Wednesday 1 January 2014

இயற்கை தரும் இளமை வரம் சப்போட்டா பழம்!! ஒரு பார்வை ...

உடலுக்கு அதிக ஆற்றலை தரும் சப்போட்டா பழம்இறைவன் இப்புவியில் உண்டாக்கிய பலவித பழங்களில் அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து, எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியான ஒரு பழம் என்றால் அது சப்போட்டா தான் ஆகும். `சிக்கு' என்ற பெயர் நம்மில் பெரும் பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். 

சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே `சிக்கு' என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பல தரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும். 

இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. இப்போது சப்போட்டாவின் பல்வேறு சுகாதார நலன்கள் பற்றிப் பார்ப்போமா. 
உடலுக்கு அதிக ஆற்றலை தரும் சப்போட்டா பழம்..
சப்போட்டா வைட்டமின் `ஏ' என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது மற்றும் ஆராய்ச்சியின் படி, அதிக அளவு வைட்டமின் ஏயினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட முயற்சிக்க வேண்டும். 

சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது, அதனால் சப்போட்டா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது. சப்போட்டா அல்லது சிக்கு ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட் ஆகும். 

வேறு வார்த்தைகளில் சொன்னால், செரிமானப் பாதையை சரிச்செய்வதன் மூலம், அது உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது. வைட்டமின்கள் `ஏ' மற்றும் `பி' சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது. 

மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது. கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. 

இத்தகைய கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது. சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து (5.6/100ரீ) அதிக அளவில் காணப்படுகிறது.

இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது. கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிக அளவு கொண்ட சப்போட்டா பழம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. 

இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற மற்ற கர்ப்ப அறிகுறிகளைக் குறைப்பதில் உதவுகிறது. சப்போட்டாவின் மூலிகையானது ரத்த இழப்பு நிறுத்தும், அதாவது அதன் கசிவின் மையை மேம்படுத்தும் பண்புகள் கொண்டுள்ளவை என்று அறியப்படுகிறது. 

அதிலும் இந்த மூலிகை மூல வியாதி மற்றும் காயங்களால் ஏற்படும் ரத்தப்போக்கைக் குறைப்பதில் பெரும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக இந்த விதைகளை அரைத்து கொட்டு வாயிலிருக்கும் கொடுக்குகள் எடுப்பதற்கும் மற்றும் பூச்சி கடியிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கும் பயன்படுத்தலாம். 

பாலிஃபீனாலிக் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதன் காரணமாக, சப்போட்டா பல வைரஸ் எதிர்ப்பு, ஒட்டுண்ணிகளின் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மனித உடலில் நுழையும் பாக்டீரியாக்களைத் தடுக்க உதவுகிறது. 

மேலும் இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்து, போலேட், நியாசின் மற்றும் பேண்டோ தெனிக் அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறையின் செயல்பாட்டை அதிகரித்து, அதே சமயம் அதிலிருக்கும் வைட்டமின் `சி', தீங்கு விளைவிக்கும் தீவிரப்போக்கினையும் அழிக்கிறது. 

சப்போட்டா அதன் வயிற்றுப் போக்குக்கான மருந்து பண்பினால் வயிற்றோட்டத்தை நிறுத்துவதாகக் கருதப்படுகிறது. அதற்கு நீரில் இந்த பழத்தினை கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த முடியும். 

மேலும் இது மூல வியாதி மற்றும் வயிற்றுக்கடுப்பினால் ஏற்படும் வலியை தடுக்க உதவுகிறது. சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. 

சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாகச் (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படுகின்றன. இதனால் சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது. 

சப்போட்டா பழம் மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் இரைப் பையில் நொதிகளின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உடல் பருமன் ஆவதைத் தடுக்கிறது. சப்போட்டா பழம் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாக விளங்குகிறது. 

இதனால் அடிக்கடி சிறுநீர் மூலம் உடலிலிருந்துக் கழிவு பொருட்களை அகற்ற ஒரு சிறந்த நீர்ப்பெருக்கியாக செயல்படுத்த உதவுகிறது. சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம். சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும். 

அதிலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் `ஈ' சத்தினால், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் பெற உதவி செய்கிறது. எனவே, சப்போட்டா பழம் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது. சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது. 

மேலும் இது தலைமுடிக்கு பளப்பளப்பை தருகிறது மற்றும் சுருட்டை முடிக்கு சிறந்தாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணெயை கூந்தலுக்கு உபயோகப்படுத்துவதால், கூந்தலில் அதிகமாக வழவழப்புத் தன்மை இல்லாமல், எளிதில் உறிஞ்சப்பட்டு முடியை மென்மையாக இருக்க உதவுகிறது சப்போட்டா விதையின் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டம் அளித்து, எரிச்சலூட்டும் ஸ்கால்ப்பிற்கு நிவாரணமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியைக் கொடுக்கிறது. 

மேலும் இந்த எண்ணெய் சரும அழற்சி காரணமாக தலைமுடி உதிர்வதற்கு சிகிச்சையளிப்பதிலும் திறன் மிக்கதாக செயல்படுகிறது. சப்போட்டா விதைகளை பேஸ்ட் செய்து, அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, பின்பு இதனை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக தேய்க்கவும். 

பிறகு மறுநாள் காலையில் தலைமுடியை நன்றாக அலசவும். இது தலைமுடியை மென்மையாக்கச் செய்து, பொடுகுப் பிரச்சனைக் கூட கட்டுப்படுத்த உதவுகிறது. சப்போட்டா பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்ததுள்ளது. 

எனவே, அது உடலில் சீக்கிரம் முதுமை அடையச் செய்யும் மூலக்கூறுகளின் தீவிரத்தை குறைத்து, விரைவில் முதுமை அடைவதை தடுக்கும் பொருளாக விளங்குகிறது. மேலும் இது சுருக்கங்களைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.



 சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்கள்

நமது சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு சப்போர்ட் கொடுப்பதில் சிறந்தது சப்போட்டா! அதிக ஈரப்பதத்தைத் தன்னுள் கொண்ட சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பார்க்கலாம்.. ஒல்லியாக இருப்பவர்களுக்கு புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு, முண்டு முண்டாகத் தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா. தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் 2 டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல்களில் நன்றாகப் பூசுங்கள். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம், கைகளை பொலிவாக்குவதுடன் பூசினாற் போலவும் காட்டும். ஒட்டிய கன்னங்கள், மொழுமொழுவென பிரகாசிக்க வேண்டுமா? சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை டீஸ்பூன் சந்தன பவுடர் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை இட, வலமாக பூசுங்கள். தடவிக் கொண்டிருக்கும்போதே இந்த பேஸ்ட் உலர்ந்துவிடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேயுங்கள். பிறகு சூடான நீரில் முகத்தைக் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் பளபளவென மின்னுமே கன்னம்! ''எனக்கு ஆப்பிள் கன்னம்தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே..'' என்கிறவர்கள், ஒரு டீஸ்பூன் கனிந்த சப்போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலைமாவு கலந்து முகத்தில் 'பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்தால் 'ப்ளீச்' செய்ததுபோல முகம் பளிச்சென்று இருக்கும். 'கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதே..' என்று கவலைப்படுகிறவர்களுக்கு கைகொடுக்கிறது 'சப்போட்டா கொட்டை தைலம்'. ஒரு டீஸ்பூன் சப் போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். ஆறியதும் வடிகட்டுங்கள். இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து, தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு கடலைமாவு, சீயக்காய் தேய்த்து குளியுங்-கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி குளித்து வந்தால், ஒரே மாதத்தில் தலை மேல் பலன் கிடைக்கும். கண்டிஷனராகவும் கலக்குகிறது சப்போட்டா. காயவைத்த சப்போட்டா தோல் 100 கிராம், சப்போட்டா கொட்டை 50 கிராம்.. இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொட்டை எடுத்த புங்கங்காய் 100 கிராம், கொட்டை எடுத்த கடுக்காய் 10 கிராம், உலர்ந்த செம்பருத்தி பூ 50 கிராம், வெந்தயம் 100 கிராம்.. என எல்லாவற்றையும் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக இந்த பவுடரை தேய்த்துக் குளித்தால், நுனி முடி பிளவு குறைவதுடன், முடியின் வறட்டுத்தன்மை நீங்கி, பளபளப்பு கூடும். ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளியுங்கள். தோலின் வறட்சி நீங்கி, மெழுகுபோல மிளிரும் பாதங்கள்! சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தந்து, சிறந்த நோய் நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பு சூட்டை தணித்து, குளிர்ச்சி தருகிறது. 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மி.கிராம் கால்சியமும், 27 மி.கிராம் பாஸ்பரஸூம் இருக்கிறது. தினமும் 2 சப்போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப் பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும். பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப்போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட, பித்தம் நீங்கும். சப்போட்டா பழ ஜூஸூடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். சப்போட்டா உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும்.சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம். 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூஸை குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் கண்களை தழுவும். பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகியம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.



1) தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு.

2) 100 கிராம் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச் சத்து 2.0 மில்லி கிராம், தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின் 0.02 மில்லி கிராம் மற்றும் வைட்டமின் சி 6.1 மில்லி கிராம் உள்ளது.

தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரும். இளமைக்கு கியாரன்டி.

3) சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும்

4) இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக், என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து கீர் மாதிரி செய்து பருகலாம். அவரவர் கற்பனைக்கும் ரசனைக்கும் ஏற்றாற் போல் செய்து கொள்ளலாம். அல்லது வழக்கம் போல 'அப்படியே சாப்பிடலாம்'.

5) இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு..



6) உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment