Thursday 23 January 2014

தமிழ்நாட்டில் நாட்டுப்புற கலைஞர்களின் பரிதாப நிலை!! ஒரு சிறப்பு பார்வை ...

சினிமா வந்த பிறகு மக்களுக்கு குத்தாட்டத்தில் தான் ஆர்வம். ஆகவே இந்த மாதிரி கூத்து மற்றும் ஆட்டக்கலைஞர்களின் நடனங்களை பார்க்க எமக்கு விருப்பம் இல்லை. வயிற்றுப்பிழைப்புக்கு வழி இல்லாத இக்கலைஞர்கள் ஆபாசமாக ரெக்கார்டு டான்ஸ் ஆடி வயிற்றை கழுவுகிறார்கள். பலர் தங்கள் வாரிசுக்களுக்கு இதை கற்றுத்தருவதும் இல்லை. ஆகவே பல கலைகள் அழியும் நிலையில்தான் உள்ளன.























































மேலேயுள்ள படத்தில் காணப்படும் நடனப் பெண்களை சில கிராமியக் கதை சார்ந்த தமிழ்ப்படங்களில் பார்த்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அந்தப் படத்துக்காக கவர்ச்சி காட்டி நடிப்பதற்காக, ஆடவிட்டுள்ள,சிலுக்கு சிமிதா போன்ற நடிகைகள் தான் இவர்கள் என்று நினைத்தேன். 

சில மாதங்களுக்கு முன்பு  கோயில் விழாவுக்கு சென்றிருந்த போதும், இவர்களைக் கண்டேன். சும்மா, கொஞ்சம் புடவை விலகினாலே, இழுத்து மூடும் பெண்கள் உள்ள தமிழ்நாட்டில், அதுவும் ஒரு கிராமப்புறத்திலே, அதிலும் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படும் கோயிலில் அரை குறையாக ஆடையணிந்த இந்தப் பெண்கள் தமது உடலை வளைத்து, நெளித்து கவர்ச்சி நடனம் ஆடியது அந்த கோயிலுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கே பொருத்தமில்லாததாகத் தான் தோன்றியது. 

இவர்களைப் பார்த்தால் அரவாணிகள் (திருநங்கைகள்) போலவும் தெரியவில்லை. அக்காலத்தில் இருந்த சின்னமேளக் கலாச்சாரம் இப்பொழுதும் தமிழ்நாட்டில் நடைமுறையிலிருப்பதாகவும் தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாதிப் பெண்கள் இப்பொழுதும் இப்படி கவர்ச்சி நடனமாடுவதை தொழிலாகக் கொண்டுள்ளார்களா என்று எனக்குத் தெரியாது.  ஆனால் இந்த பெண்களின் கவர்ச்சி நடனம்  உண்மையில் கோயில்களில் நடைபெறுவதற்கு பொருத்தமானதாக எனக்குத் தெரியவில்லை.  

இவர்கள் கரகாட்டக்காரர்களாக இருந்தால் இவர்களின் தலைகளில் செம்புகளை அடுக்கிய கரகத்தையும் காணவில்லை. அவர்களில் தலையில் அணிந்திருந்த தும்புகளாலான தொப்பியையும் குட்டையான பாவாடையையும் பார்த்தால், பழைய ஆங்கிலப் படங்களில் அல்லது மேலைநாட்டுக் கேளிக்கை விடுதிகளில் பறவைகளின் இறகுகளாலான தொப்பிகளை, மாலைகளை  தலையிலும், உடையிலும் அணிந்து கொண்டு பாடிஆடும் பெண்பாடகர்கள் அல்லது Female impersonators போல காட்சியளிக்க முயன்று தோற்றுப் போனவர்கள் போலக் காணப்பட்டனர்.

இவர்கள் அரைகுறை ஆடையுடன், தமது உடலை வளைத்து, நெளித்து ஆடுவதும், அதைப் பார்ப்பதற்கென்று தமிழ்நாட்டின் Sex starvedஇளைஞர்கள் பலர் அவர்களையே சுற்றி வந்து கொண்டிருந்தததும், அதுவும் ஒரு கோயில் திருவிழாவில் நடைபெற்றது உண்மையில் அருவருப்பையே தந்தது. இவர்கள் உண்மையில் தமிழ்நாட்டுக் கிராமிய நடனங்களை ஆடுபவர்களானால், குறைந்த பட்சம் அவர்களின் ஆடை அணிகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும் அல்லது அவர்களை கோயில்களில் ஆட விடாமல், வேறு நிகழ்ச்சிகளில் மட்டும் ஆட அனுமதிக்க வேண்டும் .

எல்லா தமிழ்ப்படங்களிலும் கூடத் தான் இப்படியான குத்தாட்டங்கள் உள்ளன. ஆனால் அவையவை அதற்குரிய இடங்களில் ஆடப்பட வேண்டும் .
கோயில்களில், அதுவும் பெண்களும், குழந்தைகளும் கூடுமிடத்தில் இப்படியான குத்தாட்டங்கள் தேவையில்லை.இந்த ஆட்டக்காரர்களும், கோயில் திருவிழாக்களில் தான் உழைக்க வேண்டிய நிலைஇந்தப் பெண்கள் ஆடுவற்கு மேளம் அடிப்பவர் இவர்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து, வயிற்றுப்பிழைப்பை நடத்துகிறார் .உண்மையில் இது பரிதாபம் தான். இவர்களின் ஆட்டம், அவர்களை சுற்றி நிற்கும் இளைஞர்களுக்கு உற்சாகமளிப்பது தவறு. 


தமிழ்நாட்டில் உருவாகிய தமிழர்களின் நாட்டியக் கலையாகிய
சதிராட்டத்துக்கு இருந்த இழிபெயரை நீக்கி, அதற்கு சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கொடுத்து அழியாமல் பாதுகாத்தவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பதை தமிழர்கள் யாரும் மறுக்க முடியாது. அதே வேளையில் அந்த பாரத நாட்டியக் கலையைத் தமிழர்களிடமிருந்து தான் இரவல் வாங்கினோம் என்பதையும், அது தமிழர்களின் பாரம்பரியக் கலை என்பதையும் மறுத்து, அதற்கு இந்திய லேபல் கொடுத்து, தமிழர்களின் நாட்டியக்கலையை தமிழர்களே வெறுக்குமாறு, சில பார்ப்பனர்கள் செய்தனர் எனபதையும் தமிழர்கள் மறந்து விடக் கூடாது. 


யார் உண்மையான தமிழ்விரோதி என்பதே பல சமயங்களில் ஆராய்ச்சிகுரிய விடயமாக தோன்றுகிறது!

இல்லாமைகளைப் பற்றிய புலம்பல்கள் சதா ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில் மாற்றத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் எதிர்கொள்ளப்படும் விதம் விசித்திரமானது. எதை இல்லை இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ அது கண் எதிரில் வந்து நின்றாலும் தெரியாத அளவுக்கு அரற்றலை ஒரு தவம்போல நிகழ்த்திக்கொண்டிருக்கும் விசித்திரப் பிறவிகள் நிறைந்த சூழல் நம்முடையது.


  தமிழ்க் கலை வடிவங்களுக்குப் புத்துயிரூட்டி அவற்றின் மீதான மக்களின் 
    கவனத்தைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட சென்னை சங்கமம், இயல், இசை, நாடகம் ஆகிய துறைகள் சார்ந்த கலைகளைச் சென்னையில் பெரும் திரளான மக்கள் முன்னிலையில் நிகழ்த்தியது. சங்கமம் நிகழ்வையும் அதற்கான எதிர்வினைகளையும் பார்க்கும்போது இந்த விசித்திரம் துலக்கமாகத் தெரிகிறது.

புரவலர்கள் இல்லாமல் கலைகள் வளர முடியாது. அரசோ வர்த்தக நிறுவனங்களோ பொது நல அமைப்புகளோ பணம் படைத்த தனி நபர்களோ உதவாமல் பொது அரங்கில் எந்தச் செயல்பாடும் எப்போதும் சாத்தியமில்லை. கலைகளை வளர்க்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று ஒருபுறம் கோருபவர்கள் அரசு முன்வரும்போது அதைக் குறியீட்டு அளவிலான வெற்றி என்பதற்காகவேனும் பாராட்ட வேண்டும். அரசோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு இந்த ஆதரவு எளிதில் கிடைப்பதை எண்ணிப் பொருமுவதைவிட, இது போன்ற ஆதரவை மற்றவர்களுக்கும் நீட்டிக்கும்படி கோருவதும் அதற்காகப் போராடுவதும் கலை ரீதியில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளாக இருக்கும். 


'தமிழ் தமிழ்' எனக் கூக்குரலிடுவோர், அதனால் ஆட்சிக்கு வந்தோர் தமிழரின் பாரம்பரிய கலைகளை காக்க செய்தது என்ன என்றால் ஒன்றும் இல்லை என்பதே விடை. ஆனால் தமிழ் விரோதிகள் என குற்றம்சாட்டப்படும் பார்ப்பனர்களால் காப்பாற்றபட்ட தமிழரின் முக்கிய கலை வடிவம் பரதநாட்டியம். அதற்கு புனிதபட்டம் கட்டி அதை எங்கோ கொண்டு சென்றுவிட்டார்கள். முன்பு மதிக்கப்படாத நடனம் இப்போது ஸ்டேஸ் சிம்பல் ஆகிவிட்டது. அவர்கள் இல்லாவிட்டால் இன்றும் பரதநாட்டியமும் ரெக்கார்டு டேன்ஸாகவே ஆடப்பட்டிருக்கும் என்பதே உண்மை. ஆனால் மீதியுள்ள தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து,கணியான் கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப் பாட்டு, சேவையாட்டம்,வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், கணியான்கூத்து, களியல் ஆட்டம், புலியாட்டம், மேடை நாடகம், தேவராட்டம், கும்மி ஆட்டம்,   கோலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காளையாட்டம்,தப்பாட்டம், மரக்காலாட்டம், ஆகோலாட்டம், சக்கையாட்டம், கைச்சிலம்பாட்டம், கழியல் ஆட்டம்,ராஜா ராணி ஆட்டம், நாட்டுப்புறப்பாட்டு மற்றும் ஆலி ஆட்டம் போன்றவற்றின் நிலை என்ன? இவற்றின் பெயர்கூட முக்கால்வாசி பேருக்கு தெரியாது! 

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment