Tuesday 5 February 2013

9 மாநகராட்சிகளில் மலிவு விலை ‘அம்மா’ உணவகங்கள்!! ஒரு பார்வை..

மத்திய அரசின் ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் 2-ன் கீழ் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவினை வயிறார உண்ணும் வகையில் நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையில் சத்தான உணவு வகைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைத்திட முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சென்னை மாநகரில் வாழும் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதார மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் “அம்மா உணவகங்கள்”  முதலமைச்சரால் 19.2.2013 அன்று துவக்கி வைக்கப்பட்டன.

அம்மா உணவகங்களில்” காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் ஏழை, எளிய சாதாரண மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளதால் இதனை தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில் மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் “அம்மா உணவகங்களை”  திறக்கப்பட உள்ளன.

சென்னை மாநகராட்சியில் அம்மா உணவகங்களில் காலை சிற்றுண்டியில் கூடுதலாக பொங்கலும், மதிய உணவின் போது கூடுதல் சாத வகைகளையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று, சென்னை மாநகரில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும், காலை சிற்றுண்டியின் போது இட்லி தவிர, பொங்கல் – சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது கறிவேப்பிலை சாதம் அல்லது எலுமிச்சை சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.

சென்னையின் 200 வார்டுகளிலும் உள்ள அம்மா உணவகத்தில் ரூ.1-க்கு இட்லியும், ரூ.5-க்கு சாம்பார் சாதமும், ரூ.3-க்கு தயிர்சாதமும் வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை  சுமார் ஒரு கோடியே 85 லட்சம் இட்லிகளும், 37 லட்சம் சாம்பார் சாதங்களும், 25 லட்சம் தயிர் சாதங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் அம்மா உணவகத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆண்டுக்கு ரூ.34.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அம்மா உணவகத்துக்கு மக்கள் அளித்து வரும் அமோக வரவேற்பு காரணமாக, சென்னையில் காலையில் ரூ.5-க்கு பொங்கலும், மதியத்தில் ரூ.5-க்கு எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதமும், மாலையில் ரூ.3-க்கு 2 சப்பாத்திகளும் வழங்கப்படும் என அண்மையில் முதல்வர் அறிவித்திருந்தார். அதன் படி புதிய உணவு வகைகள்  நாளை முதல் அம்மா உணவகத்தில் அமல்படுத்தப்பட  உள்ளது.


மேலும், மதுரை நகரில் ஆரப்பாளையம், ஆனையூர், புதூர், காந்திபுரம், ராம்வர்மா நகர், ராமராயர் மண்டபம், சி.எம்.ஆர்.ரோடு, பெரியார் பஸ் நிலையம், திருப்பரங்குன்றம், பழங்காநந்தம் பஸ்நிலையம் ஆகிய 10 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு உணவகத்தில் 15 பெண்கள் உள்பட மொத்தமுள்ள 10 உணவகத்தில் 150 பேர் பணியாற்றுகிறார்கள் .

பெரியார் பஸ் நிலையம் மேலவாசலில் அமைக்கப்பட்டு உள்ள ‘அம்மா’ உணவகத் திறப்பு விழாவில்  மேயர் ராஜன் செல்லப்பா கலந்து கொண்டு திறப்பு விழாவின் முதல்நாள் என்பதால் உணவகம் திறந்து வைக்கப்பட்டு  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படஉள்ளது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment