Tuesday 1 January 2013

2012 தமிழ் திரையுலகம் - ஓர் கண்ணோட்ட பார்வை...!


2012 - Tamil cinema - Special Review
தயாரிப்பாளர் சங்கத்தில் பிளவு, இயக்குனர் சங்கத்தில் மோதல், பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னை என எண்ணற்ற சிக்கல்களில் சிக்கி தவித்தாலும் டிசம்பர் 31ம் தேதியுடன் கடந்து போகும் 2012-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சற்று சாதகமான ஆண்டாகவே திகழ்ந்தது என்று சொல்லி ஆக வேண்டும். இல்லையென்றால் சுமார் 145 நேரடி தமிழ்படங்கள், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து வந்த டப்பிங் படங்கள் 65 இவைத்தவிர நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணன், ரஜினியின் சிவாஜி 3டி உள்ளிட்ட ரீ-மேக் கம் ரீ-ரிலீஸ் படங்கள் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயில், உலகம் சுற்றும் வாலிபன், மாட்டுக்காரவேலன் உள்ளிட்ட ரீ-ரிலீஸ் படங்கள் என சுமார் 200 முதல் 225 படங்கள் நேரடி ரிலீஸ், டப்பிங் ரிலீஸ், ரீ-மேக் ரிலீஸ், ரீ-ரிலீஸ் என தமிழ் சினிமா ரசிகர்களை 2012ம் ஆண்டில் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளன என்றால் மிகையல்ல!

2012-ல் வெளிவந்த நேரடி படங்கள் - டப்பிங் படங்களின் பட்டியல்கள் வருமாறு:

* நேரடித் தமிழ் படங்கள்


விநாயகா, மதுவும் மைதிலியும், நண்பன், வேட்டை, கொள்ளைக்காரன், மேதை, அன்புள்ள துரோகி, தேனி மாவட்டம், சேட்டை தனம், மெரீனா, செங்காத்து பூமியிலே, வாச்சாந்தி, ஒரு நடிகையின் வாக்குமூலம், தோனி, சூழ்நிலை, விளையாடவா, உடும்பன், முப்பொழுதும் உன் கற்பனையில், அம்புலி, காதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, ஒரு மழை நான்கு சாரல், காட்டுப்புலி, சங்கர் ஊர் ராஜபாளையம், கொண்டான் கொடுத்தான், அரவான், நாங்க, சேவற்கொடி, மாசி, கழுகு, காதலில் சொதப்புவது எப்படி, மகாவம்சம், விண்மீன்கள், காதல் பிசாசே, நந்தா நந்திதா, மீராவுடன் கிருஷ்ணா, முதல்வர் மகாத்மா, காதலிச்சிப்பார், சூரிய நகரம், 3, ஒத்தவீடு, ஒத்தகுதிரை, மழைக்காலம், அஸ்தமனம், நண்டு பாஸ்கி, வருடங்கள்-20, பச்சை என்கிற காத்து, மை, அடுத்தது, ஒரு கல் ஒரு கண்ணாடி, ஊலலலா, அதிநாராயணா, மாட்டுத்தாவணி, லீலை, பரமகுரு, வழக்கு எண் 18/9, காந்தம், கலகலப்பு, ராட்டினம், கண்டதும் காணாததும், இஷ்டம், கொஞ்சும் மைனாக்களே, உருமி, மனம் கொத்திப் பறவை, கிருஷ்ணவேணி பஞ்சாலை, மயங்கினேன் தயங்கினேன், தடையறத் தாக்க, இதயம் திரையரங்கம், பொற்கொடி பத்தாம் வகுப்பு, தூதுவன், மறுபடியும் ஒரு காதல், முரட்டுக்காளை, சகுனி, நான் ஈ, நாளை உனது நாள், பில்லா 2, மாலைப் பொழுதில் மயக்கத்திலே, சுழல், ஆசாமி, அட்டக்கத்தி, யுகம், மதுபானக்கடை, மிரட்டல், தூயா, அதிசய உலகம், ஸ்ரீராமகிருஷ்ணர் தரிசனம், பாளையங்கோட்டை, பனித்துளி, எப்படி மனசுக்குள் வந்தாய், நான், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், ஆச்சர்யங்கள், பூலம்பட்டி, ஏதோ செய்தாய் என்னை, 18 வயசு, பெருமான், அவன் அப்படித்தான், அணில், முகமூடி, அரக்கோணம், கள்ளப்பருந்து, மன்னாரு, பாகன், சுந்தரபாண்டியன், துள்ளி எழுந்தது காதல், நெல்லை சந்திப்பு, சாருலதா, சாட்டை, தாண்டவம், இங்கிலீஷ் விங்கிலீஷ், செம்பட்டை, புதிய காவியம், சௌந்தர்யா, மாற்றான், அமிர்தயோகம், கோயம்பேடு பேருந்து நிலையம், திருத்தணி, பீட்சா, வவ்வால் பசங்க, மயிலு, சக்ரவர்த்தி திருமகன், ஆரோகணம், யாருக்குத் தெரியும், அசைவம், அஜந்தா, போடா போடி, துப்பாக்கி, காசிக்குப்பம், ம்மாவின் கைப்பேசி, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நீர்ப்பறவை, கை, கும்கி, நீதானே என் பொன்வசந்தம், கள்ளத்துப்பாக்கி, ஹிட்லிஸ்ட், லொல்லுதாதா பராக் பராக், சட்டம் ஒரு இருட்டறை, கண்டுபுடிச்சிட்டேன், நானே வருவேன், பயபுள்ள, பாரசீக மன்னன், பத்தாயிரம் கோடி

* தமிழ் பேசிய ஆங்கிலப் படங்கள்

பாதாள உலகம், போதிதர்மன், குரு-2, ருத்ரபூமி, கால பைரவன், தி உமன் இன் பிளாக், மம்மி வெர்சஸ் சிந்துபாத், மர்மதேசம் 2, க்ராஸ் பாயிண்ட், பேட்டில் ஷிப் அவெஞ்சர்ஸ், ப்ளாக் டிராகன், தி ரெய்ட், ப்ரோமிதியோஸ், கோஸ்ட் சன், பிராண 2, டோட்டல் ரீகால், ஸ்ட்ரீட் டான்ஸ், வாம்பையர் ஹண்டர், பேட்மேன் 3, தற்காப்பு படையும் கூலிப்படையும், ஐஸ் ஏஜ் 4, எக்ஸ்பெண்டபிள் 2, ஸ்கைபால், லைப் ஆப் பை, இவன் நினைத்ததை முடிப்பவன், தி அமேஸிங் ஸ்பைடர்மேன், கமாண்டோஸ் ஏகே 47

* தமிழுக்கு வந்த இந்தி படங்கள்


மன்மத ராணி, மாதுரி, சீக்ரெட் கேர்ள், காட்டுப்புலி, விவகாரம், கிளிக் 123, கோகுலத்தில் கண்ணன் (அனிமேஷன்), பேய் நிலா.

* தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவை

மகாராணி, சினம், எங்கடா உங்க மந்திரி, ரகளை, யார், ஜக்கம்மா, சிங்க மகன், ராம ராஜ்யம், திருடன் திருடி, ஸ்ரீதர், அப்பு பப்பு, டைகர் விஷ்வா, சிறுத்தைப்புலி, வீரய்யா, அடங்காதவன், சிவாங்கி, சந்திரமவுலி, புல்லட் ராஜா, முரட்டு சிங்கம், பிசினஸ்மேன்.

* தமிழ் பேசிய மலையாள படங்கள்


அன்வர், ரதி நிர்வேதம், ராஜா போக்கிரிராஜா, நரசிம்மன் ஐ.பி.எஸ்., தில் தில் மனதில், புதுவை மாநகரம், செல்லத்தம்பி

* ஒரே ஒரு கன்னட படம்


கொருக்குப்பேட்டை கூலி

இப்படி சுமார் 145 நேரடி படங்கள், கிட்டத்தட்ட 65 டப்பிங் படங்களும் தமிழ் திரையுலகில் வெளிவந்திருந்தாலும், நடுவுலகொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, நண்பன், கலகலப்பு, வழக்கு எண் 18/9, நான் ஈ, சுந்தர பாண்டியன், துப்பாக்கி, கும்கி உள்ளிட்ட ஒரு டஜனுக்கு குறைவான படங்களே வசூல் ரீதியாக வெற்றி பெற்றவை என்பது கவனிக்கத்தக்க செய்தி மட்டுமல்ல... கவலைக்குரிய செய்தியும் ஆகும்!

யார் அதிகம்...?!

2012ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்த கதாநாயகர் எனும் பெருமையை ஜீவாவும், அதிக படங்களில் நடித்த நடிகைகள் எனும் பெருமையை அமலாபாலும், சுனைனாவும் தட்டி சென்றிருக்கின்றனர். அதேமாதிரி காமெடி நடிகர்களில் சந்தானம் 11 படங்களில் நடித்து முதல் இடத்தில் இருக்கிறார். 2012ம் அதிக படங்களுக்கு இசையமைத்தவர் எனும் பெயரை இசைஞானி இளையராஜா தட்டிச்சென்றிருக்கிறார். 

அதிகப்பட நடிகர் நடிகைகள், காமெடியன்கள், இசையமைப்பாளர்கள் விவரம் வருமாறு:

நடிகர்கள்


* ஜீவா - மூன்று படம் (நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம்)

* விஜய் - இரண்டு படம் (நண்பன், துப்பாக்கி), ஸ்ரீகாந்த் - இரண்டு படம் (நண்பன், பாகன்), விமல் - இரண்டு படம் (இஷ்டம், கலகலப்பு), சிவகார்த்திகேயன் - இரண்டு படம் (மெரீனா, மனம் கொத்தி பறவை), விஜய் சேதுபதி - இரண்டு படம் (பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)

நடிகைகள்

* அமலாபால் - மூன்று படம் (வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் என் கற்பனைகள்)

* சுனைனா - மூன்று படம் (பாண்டி ஒலி பெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை), காஜல் அகர்வால் - இரண்டு படம் (மாற்றான், துப்பாக்கி), ஓவியா இரண்டு படம் (மெரினா, கலகலப்பு), லட்சுமி மேனன் - இரண்டு படம் (சுந்தரபாண்டியன், கும்கி), பிந்து மாதவி - இரண்டு படம் (கழுகு, சட்டம் ஒரு இருட்டறை)


காமெடியன்கள்


* சந்தானம் - 11படம்

* பரோட்டா சூரி - 8 படம்

* எம்.எஸ்.பாஸ்கர் - 3 படம்

* சத்யன் - 2 படம்


இசையமைப்பாளர்கள்


* இளையராஜா - 5 படம் (செங்காத்து பூமியிலே, மயிலு, அஜந்தா, நீதானே என் பொன்வசந்தம்)

* ஹாரிஸ் ஜெயராஜ் - 4 படம் (நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மாற்றான், துப்பாக்கி)

* யுவன் சங்கர் ராஜா - 3படம் (வேட்டை, பில்லா-2, கழுகு)


திரையுலக திருமணங்கள்

2012-ல் சுமார் 25 திரையுலக ஜோடிகளுக்கு கெட்டி மேள சத்தம் கேட்டிருக்கிறது. அதன் விபரம் வருமாறு:

ஜன-30 - எங்கேயும் எப்போதும் டைரக்டர் சரவணன் திருமணம்

பிப்-3 - நடிகை ஜெனிலியா - ரித்தேஷ் தேஷ்முக் திருமணம்

மார்-11 - நடிகை ரீமாசென் - ஷிவ்கரண் சிங் திருமணம்

மே-11 - பிரசன்னா - சினேகா திருமணம்

மே-16 - நடிகை உதயதாரா - ஜூபின் ஜோசப் திருமணம்

மே-23 - வெயில் பிரியங்கா - டைரக்டர் லாரன்ஸ் ராம் திருமணம்

ஜூன்-4 - ராம்சரண் - உபாசனா திருமணம்

ஜூன்-16 - நடிகை சாயாசிங் - அனந்தபுரத்து வீடு கிருஷ்ணா திருமணம்

அக்-24 - நடிகை உதய்கிரண் - விஷிதா திருமணம்

அக்-27 - நான் ஈ நானி - அஞ்சனா திருமணம்

நவ-15 - தமிழ்படம் சிவா-ப்ரியா திருமணம்

டிச-14 - நடிகை வித்யாபாலன் - சித்தார்த் ராய் கபூர் திருமணம்


தமிழ் திரையுலக இழப்புகள்! இறப்புகள்!!

ஜன-1 - அன்னக்கிளி டைரக்டர் எஸ்.தேவராஜ் (81 வயது)

ஜன-30 - காமெடி நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் (72 வயது)

பிப்-20 - பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி (84 வயது)

பிப்-22 - வாளமீன் பாடல் புகழ் முத்துராஜ் (34 வயது)

ஏப்-2 - பழம்பெரும் நடிகை சரோஜா (79 வயது)

மே-1 - பழம்பெரும் நடிகை சண்முகசுந்தரி (75 வயது)

ஜூன்-14 - பழம்பெரும் நடிகர் காகா ராதா கிருஷ்ணன் (86 வயது)

ஜூன்-19 - தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. (74 வயது)

ஆக-7 - காமெடி நடிகர் என்னத்த கண்ணையா (87 வயது)

செ-10 - தயாரிப்பாளர் ஏ.வி.எம்.முருகன் (77 வயது)

செ-16 - காமெடி நடிகர் லூஸ் மோகன் (84 வயது)

செ-18 - குணச்சித்திர நடிகர் பெரியகருப்பு தேவர் (75 வயது)

செ-23 - பொண்டாட்டி தேவை நடிகை அஸ்வனி (43 வயது)

செ-24 - மலையாளர் நடிகர் திலகன் (77 வயது)

அக்-12 - செம்பட்டை பட நாயகன் திலீபன் (32 வயது)

அக்-23 - மாலைப்பொழுதின் மயக்கத்திலே நடிகை சுபா புட்லோ (21 வயது)

என எண்ணற்ற கலைஞர்களின் இறப்புகளையும், இழப்புகளையும் 2012-ல் தமிழ் திரையுலகம் சந்தித்துள்ளது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.


தேசிய விருதுகள் - பிற விருதுகள்


* சிறந்த பொழுதுபோ்கு படத்திற்கான தேசிய விருதினை அழகர்சாமியின் குதிரை பெற்றது. அதேமாதிரி சிறந்த பிராந்திய மொழி திரைப்பட விருதினை வாகை சூட வா திரைப்படம் பெற்றது.

* சிறந்த துணை நடிகர் விருதினை நடிகர் அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை படத்திற்காக பெற்றார்.

* சிறந்த அறிமுக இயக்குனர் விருதினை ஆரண்யகாண்டம் திரைப்படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவும், அதே தமிழ்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருதினை எடிட்டர் பிரவீனும் பெற்றுக்கொண்டனர். இதே நேரத்தில் டர்ட்டி பிக்சர்ஸ் இந்தி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை தமிழ்நடிகை வித்யாபாலன் பெற்று கொண்டதும் விசேஷம்!

* தேசிய விருதுகள் தவிர ஜப்பானில் நடந்த ஒசாகா படவிழாவில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் சிறந்த படத்துக்கான விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.


2012-ல் தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வுகள்!

* 2012-ல் ஜனவரி மாதத்தில் 1 1/2 கோடி கடன் பாக்கி பிரச்னையில் நடிகை புவனேஸ்வரி மீது வழக்குபதிவு- ஐகோர்ட் உத்தரவு, சேவை வரிக்கு ஐகோர்ட் இடைக்கால தடை, தானே புயல் நிவாரணப்போராட்டம் - தங்கர் பச்சான் கைது, விஜய்யின் நண்பன் படத்திற்கு இந்திய ஜனநாயக கட்சி எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம்.

* 2012-ல் பிப்ரவரி மாதம் நடிகர் கமல் முதல்வர் ஜெயலலிதாவிடம் ரூ.15 லட்சம் நிவாரணம், கேப்டன் விஜயகாந்தின் நண்பரும், பிரபல படஅதிபருமான இப்ராஹிம் ராவுத்தர் அதிமுக.வில் இணைந்தது, நயன்தாரா தானே புயல் நிவாரணமாக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியது. மத்திய அரசின் சேவை வரிவிதிப்புக்கு இந்தியா முழுவதும் திரையுலகினர் ஆர்ப்பாட்டம், தொழிலதிபர் ஆஞ்சநேயன் மீது நடிகை அனன்யாவின் தந்தை திருமண புகார் செய்தது உள்ளிட்டவை பிப்ரவரி ஹைலைட்!

* மார்ச் 2012-ல் தமி்ழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் மோதல், நடிகை அல்போன்சாவின் காதலர் வின‌ோத்குமார் தற்கொலை உள்ளிட்டவைகள் மார்ச் மாதத்தில் நடந்‌தவை.

* ஏப்ரல் 2012-ல் திரைப்பட தொழிலாளர்கள் - தயாரிப்பாளர்கள் பேச்சு, உயர்மட்டக்குழு அமைப்பு! பிலிம் சேம்பர் புதிய கட்டடம் முதல்வர் திறப்பு!

* மே - 2012-ல் காஞ்சி சங்கராச்சாரியர் மீது நித்தியானந்தா புகழ் நடிகை ரஞ்சிதா வழக்கு, நடிகர் சங்கதலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு!

ஜூன் - 2012-ல் பெப்சி தொழிலாளர் அமைப்பில் இயக்குனர் அமீர் தலைவரானார்.

ஜூலை - 2012-ல் நடிகர் சங்க இடக்குத்தகை தொடர்பாக அதன் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோருக்கு கோர்ட்ட நோட்டீஸ்! நடிகர் மகத் - மோகன் பாபுவின் வாரிசு மனோஜ் மஞ்சு மது விருந்தில் மோதல், நடிகை ஊர்வசியின் சகோதரியும், காமெடி நடிகையுமான கல்பனா விவாகரத்து மனு தாக்கல்!

* ஆகஸ்ட் - 2012-ல் தாண்டவம் தடை தள்ளுபடி! மோசடி வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது, நடிகை சுஜிபாலா தற்கொலை முய‌ற்சி!

* செப்டம்பர் - 2012-ல் பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் மீது பணமோசடி வழக்கு மற்றும் கைது, வனயுத்தம் படத்தை வீரப்பன் மனைவி முத்துலெட்சுமிக்கு காட்ட கோர்ட் உத்தரவு!

* அக்டோபர் - 2012-ல் சம்பளபாக்கி திருத்தணி பட அதிபர் மீது நடிகர் ராஜ்கிரண் வழக்கு, நடிகர் கமல் தலைமையில் சென்னையில் 3நாட்கள் பிக்கி மாநாடு, நடிகர் சங்கத்திற்கு எதிராக சிவில் வழக்கு தொடர கோர்ட் அனுமதி.

* நவம்பர் - 2012-ல் மனஅழுத்த நோய் காரணமாக நடிகை பானுப்ரியா மருத்துவமனையில் அனுமதி, துப்பாக்கி பட விவகாரம், விஜய் வீட்டு முன்பு முஸ்லீம் அமைப்புகள் போராட்டம், துப்பாக்கி - இஸ்லாமிய சர்ச்சை காட்சிகள் நீக்கம், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டில் 50 பவுன் நகை திருட்டு - வேலைக்காரி கைது, நடிகை ஸ்வேதா மேனன் பிரசவ காட்சி படப்பிடிப்பு - ஒளிப்பதிவாளர், இயக்குனர் மீது வழக்கு!

* டிசம்பர் - 2012-ல் விஸ்வரூபம் இசை வெளியீட்டு விழா மதுரை, கோவை, சென்னை நகரங்களில் ஒரே நாளில் கமல் ஆஜர், விஸ்வரூபம் டி.டி.எச்.-ல் திரையிட கமல் முடிவு, அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்புகள். சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.50 லட்சம் நிதியுதவி, சென்னை திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப், பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் கணவர் தற்கொலை, விஸ்வரூபம் டி.டி.எச்., விவகாரம் கமல்-உரிமைக்குரல், உறுதிக்குரல்!

இப்படி 2012ம் ஆண்டின் தமிழ்த்திரையுலகம் வம்பு வழக்குகளிலும், தடை-தாமதங்களிலும், இறப்புகள்-இழப்புகளிலும் சிக்கி தவித்து இருந்தாலும், சாதனைகளுக்கும், மகிழ்ச்சிக்கும் குறை ஏதும் இல்லாமல் முடிந்தது. 2013-ம் ஆண்டில் தமிழ்த்திரையுலகில் சாதனைகளும், சந்தோஷங்களும் மட்டுமே நிரம்பி இருக்க தமிழ் சினிமா ரசிகர்களுடன் வாழ்த்தும் தினமலர்.

No comments:

Post a Comment