Wednesday 23 May 2012

பிளஸ் 2 முடிச்சாச்சு! மேற்படிப்புக்கு என்ன செய்யவேண்டும்?அடுத்து என்ன படிக்கலாம்?..


பிளஸ் 2 முடிச்சாச்சு. லீவும் விட்டாச்சு! என்று ஹாயாக பொழுதை போக்கும் மாணவர்கள் அடுத்து என்ன படிக்கலாம், எந்த கல்லுõரியில சேரலாம், நாம் சேர்ந்து படிக்கப்போகும் கல்லுõரி நல்ல கல்லூரி தானா? நன்றாக சொல்லிக் கொடுப்பார்களா? அங்கே நாம் படிப்பதற்கான வசதிகள் எல்லாம் நல்ல முறையில் இருக்கிறதா? ஆனாலும் நாம் கட்டும் பீஸ்க்கு ஏற்றமாதிரி எல்லா வசதிகளும் இருக்கிற கல்லுõரி தானா? அங்கே படிப்பை தாண்டி நம் திறமைகளை வளர்க்க வேறு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது? இப்படி பல கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க வேண்டிய நேரம் இது. 

பணம் செலவழித்து படிக்க வைக்கும் பெற்றோர்களே கல்லுõரிகளைப்பற்றி விசாரித்து நம்மை சேர்த்து விடுவார்கள் என்று சிறுவயது பள்ளிமாணவர்களைப்போல இருந்து விடக்கூடாது. அதே நேரம் தினமலர் நாளிதழ் நடத்துகிற வழிகாட்டி கல்விக் கண்காட்சிக்கும் சென்று நிறைய தகவல் குறிப்புகளையும் வாங்கிக்கொண்டு வந்திருப்பீர்கள். கண்காட்சியின் அரங்கத்தில் பல கல்வியாளர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேட்டிருப்பீர்கள். அதோடு இன்ஜினியரிங் படிப்பில் லேட்டஸ்ட் டிரண்டு என்ன? சட்டம், மருத்துவம், விவசாயம் சார்ந்த கல்வியை படிப்பதால் என்னபயன், கல்விக் கடன் வாங்குவது எப்படி போன்ற பல பயனுள்ள ஆலோசனைகளை சொல்லக் கேட்டிருப்பீர்கள். அவர்கள் சொன்ன ஆலோசனைகளை கேட்டு அதோடு விட்டுவிடாமல் நாம் படிக்கப்போகும் பாடம் பற்றியும், பயிலும் கல்லுõரி பற்றியும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பாக அமைந்திருக்கிறது இந்த விடுமுறைக்காலம்.

இனி வருகிற ஆண்டுகளில் தொடரப்போகும் நான்கு வருடப் படிப்பை முடித்துவிட்டு பிறகு பார்க்கப் போகிற வேலைதான் நம் காலத்திற்கும் , வாழ்க்கைக்கும் உதவும். அதற்கு நாம் தேர்ந்தெடுக்கற வேலை அதற்கான ஆதார படிப்பை தேர்வு செய்ய வேண்டிய முக்கியமான காலம் இது. அடுத்து என்ன படிக்க வைக்கலாம். தேர்வில் என்ன மதிப்பெண்கள் வாங்குவீர்கள் என்கிற எதிர்ப்பார்ப்பில் பெற்றோர்கள் காத்திருக்க. அவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் முடிந்தளவு மாணவர்களும் தங்கள் பங்கை செலுத்தலாம். அதற்கான குறிப்புகளும், கேள்விகளும் தான் இங்கே....
பிளஸ்2 முடித்துள்ள மாணவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைப்பற்றி சிந்திக்கத்தொடங்க வேண்டும்.அடுத்துப் படிக்கப்போகும் கல்லுõரி எப்படி இருக்க வேண்டும் என்பதை மாணவர்கள் முடிவு செய்ய வேண்டும். எதிர்காலப்பாதை வகுக்கப்படுவது இங்குதான். விண்ணப்பங்களை வாங்கிக் குவிப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டிய நல்ல நேரம் இது.

பலர் பிளஸ் 1 மற்றும் அதற்கு முன்பாகவே தாங்கள் எந்ததுறையில் வளர வேண்டும் என்பதைப்பற்றி முடிவு செய்கிறார்கள். என்றாலும் தற்போதுள்ள தகுதி, திறன், அடிப்படையில் தனக்கு எது பொருத்தமானது என்பதற்கான இறுதி முடிவை இப்போது எடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
அடுத்து என்ன படிக்கவேண்டும் என்பதை முடிவு செய்து விட்டு அது தொடர்பான தகவல்களை மாணவர்கள் சேகரிக்க வேண்டும். அடுத்து நான்கு முதல் ஆறு ஆண்டுகளுக்கு மாணவர்கள் இதன் அடிப்படையிலேயே படிக்க வேண்டியிருக்கும் என்பதால் இதை மாணவர்கள் முக்கியமாக கருத வேண்டும். ஒரு படிப்பு பிரபலமாக இருப்பது என்பதற்காக அந்தபடிப்பை மாணவர்கள் தேர்வு செய்யக்கூடாது.அதேப்போல,தன்னுடைய நண்பன் ஒரு குறிப்பிட்ட கல்லுõரியில் சேரப்போகிறான் நாமும் அதே கல்லுõரியில் சேர்ந்து விடுவோம் என்றும் எண்ணிவிடக்கூடாது. காரணம் இருவரும் வாங்குகிற மதிப்பெண்கள் வேறுவேறுதானே. அதையும் மனதில் கொள்ளவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட படிப்பு தொடர்பான விஷயத்தின் தனக்குள்ள திறன் அடிப்படையில் தான் முடிவு செய்ய வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களால் சாதிக்க முடியாத விஷயத்தை பிள்ளைகள் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர்களை நிர்பந்திக்கக்கூடாது . கல்லுõரிகளை தேர்வு செய்யும் போது அந்தக் கல்லுõரி அங்கீகாரம் பெற்ற கல்லுõரியாக இருக்கிறதா? என்பதைப்பார்க்கவேண்டும்.
வகுப்பறைகள் , நிர்வாக கட்டடம் , ஒர்க்ஷாப் , கம்ப்யூட்டர் லேப், இன்ஜினியர் லேபிள் லேபில் நவீன உபகரணங்கள் போன்ற <உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்.

பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தகுதிகள், மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டடையிலான விகிதம் , சிறப்பு வருகை பேராசிரியர்கள் õகியவற்றை கவனிக்க வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ., விதிமுறைகளின் படி ஆசிரியர்களின் தகுதிகளை கல்லுõரி தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும்.


கல்லுõரி வளாகத்தில் ஆய்வுக்கூட வசதிகள் இருக்கின்றனவா என்பதை கவனிக்க வேண்டும்.

நுõலகம் , இணையதளம், இன்ட்ராநெட், விடுதி அறைகள், கருத்தரங்கம், மருத்துவ வசதிகள், மாணவர் குழுக்கள், உடற்பயிற்சி கூடம் போன்ற பொதுவசதிகள் சிறப்பாக இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும்.

கல்லுõரியில் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு எவ்வாறு முயற்சி மேற்கொண்டார்கள் எப்தை பார்க்கவேண்டும்.கல்லுõரியின் தரம் , மாணவர்களின் தகவல் தொடர்ப த்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட மென்திறன் மேம்பாடு ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும்.
தனிநபர்களின் வளர்ச்சியில் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் உதவுகின்றன. õண்டுவிழாக்கள், விளையாட்டு விழாக்கள், மாணவர் குழுக்கள், செமினார், இண்டஸ்ட்ரியல் டிரைனிங், சமூக நடவடிக்கைகள், என்.சி.சி ., மற்றும் என்.எஸ்.எஸ்., போன்றவை மாணவர்களின் திறனை ÷ம்படுத்துகின்றன.

கல்லுõரி பெரிய சாப்ட்வேர் நகரத்தின் அருகில் இருப்பது பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு உதவும் என்றாலும் இட அமைவை விட கல்லுõரியின் தரம் மிக முக்கியம்.
கல்லுõரியில் சேர்ந்து படித்து முடிக்கும் வரை கட்டணம் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்லுõரியில் அரசு விதித்த கட்டணத்தை விட மறைமுகமாக ஏதும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். கல்லுõரியில் சேரும் முன் அந்தக்கல்லுõரியை பார்த்துவிட வேண்டும். தற்போது படித்துவரும் மற்றும் படித்து முடித்த மாணவர்களிடம் கல்லுõரி பற்றி கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். தேர்வு முடிவு பற்றிய தகவல்கள் , அங்கீகாரம் விரபங்களை பல்கலைக்கழகத்தில் பார்வையிடலாம். கல்லுõரியை நடத்துபவர்களின் லட்சியம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போது ஏராளமான சுயநிதி இன்ஜினியரிங் கல்லுõரிகள் வந்துவிட்டன. கவுன்சிலிங் போது எந்த கல்லுõரியை தேர்வு செய்வது என்பதில் குழுப்பம் அடையாமல் இருக்க இது போன்ற தகவல்களை முன்னரே அறிந்து கொள்வது நல்லது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment