Monday 29 July 2013

விருந்தோம்பல் பற்றி தமிழர் Vs இஸ்லாம்!! ஒரு சிறப்பு பார்வை..


பழங்காலத்தில் தமிழர் வழக்க்கில் இல்லத்திற்கு வரும் அறிமுகமில்லாத புதியவரே விருந்தினர் என்று அழைக்கப் பெற்றனர். பிற்காலத்தில் சிறப்பு உணவு ஏற்பாட்டிற்கு விருந்து என்றும், நன்கு அறிமுகமான உறவினரும் சுற்றத்தாரும் விருந்தினர் ஆயினர். சங்க இலக்கியங்களிலும் பெரிய புராணத்திலும் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும் போதெல்லாம் எல்லோருக்கும் விருந்து அளிக்கப் பெற்றிருப்பதாகக் காண்கின்றோம்.  

ன்றைய சூழலில் நன்கு அறிமுகமான உறவினர்களோ, சுற்றத்தாரோ, நண்பர்களோ கூட நம் தமிழர் இல்லங்களுக்குச் சென்றால் இல்லத்தில் உள்ள அனைவரும் வரவேற்கும் பண்பினைக் காணமுடிவதில்லை! கணவரின் உறவு அல்லது நண்பர் என்றால் மனைவிக் கூட வந்து வரவேற்பது அரிதாகிவிட்டது. பிள்ளைகளோ விருந்தோம்பலில் சற்றும் தொடர்பில்லாதவர்களாய், ஒரு  "சலாம் /வணக்கம்” அல்லது புன்னகைக் கூட பூக்காமல் அவரவர் பணிகளில் கருத்தாய் இருக்கின்றனர். இன்னும் சிலர் வரவேற்புக்கூடத்தில் இருந்தாலும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு அவர் அப்பாவின் விருந்தினர்தான் நம் விருந்தினர் அல்லர் என்று கண்டுக்கொள்ளாமலும் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

விருந்தோம்பல் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை  இங்கு பார்போம்...

1, நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் எவர் அல்லாஹுவைத் மறுமை நாளையும் ஈமான் கொண்டுள்ளாரோ அவர் தமது விருந்தினரை ஓர் இரவும் பகலும் உணவளித்துக் கண்ணியப்படுத்தட்டும் விருந்தென்பது ஸதகா என்னும் அற்புதத்தைச் சார்ந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
2,மேலும் அல்லாஹ் எந்தக் கூட்டத்தவர்களின் மீது நலவை நாடுகின்றானோ அக்கூட்டத்தவர்களிடம் விருந்தினரை அனுப்பி வைப்பான். தமது ரிஸ்கை கொண்டு வருவார் தம்முடைய ரிஸ்கை கொண்டு போவார்.
(அதாவது விருந்தாளி வீட்டிற்கு வருவதன் மூலம் இறையருளைக் கொண்டு வருகின்றார்.செல்லுகின்றபோது வீட்டனரின் நல்ல உபசரிப்பைப் பெற்றுச் செல்கின்றார்.)
3, விருந்தாளி மன மகிழ்வுடன் விடை பெற்றுச் செல்வதன் மூலம் வீட்டிற்குறியவர் பிழை பொறுத்தலுக்குரியவராக மாறிவிடுகின்றார்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
4, விருந்து வைப்பதற்வைத்திருக்கும் சஹன் வீட்டில் இருக்கும் காலமெல்லாம் வானவர்கள் அவ்வீட்டினரின் பிழைகள் மன்னிக்கப்பட அல்லாஹ்விடம் இறைஞ்சிக் கொண்டேயிருப்பார்கள்.
5, எவர் தமது விருந்தாளியை கண்ணியப்படுத்துவதற்காக ஆடு, மாடு போன்றவைகளை அறுத்து விருந்தளிப்பாரோ அவை அவரை நரகத்தில் இருந்து காப்பதற்கு… பித்யாவாக அமைந்து விடுகின்றன எனவும் விருந்தளிக்காதவனின் வாழ்வில் நலவில்லை என்றும் கூறியுள்ளார்கள் அனஸ் (ரழி) கூறுகின்றார்கள் விருந்தாளி நுழையாத வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்.
வானவர்கள் நுழையாத வீட்டில் எவ்வாறு இறையருள் இறங்கும்? என்பதைச் சிந்திப்போமாக! நபி (ஸல்) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று வினவப்பட்டது.
 அதற்கு அவர்கள் கூறினார்கள். விருந்தளிப்பதும், ஸலாமைப் பரப்புவது மாகும் என்றார்கள். சிந்தித்துப் பாருங்கள் இன்றைக்கு நம்மக்களிடே விருந்தினரை வரவேற்றிடும் (உபசரிக்கும்) நற் பண்பும் சாந்தியளித்திடும் ஸலாமைப் பரப்பிடும் உயரிய பண்பும் எந்த அளவிற்கு தாழ்ந்து பேய் விட்டிருக்கிறது ஏழை அழைக்கப்படாத விருந்து விருந்தல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நடைமுறையில் இன்று என்ன நடக்கிறது. ‘விருந்திற்கு அழைப்பிதழ் அழிப்பவர்கள் இரண்டு வகையாக அடிக்கின்றனர்.
அதில் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் கொக்கப்படும் அழைப்பிதழில் சிறிய தாள் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். அந்த தாள் உள்ளவர்கள் மட்டும் தான் விருந்துண்ண வரவேண்டும் அந்த இணைப்புத் தாள் இல்லாத அழைப்பிதழ் பெற்றவர்கள் விருந்திற்கு வரக்கூடாது என்றெல்லாம் பல சட்டங்கள் வைத்துள்ளார்கள். இது எவ்வளவு கஞ்சத்தனம்!
6, மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். விருந்தாளி இல்லாமல் உண்ணாதீர்கள் விருந்தாளி கிடைக்காவிடின் உங்கள் மனைவி மக்களுடன் அமர்ந்து உண்ணுங்கள் மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். சுவர்க்கத்தில் சில மாளிகைகள் உள்ளன. அதன் உள் பகுதி வெளிப்பகுதியிலும் வெளிப்பகுதி உள்ளேயும் தெரியும். ஆம்மாளிகை மூன்று சாராருக்காக தயார் செய்யப்பட்டோருக்கும் அவர்கள் யார் தெரியுமா?
1. மென்மையாகப் பேசுகின்றவர்களுக்கும்
2. பசித்த வயிற்றுக்கு உணவளித்தவர்களுக்கும்
3. மனிதர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது இரவில் நின்று வணங்கியவர்களுக்குமாகும் என்று கூறினார்கள்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நம்பிக்கையாளர்கள் தங்களிடையே நேசம் கொள்வதற்கும் கருணை காட்டுவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் உதாணரம் ஒரே உடலைப்போல!ஊடலில் ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால் அனைத்து உறுப்புகளும் காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் முறையிடுகின்றன.

முடிவு நம் தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளை போலவே மறைக்கப்பட்ட/மறுக்கப்பட்ட முக்கிய பண்பு விருந்தோம்பல்.Pizza மற்றும் buffet கலாச்சாரத்திற்கு மாறி விட்ட நம்மால் இதை பெரியதாக உணர முடியாது.நாம் தொலைத்து விட்ட அடையாளங்களில் ஓன்று விருந்தோம்பல்.விருந்து புறத்திருக்கச் சாவா மருந்தெனினும் தனித்து அருந்தாமை”.. என்பதே தமிழர்களின் உயர்ந்த பண்பாடு. இல்லத்திற்கு வந்த விருந்தாளி முன்புறமோ அல்லது வரவேற்பறையிலோ இருக்க, அமிழ்தம் என்று சொல்லக் கூடிய உணவே ஆயினும் அதனை வீட்டின் அடுக்களையிலோ அல்லது மறைவான இடத்திலோ, விருந்தினருக்குக் கொடுக்காமல் உண்பது என்பது தமிழர் பண்பாடு ஆகாது என்று தெளிவாகிறது.எனவே விருந்தோம்பல் எனும் இறையுலகிற்கு வழிகாட்டும் உயரிய பண்பினை நம் இளைய தலைமுறையினருக்கு விட்டுச் செல்வோமாக! 

No comments:

Post a Comment