Friday 1 March 2013

தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை!! ஒரு பார்வை..


தமிழகத்தில், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.இவற்றில், 25 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அரசுப் பள்ளிகள் அதிகம் துவங்கப்பட்டாலும், தனியார் பள்ளிகளின் வளர்ச்சி வேகம் குறையவில்லை. ஆண்டுதோறும், 50 முதல், 70 புதிய பள்ளிகள் துவங்கப்படுகின்றன.இந்நிலையில், வரும் கல்வியாண்டில் (2013-14), புதிய பள்ளிகளை துவக்க விரும்புவோர், டிச., 31க்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் தெரிவித்தது. பள்ளி அமைவிடம், முகவரி உள்ளிட்ட முழுமையான ஆவணங்கள் அடங்கிய இரு கோப்புகளை தயார் செய்து, மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.அவர், ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பின், இயக்குனரகத்திற்கு பரிந்துரைப்பார். இயக்குனரகம், ஆவணங்களை ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கும். வரும் கல்வியாண்டில், 50 புதிய பள்ளிகள் துவங்க, விண்ணப்பங்கள் வரலாம் என எதிர்பார்ப்பதாக, இயக்குனரக வட்டாரங்கள் தெரிவித்தன. இவற்றில், டாப் வரிசையில் உள்ள, 100க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013 - 14ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே, மும்முரமாக நடந்து வருகிறது.அதிகாரிகள் பில்டப்இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், மே மாதம் தான், மாணவர் சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி, மாநிலம் முழுவதும், மெட்ரிக் பள்ளி அதிகாரிகள், விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.மே மாதம் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். முன்கூட்டி சேர்க்கை நடத்தினால், அந்த சேர்க்கை ரத்து செய்வதுடன், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர். காற்றில் பறந்தது ஆனால், அதிகாரிகள் எச்சரிக்கையை மீறியும், சட்டத்திற்கு எதிராகவும், முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதே மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில், எல்.கே.ஜி., விண்ணப்பங்களை வாங்க, பெற்றோர், கால்கடுக்க, பல மணிநேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.பெற்றோர்களின் ஆர்வத்தைக் காசாக்கும் முயற்சியில், பள்ளி நிர்வாகங்கள் இறங்கிஉள்ளன. 

கறக்கும் நிர்வாகம்சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., சீட் வாங்க, பல லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கம் கட்டித்தர, ஒரு பெற்றோர் முன்வந்த சம்பவமும், சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.. சென்னையில் நடந்துள்ள இந்த சம்பவம், குழந்தைகளின் பெற்றோரை ஒரு பங்குதாரர் போல பாவிக்கும் ஒரு சில பள்ளிகளின் மனோநிலையை எடுத்துக்காட்டுவதாக விளங்குகிறது.


தற்போதைய நிலவரப்படி, சென்னையில் உள்ள சிறந்த பள்ளிகளில் எல்.கே.ஜி.,யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு ரூ. 4 லட்சம் வரை டொனேஷன் கேட்கப்படுகிறது. இதே இரண்டாம் நிலை நகரங்களான மதுரை, திருப்பூர் போன்ற ஊர்களில் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் வரை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. சில இடங்களில் பெற்றோர்களிடம் ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லா கடனாக பெற்று, அக்குழந்தை பள்ளியை விட்டுச் செல்லும் போது மீண்டும் வழங்கும் நடைமுறையும் உள்ளதாக கூறுகின்றனர். இதற்காகவே தங்களுக்கு தேவையான பணத்தின் அளவைப் பொறுத்து சில நிர்வாக இடங்களை ஒதுக்கி வைத்து விடுவதாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம், நாட்டில் கல்வியின் தரம் குறைந்து விட்டதாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வருத்தப்பட்டு பேசிய நிலையில், மறுபுறம் நம் நாட்டில் கல்வி எங்கே செல்கிறது என்ற கேள்வி மனிதில் எழுவதையும் தடுக்க முடியவில்லை.இதேபோல், பல பள்ளி நிர்வாகங்கள், பல லட்சம் ரூபாயை, நன்கொடையாககறக்கவும் தவறுவதில்லை. மழுப்பல் பதில் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரத்தினர் கூறியதாவது:பள்ளி நிர்வாகங்கள், நன்கொடை கேட்பதாக, பெற்றோர் தரப்பில் இருந்து, எழுத்துப்பூர்வமாக, எவ்வித புகாரும் வரவில்லை. புகார்கள் வந்தால், விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுப்போம்.பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, இப்போது நடத்தக்கூடாது. மே மாதம் தான் நடத்த வேண்டும். சில பள்ளிகள், மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக, செய்திகள் வருகின்றன. விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, துறை வட்டாரத்தினர் கூறினர்.அதிகாரிகள் தயக்கம் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: பெரிய பள்ளிகள், அரசையும் மதிப்பதில்லை; சட்டத்தையும், அதிகாரிகளையும் மதிப்பதில்லை. அவர்கள், தங்களுக்கு என, தனி சட்டம் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். இதுபோன்ற, பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். சாதாரண பள்ளிகளில் தான், அவர்களது வேகத்தை காட்டுகின்றனர்.சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், முன்கூட்டி சேர்க்கை நடக்கிறது. இந்த பள்ளிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசிடம் தான் உள்ளது. இந்தப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்."அங்கீகாரம் இல்லாத மெட்ரிகுலேஷன் பள்ளிகள், உடனடியாக, அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை, பொதுத்தேர்வுக்கு அனுமதிக்க மாட்டோம்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனால், 500 பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர் மத்தியில், பீதியும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், 4,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 1,000 பள்ளிகள், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருந்தன. சமீபத்தில், மாவட்ட வாரியாக, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களை, சென்னைக்கு அழைத்து, அங்கீகாரம் புதுப்பித்தல் தொடர்பான விண்ணப்பங் களை ஆய்வு செய்து, விதிமுறைகளை பூர்த்தி செய்த பள்ளிகளுக்கு, புதுப்பித்தல் அங்கீகாரம் வழங்கப்பட்டன. அதுவும், பெரும்பாலான பள்ளிகளுக்கு, 2013 வரை மட்டுமே, அங்கீகாரம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. வழக்கமாக, மூன்று ஆண்டுகள் வரை, அங்கீகாரம் நீட்டிப்பு செய்து, உத்தரவு வழங்கப்படும் நடைமுறை பின்பற்றப்படவில்லை.தமிழக அரசு கொண்டு வந்த புதிய விதிமுறைகள் பெறாவிட்டால், உங்கள்மற்றும் இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களைக் காரணம் காட்டி, ஒரு ஆண்டுக்கு மட்டும், நீட்டிப்பு செய்து, உத்தரவு வழங்குவதாக, தனியார் பள்ளி சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை, 500 பள்ளிகள் வரை, அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளதாக கூறப் படுகிறது. இன்னும், 500 பள்ளிகள், அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை. பழைய பள்ளிகளுக்கு, புதிய விதிமுறைகள் பொருந்தாது என, தமிழக அரசு அறிவிக்க, தனியார் பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


இயக்குனர் கறார் : இந்த விவகாரத்தில், தமிழக அரசு மவுனம் காத்து வரும் நிலையில், "அங்கீகாரம் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை, 2013ல் நடக்கும் பொதுத் தேர்வுக்கு அனுமதிக்க மாட்டோம்' என, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், கடிதம் அனுப்பிஉள்ளது. மார்ச், முதல் வாரத்தில் இருந்து, பிளஸ் 2 தேர்வும்; மூன்றாவது வாரத்தில் இருந்து, 10ம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற உள்ளன. 10ம் வகுப்பு தேர்வை, மெட்ரிக் பள்ளிகள் தரப்பில் இருந்து, 1.5 சென்னை போன்ற பெரிய நகரங்கள் மற்றும் நகரங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ளபள்ளிகள், திடீரென கூடுதலாக, எப்படி இடங்களை வாங்க முடியும்? இந்த விவகாரத்தில், "உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, இயக்குனரகம், இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை காட்டியும், பள்ளிகளை மிரட்டி வருகின்றன.

தொகுப்பு :    மு .அஜ்மல் கான்.





No comments:

Post a Comment