Sunday 12 February 2012

மாணவர்களை மயக்கும் மருத்துவப் படிப்பு



வெள்ளை அங்கியை அணிந்துகொண்டு, ஸ்டெதஸ்கோப்புடன் பவனிவரும் டாக்டர் என்ற அந்தஸ்து மீதான ஆவல், மாணவர் பருவத்திலிருந்தே பலருக்கும் உருவாக்கப்படுகிறது.

நாட்டில் பல லட்சக்கணக்கான மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர ஒவ்வொரு வருடமும் ஆசைப்பட்டாலும், 50 ஆயிரத்துக்கும் குறைவான மாணவர்களே, ஒவ்வொரு வருடமும் மருத்துவ கல்லூரிகளில் இடம் பெறுகிறார்கள்.
நாட்டின் முக்கிய மாநிலங்களிலுள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கை:மராட்டியம் - 4410, கர்நாடகம் - 4255, ஆந்திரம் - 3675, தமிழகம் - 2865, கேரளா - 1850, உத்திரப் பிரதேசம் - 1662, குஜராத் - 1655, மேற்கு வங்கம் - 1105, மத்தியப் பிரதேசம் - 970, ராஜஸ்தான் - 850, புதுச்சேரி - 775, பஞ்சாப் - 670, டெல்லி - 560, பீகார் - 510, ஒரிசா - 464, அசாம் - 391, ஹரியானா - 350, ஜம்மு-காஷ்மீர் - 350, உத்ரகாண்ட் - 300, சத்தீஷ்கர் - 250, திரிபுரா - 200, ஜார்க்கண்ட் - 190, இமாச்சல் பிரதேஷ் - 115.
மருத்துவக் கல்லூரிகளில் இடம்:
மாநில மருத்துவக் கல்லூரிகள் அளவில் சற்று பெரியவை என்பதால், வருடத்திற்கு 150-200 மாணவர்களை சேர்க்கின்றன. மேலும், சில தனியார் கல்லூரிகளைத் தவிர்த்து, AIIMS, ஜிப்மர் மற்றும் CMS-Vellore போன்ற பல மத்திய மற்றும் டிரஸ்ட் நிதியுதவி பெறும் கல்லூரிகள், 50-75 இடங்களையே வழங்குகின்றன. எனவே, இந்த புகழ்பெற்ற கல்லூரிகளில், மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான போட்டி மிக அதிகமாகவே உள்ளது.
மேலும், அதிகளவிலான வெளிநாட்டு மாணவர்களும், மருத்துவம் படிக்க இதுபோன்ற கல்லூரிகளுக்கு வருவதால், உள்நாட்டு மாணவர்களுக்கு இன்னும் நெருக்கடி அதிகரிக்கிறது. உதாரணமாக, கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 1953ம் ஆண்டு நிறுவப்பட்ட கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி, தனது மாணவர் எண்ணிக்கையில் 3ல் 2 பங்கு மாணவர்களை வெளிநாடுகளிலிருந்து எடுத்துக் கொள்கிறது.
அதேபோன்று, தமிழகம், மராட்டியம், ஆந்திரம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலுள்ள சில கல்லூரிகளும் அதிக வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதோடு, அதிக கட்டணங்களுக்கு, தங்களுடைய இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளை வழங்குகின்றன.
மருத்துவ படிப்பு:
மொத்தம் 4.5 வருடங்களைக் கொண்ட மருத்துவப் படிப்பானது, 3 பகுதிகளாகவும், 9 செமஸ்டர்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டரும், 120 கற்பித்தல் நாட்களைக் கொண்டவை. இந்திய மருத்துவக் கவுன்சிலின்(MCI) விதிப்படி, மருத்துவ படிப்பு பயிற்சியானது, அடிப்படை அறிவியல் மற்றும் கிளீனிக் நிலைக்கு முந்தையப் பாடங்களை 1 வருடமும், துணை மருத்துவ அறிவியல் பாடங்களை 1.5 வருடங்களும், கிளீனிக்கல் பாடங்களை 2 வருடங்களும் கொண்டதாக இருக்கும்.
1 வருட கட்டாய சுழற்சி இன்டர்ன்ஷிப் -க்கு பிறகு பதிவை பெறலாம். பல மருத்துவக் கல்லூரிகளில், அடிப்படை அறிவியலுடன், கிளீனிக்கல் பாடங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மிக சிறியளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது. மேலும், மாணவர்களின், செயல்பாடு, தகவல்தொடர்பு அல்லது நடத்தை மாற்றங்கள் குறித்து மிக சிறிதளவே கவனம் செலுத்தப்படுகிறது.

இன்டர்ன்ஷிப்:
இறுதி MBBS தேர்வை முடித்தப்பிறகு, முழு பதிவு மற்றும் MBBS பட்டத்தைப் பெறுவதற்கு ஒரு மாணவர், 12 மாதங்களுக்கு கட்டாய ரொட்டேஷனல் இன்டர்ன்ஷிப் செல்ல வேண்டும். இதன்மூலம் ஒருவர் தனது பணியின் நடைமுறை தன்மையை கற்றுக்கொள்ள முடிகிறது.
இந்த 12 மாதங்கள் இன்டர்ன்ஷிப்பில் 6 மாதங்கள், ஒருவர் படிக்கும் கல்லூரி மருத்துவமனை அல்லது மாவட்ட மருத்துவமனையிலும், 3 மாதங்கள் சிறியளவிலான மாவட்ட/தாலுகா/சமூக சுகாதார மையங்களிலும், 3 மாதங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணிபுரிய வேண்டும்.

No comments:

Post a Comment