கட்டுக்கட்டாக சேர்த்து வைக்கும் கிடங்கு அல்ல. அது வைக்கப்படும் பணத்தை வைத்து பரிமாற்றம் செய்துக் கொள்ளும் ஒரு நிறுவனம். வங்கியின் செயலே அதுதானே. கிடங்காக வைத்திருந்தால் வாடகை மட்டும்தான் கிடைக்கும். வங்கி என்பது வட்டித்தருவதும், வட்டி வாங்குவதும், முதலீடு செய்வதும் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கிறது. இந்தியர்கள் சேர்த்து வைத்தப் பணத்தை அந்த வங்கி அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. 
எந்த வங்கியும் தனது வாடிக்கையாளரின் கணக்கு விவரங்களை வெளியில் சொல்லாதது போலவே சுவிஸ் வங்கியும் நடந்துக் கொண்டது. எனவே சுவிஸ் வங்கியில் இந்திய கரன்சிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்பது அளவு கடந்த கற்பனை, நப்பாசை. இதை நம்பித்தான் மோடி இந்தியர்களுக்கு 15லட்சம் தருவதாக வாக்களித்தார். 
ஆனால் மோடி வாக்களிக்கும் முன்னே சுவிஸ் வங்கியில் இருந்த இந்திய பணம் என்னவானது என்பதைப் பற்றின புள்ளி விவரங்கள் வந்திருக்கின்றன..
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேர்த்து வைத்துள்ள கருப்புப்பணம் 2006ம் ஆண்டு கணக்குப்படி 1,456 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கிறது என்று அன்றைக்கு சுவிஸ் வங்கிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் 2012ல் அது 92.95 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அது குறைந்துப் போனது. அதாவது 6% அளவிற்கு அது குறைந்துவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட அரசு சார் அழுத்தங்கள் இதற்கு முக்கிய காரணம். 
அதே நேரத்தில் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் நாட்டில் மட்டும் இல்லாமல் ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் முதலீடு செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறி இருந்தது. ஆனால் ஊடகங்கள் சுவிஸ் நாட்டை மட்டும் பிரதானப்படுத்தி எழுதிய காரணத்தினாலும் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய பணத்தின் பெரும் பகுதி வேறு நாடுகளுக்குப் போய்விட்டது. 
எனவே சுவிஸ் வங்கியில் இருந்த கருப்புப் பணத்தை காங்கிரசால் மீட்க முடியவில்லை என்கிற பிம்பத்தைப் பயன்படுத்தி மோடி தான் மீட்கப்போவதாக தனது வீரதீரத்தைக் காட்டினார்.
ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு மிச்சமிருந்த கொஞ்சப்பணமும் சுவிஸ் வங்கியிலிருந்து திரும்பப்பெறப்பட்டு அது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் முதலீடாக போய் சேர்ந்துவிட்டது. இந்த தாக்குதலை மோடி எதிர்பார்க்கவில்லை, அதனால் மக்களின் முன் முற்றிலும் தனது அறியாமையை வெளிக்காட்டி அம்பலப்பட்டுப் போனார். எனவே மாற்று வழிகளை அவர் தேடிக்கொண்டிருந்தார். வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க வழியில்லை. உள்நாட்டிலாவது ஏதாவது தேறும் என்று எதிர்பார்த்தார், ஆனால் மசிந்தவர்கள் கொஞ்சம் பேர்தான். 
ஏனென்றால் இந்திய மக்கள் தொகையில் 1 சதவிதம் பேர்தான் வருமான வரி செலுத்தும் பழக்கம் உள்ளவர்கள், இதில் 2 சதவீகிதம் பேர் அரசு ஊழியர்கள். 
மீதமுள்ள 99 சதவீகிதம் பேரை வருமான வரிகட்ட வைக்க மோடியிடம் எந்த திட்டமும் இல்லை. இவரிடம் மட்டுமல்ல முந்திய காங்கிரஸ் அரசிடமும்தான்.
மக்களை வருமான வரி கட்ட வைக்க என்ன செய்ய வேண்டும். அதற்கு எளிய வழி வருமான வரி கட்டும் அளவிற்கு அவர்களுடைய வருமானத்தை அரசு பெருக்க வேண்டும். இதை மோடியின் செய்ய முடியுமா..? அதற்கு பதில் மக்களிடம் கருப்புப்பணம் இருக்கிறது என்கிற பூச்சாண்டியை காட்டி அவர்களையே குற்றம் சாட்ட முடியும். அதைத்தான் மோடி செய்தார். 
அப்படியானால் இந்தியாவில் உள்ள கருப்பு பணம் கிடங்குகளில் பதுக்கி மட்டுமே வைக்கப்பட்டிருக்குமா..
கிடங்குகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம், தீவிரவாதிகளால் புழக்கத்தில் விடப்பட்டிருக்கும் பணம் என்பவை காரணமாக ரிசர்வ் வங்கியால் காரணம் சொல்லப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகள் 76 %மும், 1000 ரூபாய் நோட்டுகள் 109%மும் புழக்கத்தில் அதிகரித்திருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி. 
இது சுழற்சி முறையில் ரிசர்வ் வங்கி திரும்பப்பெறும் பழைய பணத்திற்கு ஈடாக புதிய பணத்தை அச்சிட்டு வெளியிடும் கணக்கீடுகளின் அடிப்படையில் அமைந்த புள்ளி விவரங்கள் அல்ல. சந்தையில் சுற்றோட்டத்தில் இருக்கும் பணத்தின் அளவை சுற்றோட்ட கணக்கீடு (Random) புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. 
எனவே இதை முழுவதும் நம்ப வேண்டுமா வேண்டாமா என்பது நமது விருப்பத்தின் பாற்பட்டது.
ஏனென்றால் கருப்பு பணம் இருக்கும் சதவிகிதம் துல்லியமாக அரசிற்கு தெரியவில்லை. இன்றைய நாளிதழ்களில் அந்த தெளிவின்மையை அரசே வெளிச்சமிட்டிருக்கிறது. 
கருப்பு பணத்தின் அளவு ஒரு சதவிகிதம் என்றால் 14850 கோடி, 2 சதவிகிதம் என்றால் 29700 கோடி, 3 சதவிகிதம் என்றால் 44500 கோடி, 5 சதவிகிதம் என்றால் 70000ம் கோடி, 10 சதவிகிதம் என்றால் 1லட்சத்து 40ஆயிரம் கோடி. இதில் எது இலக்கு என்று இன்னும் அரசு துல்லியப்படுத்தவில்லை.
சரி, இப்போது இந்த கருப்புப்பணத்தை அழிக்க வைத்துவிட்டு புதிய பணத்திற்கு மோடி என்ன செய்தார். சுற்றில் இருக்கும் 500, 1000 ரூபாய் மொத்த பணம் அரசின் கணக்கின்படி 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகள். 
இதற்கு மாற்றாக புதிய நோட்டுகளை அச்சடிக்க 12ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. அதாவது அச்சிட்ட பணத்தில் 0.8 சதவிகிதம்.
இந்த செலவை ஈடுகட்டுவது எதில் என்பது ஒருபுறமிருக்கட்டும். மோடி அழிக்க நினைக்கும் கருப்புப்பணம் 1லட்சத்து 40ம் கோடி என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு 12ஆயிரம் கோடிகளை முதல் தவனையாக செலவழித்துள்ளார் என்பதும் ஒரு புறம் இருக்கட்டும். 
சந்தையில் புழங்கும் 1000, 500 நோட்டுகளுக்கான மொத்ததொகையான 14 லட்சத்து 40ஆயிரம் கோடிகளுக்கு இணையாக இந்தியாவின் முன்னணி கார்ப்பேர்ட் நிறுவனங்கள் வாராக்கடனாக வைத்திருக்கும் 14லட்சம் கோடி ருபாய்கள் கருப்புப்பணம் இல்லையா.
 இந்த பணத்தை மீட்க துப்பில்லை என்று வங்கி ஊழியர்களின் சம்மேளனம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்களே அதெல்லாம் தேச பக்தர்களுக்கு தெரியவில்லையா…
ஆனால் கருப்புப்பணம் மீட்கப்படும் என்று பொய் சொன்ன மோடி தொடர்ந்து கருப்புப்பணம் அழிக்கப்படும் என்று துணிந்து பொய் சொல்ல முடிகிறதென்றால் தேசபக்தர்கள் என்பவர் முட்டாள்களாய் மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர் நம்புவதால்தான்.
எனவே மோடி கருப்பு பணத்தை அழிக்க முதலில் 12ஆயிரம் கோடிகளை மட்டும் செலவிட்டு இழப்பை உருவாக்கவில்லை. 
ஒட்டுமொத்த தேசத்தையையே நிலைகுலைய வைத்து பொருளாதாராத்தை ஆட்டம் காண வைத்துள்ளார். அது எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து பார்போம்.
                                                                                                                                                                                                                                                                                     நன்றி:இந்நேரம்