Wednesday 2 May 2012

பாஸ்போர்ட் கிடைக்க புதிய நடைமுறை அமலாகிறது...


பாஸ்போர்ட்

* படிப்பு, வேலை, விடுமுறை என்று எந்த காரணத்துக்காக வெளிநாடு செல்ல நேரிட்டாலும், பாஸ்போர்ட் அவசியம். அதற்கு எங்கு, எப்படி விண்ணப்பிப்பது...?
* தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய நான்கு இடங்களில் பாஸ் போர்ட் அலுவலகங்கள் உள்ளன. நீங்கள் வசிக்கும் பகுதி, எந்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் வருகிறது என்பதைக் கண்டறிந்து, உரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


* ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதைவிட, தபால் மூலமாக விண்ணப்பிப்பது சிறந்தது. விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தும் பிழையில்லாமல் இருந்தால், ஒரே மாதத்தில் வீடு தேடி பாஸ்போர்ட் வந்துவிடும்.


 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், இருப்பிடச் சான்றினையும் இணைக்க வேண்டும். இதற்காக ரேஷன் கார்டு, குடிநீர், மின்சார கட்டண ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி ரசீது உள்ளிட்ட குறிப்பிட்ட சில ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினுடைய நகல்கள் இரண்டை இணைக்க வேண்டும்.


 ரேஷன் கார்டை மட்டும் முகவரிச் சான்றாக இணைப்பவர்கள், கூடவே, இருப்பிடச் சான்று தொடர்பான வேறு ஒரு ஆவணத்தையும் இணைக்க வேண்டும்.


 பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லையென்றால், கடைசியாக பயின்ற கல்வி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பள்ளி/கல்லூரி மாற்றுச் சான்றிதழ், அல்லது குற்றவியல் நடுவர் அல்லது சான்றுறுதி ஆணையர் முன்பு எடுக்கப்பட்ட உறுதி ஆவணம் என்று ஏதாவது ஒரு சான்றிதழைப் பயன்படுத்தலாம்.


* பெயர் மாற்றம் செய்து கொண்டவர் என்றால், விண்ணப்பப் படிவத்துடன் உள்ள 'அனெக்ஸர் - இ'(Annexure-E)படிவத்தின்படி தயாரிக்கப்பட்ட உறுதி ஆவணத்துடன், தினசரி செய்தித்தாள் இரண்டில் அது தொடர்பாக கொடுக்கப்பட்ட விளம்பரத்தின் நகலையும் இணைக்க வேண்டும். சமர்ப்பிக்கும்போது அனைத்து ஒரிஜினல் ஆவணங்களையும் கையோடு எடுத்துச் செல்வது நல்லது. தேவைப்பட்டால், உரிய அலுவலர்களிடம் காண்பிக்க வேண்டி இருக்கும். அதேபோல, உங்கள் விண்ணப்பம் தொடர்பான விசாரணைக்கு நீங்கள் அழைக்கப்படும் போது, ஒரிஜினல் ஆவணங்களை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.


'தட்கல்' எனப்படும் உடனடி முறையிலும் பாஸ் போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென குறிப்பிடப்பட்டுள்ள 14 ஆவணங்களில் ஏதேனும் மூன்று ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். அதில் ஏதேனும் ஒரு ஆவணமானது புகைப்பட அடையாளத்துடன் கூடியதாக இருக்க வேண்டும். இத்துடன், சான்றுறுதி (Verification certificate)ஆவணமும் இணைக்கப்பட வேண்டும்.


 வாக்காளர் அடையாள அட்டை, மத்திய மாநில, பொதுத்துறை சார்ந்த நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை, உணவுப்பொருள் வழங்கல் அட்டை, வருமான வரி அடையாள அட்டை, வங்கி, தபால் அலுவலக கணக்கு புத்தகம், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பதினான்கு விதமான ஆவணங்கள் இதற்கென ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.


* ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பவர்கள், தங்களுடைய கணினியில் அதை சேமித்த பிறகு, பிரின்ட் அவுட் எடுத்து வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து உரிய ஆவணங்களோடு பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரில் வரச் சொல்லி, ஆன்லைன் மூலமாகவே உங்களுக்குத் தகவல் தரப்படும். அப்போது நேரில் ஆஜராக வேண்டும்.



னியார் நிறுவனங்களை ஒப்பந்த அடிப்படையில் ஈடுபடுத்தி பாஸ்போர்ட் விரைவில் வழங்க ஏற்பாடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்தியாவில் மொத்தம் 38 பாஸ்போர்ட் அலுவலகங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவையில் அலுவலகங்கள் உள்ளன. பாஸ்போர்ட் அலுவலக பணிகள் அனைத்தும், மத்திய அரசின் வெளியுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.




இப்பணிகளை, "அவுட் சோர்சிங்' முறையில், தனியாரிடம் விட மத்திய அரசின் வெளியுற வுத்துறை முடிவு செய்துள்ளது. "பாஸ்போர்ட் சேவா கேந்திரா' என்ற பெயரில், நாடு முழுவதும் அமைக்கப்படவுள்ள தனியார் மையங்கள், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப் பவர்களின் விண்ணப்பம் சரிபார்ப்பது, விண்ணப்பித்த நபர் பாஸ்போர்ட் வாங்க தகுதியான வர் என்று சான்றிதழ்களுடன் அறிக்கை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளது.




விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் தனியார் மையங்களில் பாஸ் போர்ட் ஊழியர்களும் ஈடுபடுத்தப்படுவர்.பாஸ்போர்ட் கேட்டு, ஒருவர் விண்ணப்பம் செய்தால், 45 நிமிடத்தில், அனைத்து பணிகளையும் முடித்து விட்டு, அவரை அனுப்பி விடவேண்டும் என்ற கருத்தில் இந்த நடைமுறை வருகிறது. ஆனாலும், பாஸ்போர்ட் வழங்குவது மற்றும் வழங்குவதை தீர்மானிப்பதை மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் தான் முடிவு செய்யும்.




பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் விண்ணப்பம், சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் தனியார் ஈடுபடுவது, முதல்கட்டமாக, பெங்களூரு மற்றும் சண்டிகர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில் சோதனை முறையில், வரும் ஏப்ரல் மாதம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.ஒரு வருடம் கழித்து, நாட்டிலுள்ள 38 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும், 80க்கும் மேற்பட்ட "பாஸ்போர்ட் சேவா கேந்திரா' என்ற தனியார் மையங்கள் அமைக்கப்பட்டு, பாஸ்போர்ட் வழங்கும் பணிகளில் தனியாரை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.




தனியார் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கிவிட்டால், விண்ணப்பம் செய்வோர் போட்டோ மற்றும் சான்றிதழ் நகல்களை கொண்டு வரவேண்டியதில்லை. அவர்களின் உண்மை சான்றிதழ்களை அப்படியே ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் தனியார் மையம் பதிவு செய்துவிடும். புதிய முறை அமலுக்கு வந்துவிட்டால் பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிதாக முடியும் காரியமாகிவிடும் என்று கூறப்படுகிறது.


Source : தினமலர்


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment