Monday 3 March 2014

நீங்கள் வெளிநாடு செல்லும் முன் சான்றிதழ்களில் HRD ,MEA ,தூதரக அனுமதி பெறுவது எப்படி?


HRD அட்டஸ்டேஷன் பெற தேவையான டாகுமெண்டுகள்:
1. அட்டெஸ்டேசன் பெற வேஎண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள்
2.வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல்
3.பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்
4 விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல்(இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)


குறிப்பாக தலைமை செயலகத்தின் ஹெச்.ஆர்.டி அலுவலகத்தில் கொடுக்கப்படுவதுதான் மேலே கொடுக்கப்பட்டுள்ள சிவப்பு முத்திரை. அதனை பெறுவதென்பது சற்றே கடினமாகும். முதலில் விண்ணப்பம், பாஸ்போர்ட் நகல் மற்றும் அட்டெஸ்டேஷன் பெற வேண்டிய சான்றிதழ் ஆகியவற்றை சம்ர்பிக்க வேண்டும். அதன் பின்னர் அதிகாரிகள் அந்த சான்றிதழ் உண்மையான ஒன்றா என்பது போன்ற விபரங்களை கேட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பர். உதாரணமாக உங்களது திருமண சான்றிதழை அட்டெஸ்ட் செய்ய, விபரங்களை கேட்டு ஹெச். ஆர். டி அலுவலகத்திலிருந்து ஸ்பீட் போஸ்ட் முறையில் உங்களது திருமணம் பதிவு செய்யப்பட்ட சப்-ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்திற்க்கு விண்ணப்பம் அனுப்பப்படும். இதனை பெற்று (பெற்றால்)அவர்கள் சரிபார்த்து, அதில் முத்திரை மற்றும் கையொப்பமிட்டு திருப்பி ஸ்பீட் போஸ்ட் முறையிலேயே அனுப்பி வைப்பர். அதன்பின் அதனை ஹெச்.ஆர்.டி யில் சரிபார்த்து மேலே கொடுக்கப்பட்ட சிவப்பு முத்திரையினை பதித்துக் கொடுப்பர். (குறிப்பு: சிவப்பு முத்திரையானது அட்டெஸ்டேஷன் கிடையாது, இது குறிப்பிட்ட சான்றிதழ் அட்டெஸ்ட் செய்யபடலாம் என்பதற்கான அனுமதி முத்திரை மட்டுமே). இதற்கு குறைந்தது இரண்டு மாதங்கள் பிடிக்கும். 

HRD-முடித்த பிறகு வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவது...இதையும் நான் இன்று இலகுவாக முடித்தேன்..
வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவதற்கு டெல்லி எல்லாம் செல்ல தேவை இல்லை....( டெல்லி தான் செல்ல வேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்கள் பீலா விடுவார்கள்)
வெளிநாட்டு அமைச்சக துணை செக்ரடரியேட் சென்னையிலேயே அமைந்துள்ளது.. 
அமைந்துள்ள இடம்.
7-வது மாடி,
ஈ. வி.கே சம்பத் மாளிகை,
68, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம்,
சென்னை- தொலை பேசி: 044-28272200/28251323.

HRD அட்டஸ்டேஷன் செய்யப்பட்ட கான்வோகசன் செர்டிபிகட் அசல், அதன் ஒரு ஜெராக்ஸ் நகல், பாஸ்போர்ட் நகல் ..இவைகளை எடுத்து கொண்டு மேற்கண்ட அலுவலகம் செல்ல வேண்டும்.
இந்த அலுவலகத்திற்க்கு மதியம் ஒரு மணிக்குள் சென்று விண்ணப்பத்துடன் 50 ரூபாய்க்கான Postal order அல்லது வங்கியில் பெறப்படும் demand draft’ உடன் சான்றிதழை சமர்பித்து மாலை 5 மணிக்கு அட்டெஸ்டேஷன் வாங்கிவிடலாம். அட்டெஸ்டேஷன் வாங்கும்போது apostille attestation என்று கேட்டு வாங்கவும்.ரொம்ப முக்கியமான நியுஸ்.. என்னான்னா : தமிழ்நாடு செக்ரடேரியேட்டுல அட்டச்டேஷன் வாங்கினதும் எஜண்டுகிட்ட கொடுக்கவும் (மாஜிஸ்ட்ரேட் கையெழுத்து HR, Embassy attestation) எல்லாம் அவுங்க பாத்துப்பாங்க.. தேவையில்லாம வேறேதுக்கும் செலவு பண்ணாதீங்க. நீங்க மட்டுமே பண்றதா இருந்தா மேஜிச்த்ரெட் கையெழுத்து வாங்க 1000 லஞ்சம் மட்டுமே கொடுக்க வேண்டி இருக்கும்.

ஒரு படிவத்தை தந்து நிரப்ப சொல்லுவார்கள்.... நிரப்பி கொடுக்க வேண்டும். எந்த வளைகுடா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று அதில் குறிப்பிட வேண்டும்... மேற்கண்ட டாக்குமெண்டுகளை வாங்கி கொண்டு அக்னாலஜ்மென்ட் ஸ்லிப் தருவார்கள்..
"எந்த வித கட்டணமும் இல்லை ".... காலையில் 10 மணிக்கு கொடுத்தால் மாலை 4.30 முதல் 5.30 மணி வரை அந்த ஸ்லிப்பை காண்பித்து பெற்று கொள்ளலாம்..

HRD. EXTERNAL MINISTRY ATTESTATION--போன்ற காரியங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்டுகளே 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கேட்ட நிலையில் ஒரு செர்டிபிகட்டிற்கு 1500 ரூபாய் செலவில் மட்டுமே முடிக்கப்பட்டது

Minister of External Affairs அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.


Ministry of External Affairs of the Government of India
Joint Secretary (Consular), MEA
CPV Division, Patiala House Annexe
Tilak Marg, New Delhi.
Tel.: +91 11 2338 8015
Fax.: +91 11 2338 8385
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in


And with the following representatives of MEA in Kolkata, Chennai and Hyderabad:
Ministry of External Affairs
Branch Secretariat
2 Ballygunge Park Road
Kolkata – 700019
Tel: 033-22879701 / 22802686
Fax: 033-22879703
————–
Ministry of External Affairs
Branch Secretariat
7th Foor EVK Sampath Maligai
68 College Road
Chennai – 600006
Tel: 044-28272200 / 28251323
Fax:044-28251034
—————-
Ministry of External Affairs
Branch Secretariat
B Block Room #311-312
Hyderabad – 500022
Tel: 040-23456051
Fax:040-23451244




1. ரூ 5000 முதல் ரூ 30000 வரை நீங்கள் ஏஜெண்டுகளிடம் இழக்க தேவை இல்லை.
2. A-Z செயல்முறை விளக்கம் விவரிக்கபட்டு உள்ளது.

யாருடைய துணையும் தேவை இல்லை நீங்களே நேரில் சென்று எளிதாக செய்து முடித்து விடலாம்.
3000 திற்கும் மேற்பட்ட நபர்கள் பயன் அடைந்து உள்ளனர்.
பலர் பாராடுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

No comments:

Post a Comment