Thursday 17 February 2011

கருஞ்சீரகம் பற்றிய இஸ்லாமிய மற்றும் மருத்துவ ஆய்வு!! ஒரு சிறப்பு பார்வை...

கருஞ்சீரகம் (Nigella sativa) தென் ஐரோப்பிய, தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட கருஞ்சீரகத்தின் தாயகம். இது பழமையான ஒரு மணம் ஊட்டும் தாவரப் பொருளாகும். மிகப்பழமையான `ஹீப்ரு மொழியில் கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள் உள்ளன. பிளின் என்ற புகழ் பெற்ற பழங்கால மருத்துவ நிபுணர் தனது நூலில் கருஞ்சீரகத்தைப் பற்றி கூறியுள்ளார். கிழக்கு – மத்திய நாட்டுப் பகுதிகளில் இது நன்கு வளர்கிறது. இந்தியாவில் பஞ்சாப், பீகார், அஸ்ஸாம் மாநிலங்களில் காட்டுச் செடியாக வளர்கிறது. 
இச்செடி 20 முதல் 40 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும்.
Nigella Sativa எனும் பெயரைக் கொண்ட இவ்விதைகள் காலங்காலமாக அவற்றின் குணப்படுத்தும் ஆற்றலுக்குப் பெயர்போனவையாக இருந்துள்ளன.
இவ்விதைகளின் குணப்படுத்தும் ஆற்றல் உயிர்மருத்துவ (Biomedic) ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டு அது விவரம் குறித்த 450க்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. இவ்விதையின் சக்தி குறித்த மேலோட்டமான விவரங்களைப் பார்ப்போம்:
MRSA (methicillin-resistant Staphylococcus aureus) எனப்படும் ஒருவிதமான, பல கிருமிநாசினிகளுக்கு உட்படாத, கிருமியை அழிக்கும் சக்தியை கருஞ்சீரகம் உள்ளடக்கியுள்ளது.
மனிதர்கள் உட்கொள்ளும் பலவிதமான இரசாயனங்கள் உடலுக்குள் சென்று விஷமாக மாறிவிடுகின்றன. கருஞ்சீரகம் இவ்விதமான விஷங்களிலிருந்து உடலைக் குணப்படுத்துகின்றது.
சர்க்கரை வியாதியினால் பாதிக்கப்பட்டோரின் கணையம்(pancreas) எனப்படும் உடல் உறுப்பில் மடிந்துவரும் அணுக்களை இவ்விதை மறுவுயிர்ப்பிக்கும் ஆற்றலுடையது.
இஸ்லாம் என்ன கூருகிறது...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
 அல்லாஹ் எந் நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பொதுவாக கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்றும் கிராமங்களில் எல்லா வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள். அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக, நோய் நிவாரணியாக கருஞ்சீரகம் உபயோகப்படும்.

கருஞ்சீரகம் குறித்தும் அதன் நன்மைகளைக் குறித்தும் ஹதீஸ்களில் பல தகவல்கள் காணக்கிடைக்கின்றன.

”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, 5688. முஸ்லிம், 4451. திர்மிதீ, இப்னுமாஜா)

காலித் இப்னு ஸஅத்(ரஹ்) கூறினார் 

எங்களுடன் ஃகாலிப் இப்னு அப்ஜர்(ரலி) இருக்க நாங்கள் (பயணம்) புறப்பட்டோம். வழியில் ஃகாலிப்(ரலி) நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளியாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகாலிப்(ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக்(ரலி) உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். 
அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவரின் மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில்ஆயிஷா(ரலி) என்னிடம், 'நபி(ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்; 'சாமை'த் தவிர என்று கூறியதை கேட்டிருக்கிறேன்எனத் தெரிவித்தார்கள். நான், 'சாம் என்றால் என்ன?' என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'மரணம்என்று பதிலளித்தார்கள்.(ஸஹீஹ் புகாரி 5687)

அபூ ஹுரைரா(ரலி) கூறினார் 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'கருஞ்சீரக விதைiயில்'சாமைத்தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளதுஎன்று கூறினார்கள். 
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்கள்: 
'சாம்என்றால் 'மரணம்என்று பொருள்.'அல்ஹப்பத்துஸ் ஸவ்தாஎன்றால், (பாரசீகத்தில்)'ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.
(ஸஹீஹ் புகாரி 5688)

மேற்கண்ட நபிமொழிக்கு விரிவுரையாகிய ஃபத்ஹுல்பாரி, உம்தத்துல் காரீ, அல்மின்ஹாஜ் ஆகிய நூல்களில் கருஞ்சீரத்தின் சிறப்பைக் குறித்த விபரங்களை அனுபவித்தே எழுதியுள்ளனர். கருஞ்சீரகத்தின் நோய் நிவாரணி தன்மை எல்லாக் காலங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கருஞ்சீரகம் குறித்த தகவல்களின் உண்மைத் தன்மையில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.



கருஞ்சீரகத்தின் பலன்கள் வருமாறு:-
வலி நிவாரணி, கிருமிநாசினி; அழற்சி, குடற்புண், பூஞ்சை ஆகியவற்றை எதிர்க்கின்றது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றது, வலிப்பை குறைக்கின்றது, வைரஸ் கிருமிகளை எதிர்க்கின்றது, நுறையீரல் அடைப்பைப் போக்கவல்லது, கல்லீரலைப் பாதுகாக்கின்றது, நீரிழிவை எதிர்க்கின்றது, சிறுநீரகத்தைப் பாதுகாக்கின்றது, புற்றுநோய்க்கான காரணிகளைத் தடுக்கும் சக்தியுடையது.
தோல் நோய்களை குறைக்கும். பசியைத்தூண்டும். சீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை குணப்படுத்தும். புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். பால் சுரப்பைக் கூட்டும். மேலும்..
  • சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும்.
  • கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும்.
  • கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர தேமல், சொறி மறையும்.
  • கருஞ்சீரகத்தையும், தும்மட்டிக்காயையும் சேர்த்து அரைத்து விலாப்பக்கம் பூசி வர குடல் பூச்சிகள் வெளியேறி விடும்.
  • கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும்.
  • கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு உற்பத்தி மாறும்.
  • கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும்.
  • கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில் ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.
  • கைப்பிடி கீழா நெல்லி இலைகளோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்து சிறிதளவு பால் சேர்த்து அரைத்து பின் இதை ஒரு கப் பாலில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரம் பின் மற்றும் மாலை நேரம் பருகி வர மஞ்சட்காமாலை குணமாகும்.
    கருஞ்சீரகம் எண்ணெய்
  • குளிர்ச்சியால் ஏற்படும் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்துப் பிறகு மூக்கில் சொட்டுகள் விட்டால் கடுமையான ஜலதோஷம் நீங்கும்.
  • கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும்.
  • கருஞ்சீரகத்தைத் தூளாக்கி தேனில் கலந்து வெந்நீருடன் சாப்பிட்டால் மூத்திரக் கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். மாதவிடாய்ப் போக்கையும் சீராக்கும்.
  • கருஞ்சீரகப் பொடியை ஒரு துண்டுத் துணியில் கட்டி உறிஞ்சி வந்தால் ஜலதோஷத்திற்கு நல்லது.
  • தாய்ப் பாலில் ஏழு கருஞ்சீரக வித்துகளை ஊறவைத்துப் பொடியாக்கி உறிஞ்சி வந்தால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.
  • 5கிராம் கருஞ்சீரகத்தைத் தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் சுவாசக் கோளாறு சீரடையும்.
  • கருஞ்சீரகத்தை அரைத்துப் பத்துப் போட்டால் தலைவலிக்கு நல்லது. கருஞ்சீரகத்தைக் காடியுடன் (vinegar) வேகவைத்து வாய் கொப்புளித்தால் பல் வலிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
  • கரும்பித்தம் மற்றும் கபத்தால் ஏற்படும் அஜீரணக் கோளாறை அகற்றுவதும் கருஞ்சீரகத்தின் தனிச் சிறப்பாகும்.
  • காஞ்சிரைப் பூண்டின் சாறுடன் கருஞ்சீரகத்தைக் குழைத்துச் சாப்பிட்டால் நுண் கிருமிகள் வெளியேறிவிடும்.
  • கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி மெழுகு மற்றும் அல்லி எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
  • நாய்க்கடி, பிரசவ இரத்தப் போக்குத் தடங்கல், கர்ப்பபை வலி, சிரங்கு, கண்வலி, போன்ற நோய்களுக்கும் கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். 

    

கருஞ்சீரக எண்ணெய்..
                                 உலகின் பல்வேறு நாடுகளில் கருஞ்சீரகமும் அதன் எண்ணெய்யும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதிலிருந்து கருஞ்சீரகத்தின் மருத்துவப் பயன்களை எவராலும் மறுக்க முடியாது என்பதை உணர முடிகிறது.

கருஞ்சீரக எண்ணெய்யின் மருத்துவ பயன்கள்..
                                                                                                          மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கக் கூடிய ஆற்றல் பராகா (கருஞ்சீரக) எண்ணெய்க்கு உண்டு. பராகா எண்ணெய்யை அரை டீஸ்பூன் எடுத்து அதே அளவுள்ள தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டால் வாழ்நாள் முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ முடியும். டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.
கருஞ்சீரக எண்ணெய் பக்கவாத நோய்க்குச் சிறந்த மருந்தாகும்.
உடலுக்கு நோய் வந்துவிட்டால், நோயைக் கட்டுப்படுத்த பராகா (கருஞ்சீரக எண்ணெய்) மிகவும் உதவும், நோய்க்கு ஏற்றாற்போல் வெந்நீர், பால், பழச்சாறு ஆகியவற்றுடன் இந்த எண்ணெய்யை கலந்து சாப்பிட்டால் நோய் கட்டுக்குள் வந்துவிடும். இந்த எண்ணெய்யை ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
 தலை முடிகொட்டுவது
                                                            பெண்களைப் பொருத்தவரை தலைமுடி கொட்டுவது என்பது மிகப் பெரிய பிரச்சினை. ஆண்களைப் பொருத்தவரை இளவயது நரை மிகப் பெரிய பிரச்சினை. இரண்டுக்கும் பராகா எண்ணெய் உதவும். எலுமிச்சை சாற்றை தலை முழுவதும் (முடியின் வேர்க்கால்களில்) நன்றாகத் தேய்த்து 15 நிமிஷம் காத்திருங்கள். முடி நன்றாக உலர்ந்துவிடும். பின்னர் ஷாம்பூ போட்டுக் குளிக்க வேண்டும். குளித்து முடித்தவுடன் தலையை ஈரப்பதமின்றி நன்றாகத் துடைத்து விடுங்கள். பின்னர் முடியின் வேர்க்கால்கள் முழுவதும் பரவும் அளவுக்கு பராக்கா எண்ணெய்யை நன்றாகத் தேயுங்கள். இவ்வாறு தொடர்ந்து ஆறு மாதம் செய்தால், நீங்கள்தான் முடிசூடா மன்னராகதிகளாம்.
இயற்கை தன்னுள் இத்தகைய பல பொருள்களை உள்ளடக்கியுள்ளது. மனிதர்கள் காலங்காலமாக அவற்றைப் பயன்படு்த்தியும் வந்துள்ளனர். ஆனால், அல்லோபதி மருத்துவமுறையின் பிரவேசம் அத்தகைய இயற்கை வைத்தியமுறைகளை பின்தள்ளியுள்ளது. இப்போது சிறிது சிறிதாக மனிதர்கள் இயற்கைமுறையிலான வைத்தியத்தின் சிறப்பை உணர ஆரம்பித்து பயன்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர். 
ஆக்கம் & தொகுப்பு: மு.அஜ்மல் கான். 

No comments:

Post a Comment