Wednesday 14 December 2011

முதல் இரவு (First Nigh).....

முதல் இரவு (First Nigh).....

உலகில் பருவ வயதைத் தாண்டிய, சிந்திக்க தெரிந்த எல்லோறும் ஒரு முதல் இரவுக்காக காத்திருக்கிறார்கள்.

திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக வாழ்க்கையில் ஒரே ஒரு உதலிரவே கிடைக்கின்றன, பலர் அந்த முதலிரவை திருமணத்திற்கு முன்னர் அப்படி, இப்படி என்று கற்பனை பண்ணிக்கொன்று அந்த நாளைக்காக காத்திருக்கின்றார்கள்,இன்றைய இளைஞர் யுவதிகள் அனைவரும் உடலுரவுக் கலையைப் பற்றி திருமணத்திற்கு முன்னரே மஞ்சள் பத்திரிகைகள்,ஆபாச திரைப்படங்கள், ஆபாச இணையத்தள பக்கங்கள், ஆபாச கல்வித்திட்டங்கள், மற்றும் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்வதனால் அந்த விடயத்தில் உசாராக நடைபோட எத்தனிக்கின்றார்கள்,இந்த விடயத்தில் நகர் புற பெண்கள் உசாராக இருந்தாலும் கிராமத்துப் பெண்கள் மற்றும் அமைதியான ஒழுக்கமான சூழலில் வாழும் இளம் பெண்களும் அவர்களுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நான்கு குணங்களையும் முறையே கொண்டவர்களாக இருக்க முனைவதனால் இதில் கொஞ்சம் மந்த கெதிதான்.எவ்வளவு தான் இத்துரையில் உசாராக இருந்தாலும் அந்த நாள் நெருங்கும் போது எல்லா இளைஞர், யுவதிகளும் டிம்மாகிவிடுகின்றார்கள்.

சிலர் தாங்கள் பல வருடங்களாக காத்திருந்த, கற்பனை பண்ணியவாறு அந்த முதலிரவை ஒரெ முரையில் காம உணர்ச்சிகளையும் காமப் பசியையும் தீர்த்துக்கொள்ளலாம் என நினைக்கின்றனர், இது மிகவும் தவரானதாகும்.
முதலிரவை அடையும் புதிய தன்பதியினர், குறிப்பாக மனமகன் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.

முதலிரவு என்றால் கனவனுக்கும் மனைவிக்குமிடையில் உடலுறவு விடயத்தில் மட்டும் தான் என்பது தவராகும்.

இது மொத்த குடும்ப வாழ்க்கையின் முதலிரவாகும். அதில் காம ஆசையை பகிர்ந்து கொள்வது என்பது அதன் ஒரு பகுதி அல்லது ஒரு அங்கமாகும்,
இந்த இரவில் பல கட்ட அம்சங்கள் நடந்தேர வேண்டும், குறிப்பாக,
இந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து உண்ணுவது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் முதல் உணவு,இந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து புனனகிப்பது அவர்களின் வாழ்க்கையின் முதல் புன்னகை,அந்த முதலிரவில் மனமகனும் மனமகளும் சேர்ந்து முத்தமிடுவது அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பத்தை அன்பாய் ஆரம்பிக்க செய்யும் ஒரு அன்சமாகும்.

அந்த முதலிரவில் பழைய சில நினைவுகளை, சம்பவங்களை ஞாபகமூட்டல் புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாகும்,இவ்வாரு பல கட்ட வேலைகள் இருக்கின்றன. அவைகளில்முதலில் இருவரும் இணைந்து இரவு உணவை இன்பமாக பரிமாறிக்கொள்ளல்,
இரண்டாவதாக,
பழைய, முந்திய சில சம்பவங்களை ஞாபகப்படுத்திக்கொண்டு வந்து இருவரும் சுதந்திரமாக புன்னகைத்துக் கொள்ளல்,சில நேரம் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில், ஒரே ஊரில் உள்ளவர்களாக இருக்கலாம்,ஒரே சம்பவத்தில் தொடர்புபட்டவர்களாக இருக்கலாம்,இந்த சில மறக்க முடியா, சிறிக்கத்தக்க கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் போது இருவருடைய உள்ளங்களிலும் உடல்களிளும் தேங்கிக்கிடக்கும் ஒரு வித பயம், அச்சம் மெது மெதுவாக நீங்க ஆரம்பிக்கும்,
அந்த புன்னகைகளுடன் நீண்ட நாட்களாக காத்திருந்த அந்த முக்கியமான கட்டத்திற்கு இருவரும் எத்த முடியும்.

காம உணர்வுகளையும் உடல் பசியையும் தணிக்கின்ற அந்த பொன்னான சந்தர்ப்பம் இது,இதன் போது நிதானமாக நடந்து கொண்டால் முதலிரவின் இன்பத்தை, அதன் சுவர்க்கத்தை அடைந்து கொள்ள முடியும்.

இருவரும் இணைந்து கலவியில் இன்பமடைந்து ஓய்வு பெற்று விட்டு, அனுவவித்த இன்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அதே நேரம் இருவரும் உடலுரவில் இணைந்து கொள்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் சொல்லித்தந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்:

உடலுறவு கொள்வதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த துஆ:
"பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்ன ஷ் ஷைத்தான வ ஜன்னிப்னிஸ் ஷைத்தான மா றசக்னா
"


அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

அதன் பொருள்: "அல்லாஹ்வின் பெயரால், இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானை விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் (குழந்தைச்) செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!"
அல்லாஹ்த் தா ஆலா திருமறையில் கூரும் போது:
“மேலும் அவர்கள் எத்தகையோரென்றால், எங்கள் இரட்சகனே எங்கள் மனைவியர்களிடமிருந்தும், எங்கள் சந்ததியகர்களிடமிருந்தும் எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியைத் தந்தருள்வாயாக! அன்றியும், பயபக்தியுடையவர்களுக்கு எங்களை (நல்வழியில் நின்று அதன்பால் அழைக்கும்) வழிகாட்டியாகவும் நீ ஆக்குவாயாக என்று (பிராத்தித்துக்) கூறுவார்கள்." (அல் குர்ஆன் - 25: 74).


உடலுரவு முடிந்து உரங்கும் போது உளுச்செய்து கொண்டு உறங்க வேண்டும்,
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விடுவது பற்றிக் கேட்டார்கள், அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளுச்செய்யுங்கள்; உங்கள் பிற உருப்புக்களைக் கழுவுங்கள்; பிறகு உறங்குங்கள் என்றார்கள்."

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) ஆதாரம்: புகாரி

இதே போன்ற ஒரு செய்தியை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமயாகி) இருக்கும் போது உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத்தூய்மை (உளூ) செய்வது போன்று அங்கத்தூய்மை செய்வார்கள்." ஆதாரம்: முஸ்லிம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூரினார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவிடம் பாலுறவு கொண்டு விட்டு பின்னர் மீண்டும் (உறவு கொள்ள) விரும்பினால் அவர் (இடையில்) அங்கத்தூய்மை (உளூச்) செய்து கொள்ளட்டும்."
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) ஆதாரம்: முஸ்லிம்

முதலிரவு முடிந்து தூங்கிய தம்பதியினர் அதிகாலையில் எழுந்து கடமையான குளிப்பைக் குளித்து கடமையான சுபஹ் தொழுகைக்கு தயாரக வேண்டும்.

No comments:

Post a Comment