Sunday 2 August 2015

தமிழக திரை உலகம் மீண்டும் திருந்துமா?

கடந்த இருபத்து நான்கு ஆண்டுகளில் இந்தியா குறிப்பாக தமிழகம் இதுபோன்று முடங்கியதில்லை. மனிதநேயமுயள்ள மனிதர்கள் தனி மனிதனை தன் உறவாக நினைத்து முடங்கிக் கிடந்தது, அப்துல்கலாம் என்ற சாதனைச் சிகரத்தின் சரிவால் மட்டுமே என்றால் மிகையாகது. அத்தகைய சாதனைச் சரித்திரத்துக்கு அஞ்சலி செலுத்த பல லட்சம் பேர் திரண்டு வந்தபோதிலும், திரை உலகில் இருந்து வந்தவர்களை விரல் விட்டு என்னும் அளவுக்கு இருந்தது. 
கலாமின் வாழ்வு மட்டுமல்ல... மரணம்கூட பாடம்தான் எனச் சொல்லும் அளவுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் அமைதியுடன் எவ்வித ஆர்ப்பட்டமும் இன்றி அஞ்சலி செலுத்திய விதத்தால், அப்துல் கலாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல; மக்களால் நெஞ்சில் நிலைநிறுத்தப்பட்டவர் என்ற உண்மையை உலகம் புரிந்து கொண்டது.
ஒரு சாதாரண கவுன்சிலர் இயற்கை மரணம் அடையும்போதுகூட கடை அடைப்பு, வன்முறை என்று மக்களை கஷ்டப்படுத்தும் இந்த நாட்டில், எவ்வித அசம்பாவிதமும் இன்றி அன்பின் வடிவமான அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள், தாங்கள் என்றைக்குமே வன்முறையை விரும்பவில்லை என்று உணர்த்தியுள்ளனர்.
ஊழலும் லஞ்சமும் சர்வ அதிகார மமதையும் நிறைந்த நாட்டில் , நேர்மையும் எளிமையும் கடைப்பிடித்து தன் வாழ்நாளில் பெரும் பகுதியை மக்களுக்காகச் செலவிட்டு, மூச்சுள்ள வரை மாணவர்களிடம் நம்பிக்கையை விதைத்த அப்துல் கலாமின் மறைவுக்கு, ஜாதி, மதம், இனம், மாநில வேறுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் அஞ்சலி செலுத்த வரிசையில் வந்த காட்சியும், இந்தியாவின் பிரதமரே பல்வேறு பணிகளுக்கு இடையில் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தியதும் தமிழனுக்குச் செய்யப்பட மரியாதையாகவே பார்க்கத் தோன்றுகிறது.
மூத்த நடிகர்களான ரஜினியும் கமலும் இரங்கல் கடிதம் மூலம் 'கடமையை' முடித்துக்கொண்டார்கள். அந்தக் கடமையைக்கூட அஞ்சலி, ஆறுதல் வார்த்தைகள் சொல்ல முடியாத நடிகர்கள் 'தல' 'தளபதி' என்று கொண்டாடப்படுவது தமிழ்நாட்டின் தலையெழுத்துதானே? எங்கள் இல்ல விழாவுக்கோ வேறு காரியத்துக்கோ நீங்கள் வரவில்லை என நாங்கள் ஆதங்கப்படவில்லை. நம்மை ஆண்ட மக்களின் ஜனாதிபதிக்கு இரங்கல்கூட தெரிவிக்க முடியாததை நினைத்து வேதனைப்படுகிறோம்.
சட்டை போடவும், வேட்டி கட்டவும், தங்கம் வாங்கவும், நகை அடகு வைக்கவும் குளிர்பானம் குடிக்கவும் விளம்பரமாக மக்களுக்கு செய்தி சொல்லும் நடிகர்கள், மக்களில் உயர்ந்தவர், நேர்மையானவரை நாங்களும் ஆதரிக்கிறோம் எனச் சொன்னால், மக்கள் அதைப் பார்த்து வரும் நாளில் கலாம் போன்ற நேர்மை கொண்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் சூழலும் உருவாகும். அந்த வாய்ப்பை மக்களுக்குக் கொடுக்க தவறிவிட்டதாகவே தெரிகிறது.
குத்துப் பாட்டுக்கும், இன்னிசை நிகழ்ச்சிக்கும் வெளிநாடு செல்லும் சினிமா உலகம், அப்துல் கலாமை மறந்துவிட்டது வேதனை. அப்துல் கலாமுக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த, நடிகர்கள் சங்கம் சார்பாக கூட யாரும் வரவில்லை.
நடிகர்கள் ஏன் வர வேண்டும் எனக் கேட்கலாம். நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவருக்கு அஞ்சலி செலுத்த வரக் கூடாதா? சினிமாவில் நேர்மையைப் பற்றி வீர வசனம் பேசும் நடிகர்கள், நேர்மையுடன் வாழ்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது கொடுமையான ஒன்றுதான். ஜனாதிபதி விருதுக்கு மட்டுமே ஜனாதிபதியை நினைப்பார்கள் போலத் தெரிகிறது.
தமிழரின் அடையாளம் என்று வெள்ளை வேட்டி, சட்டை விளம்பரத்துக்கு பவிசாக வரும் நடிகர்கள்கூட, தமிழரின் அடையாளமாக வெள்ளை உள்ளத்துடன் வாழ்ந்த அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்றால், இவர்கள் நடித்த விளம்பரத்துக்கு என்ன அர்த்தம்? நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஊர் ஊராகச் சென்றுவரும் நடிகர் படை, அப்துல் கலாம் என்ற மாமனிதரின் அஞ்சலிக்கு வரமுடியாமல் போனது ஏன்? இந்த நாட்டின் பிரதமரும் ஏனைய தலைவர்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தும்போது, நமது திரை உலகினருக்கு நேரம் கிடைக்காமல் போய்விட்டது என்று சொல்வது வேடிக்கையானது.
ஒருவேளை, ராமேஸ்வரத்தில் கலைநிகழ்ச்சி என்று சொல்லியிருந்தால் வந்திருப்பார்களோ என்னவோ? தமிழர்களை வைத்து சம்பாதிக்கும் இவர்கள் தமிழர்கள் விரும்பிய தலைவருக்கு அஞ்சலி செலுத்த வராதது தமிழரகளை அவமானப்படுத்தியதற்குச் சமம். ஏன் வரமுடியவில்லை என்பதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்ல முடியும். ஏன் வர வேண்டும் என்பதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன.
கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் யார் கட்டாயப்படுத்தியும் வரவில்லை. அன்புக்கு, எளிமைக்கு, நேர்மைக்கு தலை வணங்கித் தான் வந்தனர். அன்பால் அனைவரையும் வென்ற தலைவருக்கு அஞ்சலி செலுத்த இவர்களாகவே வந்திருந்தால், திரை உலகை சமூகம் பாராட்டி இருந்திருக்கும்.
நீங்கள் காசுக்காக நடிக்கும் நடிகர்கள்தான் என்றால், இனிமேல் சினிமாவில் நேர்மை, எளிமை, ஒழுக்கம் பற்றி பேசாதீர்கள். ஏனென்றால் இவை எல்லாம் கொண்ட ஒரு தலைவனுக்கு அஞ்சலி செலுத்தக்கூட முடியாத நீங்கள், அவற்றைப் பற்றி பேசவும் வேண்டாம்.
கலாமை நினைத்து கண்ணீர் விட்டவர்கள், நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாதவர்கள், கலாமின் இறுதிப் பயணத்தைக் காண்பதற்கு ராமேஸ்வரத்தில் இருந்து சில தொலைக்காட்சி நிறுவனங்கள் இறுதிச் சடங்கை நேரடி ஒளிபரப்பின. அதே நேரத்தில் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் குத்துப் பாட்டையும் காமெடி காட்சிகளையும் வழக்கம்போல மக்கள் 'சேவைக்கு' ஒளிபரப்பி வந்தன. எத்தனையோ கோடிகள் சம்பாதித்த தொலைக்காட்சி நிறுவனங்கள் அப்துல் கலாமுக்காக அரை மணி நேரம்கூட நிகழ்ச்சிகளை நிறுத்தவில்லை. தொலைக்காட்சியை நிறுத்தவில்லை என்றாலும்கூட பரவாயில்லை... அரைகுறை ஆடையுடன் கூடிய பாடல்களையாவது நிறுத்தி இருக்கலாம்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம் மக்களை சினிமா மோகத்தில் வைத்திருப்பதால்தான், தொலைக் காட்சி நிறுவனங்கள் வசூல் சாதனையில் நிற்க முடிகிறது. இனிமேல் இதுபோன்ற மக்களின் மனதில் வாழ்பவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளில், தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டாயமாக சினிமா பாடல்கள், படங்கள் ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.
பதவியில் உள்ள அரசியல்வாதிக்கு பாராட்டு விழா நடத்தி, திரை உலகமே பயந்து நடுங்கிச் சென்று, நாங்கள் எப்போதும் உங்கள் நண்பன்தான் எனக் காட்டிக்கொள்ளும் திரை உலகம், மக்களின் மனதில் நின்ற மாமனிதருக்கு அஞ்சலி செலுத்த வராமல் போனது, தமிழன் சினிமாவை விட்டு எங்கே போய்விடுவான் என்ற அலட்சியம் மட்டுமே காரணம். இந்த அலட்சியம் தொடர்ந்தால், சினிமாக்காரர்களை மக்கள் தூக்கி எறியும் காலமும் வந்தே தீரும்.

எனது கருத்து :நடிகர்கள் உண்மையானவர்கள் அல்ல நாம் உண்மையானவர்கள் நடிகர்கள் அல்ல இதன் உண்மை வெளிபட்டுள்ளது.அப்படிப்பட்ட அநாகரீக அசிங்கங்களுக்கு ரசிகர் மனறங்கள் வேறு அமைத்து நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்கிறோம். நம்மை ஆளச்சொல்லி நாயாய் உழைத்து அவர்களை அரியணையில் ஏற்றி விடுகிறோம். நம குடும்பத்தை வாட விட்டு அவர்களை வாழ்க வாழ்க என்று கொடி பிடித்து கோஷமிட்டுக் கொண்டிருக்கிறோம் . அதனால் நாம்தான் சிந்திக்கனும். எனவே மூடுங்கள் ரசிகர் மன்றங்களை , பிறகு தானாகவே முன்னேறும் தமிழ் சமுதாயம்.நல்ல வேளை இந்த வெட்கம் கெட்ட கூத்தாடி கும்பல் அரைகுறை ஆடை அணிந்து இரங்கல் தெரிவிக்க வந்து இருந்தால் நம் ஐயாவிற்கு தாழ்வே தவிர உயர்வு இல்லை. நடிகர்கள் வந்திருந்தால் மக்கள் நடிகனை பார்க்க வந்த மாதிரி இருந்திருக்கும் உண்மையான வரலாறு மாற்றி எழுதபற்றிருக்கும் இந்த கூட்டம் யாரும் காசு குடுத்து கூட்டிய கூட்டம் கிடையாது தானே கூடியது.உழைப்பு என்றால் என்னவென்றுதெரியாமல் கோடிகணக்கில் கருப்பு பணத்தைஊதியமாக பெற்றுக்கொண்டு சொகுசு வாழ்கை வாழும் இவர்கள் வதிரை நட்சத்திரங்கள் வராததே அவர்கள் கலாமுக்கு செய்யும் அஞ்சலி, அவர்கள் வந்து அவர்களது விசிறிகள் அஞ்சலி செலுத்த வந்த மக்கள் அனைவரும் அவர்களின் பக்கம்வேடிக்கை பார்த்து கலாமை அவமதித்திருபார்கள்ரவில்லை என்று நாம் ஏன் வருத்தப்படவேண்டும்.சினிமா துறை இனிமேல் மக்களிடம் எடுபடாது


No comments:

Post a Comment