Wednesday 21 August 2013

உலக வெப்ப மயமாதல்!!! ஒரு சிறப்பு பார்வை...

தற்போது அமெரிக்காவைத் தாக்கி கடும் சேதம் ஏற்படுத்திய சாண்டி சூறாவளியே உலக வெப்ப மயமாதலின் மோசமான விளைவால்தான் என்கிறார்கள். இந்த உலக வெப்ப மயமாதல் என்றால்தான் என்ன? இது பற்றி ஒன்றுமே தெரியாதவர்களுக்காக இதோ ஒரு சுருக்கமான விளக்கம்.

லக வெப்பமயமாதலால் ஏற்பட்டு வரும் இயற்கை ஆபத்துகளுக்கு,ஓராண்டில் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர்; 30 கோடி பேர் உடல்நிலை பாதிப்பு உட்பட பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.பெட்ரோல், டீசல், காஸ் அதிகம் பயன்படுத்துவதால், பிரிஜ், "ஏசி' போன்ற நவீன சாதனங்களால் கரியமில வாயு அதிகம்வெளிப்படுகிறது. இது தான் பூமியை சூடாக்குகிறது. பூமி சூடானால், அதில் வானிலை மற்றும் சூழல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.



அதிக வெயில், அதிக மழை, வெள்ளம், சூறாவளி என்று கண்டபடி வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமி வெப்பமாவதால், பனிமலைகள் உருகுகின்றன. அதனால், அதன் தண்ணீர் காட்டாறாக பரவுகிறது. அதனால், வெள்ளம் பெருக்கெடுக்கிறது. கடலில் சேருவதால் கடலும் பொங்குகிறது. இது மட்டுமல்ல, பனிமலைகள் உருகி விடுவதால், எதிர்காலத்தில் பல நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அதனால், வறட்சி ஏற்பட்டு பட்டினி அதிகரிக்கும். பல நோய்கள் பரவும். ஆயிரக்கணக்கில் மக்கள் மடிவர்.



இப்படி பெரும் ஆபத்துகளை ஐ.நா.,வும் அதன் அமைப்புகளும் எச்சரித்து விட்டன. இதை தடுக்க வழிகளையும் சொல்லி, கரியமில வாயுவை வெளிப்படுத்தி, வெப்பமயமாதலுக்கு துணை போகாத நாடுகளுக்கு பல வகையில் சலுகையும் தரப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், வளர்ந்த, வளரும் நாடுகள் தான் அதிகளவில் இன்னமும் கார்பன் வாயுவை வெளிப்படுத்தி வருகின்றன. ஆப்ரிக்காவில் உள்ள சில நாடுகள் உட்பட ஏழை நாடுகள், வெப்பமயமாதலுக்கு எந்த வகையிலும் துணை போகவில்லை என்றாலும், அங்கு தான் வறட்சி, வெள்ள பாதிப்பு அதிகம். ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.



அறிக்கையில் அன்னன் கூறியிருப்பதாவது: உலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்து விட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடி பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில் தான் அதிக பாதிப்பு. இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.



இன்னும் 25 ஆண்டில், கார்பன் வாயு வெளிப்படுவதை தடுத்து, வெப்பமயமாதல் குறைக்கப்பட்டால், பல கோடி பேர் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால், 31 கோடி பேர், பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவர்; இரண்டு கோடி பேர், வறுமையில் பாதிக்கப்படுவர்; எட்டு கோடி பேர், பாதிப்பில் இருந்து மீள ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு இடம் பெயர்வர்.



ஆப்ரிக்க, வங்க தேச, எகிப்து, கடலோர, காடு அதிகமாக உள்ள நாடுகளில் தான் அதிக பாதிப்பு ஏற்படும். பணக்கார நாடுகள் பெரிய அளவில் பாதிக்கவில்லை. வளரும் ஏழை நாடுகள் தான் அதிக பாதிப்பை கண்டுள்ளன; எதிர்காலத்திலும் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சில ஆப்ரிக்க நாடுகள், மேற்கு ஆசியா, தெற்காசிய நாடுகளில் வறுமை அதிகமாக இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தால் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலக  வெப்ப மயமாதல், இயற்கை விவசாயம், மின் வாகனங்களைப் பயன்படுத்துவது, சுனாமி ஏன்  வருகிறது போன்ற மக்களுக்கு விழிப்புணவு ஏற்படுத்த வேண்டிய விசயங்களில் நான் கடந்த ஆறு ஆண்டுகளாக ஈடுபட்டு உள்ளேன். இவற்றை பற்றி விளக்க அறிக்கைகளை நானே என் செலவில் அச்சிட்டு விநியோகித்து உள்ளேன். அவற்றை உங்களிடம் ஒவ்வொன்றாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். முதலில் இந்த உலக வெப்ப மயமாதலுக்கு மரம் நடுவது பற்றி. 




குளிர் சாதன மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் க்ளோரோ ப்ளுரோ கார்பன்களும் (CFCs)  மோட்டார் வாகனங்கள் வீடு மற்றும் தொழிற் சாலைகளில் எரிபொருள்  எரிப்பதால் வெளிப்படும் கரிய மில வாயு(CO2), விவசாய மற்றும் தொழிற்சாலை சார்ந்த நடவடிக்கைகளால் வெளியேறும் நைட்ரஸ் ஆக்சைடு (N2O) , நிலக்கரி , இயற்கை வாயு மற்றும் பெட்ரோலிய  எண்ணெய் உற்பத்தி மற்றும் போக்குவரவால் வெளியேறும்  மீத்தேன்(CH4) ஆகிய  பசுமை இல்ல வாயுக்கள் பசுமை இல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.(Green House effect).

 



உலக வெப்பம் அடைவைத் தடுக்க சூரியனில் இருந்து பூமியில் விழும் ஒளியானது மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்பி வைக்கப் பட வேண்டும். ஆனால் இந்த முன் சொன்ன பசுமை இல்ல வாயுக்கள் கண்ணுக்கு தெரிந்த ஒளிக் கதிர்களை விண்வெளிக்கே மீண்டும் திருப்பி அனுப்பும் அதே வேளையில் கண்ணுக்குத் தெரியாத அக சிவப்பு ஒளிக் கதிர்களை தடுத்து நிறுத்தி விடுகின்றன. இந்த கண்ணுக்குத் தெரியாத ஒளியால் உலகம் வெப்ப மயமாகிறது.இந்த வெப்ப மயதினால் பனிக் கட்டிகள் உருகியிருப்பதை சமீபத்திய செயற்கை கோள்  படங்கள் தெரிவிக்கின்றன.

பசுமை இல்ல வாயுக்களில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் கரிய மில வாயுவை செயற்கை முறையில் அகற்ற பல ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. இது கண்டுபிடிக்கப் படும் முதல் தொழில் நுட்பத்திற்கு    மில்லியன் டாலர்கள் பரிசு அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இதன் மூலமாவது இத்தைகைய தொழில் நுட்பம் நமக்குக் கிடைக்குமா என்று பார்ப்போம்

செயற்கை முறை ஆய்வுகள் ஒரு புறமிருக்க கரிய மில வாயு அகற்றும் இயற்கையின் சிறந்த ஆயுதமான மரங்களை நடுவோம். கரிய மில வாயுவை பெருமளவு அகற்றி வெப்ப மயமாதலைத் தடுப்போம்

இந்த மரம் நடுவதோடு  பெட்ரோலியப் பொருட்களின் பயன் பாட்டை குறைப்பது, மாற்று சக்திகளைப் பயன் படுத்துவது, மறு சுழற்சி உண்டாக்கும் விதத்தில் பொருட்களை உற்பத்தி செய்வது , மறு சுழற்சி செய்வது எல்லாமே இன்றையத் தேவைகள். உணர்ந்து செயல் படுவோம்.



புவி வெப்ப மயமாதலால் காரணமாக கடல் மட்டம் 22 மீட்டர் அதிகரிக்கும்



உலக வெப்ப மயமாதல் காரணமாக கடல் மட்டம் 22 மீட்டர் அதிகரிக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கார்பன்டை ஆக்சைடின் அளவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வெப்பநிலை தற்போது இருப்பதை விட 2 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உலக வெப்பமயமாதலின் அளவு வேறுபடும் போது கடல் மட்டத்தின் அளவு 5 முதல் 40 மீட்டர் வரை உயரும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இப்படி பெரும் ஆபத்துகளை ஐ.நா.,வும் அதன் அமைப்புகளும் எச்சரித்து விட்டன. இதை தடுக்க வழிகளையும் சொல்லி, கரியமில வாயுவை வெளிப்படுத்தி, வெப்பமயமாதலுக்கு துணை போகாத நாடுகளுக்கு பல வகையில் சலுகையும் தரப்படும் என்றும் அறிவித்தது. ஆனால், வளர்ந்த, வளரும் நாடுகள் தான் அதிகளவில் இன்னமும் கார்பன் வாயுவை வெளிப்படுத்தி வருகின்றன. ஆப்ரிக்காவில் உள்ள சில நாடுகள் உட்பட ஏழை நாடுகள், வெப்பமயமாதலுக்கு எந்த வகையிலும் துணை போகவில்லை என்றாலும், அங்கு தான் வறட்சி, வெள்ள பாதிப்பு அதிகம். ஐ.நா.,வின் முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னன், உலக மனித நேய அமைப்பின் தலைவராக உள்ளார். இந்த அமைப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலக வெப்பமயமாதல் விளைவுகள் ஆரம்பித்து விட்டன. இதற்கு, ஓராண்டில் மட்டும் மூன்று லட்சம் பேர் இறந்துள்ளனர். 30 கோடி பேர் பல வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வளரும் ஏழை நாடுகளில் தான் அதிக பாதிப்பு. இதே நிலை நீடித்தால், வரும் 2030ல் உக்கிர வெயில், வெள்ளம், வறட்சிக்கு மட்டும் ஐந்து லட்சம் பேர் இறக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு :மு.அஜ்மல் கான்  .


No comments:

Post a Comment