Monday 26 March 2012

தப்லீக்ஃ ஜாமத் அமல்களின் சிறப்பு -ஒரு ஆய்வு

காரைகுடியில் என்னுடைய பள்ளி மற்றும் கல்லுரி காலங்களில் நான் தப்லீக்ஃ ஜாமத் வேளைகளில் ஈடுபட்டிருந்தேன். அதில் உள்ள  சில தேவையில்லாத விசயங்களை விலக்க கோரி  உங்களிடம் பகிரிந்து  கொள்ள ஆசைபடுகிறேன்.  இது என்னுடைய பதிவு அல்ல. ஆனால் அறியாமைக்கு நல்ல விருந்து. 






அப்போது என் நன்பனுக்கு ஏற்ப்பட்ட ஒரு நிகழ்வை ஒட்டியே இந்த பதிவு உள்ளது. முன்பொருகாலத்தில் தப்லீக்ஃ ஜாமத் வீதி வீதியாக வந்து வீட்டில் வீட்டில் உள்ள ஆண்களை பள்ளிக்கு வந்து தொழ அழைப்பார்கள்.
 இவர்களை பற்றி மச்சூரில் கேட்டால் தெரியும் மச்சூருக்கு எஸ்.பி.பட்டினத்தில் இருந்து பேருந்து செல்லாதாகாலம் அது மார்க்கப்பணி செய்வதில் முனைபோடு செயல்படுவார் எங்கள் அப்பா தப்லிஃக் ஜாமத வீதிவழியே பிரச்சாரம் செய்யும் போது பெண்களிடம் உங்கள் பிள்ளைகளை எப்படியாவது ஒருமுறை தப்லிஃக் செய்ய அனுப்புங்கள் தீனுடைய விசயங்களை அறிந்து கொள்ள உதவும் எனக்கூறுவார்கள் அனுபபவில்லை என்றால் நிய்யத் செய்யுங்கள் எனக்கூறுவார்கள் அதன் அடிப்படையில் என்னுடைய தாயர் எனது மகனை ஒரு மூன்று நாள் தப்லீஃக் ஜமாத்தில் அனுப்புவதாக நிய்யத் செய்து விடுகிறார்கள் அதன் அடிப்படையில் சில வருடங்கள் ஆன பிறகு ஒரு நாள் அமானுல்லா அப்பா எங்கள் ஊர் அருகாமையில் இருக்கும் வெள்ளையபுரத்தில் தப்லிஃக் ஜமாத் வந்திருப்பதாக கூறி அவர்களிடம் முன்றுநாள் தீனுடை விசயங்கள் அறிந்துவர அழைத்துச் சென்றார்கள் அதற்க்குள் தப்லிஃக் ஜமாத்தினர் வெள்ளையாபுரத்திலிருந்து அஞ்சுக்கோட்டை எனும் ஊருக்கு சென்றுவிட்டார்கள்




அஞ்சுக்கோட்டை எனும் ஊரில் இருந்து எனது தப்லிஃக் ஜமாத பயணம் துவங்கியது நான் சென்ற ஜமாத்தில் இளையான்குடி கல்லூரிபேராசிரியர்கள் சிலர் இடம் பெற்றிருந்தனர் அஞ்சுக்கோட்டையில் ஒரு நாள் இருந்தோம் அதன் பின் திருவடானை என்ற ஊருக்கு சென்றோம் திருவடானையில் மொததமே ஏழு முஸ்லிமான குடும்பம் இருந்தது அவர்கள் ஒவ்வொரும் அருகிலுல்ல தொண்டி நம்புதாளையை சேர்ந்த குடும்பங்கள் நான் அவர்களிடம் கேட்டேன் தீனுடைய விசயம் அவர்களிடம் பேச மூன்று மனிநேரம் போதும் அவர்களிடம் பேசிவிட்டு வேறு ஊருக்கு செல்லலாம் என்றேன் அதற்க்கு அவர்கள் தொண்டியில் மீன் நல்லாருக்கும் வங்க ஆள் அனுப்படுயிருக்கிறது மீன் குழம்பு சாப்பிடாமல் நாக்கு செத்து விட்டது என்று காரணம்கூறினார்கள்.

அதன் பின் என்னை எதோ ஒரு தஸ்பீஃ செய்ய சொன்னார்கள் அந்த தஸ்பீஃ எனக்குவாயில் நூழைய வில்லை அதனால் தாலிம் கிதாபை படித்துக் கொண்டிருக்க சொன்னார்கள் அதில் எதோ ஒருபக்கத்தை படித்து அறிவதற்க்கு முன்பே ளுஹர் நேரம் வந்து விட்டது திருவடானை பள்ளிவாசல் ஏதோ ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமானது போக்குவரத்தில் உள்ள பயானிகள் யாராவது வந்து தொழுதால்தான் உண்டு பள்ளிவாசலும் பேருந்து நிலையத்திலிருந்து ஒருகிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது அதனாலோ அல்லது எதுவோ ஒரு காரணம் அந்தப்பள்ளிக்கு என தொழுகைவைப்பதற்க்கு இமாம் நியமிக்கபடமல் இருந்தது

அதனால் நான் சென்ற தப்லிஃக் ஜமாத்காரர்கள் இளையான்குடியை சேர்ந்தவர்கள் என்பதால் ளுஹரை கசராக தொழமுடிவெடுத்தார்கள் அந்த நேரத்தில் தொண்டியை சேர்ந்த ஒரு பயாணி தொழுவதர்க்காக பள்ளிக்கு வந்தார் அவரை இமாமத் செய்ய சொன்னார்கள் அவர் தொழவைத்துவிட்டு துவா நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்று கூறி சுண்ணத் தொழுதார் அவரின் சுண்ணத் தொழுகை கவணித்த நான் சென்ற தப்லிஃக் ஜமாத்காரர்களில் ஒருவர் இமாமத் செய்தவர் நஜாத்காரர் அதனால் அவர்தொழவைத்தது ஏற்றுக் கொள்ளப்படது என்று கூறி மறுபடியும் ளுஹரையே கசராக தொழவைத்தார்கள் அதன் பின் என் தாயர் நிய்யத்செய்த மூன்று நாளும் முடிந்து விட்டது அது வரைக்கும் என் தாயர் எனக்கு அறிமுகப்படுத்தியிருந்த மார்க்கத்திற்க்கும் அவர்கள் எனக்கு அறிமுகபடுத்திய மார்க்கத்திற்க்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை அறிந்தேன்.

அதன்பின் எங்கள் ஊரில் உள்ள சுண்ணத் ஜமாத்தை சேர்ந்த ஆலிம் ஹைதர் அலியிடம் இது பற்றி வினவினேன் அவர் நஜாத்க்காரர் தொழவைத்தாலும்தொழலாம் என்று கூறினார்கள் (எஸ்.பி.பட்டினம் சின்ன பள்ளிவாசல் ஏன் பூட்டப்பட்டே இருக்கிறது என்று தெறியவில்லை ஆலிம் ஹைதர் அலி அன்று என்னிடம் சொன்னதை மறந்து விட்டாரா என்பதை அல்லாஹ்தான் அறிவான்)

ஆலிம் ஹைதர் அலி இப்படி சொன்ன பின்புதான் குர் ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புகளை ஹதீஸ் மொழிபெயர்ப்புகளையும் மகங்ஙகனி அமல்களின் சிறப்புகள் என்ற நூல்களையும் இன்னபிற நூல்களை எனது மார்கத்தை அறிந்து கொள்ள படிக்க ஆரம்பித்தேன் படித்தவைகளை சிலரோடு பகிர்ந்து கொண்டேன் என்னை நஜாத்காரன் என்று சொன்னார்கள் பஞ்சாயம் எல்லாம் வைத்தார்கள் பஞ்சாயங்களை சந்தித்த பின்புதான் புனித மார்க்கமான இஸ்லாத்தில் இடற்பாடுகள் நுழைக்கப்பட்டுயிருக்கிறது என்று அறிந்து கொண்டேன் உதரணதிற்க்கு நண்டை ஒரு மத்ஹப்காரர் சாப்பிடலாம் ஒரு மத்ஹப்காரர் சாப்பிட கூடாது என்று ஏழுவருடம் படித்த ஆலிம் மட்டுதான் மார்க்கத்தை சொல்லவேண்டும் என்பதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன் (இப்போது எங்கள் வீட்டிலும் நண்டு சமைக்கிறோம் என் தாயரும் என் பிள்ளைகளும் விரும்பி உன்னுகிறார்கள்)

அதன் அடிப்படையில் அமல்களின் சிறப்பு பற்றி எனக்கு தெரிந்த விசயங்களை வலைப்பூ வசகர்களோடு பகிரலாம் என்று இணையத்தில் தேடினேன் அருவியாக கொட்டுகிறது அதற்க்கான எதிர்கருத்துக்கள் இதை சமுக விழிப்புனர்வு என்றே நான் கருதுகிறேன் அமல்களின் சிறப்பு பற்றி சார்பு நிலை பதிவுகள் எதவது ஒன்றுக்கு பின்னூட்டம் இடலாம் என்று தேடினேன் ஒன்றையும் காணவில்லை வேறு வழியில்லாமல் நம்மலே ஒரு பதிவை போடுவோம் அதுக்காகவாது பின்னூட்டம் வருகிறத என்று பார்ப்போம் என்றுதான் எனது சொந்த அனுபத்தை பதிவாக்கியிருக்கிறேன் சகபதிவாளர்கள் பதிவிடத கோனத்தில் பதிவிடலாம்

என்னிடமிருக்கும் அமல்களின் சிறப்புகள் நூலில் இருந்து மேற்கோள் காட்டுகிறேன் விமர்ச்சனத்திற்க்கு உள்ளாகும் பக்கங்களை மட்டும் பட்டியல் இடுகிறேன்
பக்கம் 4 உபயோகம் இல்லாத அடியான்
பக்கம் 18 இறந்து விட்டு மீண்டவர்
பக்கம் 22 இப்னு சீரின்(ரஹ்) சொர்க்கம் செல்கிறீரா
பக்கம் 23 ஒளு செய்யும் போது பாவங்கள் கைகளின் நீரின் வழி செல்லும்
பக்கம் 25 ஷஹீதை விட முந்தி சொர்கம் செல்பவர்
பக்கம் 32 ஷகீக்(ரஹ்) கூறும் சம்பவம்
பக்கம் 37 நபி(ஸல்) அவர்களுடன் இரவுத்தொழுகையில் பங்கெடுத ஸஹாபி
பக்கம் 38 முஹம்மது இப்னு ஸீமாக்(ரஹ்) அவர்கள்
பக்கம் 38 அப்துல் வாஹிது லாஹூரி(ரஹ்) அவர்கள்
பக்கம் 39 ஜிப்ரில்(அலை) அவர்கள்

பக்கம் 57 ஷைத்தான் மனிதர்களின் கண்களுக்கு தெரிந்தான்
பக்கம் 57 அல்லாஹ்வை மிக அழகிய வடிவத்தில் நபி(ஸல்) தரிசித்தார்கள்
பக்கம் 63 ஃஜவாஹிர் இப்னு ஹாஜர்(ரஹ்)
பக்கம் 76 நாற்பது நாளுக்கு விளக்கம்
பக்கம் 101 தஸ்பீஹ் செய்யும் காலனி
பக்கம் 101 இரவு வணக்கத்தின் பிரதி பலன்
பக்கம் 102 வணங்காமல் கழிந்த இரவு
பக்கம் 102 தூக்கத்தைவிட தொழுகை சிறந்தது
பக்கம் 102 ஒரு பெண்ணின் பெரின்பக் காதல்
பக்கம் 104 கூலிக்கார வாலிபரின் பக்தி

பக்கம் 105 வெட்டியெடுக்கப் பட்ட கட்டி
பக்கம் 106 எல்லா மாதங்களும் ரமலானே
பக்கம் 106 பதினைந்து ஆண்டுகள் படுக்காத பெரியார்
பக்கம் 107 அஜிஸின் மனைவி
பக்கம் 109 நாற்பது ஆண்டுகள் தொழுது நோண்பு வைத்தவர்
பக்கம் 110 குளவி கொட்டியும் அசையாமல் தொழுதவர்
பக்கம் 111 ஐம்பது ஆண்டுகள் இஷாவுக்கு எடுத்த ஒளுவில் பஜ்ர் தொழுதவர்
பக்கம் 111 ஸயீதிப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் ஒரே ரக்காத்தில் முழு குர் ஆனையும் ஓதுவார்
பக்கம் 138 ஒரு நாளைக்கு ஆயிரம் ரக்காத் தொழுதவர்
பக்கம் 141 சிறந்தவரே இமமாக நியாயமிக்கப்படுகிறார்

பக்கம் 145 பருமடையாதவன் பருவம் அடைந்தவனின் இன்பத்தை உணரமுடியாது
பக்கம் 147; 318; 817; மத்ஹபுகளை ஆதரித்து
பக்கம் 147 பலவீனமான ஹதிஸை ஏற்றுக்கொள்ளாம்
பக்கம் 212 சொர்க்கப்பூங்கா தெரிந்தது
பக்கம் 311 ஜிப்ரில்(அலை) முஸாபாஹ செய்கிறார்கள்
பக்கம் 311 மீன்கள் பாவமன்னிப்பு தேடுகின்றன
பக்கம் 331 நோன்பு திறக்கும் துவா
பக்கம் 333 அர்ஷை சுமக்கும் வானவர்களின் துவா
பக்கம் 336 சரித்திர ஆசிரியர்கள் கூபா நகரில்
பக்கம் 359 லைலத்கத்ர் இரவு எனக்கு பருவ்ம் வந்ததில் இருந்து தவரியது இல்லை

பக்கம் 361 ரூஹ் என்பதற்க்கு விளக்கம்
பக்கம் 366 அமல்கள் செய்வதற்க்கு மகான்களுக்கு பணிவிடை
பக்கம் 367 ஸயீத் பின் முஸய்யிப்(ரஹ்)
பக்கம் 380 லைலத் கத்ர் இரவு 27 தான்
பக்கம் 384 லைலத் கத்ர் இரவில் கடல்நீர் இனிப்பாக
பக்கம் 387 ஆண்மையற்றவன் பருவகால உணர்ச்சி பற்றி
பக்கம் 457;457 ஆலிம்களிடமும் இமாம்களிடமும் ஸஹாபிகளிடமும் கருத்து வேறுபாடு
பக்கம் 462 மற்றவர்களின் விருப்பத்திற்க்கு உனது செயல்களை ஆக்கி கொள்ளதவரை மனோயிச்சையை அடக்க முடியாது
பக்கம் 512 மனிதனின் இயற்கை குணம் மாறது
பக்கம் 516 சாரயப்பானையை உடைத்த பெரியார்

பக்கம் 518 மரத்தை வெட்ட சென்ற ஒருவரின் கதை
பக்கம் 525 திக்குருடைய சபைகள் ஒளியால் நிறம்பி இருக்கும்
பக்கம் 529 ஷைத்தான் எப்படியிருப்பான் என்று ஒரு பெரியார்
பக்கம் 541 நன்மை தீமையை பதிவு செய்யும் மலக்குகளுக்கு தெறியாமல் செய்யும் அமலே திக்ர்
பக்கம் 596 திக்ர் செய்வதர்க்கு குர் ஆன் ஒதுவதை தடைவிதிக்கலாம்
பக்கம் 603 மனைவியை தலக் சொன்னவன்
பக்கம் 627 ஓரே மூச்சில் இறுநூறு முறை கலிமா சொன்னவர்
பக்கம் 638 அல்லாஹ் முன் கிழவராக நிற்பவர்
பக்கம் 643 ராபியத்து அதவிய்யா

பக்கம் 653 பழகொட்டையில் கலிமா
பக்கம் 657 அடிவாங்கிய வயோதிகர்
பக்கம் 665 ஹாரூர் ரஷீத் மனைவி இறந்து விட்டபின்
பக்கம் 761 ஹயீத அவர்களின் மகளை அப்துல்லாஹிப்னு அபிவிதாஆவுக்கு திருமணம் செய்து கொடுப்பதையும் அதை தொடர்ந்து
நடை பெரும் சம்பவத்தையும் அமல்களின் சிறப்பு அபிமானிகள் விவாவதத்துக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்
பக்கம் 775 முப்பது வருடமாக சொர்க்கத்தை கண்டவர்
பக்கம் 798 முதல் 805 வரை தஸ்பீஹ் தொழுகை

சூஃபியாக்கள் சம்பவம் அதிகமாக சொல்லும் செல்லபுத்தகம்
பக்கம் 147 சூஃபியாக்களின் சம்பவங்கள் ஹதீசுக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும்; அது ஏற்றுக்கொள்ள தகுந்தவையே?
பக்கம் 541 அல்லாஹ்வின்மீது சூஃபியாக்களின் நேசம்
பக்கம் 628 சூஃபியாக்களின் எந்த மூச்சும் அல்ல என்ற திக்ர் இல்லாமல் உள்ளேவரக்கூடாது
பக்கம் 750 சூஃபியாக்கள் கற்க்களும் மிருகங்களு த்ஸ்பீஹ் செய்வதை அறிவார்கள்
பக்கம் 752 சூஃபிஞானதால் கண்டுவிட்டே உளுச்செய்த தண்ணீர் அசுத்தமானது என்று கண்டு பிடிக்கபட்டது
பக்கம் 752 சூஃபியின் சீடர் ஒருவர் எல்லா இடங்களிலும் அல்லாஹ்வின் ஒளிமயமான காட்சியை கண்டுவிட்டு பல நாள் சிறுநீர் கழிக்காமல் இருந்து வந்தார்.

அமல்களின் சிறப்பு புத்தகத்தின் கவிதைகள்
பக்கம் 265 காதல் என்பது எப்பொழுதும் தோற்றத்தைக் கண்டே ஏற்படுவது இல்லை சில நேரங்களில் அந்தப்பாக்கியம் பேச்சின் மூலமும் உண்டாகி விடுகிறது.

பக்கம் 266 மருந்து சாப்பிடச் சாப்பிட நோய் முற்றிக் கொண்டே சென்றது
போன்ற நிலையை அடைகிறான்

பக்கம் 267 ஓ! மலரே! உன்னைக்கொண்டு எவ்வளவு மகிள்ச்சி அடைகிறேன் நான்! நீ... ஒருவருடைய மனத்தையல்லவோ கொண்டிருக்கிறாய்

பக்கம் 267 பார்வையின் அளவுகள் குறுகியவை! ஆனால் உன் அழகின் மலர்கள் எண்னற்றவை! உன் வசந்தத்தின் மலர்களைப் பறிப்பவன் இடப்பற்றாக் குறையை எண்ணி வருத்தம் தெரிவிக்கிறான்...

பக்கம் 268 போற்றக்கூடிய உனது பண்புகள் எத்தனை? உனது வனப்புகள் எண்னற்றவை! என்னிடம் ஓய்வற்ற உள்ளம் ஒன்றே உள்ளது!

பக்கம் 352 இந்தத் தளுக்கும் குழைவும் பெருமையும் மட்டும் சிறப்பானதல்ல காதலிகளிடத்திலுள்ள எத்தனையோ நடைமுறைகளுக்குப்பெயரே கிடையாது

பக்கம் 460 என் காதலி லைலாவின் ஊருக்குச் சென்றால் அங்கு உள்ள சுவர் களையும் முத்தமிடுகிறேன். அந்த ஊரின் மீது எனக்கு அன்பு ஏற்பட்டு விடவில்லை ஆனால் அந்த ஊரில் வசிப்பவளின் அன்பே என் உள்ளத்தில் இருக்கிறது.

பக்கம் 463 கண்னிருந்தும் அவன் முகம் பார்க்காமல். செவியிருந்தும் அவன் குரல் கேட்காமல் மண்மேலே நானிருந்து பயன் என்ன? குருடாக செவிடாக ஆவதே மேலாகும்.

பக்கம் 615 ஒரு கவிதை பெண்ணின் கவிதயை எலுதினால் இணைய தேடியந்திரங்கள் வேறொரு வலைப்பூவை திறக்கும் பக்கத்தில் நமது வலைப்பூவையும் திறக்கும் என்பதால் எழுதவில்லை.

பக்கம் 384 கஷ்ப் எனும் ஞானப்பார்வை உடையவர்களுக்கு லைலத்கத்ர் இரவில் மரங்களும் பூமியின் மீது ஸஜ்தா செய்கின்றன பிறகு தம்முடையஇடத்தில் நின்று கொள்கின்றன இது கஷ்புடையவர்களுக்கே தெரியும்.

//ரொம்ப நீளமான பதிவா போச்சே இருந்தாலும் வாசகர்களிடம் கேட்டு விடுவோம் லைலத்துல் எனும் வார்தைக்கு நாள் என்றும் பொருள் கொள்ளலாமாமே இது பற்றி சகோதரர் அப்துல் ஹமீது கூறினார். பி.ஜேயின் திருக்குர் ஆன் மொழியாக்கதில் அதற்க்கான விடையை தேடியபோது

முஸாவுக்கு நாற்பது இரவுகளை நாம் வாக்களித்ததையும் என்னிப்பாருங்கள்.திருக்குர் ஆன் 2:51 வசனத்திற்க்கு விளக்கம் கொடுக்கும் போது எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்க்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான்
பின்னர் மேலும் பத்து நாட்கள் அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான் நாற்பதாம் நாளில் பலகைகளில் எழுதப்பட்ட வேதத்தை அவர்களுக்கு வழங்கினான் என்று திருக்குர் ஆன் 2:51; 7:142 வசனங்கள் கூறுகின்றன. என்று எழுதியிருந்தார்கள்

இன்னொரு சகோதரர் டாக்கர் அம்ரைனியிடம் பேசும் போது ஐ.எஃப்.டி கூடா குர் ஆனில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களின் எதிரியா பிஃர்அவ்னைமூழ்கடித்தது கடலில் என்று சொல்கிறான் இவர்கள் நதியென்று மொழி பெயர்த்திருப்பதாக  கூறினார். ஏன் இப்படி ஒவ்வொருவரும் கருத்தில் மாறுபடுகிறார்கள் என்று கேட்டேன் அது அவரவர் கொள்கை என்றார்!. 
எனக்கு தலைதான் சுற்றியது.

இது போல் அமல்களின் சிறப்பையும் எடுத்துக்கொள்ளமுடியாது என்பதே நிதற்சன உன்மை ஏனெனில் நமது தாய்மொழியில் மொழி பெயர்த்து இருக்குதே!

நன்றி: கலீம்ஸ்.காம்


No comments:

Post a Comment