Sunday 29 June 2014

வளைகுடா இந்திய தொழிலதிபர் மற்றும் பிரபல லூலூ(LuLu) நிறுவனத் தலைவர் யூசுப் அலி பற்றிய தொகுப்பு!!



வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களின் சுவாசமாக விளங்கும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்தான் "லூலூ " இதன் வாசல் மிதிக்காதவர்கள் இந்த பிரதேசத்தில் எவருமே இருக்க முடியாது. எம். கே குழுமத்திற்கு சொந்தாமான இந்த நிறுவணத்தின் மிக குறுகிய கால அபார வளர்ச்சிக்கு வித்திட்டவர்தான் எம்.கே குழுமங்களின் மேலாண்மை நிர்வாகி 54 வயதான யூசுப் அலி, தென்னின்ந்தியாவின் , கேரள மாநிலத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமமான நட்டிகாலில் 1958 ஆம் ஆன்டு பிறந்த யூசுப் அலி தனது 15 ஆவது வயதில், 1973 ஆம் வருடம் ஒரு சூட்கேசும், கையில் கொஞம் தொகையுமாக மும்பையில் இருந்து கடல் மார்க்கமாக துபாய் துறைமுகம் வந்து இறங்கினார்.

முப்பது வருடங்களுக்குள் 15000 கோடி ருபாய்க்கு சொந்மான எம். கே தொழிழ் குழுமத்தின் சூத்திரதாரியான வரலாறு ஒரு நெடும் கதை, தன்னை துபாய் துறைமுகத்திலிருந்து அழைத்து செல்ல வந்த தனது பெரிய தந்தையான எம். கே அப்துல்லவுடன் 5 மணி நேர பயணத்திற்கு பின் அபுதாபி வந்து சேர்ந்த யூசிப் அலி, பின் அவருடன் இணனைந்து அவரின் சிறிய மளிகை கடையில் அவருக்கு உதவியாக சில காலம் பொருட்களை ஏற்றி, இறக்குவது, வினியோகம் செய்வது என வேலைகள் என இருந்தவர், பதனப்படுத்தப்ப்ட உணவுப் பொருட்களை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அபுதாபி நகரம் மட்டுமல்லாமல் புற நகர் பகுதி, மேற்கு அபுதாபி அமீரகத்திலும் வினியோகம் செய்ய ஆரம்பித்து 25 ஆயிரம் பணியாளர்கள் பணி புரியும் மாபெரும் தொழில் பேரரசின் வளர்ச்சிக்கு வித்திட்டார்.

சில காலங்களில் இவரது தொழில் இறக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது, உணவு பொருட்களை கப்பல், நட்சத்திர விடுதிகள், கேட்டரிங் கம்பெனிகள் என பல்வேறு துறைகளுக்கு வினியோகம் செய்து, தனது மூலதனத்கை பல மடங்குகள் பெருக்க ஆரம்பித்தது. 1980 களில் அமீரகத்தின் சில்ல்றை வணிகத்தின் கணிசமான பங்கு இவரது நிறுவனத்தை சார்ந்தாக கருதப்பட்டது. தனது பெரிய தந்தையின் ஓய்விற்கு பிறகு இதன் நிர்வாகம் இவர் வசம் வரும்பொழுது, தனது கணவுகளின் கோட்டைகான ஆயத்த வேலைகளை தொலை தூர நம்பிக்கை பார்வையுடன் தொடங்கினார். இவரது இத்தகைய நம்பிக்கைக்கு காரணமாக இவர் சொல்வது மறைந்த தலைவர் சேக் சயித் பின் அல் நக்யான் அவர்களின் "எதிர்காலத்த நோக்கிய வீரப்பயனம்" என்ற கொள்கையை பின்பற்றியதுதான். 1990கலீள் வளைகுடா போர்க்காலங்கள் இவரது பொற்காலங்கள் என கொள்ளலாம், அசாதாரணமான காலகட்டத்தை சரியான காலமாக திட்டமிட்ட்டது மிகப் பெரும் விந்தை ஆம் இவரின் சூப்பர் மார்கட்களும்,டிபார்ட்மென்ட் ஸ்டோர்களும் இந்த காலத்தில்தான் தொடஙகப்பட்டது.

இறைவனின் அருளால் இதன் வளர்ச்சி உச்சானிக்கு போய் இதன் மகுடமாக 2000 ஆம் ஆண்டு லூலூ சூப்பர் மார்கட் முதன் முதலில் துபாய் அல்கோசில் தொடங்கப்பட்டது, துருக்கியின் ராம் ஸ்டோர் போன்ற அமைப்பில் உருவான இந்த லூலூ மீண்டும் அசுர வளர்ச்சி பெற்று 8 வருடங்களில் 75 கிளைகள் தொடங்கப்பட்டது, அமீரகம் மட்டும் அல்லாமல், கத்தார், பஹ்ரைன், சௌதி அரேபியா,ஏமன், எகிப்த்,குவைத் இந்தியா என இதன் சாம்ராஜ்யம் விரிந்து கொண்டேபோகிறது, போர், பொருளாதார சீரழிவு, சந்தை ஏற்ற இறக்கம் என எந்த விளைவுகளும் இவரின் கோட்டையை அசைத்தூபார்க்க முடியவில்லை, அதற்கு காரணமாக இவர் சொல்வது,இறைவணின் அருளும், எதிர் நீச்சல் போடும் குணமும், அடிப்படை திடதண்மையும்தான்.

கொச்சின் விமானத்தளத்தின் விரிவாக பணியில் இவரது பங்கு கணிசமானது, இந்திய பொருளாதாரதை நோக்கி திரும்பும் இவர் பார்வை ஒரு பொருளாதார மலர்ச்சிக்கு வித்தாக மாறலாம். இவரின் சேவையை பாராட்டி அபுதாபி சேம்பர் ஆப் காமர்ஸ் இவரை அதன் இயக்குனர்களில் ஒருவராக நியமித்து இருக்கிறது, ஒரு வெளி நாட்டு வாழ் இந்தியரை இவ்வாறு அங்கீகாரத்தது இதுவே முதல் முறை. எல்லைகள் தாணடும் இவரது தொழில் வளச்சி மற்றும் சமூக பணியை பாராட்டி  2009ம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு "பதம்ஷ்ரி" விருதை வழங்கி   கௌரவித்து இருக்கிறது.


அரேபிய வர்த்தகம் எனும் வளைகுடா வணிக இதழ் வளைகுடாவில் உள்ள சக்தி வாய்ந்த இந்திய பிரபலங்களை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. ஆறு மாதங்களாக நடைபெற்ற இவ்வாய்வில் 500 நபர்களை தேர்ந்தெடுத்து பின் அதிலிருந்து வடிகட்டி 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறும் நபர்களை அவர்களின் நிறுவனத்தின் செல்வாக்கு, வணிகம், மக்களுடன் உள்ள நெருக்கம் என பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இப்பட்டியலில் முதலிடத்தில் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்கே குழும உரிமையாளர் யூசுப் அலி உள்ளார். இவரின் குழுமத்தின் ஒரு அங்கமான லூலூ ஹைபர் மார்கெட் வளைகுடாவின் எல்லா நாடுகளிலும் பரவி வியாபித்துள்ள ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. கேரளாவை பூர்விகமாக கொண்ட இவரின் குழமத்தில் 29 நாடுகளை சார்ந்த 22,000 மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய தொழில் குழுமங்களிலேயே தமிழ் நாட்டை சார்ந்த சையது சலாஹூதினால் நிர்வகிக்கப்படும் ஈ.டி.ஏ குழுமத்தில் மாத்திரம் இதை விட அதிகமான நபர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அபுதாபி வர்த்தக அமைப்பின் தலைவராக இந்திய தொழிலதிபர் யூசுப் அலி, 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐக்கிய அரபு நாட்டின் தலைநகர் அபுதாபி. இங்கு அரசு நிறுவனமாக அபுதாபி தொழில் வர்த்தக கூட்டமைப்பு செயல்படுகிறது. அந்நாட்டு தொழில் மற்றும் வர்த்தகத்தை முறைப்படுத்தும் ஒரு அமைப்பாக இது உள்ளது. இந்த அமைப்பில் தேர்தலின் மூலம் தலைவர் மற்றும் இயக்குனர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த தேர்தலில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர்களும் போட்டியிடலாம். அபுதாபியில் நேற்று இந்த அமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய தொழிலதிபர் யூசுப் அலி(58) தொடர்ந்து 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

இவர் பிரபல லூலூ(LuLu) நிறுவனத் தலைவர். தேர்தலில் 14,555 பேர் வாக்களித்தனர். இதில் லூலூ நிறுவனத் தலைவர் யூசுப் அலி 1,721 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 


தொகுப்பு  : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment