Wednesday, August 31, 2016

கொடூர நோய்களை பரப்பும் மரபியல் மாற்றிய வாழைப்பழம் !! ஓர் அதிர்ச்சி தகவல்..

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப் பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய நீளமான மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.இந்த மஞ்சள் வாழை பழம் பார்பதற்க்கு பச்சை வாழைபழம் போன்றே சிறிது நீண்டு காணப்படும்.
நிறம் மட்டும் மஞ்சள் நிறமாக இருக்கும் காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில் – தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக் கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன், என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள்.


இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள்தான்.இயற்கையான வாழைப்பழம் பழுத்தால் இரண்டொரு நாளில் அழுகி விடும்.இயற்கையான மஞ்சள், ரஸ்தாளி, மலைபழம், தேன்கதளி, நாட்டுப்பழம், நாட்டுச்சக்கைப்பழம், கற்பூர வள்ளி, ஏலக்கி ஆகிய வாழைப் பழங்கள் மணமாகவும், நல்ல ருசியாகவும் இருக்கும்.இந்த பழங்கள் உடம்புக்கு சத்தாகவும், மற்ற உணவை செரிமானமாக்கவும் பயன்படும்.


மலச்சிக்கலால் பாதிக்கப்படுவோரும் தினமும் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள்.பொதுவாக இயற்கையான வாழை ரகங்களில் நோய் தொற்று ஏற்படும்.இவற்றை பூச்சுக் கொல்லிகளை பயன்படுத்தி நோயை கட்டுப்படுத்த வேண்டும். இந்த ரகங்களை பழுத்த உடன் நாம் சாப்பிடுவது வழக்கம். பூச்சிக்கொல்லிகளை அழிப்பதற்கு பதிலாக பூச்சிகளை கொல்லும் விஷச்சத்தை வாழைமரத்தின் மரபணுவில் செலுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர்.இதைத் தான் நாம் பி. டி.வாழை என்று அழைக்கிறோம்.
கேவின் டிஷ் என்ற பெயருடன் இந்த மரபணு மாற்று வாழைப்பழம் நம்மூரில் கள்ளத்தனமாக விற்கப்படுகிறது. இப்பழங்களில் விஷத்தன்மை மிக அதிகமாக இருப்பதால் அமெரிக்காவில் இந்த வாழைப்பழம் பயிரிடவோ விற்கவோ அனுமதிக்கப்படவில்லை  ஏழ்மையிலும் பசி,பட்டினியிலும் வாடும் ஆப்பிரிக்க நாடு உகாண்டா. இங்குதான் முதன் முதலில் 2007 -ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உகாண்டா அதிபரை மிரட்டி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர செய்து பி.டி. வாழை எனப்படும் கேவின் டிஷ் வாழைப்பழத்தை முதன் முதலில் பயிரிட செய்தார்.
நோய்களை பரப்பும்:
உகாண்டாவில் பயிரிடுவதற்கு முன்பாகவே இந்தியாவில் சர்வதேச கம்பெனிகள் இந்திய நிறுவனங்களின் துணையுடன் கள்ளத்தனமாக இவ்வகை மரபணு மாற்று பி.டி. கேவின்டிஷ் வாழைப் பழத்தை பயிரிடவும் விற்பனை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
இந்த கேவின்டிஷ் மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் விற்கப்படுகிறது.
முதலில் சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்தில் *பெங்களூர் வாழைப்பழம்* என்ற பெயரில் இந்த பி.டி. வாழைப்பழம் விற்கப்பட்டது.
மக்களுக்கோ, வியாபாரிகளுக்கோ இதன் கொடூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாததால் சென்னை முழுவதும் இந்த வாழைப்பழ விற்பனை விரிவு படுத்தப்பட்டது.


மாதக்கணக்கில் வைத்திருந்து விற்றாலும் கெட்டுபோகாது என்ற ஆசை வார்த்தை கூறி வியாபாரிகள் இந்த மரபணுமாற்று கேவின் டிஷ் வாழைப்பழத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.இதனால் சென்னையில் முக்கிய கம்பெனிகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாழைப்பழம் மட்டுமே விற்கும் நிலை உள்ளது. மதுரை, சேலம், கோவை, நெல்லை போன்ற நகரங்களில்  இந்த பி.டி. மரபணு மாற்று வாழைப்பழம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இதற்குபோதிய வரவேற்பு இல்லை.


இந்த மரபணு மாற்று வாழைப்பழம் இயற்கை வாழைப்பழம் போல் ருசியாக இருக்காது.இதனால் மற்ற நகரங்களில் இதனை யாரும் வாங்கவில்லை.எனவே சென்னையில் அறிவிக்கப்படாத தடைபோல வேறு இயற்கையான வாழைப்பழமே விற்காத வண்ணம், சர்வதேச நிறுவனங்கள் கேவின்டிஷ் வாழைப்பழம் மட்டுமே விற்கும் வண்ணம் ரகசியமாக சதி செய்துவிட்டன.இதற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் பெரிதும் உதவியாக உள்ளன.*பி.டி. கத்தரிக்காய்க்கே இன்னும் இந்திய அரசு முழுமையான அனுமதி வழங்கவில்லை.

*
பி.டி.ரக மரபணு காய்கறி, பழங்கள், உயிரை மெல்லமெல்ல கொல்லும் விஷமாகும். ஒருமுறை மட்டும் காய்த்து கனியாகும்.
செயற்கையாக மலட்டுத்தன்மை ஆக்கப்பட்ட மரபணு மாற்று காய்கறி பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத்தன்மை ஏற்படுவதோ டு, கேன்சர், செரிமான கோளாறு, தோல்நோய், சிறு நீரக நோய்கள், அலர்ஜி போன்றவை உண்டாகும்.
இந்நிலையில் *இந்திய அரசிடமோ, விவசாயத்துறையிடமோ, பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி சாலைகளிலோ எந்தவித அனுமதியும் பெறாமல் கேவின்டிஷ் மஞ்சள் வாழைப்பழம் பெங்களூர் வாழைப்பழம் என்ற பெயரால் விற்பனை செய்யப்படுகிறது.


எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது?

பெங்களூர் வாழைப்பழம் என்று விற்பனை செய்யப்படும் மரபணு மாற்று பி.டி. ரக மஞ்சள் வாழைப்பழம் காட்டு கொட்டை வாழையில், மீன் சோளம், காட்டுமொச்சை இவற்றின் மரபணுவை புகுத்தி கண்டு பிடிக்கப்பட்டதாகும்.
இயற்கையான வாழை ரகங்கள் வாழையடி வாழையாக வாழை மரத்தின் கிழங்கிலிருந்து செடி வளரும்.அதனை பிரித்து நட்டாலே புதிய வாழையை பயிர் செய்ய முடியும்.ஆனால் பி.டி. ரக கேவின்டிஷ் வாழை ஒரு முறை மட்டுமே காய்க்கும் வண்ணம் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு செயற்கையாக மலடாக்கப்பட்ட தாகும். எனவே விவசாயிகள் தாமாகவே மறுதடவை பயிர் செய்ய முடியாது.
திசுவளர்ப்பு முறையில் செடி வாழை சர்வதேச கம்பெனிகளின் ஏஜெண்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு பயிரிட வழங்கப்படுகிறது.
விரைவில் உணவு பஞ்சம்வரும்.அதன் முதல்படதான் பர்மா தான்சானியா பிரசிலுடன் ஒப்பந்தம் போட்டு நமக்கு தேவையான பயறு வகை களை பயிரிடப்போகிறார்களாம்.நமது நாட்டில் விவசாயத்தை ஒழித்துகட்டிவிட்டு அடுத்த நாட்டிடம் கையேந்துவது பேராபத்து!இவ்வகை பி.டி. ரக மரபணு மாற்று வாழையை தொடர்ந்து தோட்டத்தில் பயிர் செய்தால் அந்த நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழு, பூச்சிகள், பாக்டீரியாக்கள் மொத்தமாக அழிக்கப்பட்டு அந்த நிலம் எந்த பயிரும் வைக்க முடியாத பாலைவனமாக மாறிவிடும்.அதனை உண்ணும் மனித குலமும் பல நோய்களுக்கு ஆளாக நேரிடும் மனிதனை மலடாக்கும்.. நல்ல எதிர்காலத்தை உருவாக்க BT விதையை தவிர்ப்போம்!
ஆண்மை,பெண்மை இழக்காமல்!!

வாழ்க வளத்துடன்...

தொகுப்பு  :   அ .தையுபா அஜ்மல்.

Friday, August 26, 2016

எலும்பு தேய்மானத்தைத் தடுக்க இயற்கை வைத்தியம் !!

Image result for எலும்பு தேய்மானத்தைவயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை.ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன.
எலும்புத் தேய்மானத்தால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்கம் அளிக்கிறார் பிசியோதெரபிஸ்ட் ரம்யா.
மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன.
இந்த எலும்புகளில் மாற்றங்கள் தொடர்ச்சியாக இருக்கும்.
எலும்புகளுக்கான அடிக்கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன.
கால்சியம், பாஸ்பேட் போன்ற மினரல்கள் எலும்புகளுக்கு இடையில் பரவி மேலும் வலு சேர்க்கிறது.
இந்த இயக்கம் உடலில் தொடர்ந்து இருப்பதால் உணவில் அதிக கால்சியம் தேவைப்படுகிறது.
இதற்கு சிறு வயது முதல் பால் மற்றும் பச்சைக் காய்கறிகள் போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உடல் உட்கிரகித்துக் கொள்வதற்கான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எலும்பைப் பொறுத்தவரை அளவுக்கு மீறி அழுத்தம் கொடுப்பது மற்றும் விபத்துக்களினால் எலும்பு முறிவு ஏற்படும்.
காயங்களினால் ரத்தக்கட்டு உண்டாகும்.
மினரல்கள் இழப்பு காரணமாக எலும்புத் தேய்வு ஏற்படும். எலும்புத் தேய்வின் அறிகுறியாக உடலில் வலி ஏற்படுகிறது.
எலும்பு வலுவிழக்கும் போது உடல் எடை முழுவதையும் தசைப்பகுதி தாங்குகிறது.
இதனால் தசையும் பலவீனம் அடையும். உடல் சோர்வு, வலி, வீக்கம் ஏற்படலாம். மூட்டுப்பகுதியில் வீக்கம் உண்டாகும். உடலை அசைப்பதே கடினமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய துவங்கும்.
எலும்புத் தேய்மானம் ஏற்படுவதை தடுக்க கால்சியம் உள்ள உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
மேலும் உடற்பயிற்சி செய்யும் போது எலும்புக்கு தேவையான தாதுக்கள் தசைப்பகுதியில் இருந்து உட்கிரகிக்கப்படும்.
இதனால் சத்தான உணவு சாப்பிட்டாலும் உடற்பயிற்சி கட்டாயம் அவசியம்.
இதில் எலும்பின் வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைத்து விடுகிறது. இதனால் எளிமையான நடைப்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் தோட்ட வேலைகளும் இதற்கு கைகொடுக்கும்.
எலும்பு மற்றும் மூட்டுக்களில் வலி காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி எலும்பு உறுதித் தன்மை குறித்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் எலும்பில் தாதுக்களின் குறைபாடு அளவு அறிந்து அதற்கு தகுந்த சிகிச்சை செய்து கொள்ளலாம்.
பாதுகாப்பு முறை:
சிறு வயது முதல் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
உட்கார்ந்த நிலையில் வேலை செய்பவர்கள் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி மூலம் தங்கள் எலும்பை உறுதி செய்து கொள்ளலாம்.
உடல் எடை அதிகரிப்பின் காரணமாக எலும்பின் உறுதித் தன்மை குறையும்.
எலும்பின் உறுதி குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு மற்ற நோய்கள் உடலை எளிதில் தாக்க வாய்ப்புள்ளது.
பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்ட பின்னர் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறையும்.
இதனால் எலும்புத் தேய்வு ஏற்படும். கால்சியம் குறைபாடு ஏற்படும்.
எனவே இந்த சமயத்தில் பெண்கள் முழு கவனத்துடன் இருந்து கால்சியம் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயதானவர்களுக்கு ஆஸ்டியோபீனா எனப்படும் எலும்பு கொழகொழப்புத் தன்மை அடைகிறது. இதனால் உடல் எடையை தாங்க முடியாமல் கால்கள் வளைந்து விடும்.
ஆஸ்டியோபோரசிஸ் என்ற பாதிப்பால் கீழே விழுந்தால் கூட எலும்பு உடைந்து விடும். எனவே எலும்பின் உறுதியைப் பாதுகாப்பது மிகவும் அவசியம்.
ரெசிபி
பொன்னாங்கன்னிக் கீரை கட்லட்: பொன்னாங்கன்னிக் கீரை இரண்டு கட்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி எண்ணெய்யில் வதக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் 1, பச்சை மிளகாய் 2, கடலை மாவு 1 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ் பூன், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
பின்னர் கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டி பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேக வைத்து எடுக்கவும். பொன்னாங்கன்னி கீரையில் கால்சியம் சத்து உள்ளது.
ஓட்ஸ் குருமா:
பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு உள்ளிட்ட மசாலா பொருட்கள் 1 டீஸ்பூன் எடுத்து தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 2 வெங்காயம், தக்காளி, 2 கப் ஓட்ஸ் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரைத்த விழுது, கொத்தமல்லி தூள் சேர்த்து தண்ணீர் விட்டு கொதித்த பின் இறக்கவும். சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். கால்சியம் சத்து அதிகம் உள்ளது.
பிரட் தோசை:
தோசை மாவு இரண்டு கப் எடுத்துக்கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் 2, வெங்காயம் 1, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும்.
பிரட் துண்டுகளை மாவில் போட்டு தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும். இதில் தேவையான அளவு கார்போஹைட்ரேட் கிடைக்கிறது.
டயட்
பழங்கள், மற்றும் பச்சைக் காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, தானியங்கள், ஓட்ஸ், கொண்டைக்கடலை, கொள்ளு, பருப்பு, கேழ்வரகு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களும், மக்காச்சோளம் ஆகியவற்றையும் உணவில் சேர்க்கவும். அசைவ உணவுகள் வாரம் ஒரு முறை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு முட்டை வேகவைத்து சாப்பிட வேண்டும்.
சுண்ட காய்ச்சிய பால் ஒரு நாளைக்கு நான்கு டம்ளர்கள் அருந்த வேண்டும்.
காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப்பிடுவதன் மூலம் கால்சியம் சத்து முழுமையாக கிடைக்கும். உலர்ந்த திராட்சை, பாதாம், காலிபிளவர், முட்டைக்கோஸ், வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைப்பழம், மாதுளை மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவு வகைகளையும் தினமும் உணவில் சேர்க்கவும்.
சின்ன வெங்காயம் குழம்பில் சேர்க்கலாம். என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.
பாட்டி வைத்தியம்
அத்திக்காயை வேக வைத்து சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் கை, கால் வலிகள் நீங்கும்.
அதிவிடயம், எள், வெள்ளரி விதை மூன்றும் தலா 100 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து கொள்ளவும். காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதிப்படும்.
அமுக்காரா, ஏலக்காய், சுக்கு, சித்திரத்தை ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் இதில் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகும்.
மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.
ஆளி விதை 100 கிராம் பொடி செய்து அத்துடன் 10 கிராம குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து கலந்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
இலுப்பைக் கொட்டையில் இருந்து எண்ணெய் எடுத்து இடுப்பில் தேய்த்தால் நிவாரணம் பெறலாம்.
உளுந்து, கோதுமை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து அதில் வெந்நீரில் கலந்து பற்று போட்டால் மூட்டு வாதம், மூட்டு வலி குணமாகும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை வைத்தியம் அவசியம்"
"இதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்"
"ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்"

தொகுப்பு  :  அ.தையுபா அஜ்மல் .

Sunday, August 21, 2016

உன்னத கலைஞனுக்கு உலகத்தரத்தில் ஒரு செவாலியே விருது !!

Kamal hassan


உலக நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது சிறந்த நடிப்பாற்றலுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமை நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக இந்த உயரிய விருது மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தமிழில் களத்துார் கண்ணாம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் திரைத்துறையில் 57 ஆண்டுகளை கடந்து மிகப்பெரும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார்.

இந்திய அரசின் விருதுகள்...

ஏற்கனவே, இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூசன் மற்றும் மாநில அரசின் கலைமாமணி போன்ற விருதுகளைப் பெற்றவர் கமல். இதுதவிர தேசிய விருது 3 முரையும், 19 முறை பிலிம்பேர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே...

தற்போது இவருக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்படுவதாக அந்நாட்டின் கலாச்சாரத்துறை அறிவித்துள்ளது. சிறந்த நடிப்பாற்றலுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

செவாலியே
த்தமிழர்கள்!!


முன்னதாக கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் சிவாஜிகணேன் இந்த விருது பெற்றார். தற்போது அவரது கலையுலக வாரிசாகக் கருதப்படும் கமலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.சத்தமில்லாமல் பல தமிழர்கள் ஏற்கனவே விருது வேண்டிவிட்டார்கள்... கமல் ஆறாவது தமிழர்... இதில் இருவர் ஈழத்தமிழர்கள்...

1. அஞ்சலி கோபாலன் செவாலியர் விருது பெற்றுள்ள முதல் இந்திய தமிழ் பெண் (திருநங்கைகள் நல்வாழ்வுக்காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறுவாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக

2. சிவயோகநாயகி இராமநாதன் செவாலியர் விருது பெற்ற முதல் ஈழத் தமிழ்ப்பெண். ஆசிரியர், அதிபர்.

3. சிவாஜி கணேசன் (கலைத்துறை பங்களிப்பிற்காக - 1995

4. ஷெரீன் சேவியர் (மனித உரிமைசார் பணிகளுக்காக)

5. நாகநாதன் வேலுப்பிள்ளை - யாழ் பருத்தித்துறை ஆத்தியடி

6. கமல்ஹாசன்(கலைத்துறை )பங்களிப்பிற்காக - 2016
கமல்ஹாசன் பன்முகத் திறமையாளர்...

கமல் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடாலாசிரியர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் இந்த விருதை சினிமா பிரபலங்களான நான்கு பேர் இதுவரை பெற்றுள்ளனர். ஐந்தாவதாக இந்த விருதுப் பட்டியலில் கமல் தற்போது இணைந்துள்ளார். இதேபோல், தமிழில் இந்த விருது கடந்த 1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜிக்கு கிடைத்தது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலுக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவில் செவாலியே விருது பெறும் இரண்டாவது நடிகர் என்ற பெருமையையும் கமல் பெற்றுள்ளார். இதுவரை செவாலியே விருது பெற்ற இந்திய திரைப்பிரபலங்களின் விபரமாவது:

1987ம் ஆண்டு வங்காளத் திரைப்பட இயக்குநர் சத்யஜித்ரே

1997ம் ஆண்டு மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

2007ம் ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப்

2014ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ஷாரூக்கான்

2016 ஆண்டு நடிகர் கமல்ஹாசன்வாழ்த்துரை !! 

ஈடு இணையற்ற கலைஞன் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் !
செவாலியே விருது குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து கமலுக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.அயராத உழைப்பு, தனித்தன்மை, சினிமாத் துறையின் பன் முகத்திலும் கால் பதிக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளில் வெற்றியே கண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். சிவாஜிக்குப் பிறகு 'செவாலியர்' விருது பெரும் நேரத்தில் ஒப்பிட்டும் நோக்க வேண்டியுள்ளது. சிவாஜியைப் போல புராண, இதிகாச, சரித்திரப் படங்களிலோ, அல்லது தேச பக்தர்களின் வாழ்க்கையை விவரிக்கும் படங்களிலோ தடம் பதிக்க அவர் இன்னமும் முயலவில்லை என்பது உண்மை. இருப்பினும், மேலும் விருதுகள் பெற நல் வாழ்த்துக்கள்..

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


Saturday, August 20, 2016

நாட்டு நாய்களே நமக்கேற்ற நாய்கள் !!

ஷிரின் மெர்ச்சன்ட், - நாய்களுக்குப் பிரியமானவர். நாய்களை நேசிப்பவர். இதுவரை 3000க்கும் மேற்பட்ட நாய்களைக் கையாண்டு வெவ்வேறு வகைகளில் பயிற்சி கொடுத்தவர். இந்தியாவிலுள்ள நாய்களுக்கான வெகுசில பெண் பயிற்சியாளர்களில் இவருக்கே முதலிடம்.

சமீபத்தில் சென்னையில் ‘திங்க் டாக்’ என்னும் நிகழ்ச்சியை நடத்த வந்திருந்தவரிடம், நாய்களைப் பற்றியும், நாய்களுடனான அவரது உறவைப் பற்றியும் உரையாடியதிலிருந்து...
‘‘ஷிரின், டாக் ட்ரெயினர் ஆனது எப்படி?’’

‘‘எங்கள் வீட்டில் பெட் டாக் வளர்த்தோம். அதுதான் நாய்களுடனான என் பிரியத்திற்கு அடிப்படை. 1995ல் உலகப் புகழ்பெற்ற நாய்ப் பயிற்சியாளர் ஜான் ரோஜார்சனை சந்தித்தேன். நாய்கள் மீதான என் ஈடுபாட்டைக் கண்டு அவர் என்னை நாய்களைப் பற்றி மேலும் படிக்க இங்கிலாந்து அழைத்தார். பயிற்சி முடித்து வந்தபோது, மிகவும் மனநிறைவாக இருந்தது. உரிமையாளர்களுக்கு, நாய் வளர்ப்பைக் கற்றுக் கொடுக்கும் டாக் டிரெயினராக பணியாற்றத் தொடங்கினேன்.’’ 


‘‘நாய்களைப் பயிற்சிப்படுத்தும் முறை பற்றிக் கூற முடியுமா?’’


‘‘நாய்களுக்கும், அதன் பயிற்சியாளர்களுக்குமான உறவு ‘டெலிபதி’ மூலம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்று கருதிய மக்கள் கடந்த சில வருடங்களாகத்தான் அது அறிவியல் சார்ந்தது என உணர ஆரம்பித்திருக்கிறார்கள். நாயின் பயிற்சியாளர் நாயின் குணநலன்களையும், பழக்க வழக்கங்களையும், சுற்றுப்புறத்தையும் ஆராய்ச்சி செய்த பின்னரே அதை முழுமையாகப் பயிற்றுவிக்க முடியும். ஆரம்பத்தில் நாயைப் பார்த்துக் கத்த வேண்டும், பேச வேண்டும். ஒரு பந்தம் உருவான பின், நம் சத்தம்தான் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் என்பதில்லை; நம் கண்கள், விரல் அசைவுகளைக் கூட அது புரிந்துகொள்ளும். இன்றைய தொழில்நுட்ப உலகில் பல்வேறு முறைகளைக் கொண்டு நாய்களுக்கு பயிற்சி கொடுக்கலாம்.’’
‘‘ஒரு லேடி டாக் டிரெயினராக, இத்துறை தந்த அனுபவம்?’’

‘‘20 வருடங்களுக்கு முன் நாய் பயிற்சியாளராகப் நான் பணியைத் தொடங்கியபோது, ஆண்களால் மட்டுமே இதைச் செய்திட முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் காட்டினேன். முன்பிருந்ததைக் காட்டிலும் இப்போது பல பெண் பயிற்சியாளர்கள் இத்துறையில் வெற்றி நடை போட்டு வருவதைக் காணும்போது, பெருமையாக இருக்கிறது. பெண்களுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம் உள்ளதால், இந்த வேலை ஆண்களைவிட பெண்களுக்கு எளிமையானது.’’

“ ‘திங்க் டாக்’ நிகழ்ச்சியின் குறிக்கோள்?’’


‘‘நாய் உரிமையாளராக இருந்தும் நாய்களைப் பற்றி சரிவரத் தெரியாதவர்களுக்கு அந்நாயின் குணங்களையும், பழக்கவழக்கங்களையும் இன்னும் தெளிவாக கற்பிப்பதே இதன் நோக்கம். இதன் மூலம் அவர்கள் தங்கள் நாயைப் பற்றி நன்கு அறிந்து கொள்வதுடன், அதற்கு பயிற்சி அளிப்பது எவ்வளவு உற்சாகமான விஷயம் என்பதையும் அறிந்து கொள்ளலாம். சென்ற வருடம் இந்நிகழ்ச்சியை முதன் முதலில் இந்தியாவில் ஐந்து நகரங்களில் நடத்தினோம். இப்போது 23 நகரங்களில் நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு வரவேற்பு பெருகியுள்ளது.’’
‘‘ஏதேனும் சுவாரஸ்ய அனுபவம்..?’’

‘‘ஒரு நாய் தன் உரிமையாளரின் தலையணையில் அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது. அந்த உரிமையாளர் அந்நாயை தனியாக விட்டுச் சென்றதன் காரணமாக கோபத்தில் இப்படி செய்திருக்கலாம் என நினைத்தார். ஆனால் நாங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அந்த நாய்க்கு உரிமையாளரின் மேலுள்ள நிலை கொள்ளாத பிரியம் காரணமாக அவரை விட்டுப் பிரிந்திருக்க முடியாது தவித்ததும், பின் அவர் வாசனை அதிகமுள்ள தலையணையின் மீது சிறுநீர் கழித்ததும் தெரிய வந்தது. அந்த உரிமையாளருக்கு அவர் அந்த நாயை விட்டுப் பிரியும் சமயங்களில், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை அந்நாய்க்குப் பழக்குமாறு ஆலோசனை கொடுத்து சில யுத்திகளையும் கையாளச் சொன்னோம். அதன் பிறகு, அந்த நாய் அவர் தலையணையில் சிறுநீர் கழிக்கவில்லை!’’ 


‘‘இந்தியாவின் சீதோஷண நிலைக்கு வளர்க்க ஏற்ற நாய் ரகம் எது?’’


‘‘ ‘ஸ்டேட்டஸ்’ வேண்டி பலரும் வெளிநாட்டு நாய் ரகங்களையே வளர்க்க விரும்புகின்றனர். ஆனால், உண்மையில் நம் நாட்டு நாய்களே நல்ல ரகங்கள்தான். அதைப் பழக்கப்படுத்துவதும், புரிந்துகொள்வதும் எளிது என்பதுடன், குறைந்த உடல்நிலைக் குறைபாடுகள் கொண்டவையாகவும் இருக்கும். நம் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற நாய் வகையும் அவையே!’’

Thursday, August 18, 2016

ஜோக்கர்ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம் !! ஒரு சமூக பார்வை..ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய படம்அரசியல்வாதிகளை மட்டும் அல்ல.அரசியலை ஒரு கண்ணாகவும் அன்பை மறு கண்ணாகவும் சிரிப்புடன் கலந்த யதார்த்தத்துடன் படைத்த படம். பத்திரிக்கைகளின் விபச்சார முகத்தையும் டார் டாராக கிழித்த படம் சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை இப்படியொரு கருவை யோசித்தற்காகவே, இயக்குநர் ராஜூ முருகனுக்கு மனம் கனிந்த பாராட்டுக்கள். அமைச்சர்கள் ஹெலிகாப்டரை வழிபடுவது, நாக்கைத் துருத்துவது, ஏ/சியில் உண்ணாவிரதம், கலாய்க்கும் இணைய பிரபலங்களின் பெயர்கள், முப்பாட்டனின் மதம் என வசனங்களில் முருகேஷ் பாபுவோடு இணைந்து சரவெடி கொளுத்திப் போட்டுள்ளார் ட்ராஃபிக் ராமசாமியின் செயற்பாடுகளையும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் கம்பீரத்தையும் ஞாபகப்படுத்தும் ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் பாத்திரத்தில் பேராசிரியர் மு.ராமசாமி அசத்தியுள்ளார். காம்ரேட் இசையாக காயத்ரி கிருஷ்ணா கவனத்தை ஈர்க்கிறார். பின் தொடர்பவனைக் கை பிடிப்பதோடு, கணவனை விருப்பத்திற்காக வேலையை விடும் மல்லிகாவாக வரும் ரம்யா பாண்டியன், அவரது முக பாவனைகளாலும், மேக்கப்பற்ற எளிய அழகாலும் ஈர்க்கிறார்..


தீ பறக்கும்   கீழ் கண்ட வசனங்கள்  படத்திற்கு மேலும் மெருகேற்றுகின்றன !!

மேகிய தடை பன்னுனா சீனாவுக்கு பிடிக்கல
குளிர்பானத்த தடை பண்ணுனா அமெரிக்காவுக்கு
பிடிக்கல,


ஹெலிகாப்டரா ஏன் கும்பிடுறீங்கனு அமைச்சர்கிட்ட
சொன்னா ஆளுங்கட்சிக்கு பிடிக்கல,

அரநாள் உண்ணாவிரத்த்துக்கு 10 ஏர்கூலரானு கேட்டா எதிர்கட்சிக்கு பிடிக்கல,

சாதி மறுப்பு திருமணம் பண்ணி வச்சாசாதிவெறியன்களுக்கு புடிக்கல

குண்டு வைக்கிறவன விட்டுங்க, கோயில்ல உண்டக்கட்டி வாங்குறவன் பிடிங்க?

கக்கூஸ்ல ஊழல் பண்ற உங்ககிட்ட கருணையை எப்படி எதிர்பார்க்கிறது?

ஹீரோவைவிட வில்லனைத்தான் இப்போ ஜனங்களுக்கு பிடிக்குது

நிம்மதியா வாழவும் விடல பேளவும் விடல இவிங்க

எந்த போலீஸ் ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’

கக்கூஸ் கட்டுன காசு நாறாது சகாயம் பண்ணல.. அட்லீஸ்ட் சகாயம் மாதிரி பண்ணுங்க

நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?

உங்களுக்கு நல்லது பண்ணினா நான் பைத்தியக்கரனா? போங்கடா போய் பீயை தின்னுங்க.? லாட்ஜ்ல பிராத்தல் பண்ணுங்க

நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்… அவன டிஸ்மிஸ் பண்ண உரிமை இல்லையா….?

இது போன்ற வசனத்துக்காகவும்..


அரசியல் வாதிகள் மற்றும் கார்ப்பரேட்கள் சம்பாதிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட மோடியின்கிளீன் இந்தியா திட்டத்தின் உண்மை தன்மையை கிழி,கிழி என கிழித்தமைக்காகவும. பல இடங்களில் அம்பேத்கர் ,பெரியார் ,பகத்சிங் போன்ற முற்போக்காளர்களின் புகைப்படம் மட்டுமல்ல அவரது கருத்துக்களும் படம் நெடுகிலும் பேசப்படுவதற்கும்‪ ‎ஜோக்கரை‬ பல முறை ரசிக்கலாம்...

இலவச கழிப்பறைத் திட்டத்தைப் பற்றி, அரசு அலுவலகத்தின் வெளியே நின்றவாறு ஓர் அதிகாரி, யாருக்கு எவ்வளவு கமிஷன் போகவேண்டும் என்பது போல் ஃபோனில் பேசிக் கொண்டிருப்பார். அந்த அலுவலகத்தின் அவலமான கழிப்பறையை இயக்குநர் ராஜூ முருகன் காட்டுவதோடு, ஓட்டை பக்கெட் மூலமாக தண்ணீர் வேகமாகப் போவதாகவும் காட்டியிருப்பார்ஒட்டு மொத்த மக்களுக்கு போராடுகிறவங்கள பார்த்து வெட்டியா கத்துறாங்க,
ரோட்ல டிராபிக் ஜாம் பண்றாங்க,,ஜோக்கருங்க என நெனச்சவங்க பல பேர்கிட்ட  
சின்ன மாற்றத்தனாலும் ஏற்படுத்தும் இந்த படம் நம்மை ஆட்டிப்படைக்கும் இந்த சிஸ்ட்டத்தை சிரித்துக்கொண்டே, கரைத்த சாணியில் பிஞ்ச செருப்பை முக்கி பளார் பளார் என அறைகிறார் ராஜு முருகன். ரோட்டோரம் போராட்டம் செய்யும் ஒருவரின் வலி இனி சாலையை கடக்கும் ஒருவருக்கும் எளிமையாய் புரியும்.... (டிராபிக் ராமசாமி போன்றவர்களை இனி மதிக்க கற்போம்)...

இன்று  விகடன்‬ 50/100 என்ற  மார்க் கொடுத்திருக்கிறது என்றால் ‪ஜோக்கர்‬ ஒரு வெற்றிப்படமாக அந்தஷ்து பெற்றுவிட்டது. 

நல்ல படங்களை ஆதரிப்போம் சின்ன படங்களை ஆதரிப்போம் இல்லயேல் ... நாம்தான் ஜோக்கர்!!

ஆக்கம்   மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Wednesday, August 17, 2016

என் மனைவி தையுபாவிற்க்கு 11ம் திருமண நாள் கவிதை !!

நிலம் அழகு நீர் அழகு 
மீன் போன்ற உன் கண் அழகு!
பூ அழகு பொட்டழகு
உன் இதழ் சிந்தும் தேன் அழகு!
உடை அழகு இடை அழகு
நளினமான உன் நடை அழகு!
மண் அழகு விண் அழகு
பௌர்ணமியாய் உன் முகம் அழகு!
பகல் அழகு இரவு அழகு
கார்கூந்தலாய் உன் முடி அழகு!
கை அழகு விரல் அழகு
அதற்க்கு மகுடமாய் உன் நகம் அழகு!
மயில் அழகு குயில் அழகு
தேன் தெவிட்டும் உன் குரல் அழகு!
சினம் அழகு சிரிப்பழகு
உன் கன்னத்தில் விழும் குழி அழகு!
கவி அழகு மொழி அழகு
நீ பேசும் தமிழ் அழகு!
நெளிவழகு சுளிவழகு
உன் கால்களில் சிலம்பழகு!
நனி அழகு நகை அழகு
பொன்நகையாய் உன் சிரிப்பழகு!
அலை அழகு கடல் அழகு
கடல் போன்ற உன் மனம் அழகு! 
தூண் அழகு துரும்பழகு
குறும்பான உன் குணம் அழகு!
இரவு அழகு கனவு அழகு
எனை வாட்டும் உன் நினைவழகு!
மனம் அழகு சினம் அழகு
நீ வசிக்கும் என் உள்ளம் அழகு!
நதி அழகு மதி அழகு
நீ பாடும் ஜதி அழகு!
வான் அழகு மண் அழகு
இறைவன் படைப்பில் பெண் அழகு!
என் அழகு எது அழகு
பெண் இனத்தில் நீ அழகு!

உன் கணவன் ; மு . அஜ்மல் கான் .

என் மனைவிக்கு 11ம் ஆண்டு மணநாள் வாழ்த்து !!

Image result for rose bouquetஎன் மனைவிக்கு
11ம் ஆண்டு
மணநாள் வாழ்த்து
கவிதை இதோ...


உன்னில் நான் இருக்கிறேன் 
என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும்
என் இதயப்பூவில் இன்றும்
முதல் நாள் பார்த்த அதே ஆனந்தம்..!!!
நாம் மணந்த போதும்
அவ்வப்போது
என் இதயத்தை வாட்டுகிறது
இனம் தெரியாமல்
ஓர் இன்பமான வலி...!!!
காதல் என்பது மூன்றெழுத்து தான்
ஆனால் அதற்குள்
பல ஆயிர ஆனந்தங்கள் உள்ளது
என்பதை உன்னை மணந்த
பிறகே தெரிந்து கொண்டேன்...!!
என்றும் நான் கவிதை எழுத
முதல் நாள் நீ பார்த்த
அந்த ஒற்றை பார்வை
மட்டும் போதும் எனக்கு..!!!
கண்கள் பார்க்க மட்டுமே
என்று நினைத்திருந்தேன்..
உன்னை பார்த்த பிறகு தான்
அதன் அருமையை உணர்ந்தேன்...!!!
நீ அழகானவள் என்று
என்னுள் தோன்ற வைத்தது
என்னை பார்த்து
நீ பூத்த ஒற்றை புன்னகையே...!!!
உன்னை கண்ட நாள்
முதல் காதல்
 என்னுள் பிறக்கவில்லை
விதைக்கபட்டது...!!!
அனுதினம் என்னுடன் நீ
மனைவியாய் இருந்தாலும் ..
எந்தன் சிந்தனை நீ
காதலியாகவே இருக்கிறாய்..
இரவில் கண்கள் மூடி படுத்தால்
இமைகள் மூடுகிறது ஆனால்
இதயம் உன்னையே நினைத்து
கொண்டிருக்கிறது என் அன்பே...!!!
மழையில் குடையில் ஒன்றாக
நடக்க வேண்டும் என்று நினைத்தோம்...
இன்று வாழ்க்கை குடைக்குள்
அனந்தமாய் பயணிக்கிறோம்..!!!
எனக்காக நீ அல்ல
உனக்காக நான் அல்ல
நமக்காக என்று சொல்ல வைத்தது
நம் குழந்தைகள்...!!!
உனக்கென நான் இருக்கிறேன்
எனக்காக நீ இருக்கிறாய்..
நமக்காக நம் செல்வங்கள் என
சொல்லவைத்தது நம் கவிதை..!!!
வாழ்க்கை என்பது வெறும்
வார்த்தை அல்ல...
அது வசந்தத்தின் வாயில்
என்றுமே நமக்கு...!!!
சுகமான வலியை உணர்ந்தேன்
நீ என்னை கண்ட நாள் முதல்..!!!
இன்று ஆனத்தை அனுபவிக்கிறேன்
உன்னை மனைவியாக அடைந்ததால்..
என்றும் கவிதையுடன்
மு. அஜ்மல் கான்,

Saturday, August 6, 2016

இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான இந்திய வீரர்கள் ரியோ ஒலிம்பிக்கில்போட்டி!!


ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள்,நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம், ஜிகா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு நடுவே பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் தொடங்கின. தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.இன்று தொடங்கி மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

உலக வரலாற்றில் முதல் முறையாக அகதிகள் ஓர் அணியாக இணைந்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 118 பேர் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.

ஒலிம்பிக் தொடக்க விழாவின் கவனிக்கத்தக்க முக்கிய 10 அம்சங்கள்:

* நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம், ஜிகா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு நடுவே ஒலிம்பிக் ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள், ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் தொடங்கின. தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.

* ஒலிம்பிக்கின் பாரம்பரிய கருப்பொருளான அமைதி, இம்முறை மரங்கள் குறித்த விழிப்புணர்வாக மாறியிருந்தது தொடக்க விழாவில், ''பூமிக்கு தீங்குசெய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாது; இயற்கையை குணப்படுத்த இதுவே சரியான நேரம். மரங்களை நடுவோம். மானுடத்தையும், இயற்கையையும் காப்பாற்றுவோம். இதுதான் நம்முடைய ஒலிம்பிக் செய்தி'' என்று கூறப்பட்டது.

* பிரேசில் விழா ஏற்பாட்டாளர்கள் தங்களின் உணர்வுபூர்வ விளையாட்டான கால்பந்தை ஒதுக்கி, பருவநிலை மாற்றத்தையும் இயற்கை வளங்களின் சிதைவையும் விழாவின் மையக்கருவாக மாற்றியிருந்தனர். பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா விழாவில் கோலாகலத்துடன் அரங்கேறியது.

* விழா 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் 11 பகுதிகளில் பிரேசிலைப் பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. முதல் 45 நிமிடங்கள் பிரேசில் வரலாறும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அதன் நிலை பற்றியும் கூறப்பட்டது. வடகிழக்கு பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டன. பின்னர் சமகாலத்திய பிரேசிலின் கட்டமைப்பும், அதன் நகரமயமாக்கலும் கூறப்பட்டன.

* அடுத்ததாக வீரர்கள் அணிவகுப்பு தொடங்கியது. ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் சென்றனர். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர். இந்திய அணி 95-வது நாடாக அணிவகுப்பில் பங்கேற்றது. துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்திச் சென்றார்.

* இந்திய வீரர்கள் அணிவகுப்பில் 70 வீரர்களும், 24 அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வீரர்கள் கடல் நீல வண்ண கால்சட்டையும், மேல்சட்டையும் அணிந்திருந்தனர். வீராங்கனைகள் பாரம்பரிய புடவையையும், நீல மேல்சட்டையும் அணிந்திருந்தனர். தனது 7-வது ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் லியாண்டர் பயஸ், மக்கள் கூட்டத்தில் உற்சாகத்துடன் காணப்பட்டார். பேட்மின்டன் வீராங்கனைகள் ஜ்வாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகரையும் காண முடிந்தது.

* ஸ்பானிய, பிரிட்டிஷ் நாடுகளின் அணிவகுப்பு, பிரபல வீரர்களான ரஃபேல் நடால் மற்றும் ஆண்டி முர்ரேவின் முன்னெடுப்போடு களைகட்டியது. 60 உறுப்பினர்களைக்கொண்ட ஜமைக்கா குழு, உலக சாம்பியனான உசேன் போல்ட் இல்லாமலேயே நடந்து சென்றது. நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையில், 500 உறுப்பினர்களோடு அமெரிக்க அணி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிவப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் அணிவகுத்துச் சென்றது.

* வீரர்களின் அணிவகுப்புக்குப் பிறகு, சர்வதேச ஒலிபிக் கவுன்சில் தலைவரும், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான தாமஸ் பாச் நீண்ட உரையாற்றினார். அதில், ''ஒலிம்பிக் அமைதியை வளர்க்கிறது. நாம் நிலையில்லாத, அவ நம்பிக்கை கொண்ட, நெருக்கடியான உலகத்தில் வாழ்கிறோம். உலகின் தலைசிறந்த 10,000 வீரர்கள் ஒற்றை ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி, தங்களின் உணவையும், உணர்வையும் பகிர்ந்து வாழ்கின்றனர். இந்த ஒலிம்பிக் உலகில், எல்லோருக்கும் ஒரே விதிதான். எல்லோரும் சமம் என்பதே அது.

இந்த விழாவில் புதிதாக இணைந்துள்ள அகதிகள் ஒலிம்பிக் அணியை முழுமனதோடு வரவேற்கிறேன். நீங்கள் உலகில் இருக்கும் அனைவருக்கும் இதன்மூலம் செய்தி அனுப்புகிறீர்கள். நீங்கள் சமுதாயத்துக்கு சிறந்த பங்கை அளித்திருக்கிறீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

* ஒலிம்பிக் விளையாட்டுக்கள் குறித்த முறையான அறிவிப்புக்குப் பிறகு, பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கிடையில், முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரரும், மூன்று முறை ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் பெற்ற பிரேசில் வீரருமான கஸ்டாவோ குயர்டன் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திவந்தார்.

* 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் மாரத்தான் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பிரேசில் வீரரான வெண்டர்லி டி லிமா, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவதாக இருந்த கால்பந்து லெஜண்ட் பீலே உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு விலகியது குறிப்பிடத்தக்கது.


> ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் மிகப்பெரிய அணியும் இதுதான். அதன் விவரம்

அரியானா (23), பஞ்சாப் (13) மாநிலங்களில் அதிகளவில் விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் சார்பில் அஜந்தா சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), சதீஷ் சிவலிங்கம் (பளுதுாக்குதல்), ஸ்ரீஜேஸ், ருபிந்தர் பால் சிங் (ஹாக்கி), கணபதி, ஆரோக்கிய ராஜிவ் (தடகளம்) உட்பட மொத்தம் 12 பேர் பங்கேற்கின்றனர். இதில் சரத் கமல் 2004, 2008ஐ தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக களமிறங்குகிறார். இவர், 2006 (2), 2010 (1) காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ள போதிலும், ஒலிம்பிக் பதக்கம் மட்டும் பிடிபடாமல் உள்ளது.


வெல்வாரா சதீஷ்:கடந்த 2014, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 77 கி.கி., எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதித்தவர் தமிழத்தின் வேலுாரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம். பின் நடந்த ஆசிய விளையாட்டில் இவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஒலிம்பிக்கில் என்ன செய்வார் என பொறுத்திருந்து காணலாம்.


ஆண்கள் தொடர் ஓட்டத்தில் (4*400 மீ.,) பங்கேற்கும் திருச்சியின் ஆரோக்கிய ராஜிவ், திருப்பூரின் தருண், மற்றும் மாற்று வீரர் மோகன் குமார் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்.

இதேபோல 20 கி.மீ., நடை போட்டியில் கிருஷ்ணகிரி வீரர் கணபதி கிருஷணன் பங்கேற்கிறார். ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஸ், ருபிந்தர் பால் சிங் இருவரும் தமிழகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, August 5, 2016

பிரேசில் நாட்டில் 31-வது ஒலிம்பிக் திருவிழா !!

ரியோ ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல மல்லுகட்ட ஆயத்தமாகி வருகிறார்கள்.

தொடக்க விழா கால்பந்து மைதானமான மரகானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது.
தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, மைதானத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவது யார் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்டது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தீபத்தை ஏற்றும் கவுரவத்தை வழங்க போட்டி அமைப்பாளர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் தனது பெயரை பயன்படுத்தும் முழு உரிமையை அமெரிக்க கம்பெனிக்கு வழங்கியுள்ள பீலே, அந்த நிறுவனம் அனுமதித்தால் நிச்சயம் தீபத்தை ஏற்றுவேன் என்று கூறியுள்ளார். என்றாலும் அவர் தான் தீபத்தை கடைசியாக ஏந்தி வந்து ஏற்றி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் இன்னொரு முக்கிய விஷயம் அணிகளின் அணிவகுப்பாகும். 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் உற்சாகமாக அணி வகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமை தாங்குகிறார். அவர் நமது தேசிய கொடியை ஏந்தி செல்வார்.
ஒலிம்பிக் தாயகமான கிரீஸ், அணிவகுப்பில் முதல் நாடாக செல்லும். அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி ஒவ்வொரு அணியாக வீறுநடை போடும். இந்த பட்டியலில் இந்தியா 95-வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக கலந்து கொள்ளும் 10 பேர் கொண்ட அகதிகள் அணி ஒலிம்பிக் கொடியின் கீழ் வலம் வரும். போட்டியை நடத்தும் பிரேசில் அணிவகுப்பில் கடைசி நாடாக செல்லும். அதற்கு முன்பாக அகதிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டு களிக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என்று தெரிகிறது.
பிரேசில் நேரப்படி தொடக்க விழா இரவு 8 மணிக்கு தொடங்கினாலும், நமக்கும் அவர்களுக்கும் இடையே 81/2 மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது. அதாவது ஒலிம்பிக் தொடக்க விழா இந்திய நேரப்படி பார்த்தால் மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தான் தொடங்கும். தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
வருகிற 21-ந்தேதி வரை நடைபெறும் இந்த ஒலிம்பிக் கொண்டாட்டத்தில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதில் வழக்கம் போல் அமெரிக்கா, சீனா இடையே கடும் போட்டி இருக்கும். அமெரிக்கா 292 பெண்கள் உள்பட 554 பேருடனும், சீனா 413 பேருடனும் ரியோவுக்கு படையெடுத்துள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் அணி 465 பேரை களம் இறக்குகிறது.
இந்த முறை இந்தியா மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. முந்தைய லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 83 பேர் பங்கேற்று இருந்தனர். அந்த ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் கிடைத்தன.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டுகளில் களம் இறங்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் பங்கேற்போரின் எண்ணிக்கையில் இந்தியா செஞ்சுரி அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இரட்டை இலக்கு பதக்க எண்ணிக்கையை தொடுவதே இந்தியாவின் லட்சியமாகும். துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, டென்னிஸ், ஆண்கள் ஆக்கி ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
ஒலிம்பிக் போட்டியையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இது தவிர ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகளில் அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனியார் ஊழியர்கள், 50 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் என்று மொத்தம் 90 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Wednesday, August 3, 2016

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பு !!

உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். இவர்களில் 80% பேர் ஆசியக் கண்டதைச் சேர்ந்தவர்கள். இதில் 90% மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை என்றும் 80% பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் கல்விநிலை மிகவும் மோசமாக உள்ளது. படிப்பதற்கான ஆர்வமும் உத்வேகமும் இருந்தபோதிலும், இவர்களுக்கு படிப்பதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தித் தருவதில்லை. இதனால், இவர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறாமல் இருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி நிலையங்களில் முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததும், படிகள் ஏறுவதற்கான சரிவுப் பாதைகள் அமைக்காததும், சைகை மூலம் விளக்கும் ஆசிரியர்கள் குறைபாடு என இவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் இவர்களும் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பள்ளி செல்வதை தவிர்த்து விடுகின்றனர். மேலும் தமிழகத்தில் 39.3% மாற்றுத்திறனாளிகள் கல்வியறிவு பெறாமல் இருக்கின்றனர்.

இந்தியாவில் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், 1 கோடியே 26 லட்சம் ஆண்களும், 93 லட்சம் பெண்களும் உள்ளனர். அதிக மாற்றுத்திறனாளிகள் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் (3.6 மில்லியன்) உள்ளது. பீகார் (1.9 மில்லியன்), மேற்கு வங்கம் (1.8 மில்லியன்), தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் (1.6 மில்லியன்) உள்ளனர். இதில் 1.46 கோடி கல்வியறிவு பெறாதவர்களும், 12.26 லட்ச பட்டதாரிகளும் உள்ளனர். இதில், 69.49% பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாக உள்ளனர். இந்த 68% மாற்றுத்திறனாளிகள் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் சதவிகிதம் வெறும் 48.88% மட்டுமே உள்ளது.

இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வெறும் 50% மட்டுமே கல்வி கற்றவர்களாக உள்ளனர். மாற்றுத்திறனாளிகளிடம் கல்வியறிவின் நிலை கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் உயர்ந்தாலும் அதனளவு வெறும் 5.2% மட்டுமே உயர்ந்துள்ளது. கல்வியறிவு பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் நடுத்தர பள்ளி வரை மட்டுமே கல்வி பெற்றுள்ளனர். ஆனால், 2011 சென்சஸ் கணக்கெடுப்பில், இந்தியாவில் 74% மக்கள் கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதைப் பார்க்கும்போது அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வித் துறையில் போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 11,79,968 பேர் உள்ளனர். இதில், ஆண்கள் 6,57,418 மற்றும் பெண்கள் 5,22,545 பேர் உள்ளனர். நடக்க முடியாதோர் 2,87,241, காது கேளாதோர் 2,20,241, பார்வையற்றவர்கள் எண்ணிக்கை 1,27,405 பேரும், வாய் பேசமுடியாதோர் 80,077, மனநிலை குன்றியோர் 17,707 பேர் உள்ளனர். இதில், கிராமப்புறங்களில் 6,21,745, நகர்ப்புறங்களில் 5,58,218 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

நகர்ப்புறங்களில் மாற்றுத்திறனாளிகள் கல்வியைத் தொடர மறுப்பதற்கான முக்கியக் காரணம், பள்ளி நிலையங்களில் அவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாததே என்று தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் கவனிப்பு அங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தெரிவித்தார்.

“பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான பள்ளிகள் மிகக் குறைவாக உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் இவர்களைச் சுமையாகப் பார்க்கிறார்கள். எனவே, இவர்கள் தங்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர் தங்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பாததால், பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான பள்ளிகள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும், அநேக பள்ளிகளில் சைகை மொழியில் விளக்குவதற்கான ஆசிரியர்கள் இருப்பதில்லை. இதனால், இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். தமிழகம் போன்ற தொழிற்துறையில் முன்னேறிய மாநிலங்களில்கூட வெறும் 11 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே இருக்கின்றன. அதுவும் நகர்ப்புறங்களில்தான் அதிகமாக உள்ளன. பின்தங்கிய மாநிலங்களில் இந்த நிலை மிக மோசமாக உள்ளது” என்றார் நம்புராஜன்.

மேலும், தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வளர்க்கவும், சுயதொழில் தொடங்கவும் பயிற்சி அளிப்பதற்கான வலுவான கூட்டமைப்பு தேவை. அதன்மூலம் வருமானத்தை பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும். தேசிய திறன் வளர்ச்சி மேப்பட்டுக் கழகத்தின் திட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி, தொழில் மேம்பாட்டு மையம் மாவட்டம்வாரியாக அமைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள்:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத் தலைவி ஜான்சிராணி கூறுகையில், “தமிழகத்தில், 2011இல் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, 22 லட்சம் என தமிழக அரசு அறிவித்தது. 2014இல் 16 லட்சம் என தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான கணக்கெடுப்பு, புள்ளி விவரம், ஆவணம் எதுவும் வெளியிடப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 22 லட்சமாக இருந்தது. 16 லட்சமாகக் குறைய வாய்ப்பில்லை.

எதனடிப்படையில் இந்த எண்ணிக்கை குறைந்தது என அதற்கான காரணங்களை அரசு அறிவிக்கவில்லை. தமிழகத்தில், 30 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். பல ஆண்டாகக் கோரியும், மாற்றுத்திறனாளிக்கு பராமரிப்புத் தொகையாக ரூபாய் 1,000 வழங்க அரசு முன்வரவில்லை.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 40 சதவிகிதம் ஊனம் இருந்தாலே, மாற்றுத்திறனாளிக்கான சான்று அளிக்கப்பட்டு, நிதியுதவி சலுகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 60 சதவிகிதம் தொடங்கி அதற்கும் அதிகமான ஊனம் இருந்தால் மட்டுமே, மாற்றுத்திறனாளி அங்கீகாரம் வழங்கப்பட்டு நல உதவி பெறும் நிலை உள்ளது.

அத்துடன், அந்தக் குடும்பத்தின் சொத்து ரூபாய் 5,000-க்கு மேல் இருக்கக்கூடாது. அக்குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் இருக்கக் கூடாது. ஆண்டு வருவாய் ரூபாய் 24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக, வறுமைகோட்டுக்குக்கீழ் 35 கிலோ இலவச அரிசி பெறும் திட்டத்தில் சேர மாற்றுத்திறனாளிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அவ்வாறு சேரும் மாற்றுத்திறனாளிக்கு சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட இதர ரேஷன் பொருட்கள் வழங்குவது கிடையாது. இங்கு, மாற்றுத்திறனாளிக்கு எதிரான சட்ட விதிமுறை கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சதவிகித இடஒதுக்கீடு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் மூலமே பெற வேண்டியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னை மற்றும் குறைகளைக் களையவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். மாநில அளவில், அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும். இதுவரை, மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தாமல், அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு பிரச்னையும் இதுவரை தீர்க்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும், உலக வங்கியும் இணைந்து, 2012இல், ஊனமுற்றோர் குறித்து, வெளியிட்ட முதல் உலக அறிக்கையில், உலக மொத்த மக்கள்தொகையில், 15 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

இதில், இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில், மத்திய அரசின் சமூக நிதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை நாடு முழுவதும் 39 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில், 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நிலை, ஏழு பிரிவாக உள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, மாற்றுத்திறனாளிகள் அளவீடு குறித்த பயிற்சியளிப்பது கிடையாது.

இதனால், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான எண்ணிக்கையைக் கண்டறிய முடியவில்லை’’ என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு !!

இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நிலை பற்றித் தெரிந்து கொள்ள கல்லூரிகளில் படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் உங்களின் தேவை என்ன, அரசிடமிருந்தோ அல்லது இந்த சமூகத்திடமிருந்தோ நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்ட போது அவர்கள் கூரியதாவது, எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அரசு பல சலுகைகளையும், வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இட ஒதுக்கீடும் அளிக்க வேண்டும்.

 குறிப்பாக, தமிழக அரசு பணியாளர்  தேர்வாணையத்தில்(TNPSC)மற்றுத்திறனாளிகளுக்காக 3 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடஒதுக்கீடும் இதுவரை சரிவர பின்பற்றப்படவில்லை. அந்த 3 சதவிகித இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் டெட்(TET) தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்காக மற்ற மாநிலங்கள் பின்பற்றும் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்ற சிறப்பு சலுகையை தமிழக அரசும் அளிக்க வேண்டும். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித சலுகையும் செய்யப்படாததால், பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால் அரசு கருணை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

டெட்(TET) தேர்வில் 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் என்ற சிறப்புச் சலுகை கேட்டதற்கு அரசு ஊடகங்களின் வாயிலாக தெரிவித்ததாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் என்ற சலுகை அளிக்க வாய்ப்பில்லை, 70 அல்லது 80 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் அளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மேலும் டெட்(TET) தேர்வு எழுத விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்ச்சியுடன் கூடிய தனித்தேர்வு நடத்துவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.   

ஆனால் இதுவரை அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகையோ அல்லது பயிற்சியுடன் கூடிய தனித் தேர்வு நடத்த அதிகாரப்பூர்வ அரசாணையோ எதுவும் அரசால் வெளியிடப்படவில்லை.மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து அரசு அதிகாரிகள் முழுமையாக புரிந்துகொள்வதில்லை. அதனால்தான் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் எதுவும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒருவரின் பிரச்னைகளை நேர்மையாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளாமல் அதற்கு எப்படி தீர்வு காணமுடியும்? மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறது அரசு?

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Monday, August 1, 2016

வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை வீட்சியால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை இழப்பு !! ஒரு சிறப்பு பார்வை...

சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.வளைகுடா இந்தியர்களின் நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமாகிக்கொண்டு வருகிறது,வேலை இழப்பு,சம்பளம் இல்லை,முடித்துக்கொண்டு இந்தியா செல்லலாம் என்றாலும் கணக்கு முடிக்காமல் கம்பனி இழுத்தடிப்பது என்று பிரச்சனை பூதாகரமாக சென்று கொண்டிருக்கிறது, நிறைய இந்தியர்கள் வேலை இழந்து இந்தியா வர முடியாமல்,பட்டினியால் வாடுகிறார்கள் என்ற செய்தி மிகக்கொடுமை,இந்த நிலையில் தான் சுஷ்மா சிவராஜ் அவர்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களது இந்திய சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள் என்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்,பல கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன,பல கம்பெனிகளில் ஆட்குறைப்பு,சம்பள பாக்கி என பிரச்சனையின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது,இந்த பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என்றால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வேண்டும்,கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க சில மாதம் அல்லது சில வருடங்கள் ஆகலாம்,அது வரை வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு மறுவாழ்வளிக்க இந்திய அரசாங்கமும், அந்தந்த மாநில அரசாங்கமும் போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்,அந்நிய செலாவணி ஈட்டி தரும் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களை காப்பாற்ற, உதவி செய்ய அனைவரும் முன் வரவேண்டும்...சவுதி அரேபியாவில் வேலை இழந்ததால் உணவு இல்லாமல் தவித்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சவுதி அரேபியா


சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியற்றி வருகின்றனர். எண்ணெய் வளமிக்க இந்த நாடுகளில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றவற்றில் தொழிலாளர்களாக இவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல குவைத், கத்தார், ஓமன் போன்ற நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதார வீழ்ச்சி

இந்த வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கு மூலகாரணமே எண்ணெய் வளம்தான். கச்சா எண்ணெயின் விலை மதிப்பை வைத்தே இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.

சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படைந்து வருகிறது. அதிலும் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.


வேலை இழப்பு

இதனால் இந்த நாடுகளில் இயங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

இவ்வாறு வேலையும், சம்பளத்தையும் இழந்த இந்தியர்கள் கடந்த பல நாட்களாக பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர்.

முகாம்களில் தஞ்சம்

இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களில், மிகவும் வெற்றிகரமாக இயங்கி வந்த ‘சவுதி ஓஜர்’ என்ற நிறுவனமும் ஒன்று. இதன் சவுதி அரேபியா கிளையில் மட்டுமே 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். லெபனான் நாட்டு நிறுவனமான இதில் பணியாற்றி வந்த 800–க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது வேலையிழந்து பட்டினியால் வாடுகின்றனர்.

இவர்கள் அல்–சுமைசியில் அமைக்கப்பட்டு உள்ள முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல வேறு சில கம்பெனிகளில் பணியாற்றி வேலையிழந்த இந்தியர்களுக்காக சிஸ்டன், சோஜெக்ஸ், ஹைவே, தைப் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன
.

வெளியுறவுத்துறை நடவடிக்கை

இந்த முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் கடந்த பல நாட்களாக உணவின்றி பட்டினி கிடப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. சில முகாம்களில் கம்பெனி நிர்வாகத்தால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவதும் தெரியவந்தது.

பசி, பட்டினியால் வாடி வரும் இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனே களத்தில் இறங்கியது. இது தொடர்பாக சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரிகள், பட்டினியால் வாடும் இந்தியர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.16 ஆயிரம் கிலோ உணவுகள்

இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை தொடங்கினர். இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள 5 முகாம்களுக்கும் சென்ற அவர்கள் கடந்த 4 நாட்களாக 16 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான உணவு பொருட்களை அவர்களுக்கு வழங்கினர். இந்திய தூதரகம் சார்பிலும், அங்கு வாழும் இந்தியர்கள் சார்பிலும் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த பணிகள் அனைத்தும் நேற்று அதிகாலை 2.40 மணியளவில் வெற்றிகரமாக முடிவடைந்ததாக ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மறுடுவிட் செய்திருந்தார்.சுஷ்மா சுவராஜ் தகவல்

முன்னதாக சவுதி அரேபியாவில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் தளத்தில் தொடர்ச்சியாக பல தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது:–

சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பணி மற்றும் சம்பளம் தொடர்பாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த நாடுகளில் பணியாற்றி வந்த ஏராளமான இந்தியர்கள் தங்கள் வேலையை இழந்தும், சம்பளம் கிடைக்காமலும் வாடுகிறார்கள்.10 ஆயிரம் இந்தியர்கள்

இதில் குவைத் நாட்டு இந்தியர்களின் நிலைமை ஓரளவு சமாளிக்கக்கூடியதாக இருந்தாலும், சவுதி அரேபியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழந்து பட்டினியால் வாடுகின்றனர்.

அவர்களுக்கு உணவு அளிப்பதற்கு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அவர்களும் உணவளித்து வருகிறார்கள். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு உதவுமாறு சவுதியில் வாழும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் கூட்டு விருப்பத்தை விட வலிமையானது எதுவும் இல்லை.வி.கே.சிங் பயணம்

வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் விரைவில் சவுதி அரேபியா சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், அங்கு வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதைப்போல மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த பிரச்சினை குறித்த சவுதி மற்றும் குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந்தியா திரும்ப ஏற்பாடு

இந்த நிலையில் சவுதியில் வேலை இழந்து வாடும் இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக அடுத்த சில நாட்களில் விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


அங்கு வேலை இழந்த எந்த இந்தியரும் உணவின்றி விடப்படமாட்டார் என்று
சுஷ்மா சுவராஜ் கூறி இருந்தார்.குறிப்பாக விரைவில் தொடங்க இருக்கும் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு புனித பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் திரும்பி வரும்போது பெரும்பாலும் காலியாகவே வரும். அவ்வாறு வரும் விமானங்களில் இந்த தொழிலாளர்களை ஏற்றிவர மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.