Monday 12 November 2012

ரம்புத்தான் பழம்!! ஒரு பார்வை ....

ரம்புட்டானின் தாய்நாடு மலேசியா எனக் கருதப்படுகிறது.ஆரம்ப காலங்களில் தெற்காசியாவின் கிழக்கு வலய நாடுகளில் பிரதானமாக பயிர்ச்செய்யப்பட்ட இது தற்போது மத்திய அமெரிக்காவிலும், கப்ரியன் தீவுகளிலும் பயிர்ச்செய்யப்படுகிறது.எலகில் பிரதானமாக ரம்புட்டான உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடு தாய்லாந்து ஆகும்.
ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. ரம்புட்டான் பழம் கிழக்காசியா (சீனா ) மற்றும்தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது. ரம்புத்தான் ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை,அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது.

இலங்கையில் பயிர்ச்செய்யப்படும் பழங்களிடையே ரம்புட்டான் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது.

ஒரு ரம்புத்தான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புத்தான் பழம் முழுமையாக பழுப்பதற்கு 90 முதல் 120 வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்றார்ப் போல ஒரு ரம்புத்தான் மரம் ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான கைகளைத் தரும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் . எல்லோருக்கும் பிடித்த பழம் . ஆடி மாதத்தில் இந்த பழ சீசன் . அந்த நேரத்தில் மட்டும் குவியலாக குவிந்து கிடக்கும் எல்லா இடமும் இந்த பழம் . ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . . உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும் . மிகவும் நன்றாக இருக்கும்


ரம்புத்தான் பழம் இது ஒரு வெப்ப மண்டல பழம் தென்கிழக்கு ஆசிய தீவுகளில் பிறப்பிடமாக கொண்ட, பழங்குடியினருக்கு சொந்தமான ஒரு வெப்ப மண்டல தாவரம் ஆகும். ரம்புத்தான் என்ற வார்த்தைக்கு தோல் போன்ற முடி என்று பொருள்.

   இது ஆப்பிரிக்கா, கம்போடியா, கரீபியன், மத்திய அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல பகுதிகளில் ஏராளமாக உள்ளன.  தமிழ்நாட்டில் கொடைக் கானல் பகுதியில் விளைகிறது.


 இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்து கின்றனர். இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

    ரம்புத்தான் பழத்தின் புறத்தோல் இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் மேற்புறத்தில் மென்மையான முடிகள் போன்று காணப்படும். இதனை பாதியாக மேல் தோலை நீக்கினால் சதைப்பகுதி காணப்படும். இதுவே சாப்பிடும் பகுதியாகும். இதனுள் விதை சற்று நீள்வட்ட வடிவில் காணப்படும். ரம்புத்தான் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடியது.



பயன்கள் :
    இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும். ரம்புத்தான்  பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து - 82.3 கிராம், புரதம் - 0.46 கிராம், கார்போஹைட்ரேட் - 16.02 கிராம், சர்க்கரை - 2.9 கிராம், நார்சத்து - 0.24 கிராம், கால்சியம் - 10.6 மி.கிராம், பாஸ்பரஸ் - 12.9 மி.கிராம், 
அஸ்கார்பிக் அமிலம் - 30 மி.கிராம் உள்ளது.






சிறுநீர் பெருக

சிறுநீர் நன்கு பிரிந்து வெளியேறினால்தான் இரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்கள் வெளியேறும். சிறுநீர் சரிவர பிரியாமல் இருந்தால் சிறுநீரகங்களில் தேவையற்ற பொருட்கள் படிந்து அடைப்பை ஏற்படுத்தும். மேலும் நீர் எரிச்சல் உண்டாகும். இவை நீங்கி சிறுநீர் பெருக ரம்புத்தான் பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது.

உடல் சூடு தணிய

உடல் சூடாக இருந்தாலே பித்தம் அதிகரித்து நோய்களை உண்டாக்கும். இந்த ரம்புத்தான் பழம் உடல் சூட்டைத் தணிக்க வல்லது. 

இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

வியர்வை வெளியேற

பல கோடி துளைகளைக் கொண்ட சருமத்தில் வியர்வை வெளியேறாமல் இருந்தால் உடலில் பல தொற்று நோய்கள் ஏற்படும். இதற்கு ரம்புத்தான் பழம்சிறந்த மருந்து. இந்த வியர்வை அடைப்பு தொல்லை உள்ளவர்கள் ரம்புத்தான் பழம் அடிக்கடி உண்டுவந்தால் வியர்வை நன்கு வெளியேறும்.

வயிற்றுப் போக்கு நீங்க

வயிற்றுப் போக்கு அதிகமாக இருக்கும் நேரத்தில் ரம்புத்தான் பழத்தை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும்.

தாது விருத்திக்கு

தாதுவை விருத்தி செய்யும் தன்மை ரம்புத்தானுக்கு உண்டு. நீர்த்துப்போன விந்துவை கெட்டிப்படுத்தும். நரம்புகளைப் பலப்படுத்தும்.

   ரம்புத்தான்  வளர்ச்சி நீர் கிடைப்பதை பொறுத்து புதிய கிளைகள் மற்றும் இலைகள் உருவாக்கும். திராட்சை போல சிறிது ஒன்றாக குழுவாக இருக்கும். வளர்ச்சி நிலையை பொறுத்து சதை, வெவ்வேறு சுவையை கொண்டிருக்கும், ரம்புத்தான் அதிக அமில எனினும், லிச்சி ஒத்த ஒரு, இனிப்பு, புளிப்பு மற்றும் மணம் சுவை, கொண்டிருக்கிறது.    இப்பழத்தை மதிய வேளையில் சாப்பிட்டு வருவது நல்லது. இரவு நேரங்களில் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்கும். இதனால் இரவு நேரங்களில் இப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

முடிவுரை :

ழங்கள் மனிதனுக்கு நேரடியாக சத்துக்களை கொடுக்கக்கூடியது. இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்து கின்றனர். இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் .

ஆக்கம் : மு.அஜ்மல் கான். 

No comments:

Post a Comment