Monday 23 April 2012

உலகின் முதல் மனிதர் யார்? இவர் ஒரு நபியா (தீர்கதரிசியா)?-- ஒரு அலசல்...



உலகின் முதல் மனிதர் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகிற்கு அனுப்பப் பட்ட முதல் நபி என்றும் நம்பப் படுகிறார்கள்.
உலகின் முதல் மனிதர் ஆதம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகின் முதல் நபி என்பதை சிலர் மறுக்கிறார்கள். 
இதற்கான காரணத்தையும் அவர்கள் தெளிவு படுத்தவில்லை. ஆனால் உலகின் முதல் மனிதர்தான் முதல் நபி என்பதற்கு திருமறைக் குர்ஆனில் தெளிவான ஆதாரம் இருக்கிறது.
பொதுவாக நபிமார்களை இறைவன் குறிப்பிடும் போது நபி என்ற வாசகத்தை குறிப்பிட்டு சொல்வதைப் போல் அல்லாமல் ஆதம் நபியவர்களை நபிமார்களுக்கு பயன்படுத்தும் ஒரு வார்த்தையைக் கொண்டு இறைவன் பயண்படுத்துவதின் மூலம் அவர் நபிதான் என்பதை நமக்குத் தெளிவு படுத்துகிறான்.


இந்த உலகைப் படைத்து பாதுகாத்து ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய ஏக இறைவன் அல்லாஹ் உலகில் வாழ்வதற்குறிய சிறப்பான படைப்பாக மனிதனை ஏற்படுத்தினான்.

ஆனால் மனிதனோ தான் நினைத்தவாறு வாழ்ந்து உலக வாழ்வுக்குப் பிறகுள்ள நிறந்தரமான மறுமை வாழ்வில் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக மனிதனை சீர் திருத்தம் செய்வதற்கு காலத்திற்குக் காலம் நபிமார்களை தூதர்களை அனுப்பி மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை கற்றுத் தந்தான்.

மனிதப் படைப்பை இறைவன் ஏற்படுத்தியதில் முதல் படைப்பாக ஆதாம் என்ற ஆதாமையும் அவருக்குத் துணையாக ஏவாள் என்ற ஹவ்வா அவர்களையும் ஏற்படுத்தினான்.

இந்த ஆதம் (அலை)அவர்களைப் பற்றி வரலாறு என்ற பெயரில் பலர் பல புனைக் கதைகளையும் தங்கள் சுய எண்ணங்களையும் எழுத்தாக்கியுள்ளனர்.

குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபிமார்களின் வரலாற்றை தொகுக்கும் இந்த முயற்சியில் ஆதம்(அலை)அவர்களின் வரலாற்றை முதலாவதாகப் பார்ப்போம்.

இந்தத் தொடரில்.....
  • முதல் மனிதர் ஆதாமா? ஏவாளா?
  • ஆதம் எங்கு இறக்கப்பட்டார்?
  • ஆதம் இலங்கையில் இறக்கப்பட்டாரா?
  • இலங்கை முஸ்லீம்களின் பூர்விகம் என்ற புத்தகத்திற்கு பதில்.
  • ஆதம் நபியின் மொழி தமிழா?
  • இலங்கையையும் இந்தியாவையும் பிரிப்பது ஆதாம் பாலமா?

 ஆதம் அவர்கள் நபிதானா?

லகின் முதல் மனிதர் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகிற்கு அனுப்பப் பட்ட முதல் நபி என்றும் நம்பப் படுகிறார்கள்.

உலகின் முதல் மனிதர் ஆதம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம் ஆதம்(அலை)அவர்கள் தான் உலகின் முதல் நபி என்பதை சிலர் மறுக்கிறார்கள்.

இதற்கான காரணத்தையும் அவர்கள் தெளிவு படுத்தவில்லை. ஆனால் உலகின் முதல் மனிதர்தான் முதல் நபி என்பதற்கு திருமறைக் குர்ஆனில் தெளிவான ஆதாரம் இருக்கிறது.

பொதுவாக நபிமார்களை இறைவன் குறிப்பிடும் போது நபி என்ற வாசகத்தை குறிப்பிட்டு சொல்வதைப் போல் அல்லாமல் ஆதம் நபியவர்களை நபிமார்களுக்கு பயன்படுத்தும் ஒரு வார்த்தையைக் கொண்டு இறைவன் பயண்படுத்துவதின் மூலம் அவர் நபிதான் என்பதை நமக்குத் தெளிவு படுத்துகிறான்.

ஆதம்,நூஹ்,இப்ராஹீமின் குடும்பத்தார் மற்றும் இம்ரானின் குடும்பத்தினரை அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான்.(3:33)


மேற்கண்ட வசனத்தில் அகிலத்தாரை விட அல்லாஹ் தேர்வு செய்தான் என்று குறிப்பிடப் படுகிறது.இதில் அரபி வாசனத்தில் இஸ்தபா என்ற வாசகத்தை இறைவன் பயன்படுத்தியுள்ளான் இஸ்தபா என்பது திருமறைக் குர்ஆனில் இறை தூதர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப் படும் வார்த்தையாகும்.

அந்த வார்தையை குறிப்பிட்டு இறைவன் ஆதம்(அலை)அவர்களையும் குறிப்பிடுவதில் இருந்து ஆதம் அவர்கள் தான் உலகின் முதல் நபி என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

அவ்விருவரும் அதிலிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் பற்றித் தெரிந்தது. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

பின்னர் அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். அவரை மன்னித்து நேர் வழி காட்டினான். .(20:121-122)

மேற்கண்ட திருமறை வசனத்திலும் இறைவன் ஆதம் நபியவர்கள் செய்த தவரை மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்ததாக குறிப்பிடுகிறான்.இந்த வசனத்திலிருந்தும் ஆதம் அவர்கள் ஒரு நபியாகத்தான் இருந்தார்கள் என்பதை நாம் ஊகிக்க முடிகிறது.

நபிமார்கள் யாருக்கு அனுப்பப் படுவார்கள்?

ஆதம்(அலை)அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றப் பட்ட செய்தியை இறைவன் குறிப்பிடும் போது பயண் படுத்தும் வார்த்தையும் ஆதம் அவர்கள் நபியாகத் தான் இந்த உலகில் இருந்தார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். 'இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும் வசதியும் உள்ளன"  என்றும் நாம் கூறினோம். (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை தமது இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான் அவன் மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன்.(2:36-37)

தம் நபியவர்கள் தவறு செய்ததை குறிப்பிடும் இறைவன் தனது தவறிலிருந்து ஆதம் அவர்கள் மன்னிப்பை வேண்டுவதற்காக அவருக்கு சில வார்தைகளை கற்றுக் கொடுத்ததாகவும் குறிப்பிடுகிறான். 

இறைவனிடம் இருந்து ஒருவருக்கு வஹி வருமாக இருந்தால் அவர் நபியாக இருந்தால் மாத்திரம் தான் அது சாத்தியமாகும்.ஆதம் அவர்கள் நபியாக இல்லாமல் இருந்திருந்தால் தன்னிடம் இருந்து சில வார்த்தைகளை ஆதம் பெற்றுக் கொண்டார் என்று இறைவன் கூற வேண்டிய அவசியம் இல்லை.

அதே போல் அதற்கு அடுத்த வசனத்தில் இறைவன் குறிப்பிடும் போது

இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்" என்று கூறினோம்.(2:38)

இருவரும் ஒட்டுமொத்தமாக இங்கிருந்து இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு பகைவர்களாவீர்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும். அப்போது எனது நேர் வழியைப் பின்பற்றுபவர் வழி தவற மாட்டார். துர்பாக்கியசாலியாகவும் மாட்டார்.(20:123)

வறு செய்த ஆதம் அவர்கள் பூமிக்கு அனுப்பப் படும் நேரத்தில் என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை.என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

ஆதம் நபியவர்கள் பூமிக்கு அனுப்பப் படும் போதே அவர்களுக்கு நேர்வழியை இறைவன் அழிப்பதாக வாக்குறுதி தருகிறான்.

ஆதம் நபியவர்களுடைய சமுதாயத்தினருக்கு நேர் வழி காட்ட ஒரு தூதராக அவரையே இறைவன் தூதுத்துவத்தை கொடுத்து அனுப்பியுள்ளான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

நேர் வழி உங்களுக்கு வரும் என்று இறைவன் கூறினாலே வந்திருக்கிறது என்றுதான் நாம் புரிய வேண்டும்.ஏனெனில் இறைவன் தனது வாக்குக்கு மாறு செய்யமாட்டான்.

மேற்கண்ட வசனங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது கண்டிப்பாக ஆதம்(அலை)அவர்கள் ஒரு நபியாகத் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை தௌவாக நமக்கு அறிவித்துத் தருகிறது.

அல்லாஹ் மறைவானவன், அவன் மறைந்திருப்பவன். தான் இருப்பதை தெரிவிப்பதற்காக அல்லாஹ் அழகான உலகத்தை படைத்தான். உலகம் மட்டுமல்ல பல கோள்கள், சந்திரன், நட்சத்திரங்கள் போன்ற அனைத்தையும் படைத்து, அவை அத்தனையையும் ஒன்றோடு ஒன்று மோதி விடாதவாறு சுழலவிட்டுள்ளான். அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

பின்னர் அல்லாஹ் மனிதனைப் படைக்க முடிவு செய்தான். பானைகள் செய்ய பயன்படுத்தப்படும் களி மண்ணால் அல்லாஹ் மனிதனை செய்தான். அவன் தன்னுடைய ஆவியை அதனுள் ஊதினான். இப்படித்தான் அல்லாஹ் முதல் மனிதருக்கு உயிரைக் கொடுத்தான். அவர் தான் நம் எல்லோருக்கும் தந்தை, மூலத்தந்தை. 'ஆதம்' என்று அல்லாஹ் அவருக்கு பெயர் சூட்டினான்.

இன்று மக்கள் வேறுபட்ட நிறங்களிலும், வேறுபட்ட உருவ அமைப்பிலும், வேறுபட்ட மொழியை பேசுபவர்களாவும் உலகின் பல்வேறுபட்ட இடங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் மூலத்தந்தை ஒருவர் தான். அவர் தான் முதல் மனிதர் ஆதம் (அலை) ஆவார். அல்லாஹ் அவரை முதல் இறைத்தூதராக ஆக்கி, மனிதர்களுக்கு நல்வழி காட்டினான்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான அன்பளிப்புகளை கொடுத்தான். பார்வை எனும் அன்பளிப்பை அல்லாஹ் ஆதமுக்கு வழங்கினான், அதன் மூலம் அல்லாஹ்வின் படைப்புகளை பார்த்து அவர் ஆச்சர்யமடைந்தார். அவரை சுற்றி இருக்கும் உலகத்தை புரிந்து கொள்வதற்காக கேட்கும் சக்தியையும், நுகரும் சக்தியையும், ருசிக்கும் திறனையும், தொடு உணர்ச்சியையும் அன்பளிப்பாக அல்லாஹ் கொடுத்தான்.

எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ் அறிவு எனும் அன்பளிப்பை ஆதமுக்கு வழங்கினான். அதன் மூலம் அவர், நல்லது எது? கெட்டது எது? என்பதை விளங்கி நல்லதை மட்டும் செய்தார். (அதாவது, நல்லது எது கெட்டது எது என்பதை மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அறிவைக் கொண்டு முடிவு செய்ய முடியாது. அதனை தீர்மானிப்பது அல்லாஹ். அதனை விளங்கப் படுத்துவதற்காக இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டார்கள், இறைவேதங்கள் வழங்கப்பட்டன. அதனை விளங்கி அதன் படி நடப்பது மனிதன் மீது கடமை. அதற்கு அறிவு மிகவும் முக்கியம்.) அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களுக்கு அறிவு ஞானத்தை கொடுத்ததால் வானவர்களை விட சிறந்தவராக ஆக்கப்பட்டார்.

ஆதம் (அலை) அவர்களுக்கு உறுதுணையாக, அன்புக் கூட்டாளியாக 'ஹவ்வா' என்னும் பெண்ணை அல்லாஹ் படைத்தான். அவர்கள் இருவரையும் சுவனத்தோட்டத்தில் வாழும்படி கூறினான். ஆனால் ஒரு மரத்தை மட்டும் நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் எச்சரித்தான். அழகிய சொர்க்கத்தில் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் அவ்விருவரும் வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் அல்லாஹ் அவ்விருவருக்கும் வழங்கிய உயர்வைக் கண்டு ஷைத்தான் அவர்கள் மீது பொறாமைப்பட்டான். ஒரு நாள் ஆதம் (அலை), ஹவ்வா இருவரிடமும் ஷைத்தான் வந்தான். அல்லாஹ் தடுத்திருக்கும் மரத்தை நெருங்கும் படி ஆசை வார்த்தை காட்டினான். இந்த மரம் முடிவில்லா வாழ்க்கையை தரும், இந்த மரத்தை நெருங்கினால் வயோதிகம் வராது, அவர்கள் இறக்கவும் மாட்டார்கள் என்று ஷைத்தான் கூறினான்.

ஷைத்தான் மிகவும் சாதுர்யமாக அவ்விருவரையும் நம்பும்படி செய்தான். அதனால் அந்த மரத்திலிருந்து உண்டார்கள். தவறு செய்தவர்களாக ஆனார்கள். உடனே அவர்கள், தான் செய்த தவற்றை உணர்ந்தார்கள், அதற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டார்கள்.

அல்லாஹ் அவ்விருவரையும் மன்னித்தான். ஆனால் அவ்விருவரும் அல்லாஹ்வின் கட்டளையை மீறியதற்காக அவர்கள் சுவனப்பூங்காவை விட்டு வெளியேறி, பூமிக்கு சென்றுவிடுமாறு கட்டளையிட்டான். ஆதமும் ஹவ்வாவும் பூமிக்கு வந்தார்கள். அங்கே அப்போது இவர்களைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை.

மனிதர்களை நல்வழிப்படுத்தி நேரான பாதையை காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர்கள், தீர்க்கதரிசிகள் பூமிக்கு வருவார்கள் என்று அல்லாஹ் கூறினான்.

யார் அந்த தூதர்களின் வழிகாட்டலை ஏற்று நடக்கிறார்களோ அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள், அவர்களுக்கு பயம் இருக்காது. அவர்கள் மறுவுலகில் சொர்க்கம் செல்வார்கள். யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை ஏற்க மறுத்து நிராகரிக்கிறார்களோ அவர்கள் மறுமையில் நரகத்தில் தூக்கி வீசப்படுவார்கள்.

படிப்பினைகள்:
1. அல்லாஹ் தான் இவ்வுலகின் ஒரே சூப்பர்பவர், வேறு எவனும் எதுவும் அவனுக்கு முன் சூப்பர்பவர் கிடையாது.

2. ஆதம் (அலை) அவர்கள் மனிதர்களின் மூலத்தந்தை என்பதால் நிறத்தால், உருவத்தால், மொழியால் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு கற்பித்தல் கூடாது.

3. அல்லாஹ் மனிதர்களுக்கு அறிவைக் கொடுத்திருப்பதால் நல்ல வழியிலேயே அதனை பயன்படுத்த வேண்டும், கெட்டவற்றுக்கு பயன்படுத்தக் கூடாது.

4. அல்லாஹ் தடுத்தவற்றை மறந்தும் செய்யக் கூடாது.

5. ஷைத்தான் மனிதர்களை வழிகெடுப்பவன், கெட்டவற்றின் பக்கம் மனிதர்களை தூண்டக்கூடியவன் என்பதை விளங்கி கெட்டவற்றை விட்டும் நாம் தூரமாக இருக்க வேண்டும்.

6. தவறு செய்யும் பட்சத்தில் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அந்தத் தவறை மீண்டும் செய்யாது இருக்க மனதில் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

7. மனிதர்கள் எல்லோரும் இறைத்தூதரை பின்பற்றி நடந்தால் சொர்க்கம் கிடைக்கும், அவரை நிராகரித்தால் நரகம் கிடைக்கும்.


No comments:

Post a Comment