Wednesday 8 January 2014

உலகப்புகழ் பெற்ற காங்கேயம் காளை பற்றிய சிறப்பு பார்வை..


உலகப்புகழ் பெற்ற காங்கேயம் காளை என்பது தமிழ்நாட்டின் காங்கேயத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு மாட்டினத்தைக் குறிக்கும். இவ்வின மாடுகள் வறண்ட பகுதிகளிலும் வாழும் தன்மையுடையவை. சிந்துவெளியில் கிடைத்த காளை முத்திரையில் இப்போது தமிழகத்தில் இருக்கும் காங்கேயம் காளையை போன்றே திமில் மற்றும் உருவ அமைப்பை ஒத்தாக அறியப்படுகிறது.சிந்து சமவெளியில் ஏறுதழுவல் நடத்திய முல்லை நில ஆயர்கள் இக்காளையை சிந்து சமவெளியில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.கரிய நிறம், கூர்மையான கொம்புகள், பெரிய திமில்கள் என கம்பீரமான காங்கேயம் காளைகள், அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டுகளில், மாடுபிடி வீரர்களால் அடக்கமுடியாத வலிமைக்குப் பேர் போனவை. காங்கேயத்தில் இந்த மாட்டினத்தைக் காக்க அமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1990-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 11 லட்சம் மாடுகள் இருந்தாகவும் தற்போது 1 லட்சம் மாடுகள் மட்டுமே இருப்பதாக அறியப்படுகிறது. 

இந்த வகை மாடுகள் குறைய காரணம் :

காரணம் - 1 : இந்த இன மாடுகள் ஒரு வேளைக்கு 3 முதல் 4 லிட்டர் வரையே பால் தருவன. எனவே வியாபார ரீதியாகப் பாலுக்காக மாடுகள் வளர்ப்பவர்கள் குறைவான பால்தரும் இந்த இன மாடுகளை வளர்க்க விரும்புவதில்லை. அதிகப் பால் தரும் வெளிநாட்டுக் கலப்பின மாடுகளையே வளர்க்கிறார்கள்.

காரணம் - 2 : வேளாண்மைத் துறையில் டிராக்டர் முதலான இயந்திரப் பயன்பாடு அதிகரித்து விட்டதால் நல்ல இழுவைச் சக்தி கொண்ட காளைகள் உழவுக்கும், வண்டிகள் இழுக்கவும் தேவையற்றனவாகி விட்டன. இதனாலும் வளர்ப்பது குறைந்து வருகிறது.

காரணம் - 3: அதிக அளவிலான மாடுகளை மேய்க்க முன்பு போல் தற்போது ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் முன்பு நிறைய மாடுகள் வைத்து இருந்தவர்கள் எல்லாம் தற்போது அளவாக மாடுகள் வைத்துக் கொள்கிறார்கள் அல்லது மாடுகள் வளர்ப்பதையே நிறுத்தி விடுகிறார்கள்.

இதனால் இன்று காங்கேயம் காளைகள் அரிதாகிக்கொண்டே வருகின்றன, இன்னும் சில வருடங்களில் புத்தகத்தில் மட்டுமே இருக்கும் காங்கேயம் காளைகள் என்று !!

1990களில் 11 லட்சமாக இருந்த காங்கேயம் மாடுகளின் எண்ணிக்கை 20 ஆண்டுகளில் 1 லட்சமாக குறைந்துவிட்டதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த ஆலம்பாடி இன மாடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.அதைப்போல, காங்கேயம் இன மாடுகளும் அழிந்துவிடும் நிலை ஏற்படாமல் காக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே காங்கேயம் பகுதி மக்களின் கோரிக்கை.
இவ்வளவு பெருமைகளைப் பெற்ற காங்கேயம் இன மாடுகள், அதிக பராமரிப்பு, ஆட்கள் பற்றாக்குறை, விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்பாடு போன்ற காரணங்களால், இப்போது அழிவின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் இத்தனை வகை காளைகள் இருக்கின்றன.இதில் காங்கேயம் காளை என்பது ஸ்பெஷல் !!





காங்கேயம் ரக மாடுகளை நோய், நொடிகள் எளிதில் தாக்காது. தீவனப் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் பனை ஓலை, கொழுக்கட்டைப் புல் என்று கிடைத்ததை உண்டு, உழவு, இழுவை வேலைகளைச் சோர்வடையாமல் செய்யக்கூடிய ஒரு ரகம். காங்கேயம் பசு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பால் கொடுக்கும். இந்த மாட்டின் கால் குளம்பு, குதிரைக் குளம்பு போல இருக்கும். காலைத் தரையில் வைத்து இழுக்காமல் தூக்கிவைத்து நடக்கும். ஒவ்வொரு பசு மாடும் சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனக் கூடியது. இந்த ரக மாடும் தினமும் ரெண்டரை லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கக் கூடியது தான். காங்கயம் காளைகள் கடும் வெயிலிலும் தொடர்ந்து 12 மணி நேரம் உழவு, பார வண்டி இழுத்தல் முதலான வேலைகளைச் செய்யும் திறன் கொண்டவை. எந்தத் தட்ப வெப்பச் சூழலையும் தாங்கும் திறன் கொண்டவை. மாட்டு வண்டியில் 4 டன் எடை கொண்ட பொருள்களைக் கழுத்தளவு நீருள்ள பாதையில் கூட இழுத்துச் செல்லும் அளவுக்குப் பலம் வாய்ந்தவை. இதன் பால் A-2 ரகத்தைச் சேர்ந்தது. இதில் கொழுப்புச் சத்துக் குறைவு. நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய்களை யெல்லாம் குணப்படுத்தும் மருத்துவ குணம் மிக்கது. ஆனால் கலப்பின மாடுகளின் A-1 ரகப் பால் நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதது. இந்தப் பாலைக் குடிப்பதால் மேற்கண்ட நோய்கள் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய காங்கேயம் மாடுகளைதான் காங்கேயதிலேயே அதிகம் காண முடிவதில்லை என்பதுதான் சோகம் ! 


ரேக்ளா பந்தயங்களுக்கு அண்டை மாநிலங்களிலிருந்தும் இவ்வின மாடுகளையே விரும்பி வாங்கிச் செல்லுவர். சத்தான பாலைத் தரும் காங்கேயம் பசுக்களை, மணம் முடித்துச் செல்லும் பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக தருவது தமிழர்கள் மரபு.

இவ்வளவு பெருமைகளைப் பெற்ற காங்கேயம் இன மாடுகள், அதிக பராமரிப்பு, ஆட்கள் பற்றாக்குறை, விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்பாடு போன்ற காரணங்களால், இப்போது அழிவின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.


மாட்டு சந்தையில் ஒரு காளையின் குறைந்தபட்ச விலை 35 ஆயிரம் ரூபாய். மயில காளை இனத்தை சேர்ந்த ஒன்றரை வயது கன்றுக்குட்டி, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு ஜோடி காங்கேயம் எருதுகள் 1.75லட்சம் ரூபாய்க்கும், பூச்சி காளை (காங்கேயம் காளையின் ஒரு பிரிவு) 60 ஆயிரம் ரூபாய்க்கும் விலை போகின்றன. இது தவிர இந்த காளைகளை சினை சேர்க்க ஒரு தடவைக்கு ஆயிரம் முதல் மூன்றாயிரம் வரை கிடைக்கிறது என்கின்றனர். உடல்வாகு, கடின உழைப்பு, கொளுக்கட்டாம்புல் உள்ளிட்டவை காங்கேயம் காளை புகழுக்கு காரணம். விற்பனையின் போது "சுளி சுத்தம்' முக்கியமாக பார்க்கப்படும். காளை மற்றும் பசுமாட்டின் உடலில் இருக்க வேண்டிய இடங்களில் "சுளி' இருந்தால் அது சுளி சுத்தம் எனப்படும்; நல்ல விலை கிடைக்கும். கொம்பு நேராக, கூர்மையாக இருக்க வேண்டும். தலை, வால் நீட்டமாக இருக்க வேண்டும். இது தவிர இரண்டு பல், நான்கு பல், ஆறு பல் உள்ளிட்டவை குறித்து வியாபாரத்தின் போது பார்க்கப்படும். காங்கேயம் காளைகளின் வாழ்நாள் 20 ஆண்டுகள். பராமரிப்பு பொறுத்து வாழ்நாள் பத்தாண்டுகள் வரை அதிகரிக்கும். திருப்பூர் மாவட்டம், காங்கேயத்திலிருந்து கிழக்கே 11 கி.மீ., தொலைவில் திருச்சி மெயின்ரோட்டில் அமைந்துள்ளது ஓலப்பாளையம். இப்பகுதி அருகே உள்ள கண்ணபுரத்தில், "கண்ணபுரம் காங்கயம் காளை சந்தை' பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. காங்கேயம் காளை மற்றும் பசு வகைகள் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் இந்த சந்தை நடைபெறுகிறது..வாங்களேன், நாம ஒரு காங்கேயம் காளையை வாங்கி வருவோம் !!

 ஆக்கம் மற்றும் தொகுப்பு  : அ .தையுபா அஜமல்.

No comments:

Post a Comment