Thursday 20 March 2014

இஸ்லாம் மார்கத்தில் எளியவனுக்கும் /வலியவனுக்கும் ஒரே சட்டம் !! சவுதி இளவரசர் அதிரடிதீர்ப்பு..

அமீருக்காக இஸ்லாத்தை வளைக்கமுடியாது சவுதி இளவரசர் அதிரடி!!

சவுதி அரச குடும்பத்தை சார்ந்த அமீர் ஒருவர் மற்றோரு சவுதி நாட்டவர்ரோடு ஏர்பட்ட மோதலில் அவரை கொலை செய்து விட்டார்
கொலைக்கு இஸ்லாம் இரண்டு விதமான தண்டனைகளை கூறி அந்த இரண்டு தண்டனைகளில் எந்த தண்டனை நிலை நிறுத்த படவேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமையையும் கொலை செய்ய பட்டவனின் வாரிசுகே வழங்கியுள்ளது
இப்போது கொலை செய்யதவர் அரச குடும்பத்தை சார்ந்த அமீர் 
கொலை செய்ய பட்டவர் சவுதியின் சாதரண ஒரு குடிமகன்
கொலை குற்றவாளியான அமீர் தனது செல்வாக்கை பயன் படுத்தி வழக்கை தனக்கு சாதகமாக வளைக்க முனைவதாக கொலை செய்யபட்டவரின் தந்தை சவுதி இளவரசர் அமீர் சல்மானிடம் முறையிடுகிறார்
இதை தொடர்ந்து சவுதி இளவரசரும் பாது காப்பு துறை அமைச்சருமான அமீர் சல்மான் மேர் கொண்ட நடவடிக்கை நம்மை எல்லாம் மகிழ்விப்பதாகவும் மார்க்க சட்டங்களை நிலை நிறுத்துவதில் அவருக்கு இருக்கும் பற்றை பரை சாற்ற குடியதாகவும் அமைந்துள்ளது
கொலையாளி தமது அரச குடும்பத்தை சார்ந்தவர் அமீர் அந்தஸ்தில் உள்ளவர் என்பதை எல்லாம் புறம் தள்ளிவிட்டு அதிரடி உத்தரவுகளை சவுதி இளவரசர் அமீர் சல்மான் பிரப்பித்துள்ளார்
இந்த மார்க்கம் சமத்துவத்தை போதிக்கும் மார்க்கம் எளியவனுக்கு ஒரு சட்டம் வலியவனுக்கு ஒரு சட்டம் என்ற பாகுபாடு இந்த மார்கத்தில் இல்லை எளியவனுக்கும் /வலியவனுக்கும் ஒரே சட்டம் 
கொலை செய்தவர் அமீராக இருந்தாலும் அவருக்காக இந்த மார்க்கம் வளையாது
கொலை செய்தவர் அமீராக இருந்தாலும் அதையெல்லாம் கவனத்தில் கொள்ளமல் அவர் விசயத்தில் மார்க்கம் எந்த நிலைபாட்டைகொண்டுள்ளதோ அந்தநிலைபாடு நிலை நிறுத்த பட்டே ஆகவேண்டும்
யாருக்காகவும் எதுகாகவும் மார்க்க சட்டங்களை அலட்சியம் செய்வதை நாம் சகித்து கொள்ள மாட்டோம்
அமீர் விசயத்திலும் எந்த தயக்கமும் இன்றி மார்கத்தை நிலை நாட்டுங்கள்
இது தான் இந்த நாட்டின் நிலை என்பதை எல்லோரும் உணரட்டும் என இளவரசர் அமீர் சல்மான் கூறியுள்ளார்
கொலை செய்ய பட்டவரின் தந்தை எந்த அழுத்தமும் இல்லாமல்சுதந்திரமாக இஸ்லாம் குறிப்பிட்டுள்ள இரண்டு தண்டனைகளில் எதை தேர்வு செய்கின்றாரோ அதை அமீர்விசயத்திலும் நிலை நிறுத்தியே ஆகவேண்டும் எனவும் உறுதியுடன் கூறியுள்ளார்
படம் 1. அமீர் சல்மான் உள்துறை அமைச்சகாதிர்கு எழுதியை கடிதம்
படம் 2. இளவரசர் அமீர் சல்மான்

No comments:

Post a Comment