Sunday 16 September 2012

இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரித்த Innocense of Muslim படத்தை பற்றிய தகவல்கள்.....

லகெங்கிலும் வாழும் 200 கோடி முஸ்லிம்கள் தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் ஸல் அவர்களை தவறாக சித்தரித்ததோடு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அதற்கு வாக்காலத்து வாங்கிய கேடுகெட்ட அமெரிக்காவை கண்டித்து அனைத்து நாடுகளிலும்  ஆர்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அம
ெரிக்கத் தூதரங்கள் மீது பயங்கர தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒரு அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பல அமெரிக்கர்கள் படுகாயமடைந்தனர்.


இதற்கான கரணம் என்ன ?
                                         அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் மிக வேகமாக பரவும் மார்க்கம் 
இஸ்லாம்! !! 


அமெரிக்காவில் தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு அமெரிக்க முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% அமெரிக்க முஸ்லிம்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.

இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அமெரிக்க முஸ்லிம்களில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் கடந்த பத்து வருடங்களில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கையானது வியக்கத்தக்கவகையில் அதிகரித்துள்ளது. பள்ளிவாசல்களை அமைப்பதற்கான பொதுத்தடை இருந்தபோதிலும், பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2000ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் அமெரிக்காவில் 1209 பள்ளிவாசல்கள் மாத்திரமே காணப்பட்டது.எனினும் தற்போது அமெரிக்காவில் 2106பள்ளிவாசல்கள் காணப்படுகின்றதாக கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது. 2000ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 74சதவீத அதிகரிப்பாகும்;.அதிகமான முஸ்லிம்கள் புறநகர் வாழ்க்கையைத் தழுவிவாழ்வதாகவும் இது காட்டுகின்றது.

நகர் பகுதிகளிலேயே பள்ளிவாசல்களின் எண்ணிக்கை கூடியளவில் அதிகரித்துள்ளது.2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது புறநகர்பகுதிகளில் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை 16 சதவீதத்திலிருந்து 28 சதவீதம்வரை அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் அதிபட்சமாக 257 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக கலிபோர்னியாவில் ஏறத்தாள 256 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன.

பள்ளிவாசல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதானது அமெரிக்காவில் இஸ்லாம் மிகவேகமாக வளாந்துவரும் சமயமாக விளங்குகின்றது என ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போது இருக்கும் இஸ்லாமிய எண்ணிக்கையை பார்க்கும் போது 2020 ல் அமெரிக்காவை இஸ்லாம் ஆளும்  என்ற பயம் அதிகரித்தது. ஆகவே இஸ்லாத்தையும், உத்தம தலைவரையும் 
 கொச்சை படுத்தி  Innocense of Muslim  என்ற  குறும் படத்தை  கடந்த ஜூன் மதம் வெளியிட்டது.

  இதொ  Innocense of Muslim   படத்தை பற்றிய தகவல்கள் நாம் தெரிந்து கொள்வதர்க்காக ...


இப்படத்தின் தயாரிப்பாளன் sam bacile என்ற யூதன் , 100  யூத தர்களிடம் இருந்து நன்கொடையை பெற்று இப்படம் 5 $ மில்லியன் அமெரிக்கால் டாலர் செலவில்   எடுக்க பட்டுள்ளது .  இப்படத்தின் டைரக்டர் kevin என்ற இன்சூரன்ஸ் சேல்ஸ் man . இவன் அவ்வபோது இஸ்லாத்தை சீண்டி பார்பதே இவனுடைய வேலை. இவன் தலைமை தாங்கி நடத்திய செய்தவைகளுள்  முக்கியமானது " Hunters of Islam - vietnaam ,   penis-driven religion என்று இஸ்லாத்திற்கு எதிராக கருத்துகளை உமிழ்ந்த கயவன் தான் இவன் . இப்பொழுது usa வின்  பாதுகாப்பில் இருக்கிறான். இவனிடம்   லிபிய கலவரத்தை பற்றி கேட்கும் போது சொன்ன பதில் ....இது நடக்கும் என்று எதிர் பார்த்து தான் செய்தேன் என்கிறான். 

Innocense of muslim படம் ஜூன் மாதம் இன்டர்நெட்டில் upload ஆங்கிலத்தில் செயய்ய்பாட்டது. இதன்  அரபி மொழி பெயர்ப்பு தான் கடந்த weekல் upload செய்யப்பட்டு அதன் காரணமாக லிபியாவில் முதல் போராட்டம் வெடித்தது. 

படத்தின் டிரைலரை பார்க்கும் கொஞ்சம் நஞ்சம் ஈமான் உள்ள எந்த முஸ்லிமாலும் சகித்து கொள்ள முடியாது. அந்த அளவிர்க்கு கொச்சை படுத்தி உள்ளான். அதில் வரும் ஒரு காட்சியில் 120 வயது மூதாட்டி வந்து, என்னுடைய வயதில் யாரும் கொல்லபட்டு பார்ததில்லை. ஆனால் முஹம்மத் வந்தார், எல்லோரையும் கொள்கிறார். பெண்களை சிறுவர்களை கூட விட்டு வைப்பதில்லை. பெண்களை யூஸ் பண்ணி கொள்கிறார்கள், இது கடவுளின் பெயரால் செய்கிறார். என்று சொல்ல....அந்த பெண்மணியின் கால்களை ஒட்டகதில் கட்டி எதிர் எதிர் ஒட்டகத்தை ஓட விட, அந்த பெண்மணியின் உடல் இறுகூறாக பிளக்க படுவது போலே காட்சி.... சுமையா ரலி அவர்களுக்கு காஃபிர்கள் கொடுத்த கொடுமையை முஸ்லீம்கள் செய்வதாக இட்டு கட்டி இருக்கிறான். இந்த மிருகம் .

முஹம்மது என்ற கேரக்டர் குடித்து கொண்டு இருப்பது போலவும், பெண்களோடு எப்பொழுது இருப்பது போலவும் மிக மிக கேவலமாக கொச்சை படுத்த பட்டுள்ளது.  ஆயிஷா என்ற கேரக்டர் மடியில் முஹம்மது என்ற கேரக்டர் படுத்து இருப்பது போல....கேவலமான முறையில் கொச்சை படுத்தி உள்ளன்.

 MAN + X  = islamiya தீவிரவாதம்   , x -MAN = man என்று ஒரு formula  வை சொல்லி,  X என்றால் யார் என்ற கேள்வியை கேட்டு  .....முஸ்லிம்களை விமர்சிக்கிறான். 

அபூபக்கர் என்ற கேரக்டர் தானுடைய மனைவியிடம் முஹம்மத் என்ற கேரக்டருக்கு தன் மகளை திருமண செய்வது சம்பந்தாமாக ஆலோசனை சொல்ல, மனைவி கேட்கிறாள் முஹம்மதுக்கு 55 வயது , நம் மகளுக்கு 13 வயது சரி வராது என்ற சொல்ல, கணவர் இல்லை முஹம்மதுக்கு 53 வயது தான் என்று  அந்த விவாதம் போகிறது. 


இப்படத்தின் காட்சிகள் தாங்கிய அணைத்து இனைய தளங்களையும் youtube உள்பட afganisthan தடை செய்துள்ளது.  அந்த வரிசையில் 

  பஹ்ரைன் இப்படதை வெளியுடும் அத்துணை இணைய தளங்களையும் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. சோசியல் மீடியா வான பேஸ்புக் மற்றும் இதர வழி மூலம் இதை பரப்ப வேண்டாம் என்றும், குறிப்பாக பிள்ளைகள் பார்க்க கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளது.

GCC -கல்ஃப் coopearation counsil இப்படத்தை வன்மையாக கண்டிதுள்ளது  சௌதி வாயை திறந்து தன்னுடைய கண்டனத்தை மிக மிக நளினமாக செய்துள்ளது. அதாவது பொருபில்லாத குழுவால் usa வில் எடுக்கபட்ட இந்த படதை பற்றி கண்டிக்கிறோம். என்று அந்த கண்டனம் இருக்கிறது.  


 பிறர் மீது  சபிப்பவர்களை  பற்றி இஸ்லாம்  கூறுவது...


ஒரு மூஃமினை சபிப்பது அவனை கொலை செய்வதைப் போன்றதாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர்: ஆபூஜைத் (ரலி) புகாரி, முஸ்லிம்

அதிகம் சபிப்பவர்கள் ‘மறுமை நாளில்” பரிந்துரை செய்பவர்களாகவோ ஷஹீத்களாகவோ இருக்கமாட்டார்கள்” என்று நபி  (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ: சபிப்பவனாகவோ: கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ


இதை பதிவு செய்வதற்கு காரணம் நம்மவர்களுக்கு இப்படத்தை பற்றி கொஞ்சம் கூட தெரியவில்லை. ஏதோ நடக்கிறது என்ற ரீதியில் இருக்கிறோம்... 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment