Wednesday 10 November 2010

உங்கள் குழந்தை ஏன் ப்ளே ஸ்கூல் போக வேண்டும் ? ஒரு சிறப்பு பார்வை...


பள்ளி தான் அடிப்படைகளைக் கற்றுக்கொடுக்கும் கூடம். அது அருமையாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லா பெற்றோருடைய கனவு. ஆனால் நினைத்தபடி எல்லாம் நடக்குமா என்பது நடைமுறை சிக்கல். குழந்தைகளை எல்.கே.ஜியில் சேர்ப்பதற்கு முன்னால் சும்மா ஒரு நட்பு சூழலில், பெற்றோரை பிரிந்து தனியா மத்த குழந்தைகளுடன் சேர்ந்து இருக்க முடிகிறதானு டெஸ்ட் செய்யற இடம் தான் ப்ளே ஸ்கூல் என அறிந்து கொண்டேன்.  தினமும் நெருங்க எனக்கு டென்ஷன் அதிகமாச்சு. கண்டிப்பா ஸ்கூல் அனுப்பனுமானு? நாமே ஏன் நேரு மாதிரி வீட்டுக்கே சில டீச்சர்களை வரவழைச்சு பாடம் சொல்லி குடுக்க கூடா?னு நான் வெகுளியா மேலிடத்தை கேட்க, அது என்ன டீச்சர்கள்..? என பப்ளிக் பிராஸிகியூட்டர் மாதிரி பாயிண்ட புடிக்க எதுக்கு வம்புனு பேசாம இருந்துட்டேன்.

முந்தின நாளே வாட்டர் பாட்டில், அத வைக்க ஒரு ஸ்கூல் பேக், மத்த குழந்தைகளுக்கு குடுக்க சாக்லேட்ஸ்னு ஒரே அமர்க்களம். முத முதலா ஸ்கூல் போறான், . அதன்பின் "மை நேம் இஸ் அஜ்வத் மஹதி! னு தன்னை அறிமுகப்படுத்தி கொள்வான். அவனிடம் நாங்கள் தமிழில் மட்டுமே உரையாடுவதால், யாரேனும் திடீர்னு ஆங்கிலத்தில் என்ன கேட்டாலும் ஒரே பதில் தான். அதுக்கும் எதிராளி மசியவில்லையெனில் ஷேக்கன்ஸ் ! என கூறி கைகுலுக்கி விடுவான்.

ப்ளேஸ்கூலில் என்ன நடக்க போகுதோ? 
அஜ்வத் மஹதி புதிய சூழலில் எப்படி நடந்து கொள்கிறான் என பாக்க எனக்கு அளவிடமுடியாத ஆவல். குழந்தைகளுக்கும், அம்மாக்களுக்கு மட்டும் தான் கிளாஸ் ரூமில் அனுமதியாம். என்னை மாதிரி குழந்தை உள்ளம் கொண்ட அப்பாக்களுக்கு அனுமதி இல்லையாம். குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். குழந்தைக்கு புரியாவிட்டால் திரும்ப புரியுமாறு சைகைகளுடன் பேசினார்கள். சற்று நேரத்தில் குழந்தை அவர்கள் சொல்வதைச் செய்வது அழகாக இருந்தது. உதாரணத்திற்கு, "ஹாப்" என்றார்கள். புரியவில்லை என்றால், கையால் சைகை செய்து "ஹாப்" என்றார்கள். குழந்தை குதித்தது."புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை விழித்தது. "பேப்பரை காட்டி, குப்பை கூடையைக் காட்டி, புட் திஸ் இன் டஸ்ட்பின்" என்றார்கள். குழந்தை செய்தது. பின்பு வண்ணம் தீட்டல், எண்ணுதல், அடுக்கி வைத்தல், சாப்பிடும் பொருட்கள் (எதெல்லாம் சாப்பிடக்கூடியவை எனக் கண்டுபிடிக்க வேண்டும். போன் சாப்பிடும் பொருளாகச் சொன்ன பொழுது, போனை சாப்பிடுவாயா என்று கேட்டு சரி செய்தார்கள்) என குழந்தையை மிகவும் சிரமப்படுத்தாது அவர்களது செளகரியத்திற்கு கேள்வி கேட்டது பிடித்திருந்தது. இன்னொரு அழுகை தாங்காது என்று அங்கேயே சேர்த்தோம்.  

மேலும் தமிழ் இரண்டாவது மொழியாகவும் இந்தி மூன்றாவது மொழியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டோம்.- ஹோம்வர்க் என்று மென்னியைப் பிடிக்க கூடாது என்றும் நினைத்தோம்.- ஒரு வகுப்பில் அளவான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். முதலில் 20 என்றார்கள். பள்ளி வளர வளர சில சமயம் 30 கூட பார்க்கிறோம்.- லேப்டாப் போன்ற hifi வேண்டாம் என்றே தோன்றியது.- போக்குவரத்து வசதி பார்த்தோம். வீட்டின் அருகில் வேன் ஏறி/இறங்கும் வசதி இருந்தது.

இவர்கள் பள்ளியில் பிடித்த சில விஷயங்கள்:

1. பாடங்களின் சுமை மெல்ல மெல்ல கூடும். எல்.கே.ஜி, யு.கே.ஜியில் தேர்வுகள் கிடையாது. நம்மிடம் சொல்லாமல் அவர்களே அவர்களை பரீட்சித்து ரிப்போர்ட் தருவார்கள். ரிப்போர்ட்டில் அவர்களது பல்வகை திறன்களும் மதிப்பிடப்பட்டிருக்கும். அவர்களது ஆர்வங்களையும், முன்னேற்றங்களையும் வகுப்பாசிரியர் கைப்பட குறிப்பிட்டிருப்பார். ஒன்றாம் வகுப்பில் இருந்து தேர்வுகள் தொடங்கும். பெரும்பாலும் வாரத்தில் ஒரு தேர்வே இருக்கும். எனவே படிப்பது எளிதாகும். எப்படி என்றாலும் முட்டி மோதி தான் படிக்க வேண்டும்.

2. ஹோம்வர்க் கிடையாது (அ) மிகக் குறைவு.

3. ஆங்கிலம் பேசும்திறன் முன்னேற்ற வீட்டில் இருந்து அவர்களுக்கு பிடித்த பொம்மையைக் கொண்டு வந்து அது பற்றி பேசச் சொல்வார்கள். குழந்தைகள் ஆர்வமாக பொம்மையை எடுத்துக் கொண்டு அது பற்றி பேசக் கற்றுக் கொள்வார்கள்.

4. பாடம் தவிர வேதம், வெஸ்டர்ன் ம்யூசிக், நடனம், நீதிபோதனை, பொது அறிவு என்று பல விஷயங்கள் உண்டு. மூன்றாம் வகுப்பு வரை "தின்கிங் ஸ்கில்ஸ்" என்று ஒரு பேப்பர் இருக்கும். அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு அவர்களது மூளைத்திறனை மேம்படுத்தும் கேள்விகள் உள்ளது. கண்டிப்பாகப் படித்து ஒன்றும் பண்ண முடியாது. இவர்கள் ஆண்டு விழாவைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். ஆசிரியர்/குழந்தைகளின் முயற்சி வெளிப்படும்.

5. வண்ண நாள், ப்ரூட் சாலட் நாள், சமூக நாள் என்று சில நாட்களுடன் பண்டிகை நாட்களும் கொண்டாடுவார்கள். கொலுவிற்கு குழந்தைகளே கொலுவாக இருப்பார்கள். கிறிஸ்துமசுக்கு எல்லோரும் அவரவர் வகுப்பில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் செய்வார்கள். தீபாவளிக்கு பலகாரங்கள் பரிமாறிக் கொள்வார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் அவர்தம் வழியில் குழந்தைகளுக்கு உற்சாகம் கொடுக்க முயல்வார்கள். உதாரணத்திற்கு வகுப்பில் ஒவ்வொருவரும் சுழல்முறையில் ஏதாவது ஒரு பொறுப்பை ஏற்றிருப்பார்கள்.

6. "அப்சர்வேஷன் டே" என்று ஒரு நாள் நம் குழந்தைகள் வகுப்பில் கற்றுக்கொள்வதையும் ஆசிரியர்கள் கற்பிப்பதையும் காணலாம்.
7. குழந்தைகள் வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அறியும் பொழுதே அவர்கள் எவ்வளவு தூரம் இவர்களுடன் பழகுகிறார்கள் என்று புரியும்.

8. நான்காம் வகுப்பில் இருந்து, ஒவ்வொரு வகுப்பிலும் அனைவரும் ஓரிரு முறையேனும் மற்ற பிரிவினருக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். வகுப்பில் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை உருவாக்கும்.

9. மாதமொருமுறை ஆசிரியர் பெற்றோர் கலந்துரையாடல் இருக்கும்.

10. அடிக்கடி ப்ராஜக்ட் என்று பெற்றோருக்கு வேலை கொடுத்தாலும் அது குழந்தைகளின் புரியும் திறனுக்கு என்று உவப்புடன் செய்தால் சுவாரசியம் தான். செடிகள் பற்றி அறிய செடி வளர்த்து எடுத்துச் செல்வார்கள், ஏதேனும் கருத்தை மையமாக வைத்து சார்ட், மாடல் எல்லாம் செய்யச் சொல்லி வகுப்பை அலங்கரிப்பார்கள். 

என்ன பிடிக்கவில்லை? 
எல்லா விரல்களும் ஒன்று போல் இருப்பதில்லை. ஆசிரியர்களும் அப்படியே. எல்லோரும் ஒன்று போல் பயிற்சி எடுத்துக் கொண்டால் பிரச்னை இருக்காது என்று எண்ணுகிறேன். 

அடுத்தது கழிப்பறை. பள்ளியில் பிள்ளைகள் இல்லாதவரை சுத்தமாக இருப்பது போல் இருக்கிறது. அதன் பின்? இதற்கு தீர்வு உண்டா? என் நண்பர்களிடம்  விசாரித்த வரை, பிரபலமான பள்ளிகள் உட்பட, கழிப்பறை சுத்தம் என்று எந்த் பிள்ளையும் சொன்னதாகத் தெரியவில்லை. அது வீட்டின் சுத்தம் முன்பு தோற்றுப்போவதாலா அல்லது மிகச் சிரமமான விஷயமா என்று புரியவில்லை. பள்ளி செல்லும் பொழுதெல்லாம் சம்மந்தப்பட்டோரிடம் சொல்கிறோம்; அதன் பின் பரவாயில்லை என்று சொன்னாலும் பிள்ளைகள் கழிப்பறை செல்லத் தயங்குகிறார்கள். பணம் கட்டி பள்ளி சேர்த்தாலும் கழிப்பறை விஷயம் மட்டும் மாறுவதில்லை. இந்திய மனப்பாங்காக அதையும் சகிக்கிறோம். இதைப் பற்றி உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்..

முதல் நாள் ப்ளே ஸ்கூல் முடிந்து இரண்டு  மணி நேரம் கழிச்சுவந்த மஹதியிடம், உனக்கு எத்தனை பிரண்ட்ஸ் கெடச்சாங்க சொல்லு பாப்போம் என விசாரிக்க,அனிஸ், கார்த்திகா, ப்ரியா, செல்வி,மம்தா எல்லாரும் பிரண்ட்ஸாயிட்டாங்க டாடி சொன்னான்.

ஏன்டா உனக்கு ஒரு பையன் கூடவா பிரண்டா கெடைக்கல..?  என்று கேட்டு பூரிப்படைதேன்.


ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment