Sunday 2 September 2012

காய்கறிகளை எப்படி,என்னென்ன என்ன பார்த்து வாங்க வேண்டும்?-ஒரு தவகல்...



என்னென்ன காய்கறி என்ன பார்த்து வாங்க வேண்டும்?
1. வாழை தண்டு : பொறியல், சூப் – ஆகியவை செய்யலாம். மேல் பகுதி நார் அதிகம் இருக்காது, உள்ளிருக்கும் தண்டு பகுதி சிறுத்து இருப்பதாக பார்த்து வாங்கினால் நல்லது
2. வெள்ளை வெங்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : நல்ல முருங்கை முறுக்கினால் வளைந்து கொடுக்கும். முற்றவில்லை என்று அர்த்தம்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு : உறுதியான கிழங்கு இனிக்கும் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் மெதுவாக சென்றால் நல்லது என்று அர்த்தம்
6.தக்காளி : நன்றாக சிவந்த தக்காளி கூட வாங்கலாம். பெங்களூர் தக்காளி ஒரு வாரம் அப்படியே இருக்கும். கெடாது.


7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங்கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த்தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறினாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிகிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய் : தோல் soft-ஆக இருப்பது போல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ்  பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக்காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையான நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளிர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌ சௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கினால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31.  பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்..
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment