Monday 21 May 2012

இன்டர்வியு எடுப்பது எப்படி?- ஒரு பார்வை...


இன்டர்வியு எடுப்பது எப்படி? என்பதுதான் இன்று பெரும் பாலான நிறுவனங்களில் HR எனப்படும்.
பணிக்கு ஆட்களை தேர்வு செய்பவர்களின்  கேள்வியாக உள்ளது.
இன்டர்வியுவில் தேர்வு ஆவது மிகவும் கடினம் என்பதை விட,  ஒரு குறிப்பிட்ட பணிக்கு தகுதி வாய்ந்த ஆட்களை தேர்வு செய்வது என்பது கடினத்திலும் கடினம் என்பதே உண்மை.
ஏனெனில் தேர்வு செய்யப் படும் ஆட்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

சாதாரணமாக பலராலும் பின்பற்றப்படும் தேர்வு முறை , பல நபர்களை அழைத்து, அவர்களிடம் மணிக்கணக் கில் பேசி பின்னர் அவர்கள் இந்த வேலைக்கு தகுதி வாய்ந்தவரா? என்பதை சோதிக்க வேண் டும். இவ்வாறு தேர்வு செய்யும்போது, சிறந்த திறமை வாய்ந்த சில

நபர்களைகூட அவர்களிடம் உள்ள தேவையில்லாத வேறு சில காரணங்களுக்காக,  திறமை களை சரியாக சோதிக்காமல் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே ஆட்களை தேர்வு செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய சில தகவல்களைகல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)தெரிவிக்க விரும்புகிறது.
விண்ணப்பங்களை தேர்வு செய்தல்:
ஒரு வேலைக்கான அறிவிப்பை வெளியிடும்போது, பலர் அந்த வாய்ப்புக்கு விண்ணப்பிப்பார்கள். அனைவரையும் தேர்வுக்கு

அழைக்காமல், அவர்களின் விண்ணப்பத்தை ஆராய்ந்து, தகுதி வாய்ந்த நபர்களை பிரி த்து எடுக்க வேண்டும். இத னால், தேவையில்லாத நபர்க ளை தேர்வுக்கு அழைத்து அவர் களின் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்க வேண் டாம். சில விண்ணப்பங்கள் உங்களுக்கு குழப்பமாக இருந் தால், கால் செய்து அல்லது ஈமெயில் மூலம் உங்கள் சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு சில கேள்விகள் கேட்பதன் மூலம் அவர்களின் தகுதியை அறியலாம். சரி, வரவழைத்து முடிவு செய்து கொள்ளலாம் என நினைத்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

புலனாய்வு (INTELLIGENCE)  மற்றும் அணுகுமுறை (ATTITUDE):

தேர்வு செய்யும் நேரத்தில் கடின மான ஒரு கட்டத்தில் அவர் களுடைய திறன் எப்படி உள் ளது என்பதை ஆராய வேண் டும். அவர்கள் குறிப்பிட்ட செய லுக்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசம், யோசிக்கும் திறன் ஆகியவற்றை சோதிக்க வேண்டும்.
தேர்வு முறையை விசாரணை போல இல்லாமல் கலந்துரையாடல் போல இருக்க வேண்டும். உதாரணமாக சிறிய நகைச்சுவை போன்றவைகள் உங்களுக்கு உற் சாகத்தை ஏற்படுத்தும். தேர்விற்கு வருபவருக்கும் மன அமைதி 

ஏற்படும். நடைமுறை வாழ்க் கையில் உள்ள தினசரி நிக ழ்வுகள் (உதாரணமாக, காலை உணவு என்ன சாப் பிட்டீர்கள், விடுமுறையை எவ்வாறு களித்தீர்கள்) போ ன்ற வற்றையும் சேர்த்து கொள்ளுங்கள்.
கேள்வி கேட்க வாய்ப்பு:

தேர்வுக்கு வந்திருப்பவருக்கு கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். சிலர் நிறுவனத்தின் தரம், தங்களுடைய வேலை பற்றிய

தகவல்களை தெரிந்துகொள்ள  விரும்ப லாம். உண்மை யான ஆர்வ முடையவர் சில தகவல்களையாவது அறிந்து கொ ள்ள முயல்வார். எந்த கேள்விகளும் இல் லை? என்று பதிலளிப்பவர், பெரும் பாலும் தகுதி வாய்ந்தவராக இருக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு சில தகவல்களை பரிமாறி உள்ளோம்… உங்களிடம் நிறைய ஐடியாக்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும் .

சரியான ஆட்களை தேர்வு செய் யுங்கள், நிறுவனத்தின் வளர்ச் சிக்கு என்றும் துணையாக  இருங்கள்.

நன்றி : கல்விகலஞ்சியம் 

No comments:

Post a Comment