Wednesday 19 December 2012

ஆம்புலன்ஸ் உருவான வரலாறு!! ஒரு சிறப்பு பார்வை...


உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ் இன்று  முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்துகள் என “மினி மொபைல் ஆஸ்பத்திரி’யாக வலம் வருகிறது.

இந்த ஆம்புலன்ஸ் உருவான வரலாறு 17ம் நூற்றாண்டில் துவங்குகிறது. அந்த காலக்கட்டத்தில் காயம்பட்ட போர் வீரர்களை சிகிச்சை மையத்திற்கு எடுத்துச் செல்ல, இரு மூங்கில் கம்புகளில் இணைக்கப்பட்ட துணியை (ஸ்டிரெச்சர்) பயன்படுத்தினர். இதுதான் ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாகுவதற்கான கரு எனலாம்.

நெப்போலியன் படைப்பிரிவில் பணியாற்றிய தலைமை டாக்டர் டொமினிக் ஜின்லாரேதான் ஆம்புலன்ஸ் என்ற வார்த்தையைக் கண்டுபிடித்தார். (பயன்படுத்தினார்) இது பிரெஞ்சு வார்த்தை, ‘ஹோபிடல் ஆம்புலன்ட்’ என்னும் வார்த்தைக்கு ‘நகரும் மருத்துவமனை’ என்பது பொருள். முதல் ஆம்புலன்ஸ் வண்டி 200 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

முதலில் குதிரை பூட்டிய வண்டியில் இருந்த ஆம்புலனஸ் இரயில்கள், கப்பல்கள், விமானங்கள் ஆம்புலன்ஸில் நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, பலர் இறக்க நேரிட்டதால் ஆம்புலன்ஸிலேயே ஆக்சிஜன், ஸ்ட்ரெச்சர், மருந்துகள் முக்கியமானதை கொண்ட குட்டி மருத்துவமனை போல் ஆக்கப்பட்டது. மோட்டார் வாகனங்களில் அமைக்கப்பட்ட உலகின் முதல் ஆம்புலன்ஸ் நியுயார்க் நகரில் உள்ள பெவில்யூ மருத்துவமனையில் 1869 ஆம் ஆண்டில் போது மக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. உலகின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் இரண்டாம் உலகப் போரில் செயல்பட்டன.

1970க்குப் பிறகு ஆம்புலன்ஸிற்காகவே பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் அமர்த்தப்பட்டனர். ஆபத்தில் உள்ள நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை ஆம்புலன்ஸிலேயே அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஆம்புலன்ஸ் வேன் பிரிட்டனில் உள்ளது. 59அடி நீளமுள்ள 44 படுக்கை வசதி கொண்ட ஆம்புலன்ஸ் அமெரிக்காவில் உள்ளது.

பின், குதிரை வண்டி, மோட்டார் வாகன வண்டி ஆம்புலன்ஸ் என பல பரிமாணங்களை பெற்றன. கி.பி. 18ம் நூற்றாண்டில் தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. மகாத்மா காந்தி கூட, தென்னாப்பிரிக்காவில் “இந்தியன் ஆம்புலன்ஸ் கிராப்ஸ்’ என்ற நிறுவனத்தை துவக்கி, ஸ்டிரெச்சர் தூக்கும் ஊழியராகவும் இருந்தார். இந்தியாவில் முதன்முறையாக 1914ல் மும்பையில் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, பணம் கொடுத்து அழைத்துச் செல்லும் வாகனமாக இருந்த ஆம்புலன்ஸ், 2005 ஆகஸ்ட்டில் “108′ என்ற பெயரில், இலவச ஆம்புலன்ஸ் திட்டமாக, ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 411 வாகனங்களைப் பல ஊர்களில் நிறுத்தி வைத்து, எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், மாரடைப்பு, தீக்காயங்கள் மற்றும் நோய்களுக்கு அவசர உதவிகளைச் செய்து, பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்று காப்பாற்றும் பணியைச் செய்து வருகிறது.இன்று தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 3000 ஆம்புலன்ஸ்கள் இலவச சேவையில் ஈடுபட்டுள்ளன. அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி மையம் இதை நிர்வகிக்கிறது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப, “108′ ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்படுகிறது. நீர்நிலைகள் அதிகமுள்ள அசாமில் படகையே ஆம்புலன்சாக மாற்றி உள்ளனர். மலைப்பகுதியான உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. “108′ஐ குறிக்கும் வகையில், ஆண்டின் முதல் மாதமான இந்த ஜனவரியில், 8 ம் தேதியான இன்று ஆம்புலன்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

நானும் எனது நண்பரும் கடைத்தெருவிற்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஆம்புலன்ஸ் வேன் ஓன்று சைரன் ஒலி அலறல் சப்தத்துடன் வேகமாக கடந்து சென்றது. அந்த ஒலியைக் கேட்டவுடன் அனைத்து தரப்பு மக்களும் ஒதுங்கி வழிவிட்டனர். நானும் அந்த வினாடியே ஒதுங்கி நின்று ஒன்றை நினைத்து முனுமுனுத்தேன். இந்த செயலை பார்த்த என் நண்பர் ஆச்சரியத்துடன் 'எதற்க்காக என்னவோ மனதில் முனுமுனுத்தாயே காரணம் என்ன ?' என்று கேட்டான். 

அது ஒன்றுமில்லை, இப்போது கடந்து சென்ற ஆம்புலன்ஸ் வேனில் உள்ளவர்கள் யாரோ? எவரோ? தெரியாது. ஆனால் ஆபத்தான அவசர சிகிச்சைக்காக யாரையோ கொண்டு செல்கின்றனர். அவர் நல்லபடியாக குணமடைய வேண்டுமென்று சில வினாடிகள் அவருக்காக பிரார்த்தனை செய்தேன்.  மக்கள் இந்த ஒலியைக் கேட்டவுடன் எவ்வாறு ஒதுங்கி வழி விடுகின்றனரோஅதேபோல் நாம் பிரார்த்தனை செய்வது நல்லது தானே!' என்றேன்.  இதைக்கேட்ட என் நண்பர் 'இந்த காரணம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. இப்போது முதல் நாம் இதை பின்பற்றபோகிறேன்' என்று கூறும்போது நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். 

வழிநெடுகிலும் எத்தனையோ பேர்களை ஆம்புலன்ஸ் கடந்து செல்கின்றது. அவர்களெல்லாம் பிரார்த்தனை செய்யும்போது பலன் நிச்சயம் கிடைக்கும்.


ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் பணியமர்த்தப்படுவர். 12 மணிநேரம் பகல், இரவு பணியாக வழங்கப்படும்.

 ஓட்டுநர்: ஓட்டுநர் பணியிடத்துக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் கனரக வாகன பழகுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது முதல் 35 வயதுடையவராக இருத்தல் வேண்டும். 5 ஆண்டு அனுபவம் அவசியம். எழுத்துத் தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு, மனித வளத் துறை நேர்காணல், கண் பார்வை, சாலை விதிகளுக்கான தேர்வு அடிப்படையில் ஓட்டுநர் பணியிடம் பூர்த்தி செய்யப்படும். மாத ஊதியமாக ரூ.6,800 வழங்கப்படும்.

 மருத்துவ உதவியாளர்: மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு பிஎஸ்சி நர்சிங், விலங்கியல், உயிரியல், நுண்ணுயிரியல், தாவரவியல், உயிர் வேதியியல் உள்ளிட்ட அறிவியல் தொடர்பான பட்டப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இல்லையெனில், 12-ஆம் வகுப்புக்கு பிறகு மருத்துவம் சார்ந்த கல்வியில் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். 20 முதல் 30 வயதுடையவராக இருக்க வேண்டும்.

 மருத்துவ உதவியாளர் பயிற்சி: மருத்துவக் கல்லூரியில் டிஎம்இ பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். ஆண், பெண் இரு பாலரும் இந்தப் பணிகளில் சேரலாம்.

 எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம், மனித வளத் துறையின் நேர்முகம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 45 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் ஊக்கத் தொகையும், உணவுப்படி, தங்குமிடம் இலவசமாக அளிக்கப்படும். மருத்துவ உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.8100 ஊதியமாக வழங்கப்படும். 

 மருத்துவ உதவியாளர் பயிற்சி பணியிடத்துக்கு ஓராண்டுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 7708050108, 7708055108, 9677120108 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஆக்கம் :  மு. அஜ்மல் கான் 

No comments:

Post a Comment