Monday 10 November 2014

பிழைப்புக்காக தற்கொலை படையாகும் பட்டாசு ஆலை தொழிலாளிகள் !! ஒரு சிறப்பு பார்வை..


கடந்த சில வருடங்களாக சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்து, தொழிலாளிகள் கோர மரணம் என்பதை டிவி தலைப்பு செய்திகளில் பார்க்கும் தமிழக மக்கள் ஏன் விபத்து என எண்ணி பார்க்க நேரமில்லாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் சுடப்படுவது எப்படி நமக்கெல்லாம் எப்படி தேவை இல்லாத செய்தியாக மாறிப்போனதோ அதேபோல் இந்த செய்திகளையும் அடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டி பார்க்க சொல்லும் ‘’சொல்வதெல்லாம் உண்மை” பார்க்க சேனலை மாற்றி விடுகின்றனர்..


• இந்த உலகம் ஒரு நாள் நரகாசூரனை அழித்த நாளை கொண்டாட தினம், தினம் வெடிமருந்துகளுடன் வாழும் ஒரு சமுதாயத்தை நம்முடைய மக்களும் சரி ,அரசாங்கமும் சரி திரும்பி கூட பார்ப்பதில்லை...
• வானுயர ராக்கெட் செய்யும் இம் மக்களின் வாழ்க்கை என்னவோ இன்னும் மண்ணை விட்டு வெளியே எட்டி பார்க்கவில்லை.
• கலர் கலராய் மத்தாப்பு தயாரிக்கும் இம் மக்களின் வாழ்க்கை இன்னும் கருப்பு வெள்ளை தான் ..
• மலர்ந்து சிரிக்கும் பூச்சட்டி உருவாகும் இம் மக்களின் வாழ்க்கை வாடி தான் கிடக்கிறது...


ஆராய்ந்தால் சிறு மனித தவறுகளே இந்த வெடி விபத்திற்கு காரணம் . தொழிலாளர்கள் விடுமுறை தினங்களில் அதிக கூலிக்கு ஆசைப்பட்டு காண்ட்ராக்ட் முறையில் வேலைக்கு வருவதும் வரும் பொழுது போதிய கண்காணிப்பு இல்லாமல் வெடிமருந்துகளை கையாள்வதும் விபத்திற்கு காரணாமாக அமைகிறது..மேலும் குடித்து விட்டு வேலைக்கு வருவதும் விபத்து ஏற்ப்பட காரணமாக அமைந்து விடுகிறது. (தொழிற்சாலைகளுக்கு வார விடுமுறை விடும் அரசு டாஸ்மாக்க்கிற்கு மட்டும் விடுவதில்லை.)




விபத்திற்கு தொழிலாளிகளின் தவறுகளும் அதிபர்களின் தவறுகளும் இருப்பதாக மேம்போக்காக சொல்லமுடியாது. இதற்க்கு முக்கிய காரணம் அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கும் தலை விரித்தாடும் லஞ்சமும் தான்
ஒரு பட்டாசு ஆலை உரிமம் பெற்ற அறைக்கு நான்கு நபர்கள் தான் வேலை செய்ய வேண்டும். மரத்து நிழலில் வேலை செய்ய கூடாது , குறிப்பிட்ட வெடி மருந்துகளை கையாள பல வழி முறைகளை உள்ளன. ஆனால் அதனை பின்பற்ற அரசு அதிகாரிகள் வலியுறுத்துவதை காட்டிலும் வசூலிப்பதில் தான் கவனம் அதிகம் .



பட்டாசு ஆலைகளை கண்காணிக்க வருவாய் துறையில் தனி தாசில்தார் வருவாய்த்துறை சார்பாக பணியாற்றுகிறார் . ஆனால் அவருக்கும் வெடி பொருள்களை பற்றிய எவ்வித அடிப்படை அறிவு கிடையாது. அதே போல் இந்த ஆலைகளுக்கு உரிமம் வழங்கும் DRO ,FIRE ,POLICE, FACTORY ACT,LABOUR INSPECTOR,INDUSTRY DEPT ,LOCAL BODY INSTITUIONS என யாருக்கும் வெடி பொருட்களை பற்றிய முறையான  
டெக்னிக்கல்அணுகுமுறை கிடையாது. அரசு அலுவலர்கள் தங்கள் பணியை முறையாக செய்தால் கண்டிப்பாக விபத்துக்கள் நடக்காது என்பதை விட உயிர் இழப்புகள் இருக்காது. இதற்கு நல்ல உதாரணம் பட்டாசு கண்காணிப்பு தாசில்தார் ஒருவர் வெடி பொருள்களை பற்றிய எவ்வித அடிப்படை அறிவு இல்லாமல் கைப்பற்றிய பட்டாசு மருந்துகளை அழிக்க நினைத்து பொழுது அரசு வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 8 பேர் உயரிழந்த சம்பவம் ..


உலக அளவில் அதிக பட்டாசுகளை தயாரிக்கும் சீனாவில் வெடி விபத்துகள் நடைபெறாமல் இல்லை ஆனால் அங்கே விதிமுறைகள் முறையாக பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் மிக குறைவு. அலுமனிய பவுடர் உடல் முழுவதும் அப்பி பார்க்க நடமாடும் ரோபோவாக திரியும் தொழிளார்களுக்கு சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை எந்த சுகாதாரா துறை அதிகாரிகளும் அவர்களுக்கு சொல்லி தந்ததாக தெரியவில்லை.

 பட்டாசு விபத்தில்  சிவகாசி...

  • 2005ம் ஆண்டு சிவகாசி மீனாம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 20 பேர் மரணமடைந்தனர். 
  • 2009‌ம் ஆண்டு சிவகாசி நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் ஸ்ரீகிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 
  • 2010ம் ஆண்டு சிவகாசியில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 
  • கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி விருதுநகர் அருகில் நடைபெற்ற பட்டாசு விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 
  • 2011 ஏப்ரல் மாதம் சிவகாசியில் நடைபெற்ற மற்றொரு விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர். 
  • 2011 ஜூன் மாத்தில் தூத்துக்குடி - குறும்பூர் அருகே நடைபெற்ற பட்டாசு விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 
  • 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதலிப்பட்டியில் நடந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். 
  • 2012 டிசம்பர் மாதம் 25ஆம் தேதி சேலம் மாவட்டம் மேச்சேரி என்ற இடத்தில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 
  • 2013- கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி சிவகாசி அருகே நாரணபுரத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 2011 இந்தியாவை உலுக்கிய முதளிபட்டி வெடி விபத்தில் இறந்தவர்களில் ஆலையில் வேலை செய்தவர்கள் மூன்று பெயர் மட்டுமே. மற்ற 37 நபர்கள் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் , ஆலையில் வேலை செய்யும் தங்கள் உறவுகளை மீட்க வந்தவர்களும் தான் . இது குறித்து எந்த (விபத்து நடக்கும் ஆலைகளில் பட்டாசு திருட சென்று இறந்தவர்களும் உண்டு)

இன்று  புதுகோட்டை பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மூன்று உயரிழப்புகள் ஏற்ப்பட்டன. அங்கே நின்ற ஒரு ஆலை முதலாளி வேதனையுடன் இன்று அதிகாரிகளுக்கு வசூல் வேட்டைக்கு வருவார்கள் அடுத்த ஒரு வார காலத்திற்கு தொழில் நடத்த முடியாது. கடன் வாங்கி போட்ட முதலீடு வீணாகுமே என்ன செய்வது என்றும் ,இதற்கு ஈடாக விடுமுறை நாட்களில் வேலை வைப்பது எனவும் ,அதிக ஆட்களை பணி அமர்த்தி இந்த இழப்பை சரி செய்ய வேண்டுமெனவும் முனகி கொண்டே சென்றது   பட்டாசு தொழிலாளர்  காதுகளுக்கு அடுத்த ஆலையின் நடக்க போகும் பெரும் விபத்தின் பேரோசையாக கேட்டது. 

எனது  பார்வை...

வெடிகள் மக்களை மகிழ்விக்க மட்டுமே வெடிக்க வேண்டும். சிவகாசி ஆண்களின் சராசரி ஆயுள் காலம் குறைவதை இந்த அரசாங்கம் தனி கவனுத்துடன் கண்காணிக்க வேண்டும் .

அரசு துறையும் அப்பாவி கிராம மக்களுக்கு வெடிவிபத்து குறித்து  விழிப்புணர்வை  ஏற்படுத்த வேண்டும் .

குடிக்கின்ற குடிநீர், அலங்காரத்துக்கு போடுகின்ற தங்கம் என எல்லாவற்றிற்கும் தர கட்டுப்பாடு வைத்திற்கும் அரசாங்கம் நடமாடும் வெடிகுண்டுகளாய் திரியும் என் நம் மக்களின் நலன் கருதி ஏன் முறையான தரக்கட்டுபாடு முறையினை விதிக்க நடைமுறைபடுத்த வில்லை.வரி விதிப்பில் ,வசூலில் முனைப்பு காட்டுவோர்கள் இதனை செயல்படுத்தலாமே .. 

விதிகளை மீறும் ஆலை அதிபர்களுக்கு முறையான தண்டனை கிடைக்க பெற வேண்டும் , விபத்து நடக்கும் ஆலைகளுக்கு உரிமம் வழங்கிய அனைத்து துறை அதிகாரிகளும் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் தவறு இருப்பின் அவர்களுக்கும் தண்டனை கிடைக்க பெற வேண்டும் .


எப்பொழுது வேண்டுமானாலும் இறப்போம் என்ற மனப்பான்மையில் வாழும் ஒரு மனித கூட்டம் நம்மிடையே வாழ்கிறது என்பது தேசத்திற்கே அவமானம். இதை உணர்ந்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் , தீபாவளிக்கு நாம் வெடிக்கும் வெடியில் எத்தனையோ குடும்பங்களுக்கு தீயின் வலி(வடு) உள்ளது என நாமும் உணர்ந்து இதுகுறித்த நமது ஆதரவு குரலை எழுப்ப வேண்டும்.

 திரு.சகாயம் போன்ற “சகாயம்” எதிர்ப்பார்க்காத அதிகாரிகளை கொண்டு ஒரே ஒரு முறை இத்துறையை சார்ந்த ஆலைகளை ஆய்வு செய்து முறைபடுத்தினால் விபத்துகள் குறையும் .மேலும் 1,50,000 குடும்பங்களின் நேரடி வாழ்வாதாரமாக விளங்கும் இத்துறையை மேலும் சிறப்பாக்க முடியும்.

உலகத்தின் ஒரு நாள் மகிழ்ச்சிற்காக விபத்தில் உயரிழந்து தன் குடும்பத்தின் மகிழ்ச்சியை நிரந்தமாக தகர்த்தவர்களுக்கு  எனது ஆள்ந்த வருத்தத்தை  தெரிவித்து கொள்கிறேன்.


ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment