Friday 1 November 2013

உலகில் அமைதியான பணக்கார நாடு புரூனே !! ஒரு சிறப்பு பார்வை !!

Sultan of Brunei
ராஜ வாழ்க்கை என்பது ஒரு விதத்தில் தண்டனைதான்.பணக்காரனாய் இருந்தால் அனுபவிக்கத் தானே வேண்டும்.காசேதான் கடவுளப்பா என்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல பணக்காறர்களுக்கும் இன்று பொருத்தமான ஒன்றுதான். இன்றெல்லாம்  அதிகமாக  பணமே  அனைத்தையும்   தீர்மானிக்கிறது. பணத்திற்காகவே வாழ்க்கையில் அதிகம் ஓடவேண்டியிருக்கிறது. அதுவும் இல்லையெனில் வாழ்கையில் ஒரு அவசரமான தேடலே இல்லாமல் போய்விடும்.

உலகில் இருக்கின்ற பணக்கார நாடுகளில் 'அமைதியான பணக்கார நாடு' என சொல்லப்படுவது புரூனே (Brunei). பணத்தின் மேலே தூங்கும் ராயல் அரச குடும்பங்களில் புருனேயின்  சுல்தானும் குடும்பமும் ஒன்று. தற்போதைய  புருனேயின்  சுல்தானாக  இருப்பவர் ஹசன்னல் போல்கியா (Hassanal Bolkiah). இவர் புரூனியின் 29ஆவது சுல்தான்.நம்ப பக்கம் சொல்லுவேமே பொறந்தப்பயே கைல தங்க ஸ்பூனோட பொறந்தான்னு. யாருக்கு பொருந்துமோ இல்லையோ இவருக்கு ரொம்ப நல்லா பொருந்தும். உலகத்திலேயே தங்கம் அதிகம் உபயோகப்படுத்தறதுல இவர்தான் நம்பர் 1 அப்படின்னு சொல்லலாம்.இவர் அணியும் ஆடைகள் அனைத்தும் எம்ப்ராய்டரி டிசைனில் தங்கம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

உலகின் தற்போதைய முதல் பத்து பணக்கார அரச தலைவர்களின் பட்டியலில்  முதல்  இடத்தில்  இருப்பவர்  இவர்தான். இவருடைய  தற்போதைய  சொத்து மதிப்பு 22 பில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்தத்தொகை இங்கிலாந்து மகாராணியாரின் சொத்தின் 36 மடங்கு அதிகம்! எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல்தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய். அவரது அரண்மனை இரண்டு  லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,788 அறைகள் உள்ளன. இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது.

மலாய் மொழியும்,இஸ்லாமும் தான் பெரும்பான்மையினரின் மொழியாக,மதமாகவும் உள்ளது. அங்கு அரசு ஆஸ்பத்திரியில்  கிடைக்காத ட்ரீட்மெண்டிற்கு மக்களை மேல் நாடுகளுக்கு அரசே தன் செலவில் அனுப்பி வைக்குமாம். 


இவர் ஒரு வாகன விரும்பி. கார்  மற்றும்  ஏனைய  வாகனங்களை  அதிகம் விரும்பும் ஒருவர். இவரிடம்  இருக்கும்  மொத்த சொந்தக்  கார்களின்  எண்ணிக்கை  என்ன  தெரியுமா? 1,932!! உலகின்   முகப்பிரபலமான, விலை மதிப்புள்ள சகல  ரகக் கார்களும்  இவரிடம்  உண்டு. இவரிடம்  உள்ள  கார்களை  ஒவ்வொரு நாளைக்கு  ஒன்றாய்  பயன்படுத்துவதாயின்  இதற்கே 20 ஆண்டுகள் எடுக்கும். 

இவரிடமுள்ள கார்களின் பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள்...

Rolls Royce’s - 604 Nos
Mercedes-Benzes - 574 Nos
Ferraris - 452 Nos
Bentleys - 382 Nos
BMWs - 209 Nos 
Jaguars - 179 Nos
Koenigseggs134 Nos
Lamborghinis21 Nos
Aston Martins - 11 Nos 
SSC - 1 No 

இத்தனை கார்களையும் எங்குதான் நிறுத்தி வைத்திருக்கின்றனர் என்று பார்த்தால் இவரது ஐந்து சொந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்படும் இடத்தோடு சேர்ந்த விசாலமான கட்டடத்தினுள்ளேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை கார்களுக்கும் ஒவ்வொரு பகுதி இந்த கட்டடத்தினுள்ளே இருக்கிறது.




கார் விரும்பிகளிற்கு இந்த இடம் ஒரு  சொப்பனமாகவே இருக்கும்.

இவர் பாவிக்கும் சகல பொருட்களும் தங்கத்தாலானவையாகும். இவருடைய உணவருந்து கரண்டி கூட தங்கத்தினாலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது. ஏன் இவர் அணியும் ஆடைகளில் கூட பொத்தான் போன்ற பல விடயங்கள் தங்கத்தினாலேயே செய்யப்பட்டிருக்கிறது.


சுல்தானின் வாசஸ்தலம்:

உலகின் அதிக விசாலமான அதிக சொகுசு நிறைந்த மாளிகையாக இவரது வாசஸ்தலம் விளங்குகிறது. இந்த மாளிகையில் 1788 அறைகள் இருக்கின்றன. அத்தோடு இங்கு காணப்படும் தளபாடங்களில் தங்கம் மற்றும் இரத்தினக் கற்களிலான வேலைப்பாடுகள் நிறைந்திருக்கின்றன. இந்த  அரண்மனை இரண்டு  லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு 1,788 அறைகள் உள்ளன. இதுதான் உலகிலுள்ள அரண்மனைகளிலேயே மிகப் பெரியது.   275 ஆடம்பர குளியலறைகள் உள்ளன. அதில் உள்ள பொருட்கள் எல்லாம், தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்டவை. இந்த மாளிகையில் இருக்கும் தனிப்பட்ட வாகனத் தரிப்பிடத்தில் 110 கார்கள் நிறுத்திவைக்க முடியும்.














 சுல்தானின் விமானம்:
  
இவரிடம் ஐந்து சொகுசு விமானங்கள் இருந்தாலும் Boeing 747 எனப்படுகின்ற அதி சொகுசு விமானமே இவராலும் இவர் குடும்பத்தாலும் அதிகம் பிரயானத்திற்காய் பயன்படும்  விமானமாகும். உலகத்திலுள்ள அதி சொகுசு விமானம் என்கின்ற பெருமையையும் இதுவே பெறுகிறது. இவ்விமானம் நூறு மில்லியன் டாலர் பெறுமதியைக் கொண்டது என்றாலும் இந்த விமானத்தின் உட்புறத்தை சொகுசு வீடு போன்று ஆக்குவதற்கு நூறு மில்லியன் டாலர்கள் செலவாகியிருக்கின்றன இவற்றைத்தவிர அவரிடம் மேலும் நான்கு விமானங்களும் இரண்டு உலங்கு வானூர்திகளும் இருக்கின்றன. இவரது அதிசொகுசு Boeing 747 இன் படங்கள் இதோ..












மேலே உள்ள படங்களில் தங்க நிறத்தில் தெரிபவை எல்லாம் சந்தேகமே வேண்டாம் தங்கம் தான்!


சுல்தானின் கார்களில் ஒன்று:

கீழே காணப்படும் இந்தக் கார் சுல்தானின் விசேட வேண்டுகோளிட் கிணங்க Rolls Royce கார் கம்பனியால்  விசேடமாக தயாரித்த கார் ஆகும். இது இப்பொழுது  லண்டனில்   இருக்கிறது. சுல்தானின்  பிரித்தானிய விஜயங்களின் போது  பயன்படுத்துவதற்காய் இந்த கார் லண்டனில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது.



சுல்தானின் முக்கியமான சமாச்சாரம்:

முக்கியமான சமாச்சாரம் என்றாலே அது சம்சாரம் தானே! இதுவரை சுல்தானிற்கு மூன்று மனைவிமார். கனக்க ஜோசிக்காதேங்கோ மக்கள்ஸ், இவரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கையைப் போல மனைவிமாரின் எண்ணிக்கையும் இருக்கும் எண்டுதான் நானும் நெனச்சேன்.. பட் அந்த விசயத்தில இந்த ஆளு ரொம்ப நல்லவரு. மூணோட நிறுத்திட்டாரு!

    மனைவி

Raja Isteri Pengiran Anak Saleha - 1965 - Present.

இங்க இவங்க தலமேல நீட்டிக்கிட்டு இருக்கிறது எல்லாம் தங்கமுங்க தங்கம்!!

Pengiran Isteri Hajah Mariam - 1982 -2003


           Azrinaz Mazhar Hakim - 2005 - 2010


சுல்தானின் மகனின் திருமணம்:

சுல்தானின் மகனின் திருமணம் இடம்பெற்ற வேளையில் இத்திருமண கொண்டாட்டங்கள் 14 நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன. இத்திருமண கொண்டாட்டங்களுக்கான  மொத்த  செலவு  வெறுமனே  5 மில்லியன் டாலர்ஸ்.  (சப்பா...). இத்திருமண  25 நாட்டுத் தலைவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.


.......




 சுல்தானின் இளைய மகள் ஹபிசாவுக்கும், முகமதுவுக்கும் 1,700 அறைகள் கொண்ட அரண்மனையில் திருமணம் நடந்தது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,கம்போடியா நாட்டு தலைவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்..



: உலகின் 
மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான புரூனே நாட்டு சுல்தானின் இளைய மகள் 
ஹபிசாவுக்கும், முகமதுவுக்கும் 1,700 அறைகள் கொண்ட அரண்மனையில் திருமணம் 
நடந்தது. தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,கம்போடியா நாட்டு தலைவர்கள் இந்த 
திருமணத்தில் கலந்து கொண்டனர்.





புரூனே நாட்டில் தலைநகரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அரச இஸ்லாமிய மசூதி தான் சுல்தான் உமர் அலி சைஃபுதீன் மசூதி. ஆசிய பசுபிக்கில் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கின்ற பள்ளி வாசல்களில் இதுவும் ஒன்று. புரூனேயில் உள்ள சுற்றுலா தலங்களில் மிக மிக அற்புதமானதும் இதுதான்.
gold_masuthi_004.w540

புரூனே நதி ஓரத்தில் அமைக்கப்பட்ட இந்த மசூதி பளிங்குகளால் ஆன வாயில்களைக் கொண்டது. இதன் மாடங்கள் தங்கத்தால் ஆனவை. பசுமையான தோட்டங்கள், நீரூற்றுக்கள் இதற்கு பேரழகு சேர்க்கின்றன.


அப்பாடா! இந்த பில்லியனில் தூங்கும் சுல்தான்  பற்றியும், இந்த நாட்டை பற்றியும்  எனக்கு தெரிஞ்சதை எல்லாம் உங்களுக்கும் சொல்லி முடிச்சாச்சு.. சரி வரட்டா ....

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment