Monday 10 February 2014

யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை விரும்பி ஏற்றாரா? ஒரு சிறப்பு பார்வை...



எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கொரு இடம் வேண்டும் என்று பாடல் யுவன் வாழ்க்கையில் கடந்த காலங்கள் முழவதும் ஒலித்து கொண்ட தான் இருந்தது. பல மாதங்கள் தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவத்தால் துக்க நிலைக்கு தள்ள பட்ட யுவன் ஒரு நண்பரின் அறிமுகத்தால் இஸ்லாமியர் மதத்தை பற்றி அறிய நேர்ந்தது.


குர்ஆன் ஒரு மனிதனை எந்த அளவு பக்குவப்படுத்தும் என்பதற்கு மேலே உள்ள யுவனின் ட்விட்டர் செய்திகளே சாட்சி!

தனது இரண்டு திருமணங்களும் தோல்வியில் முடியவே மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் யுவன். அதன் பிறகு ஒரே ஆறுதலாக இருந்த அவரது தாயாரின் மறைவு அவரை இன்னும் சோகத்திலும் தூக்கமின்மையிலும் ஆழ்த்தியது. இவரது சிரமங்களை கேள்வியுற்ற இவரது நெருங்கிய இஸ்லாமிய நண்பர் அவரிடம் குர்ஆனின் மொழி பெயர்ப்பை கொடுத்து 'இதனை ஆழ்ந்து படியுங்கள்! உங்கள் மன உளைச்சல் இதில் மாறலாம்' என்று சொல்லியுள்ளார். இரவில் குர்ஆனின் மொழி பெயர்ப்பை வாசிக்க ஆரம்பித்துள்ளார் யுவன். படிக்க படிக்க அவரையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரது மனம் இலேசாவதை உணர்ந்தார். நிம்மதியான தூக்கமும் அவரை ஆட்கொண்டது. அன்றிலிருந்து இஸ்லாமியனாக மாறி விடுவது என்று முடிவெடுத்து நண்பர்களின் உதவியால் இஸ்லாத்தில் 
யுவயுவன்சங்கர் ராஜா 

கோலாலம்பூர்,மலேசியாவில்கடந்த 01-01-2014 அன்று இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

தனது பெயரை அப்துல்லாவாக மாற்றியுள்ளதாக கேள்விப்படுகிறேன்.'அப்துல்லாஹ்' என்ற பெயருக்கு 'இறைவனின் அடிமை' என்று பொருள் வரும். மிக அழகிய பெயர். இறைவனுக்கு பிடித்த இரண்டு பெயர்கள் அப்துல்லா, அப்துல் ரஹ்மான். அந்த இரண்டு பெயர்களில் ஒன்றை தேர்ந்தெடுத்த யுவனை வாழ்த்தி வரவேற்போம்.


மதம் மாறிவிட்டதாக எவரும் அறிவித்தல்; அதனால் என்ன சிறப்பைக் கண்டீர்கள்? மாறியதால் உங்களுக்குள் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? என்று பேட்டி எடுக்க வக்கில்லாத, அருகதையற்ற ஊடகங்கள் யுவன் போன்றோரை விமர்சிப்பதற்காக சொறி செய்திகள் வெளியிடவில்லை; மாறாக இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்வைக் கொட்டி தீர்த்துக் கொள்கின்றன என்பதுதான் உண்மை.


யுவன் சங்கர் ராஜா  மதம் மாறினார் யுவன் சங்கர் ராஜாவை இஸ்லாத்தை விரும்பி வந்ததை பலரும் பாராட்டஅவரை பாராட்டும் நோக்கம் உயர்வாக இருக்க சில காலம் கழித்து அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்காமல்அவரை ஒரு பிரிவுக்குள் உள்ளடக்காமல் இருப்பது உயர்வு.

புதிதாக இஸ்லாத்தில் நுழைந்த யுவன் வழமை போலவே எல்லா மதத்தவரையும், இனத்தவரையும் அதே அன்போடு அணுக வேண்டும். உலக மக்கள் யாவருமே ஆதமுடைய மக்களே! எல்லோரையும் படைத்தது அந்த ஏக இறைவன் ஒருவனே!வெறுப்பை நீக்கி அன்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். இந்த செய்தியைத்தான் இஸ்லாமும் உங்களுக்கு சொல்கிறது. வருங்காலங்களில் இசையில் ஆபாசம் இல்லாமல் மக்களை தவறுகளிலிருந்து விலக்கி விடும் சக்தியாக உங்கள் இசை இருக்க வேண்டும். ஏ ஆர் ரஹ்மானைப் போல் உலக புகழ் பெற வேண்டும். தமிழனுக்கும், இந்தியனுக்கும், உலக மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்க வேண்டும். 

இஸ்லாத்திற்குள் நுழைந்து தான் மூன்று திருமணங்கள் செய்து கொள்ள வேண்டுமா? 

ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் இஸ்லாமிய மார்க்கத்தில் பல நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் இஸ்லாமியர்களைவிட மற்ற மதத்தில் தான் பல திருமணங்கள் செய்துகொண்டவர்கள் உள்ளனர். கிருத்துவ மதத்திற்கு செல்பவர்கள் எல்லாம் ் பாதர் மாதர் ஆகிவிடுவதற்காக செல்கிறார்களா? இந்து மதத்திற்கு செல்பவர்கள் எல்லாம் காthசியில் பிணம் தான் உண்ணுகிறார்களா?

எம் ஜி ஆர் ஆட்சியின் போது தமிழகத்தில் மீனாட்சிபுரத்தில் உள்ள அனைவரும் ஒரே நாளில் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவித்த உடனேயே இஸ்லாத்திற்கு போவதாக இந்துக்கள் அறிவிக்கிறார்கள் அவர்களுக்கு சலுகைகள் கொடுத்து இஸ்லாத்திற்கு போக விடாமல் அரசு தடுக்க வேண்டும்....அங்கு மத போதகர்கள் எவரும் போகாமால் காவல் போடவேண்டும்...என்று எம் ஜி யாரை உசுப்பிய இதே ஊடகங்கள் தான் இப்போதும் கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொள்கின்றன.

உலகைப்படைத்த அல்லாஹ் எச்சரிக்கின்றான்...:
தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.( அல்லாஹ்வின் வேதம்::9:32. )

உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இயற்கை மார்க்கமாம் இஸ்லாத்தில் தான் பிறக்கின்றன,ஆனால் அவர்கள் வளர்ப்பில் தான் யூதராகவோ கிறிஸ்தவராகவோ நெருப்பு வணங்கியாகவோ வளர்க்கப்படுகின்றனர்....என்பது நபி மொழி..

யூத பயங்கரவாதத்தால் அமெரிக்க இரட்டைக் கட்டட தகர்ப்புக்கு பிறகு அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் 20 % திற்கும் மேலானவர்கள் இஸ்லாம் தழுவினார்கள். வரும் காலங்களில் UK இஸ்லாமிய நாடாகவே மாறும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 

சகோதரர் யுவன் சங்கர் ராஜா அவர்களை முகநூல் வழியாக ஆபாச அர்ச்சனை செய்துக் கொண்டு இருக்கும் நல்ல உள்ளங்களின் கவனத்திற்க்கு பல சிரமங்களுக்கு இடையில் வளர்ந்ததே இஸ்லாம். சகோதரர் யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பெயர் இலலையா, புகழ் இல்லையா, பணம் இல்லையா ஆடம்பர வாழ்க்கை இல்லை என்ன இல்லை அவருக்கு?? சகோதரர் யுவன் சங்கர் ராஜாவின் தந்தை இளைய ராஜா அவர்கள் கடின உழைப்பால் முன்னேற்றம் அடைந்து இன்று தமிழகத்தில் மிகப் பெரும் செல்வந்தர் அந்த செல்வந்தரின் புதல்வன் இஸ்லாத்தை ஏற்க காரணம் என்ன??? யாருடைய வற்புறுத்தலா அல்லது நிர்பந்தமா? சிலருடைய பதிவில் குறிப்பிட்டது போல் பல பெண்கள் திருமணம் செய்யவே இஸ்லாத்தை ஏற்றார் என்ற கேள்வியும் வரும் என்றால் இஸ்லாத்திற்க்கு வருவதற்க்கு முன்பே இரண்டு திருமணங்கள் முடித்து அதில் திருப்தி இல்லாமல் நொந்து போனவர் பின்பு ஏன் அவரவர் பதிவில் அவ்வாறு குறிப்பிட வேண்டும்?? காழ்புணர்வே காரணம் உங்கள் மதத்தில் இருந்து அதிகதிகமானோர் இஸ்லாத்தை நோக்கி படையெடுத்து வந்து சத்தியத்தை ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர் இதை உங்களால் எப்படி தடுக்க முடியும்? அதை தடுப்பது எப்படி என்பதைப் பற்றி சிந்தித்தீர்களா? அல்லது தடுக்க தான் முடியுமா?? சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது சத்தியம் வெல்லக் கூடியது அசத்தியம் அழியக் கூடியதே மாற்றுக் கருத்து இல்லை நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தில் உள்ள நல்ல கருத்துகளையும் வாழ்க்க நெறிமுறைகளையும் பிறருக்கு கற்றுக் கொடுத்தீர்களா?? என்றால் நிச்சயம் இல்லை இஸ்லாம் மதத்தில் (மார்க்கம்) உள்ள மாண்புகளை பிறருக்கு கொண்டு செல்கிறது அதனால் இஸ்லாம் வெற்றியும் பெறுகிறது ஆபாச அர்ச்சனை செய்வதை நிறுத்தி விட்டு உங்கள் மதத்தில் உள்ள மாண்புகளை, அறியாத மக்களுக்கு ஏத்தி வைத்தாவது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களை தடுக்க முயலுங்கள். நிச்சயம் முடியாது, சத்தியமே வெல்லும். இப்படி ஆபாச அர்ச்சனை செய்து வருவதாலே இஸ்லாம் என்ன சொல்கிறது ஏன் இஸ்லாத்தை கடுமையாக எதிற்கின்றார்கள். அதில் என்ன சொல்கிறார்கள் குரான் என்றால் என்ன குரானில் என்ன தான் இருக்கும் நாமும் அதை ஆய்வு செய்வோம் என்று ஆய்வில் இறங்கியவர்கள் அனைவரையும் இஸ்லாம் தன்பால் கவர்ந்து ஈர்க்கிறது தொடரட்டும்.

இறைவன் அவருக்கு நல்வழி காட்டஅவர் தனக்கென (இஸ்லாம்) ஒரு வழியை தொடர்கிறார்என்ற நினைவோடு இருப்போம்!!

ஆக்கம்  & தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment