Wednesday 31 October 2012

402 வது மைசூர் தசரா விழா!! ஒரு பார்வை...






உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவில் லட்சக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்க யானைகள் ஊர்வலம், தீப்பந்த ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. 
அரசு விழாவாக நடத்தப்படும் தசரா விழாவையொட்டி, 10 நாள்களாக மைசூரில் பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
யானை ஊர்வலம்: அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த தங்க அம்பாரியைச் சுமந்து நின்றிருந்த அர்ஜுனா தலைமையிலான யானை ஊர்வலத்தை மலர்தூவி பூஜை செய்தபின்னர், காவிரி, சைத்ரா உள்ளிட்ட 9 யானைகள் முன்னால் செல்ல, யானைப் படை, 116 கலைக் குழுக்கள், 36 வாகனங்கள் பின்னால் அணிவகுத்தன. ஊர்வலம் அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னி மண்டபம் நோக்கிப் புறப்பட்டது.
மூன்று ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற பூஜாகுனிதா, தொல்லுகுனிதா, கோலாட்டம், கம்சாலே, கருடகொம்பே, நகரி, கேலுகுதிரே, லம்பானி நடனம் உள்ளிட்ட கிராமிய, கலாசார நடனங்கள், ஆடல் பாடல்கள் மக்களை உற்சாகப்படுத்தின.
மக்கள் வெள்ளம்: தசரா விழாவின் அங்கமாக நடைபெற்ற யானைகள் ஊர்வலத்தைக் காண இந்தியா தவிர, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரண்டிருந்தனர். சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து யானைகள் ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். இடம் கிடைக்காதவர்கள் மரக்கிளைகள், கம்பங்கள், உயரமான கட்டடங்கள், பஸ்கள் மீது நின்று பார்த்து மகிழ்ந்தனர்.
தீப்பந்த ஊர்வலம்: பன்னி மண்டபத்தை அடைந்த யானைகள் ஊர்வலத்தைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீஸôர் திணறினர். பன்னி மண்டபத்தில் தசரா விழாவின் நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் தீப்பந்த  ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

அரண்மனையானது மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை மக்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.







வீடியோவை பார்க்க..




தொகுப்பு: மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment