Wednesday 2 January 2013

சவூதி அரேபியாவில் மாபெரும் பொதுமன்னிப்பு !!!

ملف:Flag of Saudi Arabia.svg
சவூதி தலைநகர் ரியாத்தின் புறநகர்களில் ஒன்றான அல்ஹைர் என்னும் நகரில் Al-Swayeh Building Construction and Contracting Co என்னும் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த மே மாதம் 2011ல் 700 பணியாளர்கள் அவரவர் நாடுகளிலிருந்து பணிக்கு வந்துள்ளனர்.  அவர்களில் சுமார் 200 பேர் தமிழ்நாடு, உ.பி, பீகார், கேரளா முதலான இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.


என்ன கொடுமை என்றால், வந்த நாள் முதலே அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை. இதுவரை அவர்களுக்கு அக்காமா எனப்படும் குடியுரிமை அட்டையும் தரப்படவில்லை. அவர்களிருக்கும் முகாம் கூட ஏதோ அகதிமுகாம் போல மின்சாரம் இல்லாமல், சமைப்பதற்குத் தேவையான எரிவாயு வசதியும் இல்லாமல், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் தரும் சொற்பத் தொகையைக் கொண்டே இதுவரை நாட்களைக் கழித்துவருகின்றனர். மனித உரிமை அமைப்புகளின் கடும் முயற்சியில் சொற்பத்தொகையில் ஒருமுறை சம்பளம் அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.



"சவூதி அரேபியாவில் பாரபட்சமில்லாத நீதிமுறை இருக்கிறதே! நீங்கள் சவூதி அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்களா??"

"அதில் மொழிப் பிரச்னை இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் ஆறுபேர் காவல்நிலையம் சென்று முறையிட்டபோது, அவர்களைப் பற்றி நிறுவனத்தார் வேறு ஏதோ முறையீடுகளைச் செய்ததால், அது எடுபடாமல் போனது தான் மிச்சம்"

"சரி, எத்தனையோ தமிழர் அமைப்புகள், மலையாள அமைப்புகள், இந்தியத் தூதரகம் யாவும் உள்ளன....!"

"ஆனால் , அதெல்லாம் சரிப்படும் என்று தெரியவில்லை, உங்கள் இதழில் வெளியிட்டால் இந்திய அரசு மூலமாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்புவதன் வாயிலாக இம்மாதிரியான இந்தியர் பிரச்னைகளுக்கு ஒரு முடிவும் விடிவும் ஏற்படலாம். குறிப்பாக, உடல்நலம் குன்றியுள்ளவர்கள் நாட்டுக்கும் போக வழியில்லாமல் படும் சிரமம் சொல்லிமாளாது. மனிதாபிமான அடிப்படையில் நீதி நிலைபெறச் செய்ய வேண்டியுள்ளது.

நமது நாடு மட்டுமல்ல, மற்ற  நாடுகளை சேர்ந்த சகோதரர்களும்  சிறையில்  உள்ளனர் .



சவூதி அரேபியாவில் சிறையில் வாடும் குற்றவாளிகளுக்கு மன்னர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். பொது உரிமை மீறல் குற்றத்தின் கீழ் சிறையில் வாடுபவர்களுக்கும், நிதிக்குற்றங்களுக்காக சிறைப்பட்டு, திவாலாகிப் போனவர்களுக்கும் அவர்தம் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அறிவித்துள்ளதாக சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், தனியுரிமை மீறல் குற்றம் புரிந்தவர்களுக்கும், பெரிய குற்றங்களான கொலை, வன்புணர்வு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய நாடு இஸ்லாமிய மதநெறிப்படி ஷரீயத் சட்டத்தைப் பின்பற்றி வருகிறது. அச்சட்டப்படி, பொது உரிமைக் குற்றங்கள் , தனியுரிமைக்   குற்றங்கள் என்று இருவகையாக குற்றங்கள் பகுக்கப்படுகின்றன. தனிமனிதருக்கு இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவரே  மன்னிக்கத் தகுதியானவர் என்பதால் அத்தகு குற்றங்கள் இந்த பொதுமன்னிப்பின் கீழ் வராது  என்றும் கூறப்பட்டுள்ளது.

காட்டாக, போக்குவரத்துக் குற்றங்களில் அரசு சார்பில் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டாலும், அக்குற்றத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய நட்ட ஈடு வழங்கப்படவேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு அடைந்த கைதிகள் இதனை படிப்பினையாகக் கொண்டு  குற்றங் களைந்தவர்களாக தேசத்திற்கும், பண்பாட்டிற்கும்  இனி பாடுபட முன்வர வேண்டும்  என்று இளவரசர் முஹம்மது கேட்டுக்கொண்டுள்ளார்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.









No comments:

Post a Comment