Thursday 2 September 2010

அனாதை இல்லத்தில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்சனைகள் !! ஒரு சமூக பார்வை..

சமீபத்தில் எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண்மணி சென்னையிலிருக்கும் ஒரு அனாதை இல்லத்திலிருந்து பேசுவதாகவும், என்னால் ஆன பண உதவியை குழந்தையொன்றை படிக்க வைக்க தந்து உதவுமாறு கேட்டுக்கொண்டார். 

நண்பர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது அனாதை இல்லங்கள் சுயலாபம் பணலாபத்துக்காக மாறிவிட்டிருப்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். பெண்கள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட விஜயேந்திரரின் அனாதை இல்லம் ஒன்றில் 14 வயதுப் பெண்குழந்தைகள் மர்மமான முறையில் இறந்து போயிருக்கின்றன. இது பற்றி அப்போது ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் விரிவாகச் செய்திகள் வெளியிட்டன. ஆனால் இன்றோ அந்த வழக்கே சுவடு தெரியாமல் போய்விட்டது.

காதல் கொண்டேன் படத்தில் தனுஷ் அனாதை இல்லத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் நிஜத்தில் பலமடங்கு அதிகமாக இல்லத்துக் குழந்தைகளை அரித்துக் கொல்கின்றன. குறிப்பாக பெண்குழந்தைகள்.

சென்னையில் அம்பத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு கருணை இல்லத்திற்கு நண்பர் ஒரு சமூகத் தொண்டு அமைப்பின் மூலம் தொடர்ந்து சென்றிருக்கிறார். அங்கு சிறு குழந்தைகளோடு கலந்து பேசி, விளையாடி அவர்களுக்கு வேண்டிய பொருட்கள் வாங்கிக் கொடுத்தபடி இருந்திருக்கின்றனர் தொண்டு அமைப்பினர். ஆனால் நண்பரும் அவருடைய நண்பர்களும் செல்லும் நேரத்திலெல்லாம் இல்லத்திலிருந்த பத்தாவது மற்றும் அதற்கு மேல் படிக்கும் பெண் சிறுமிகள் இவர்கள் யாரிடமும் சரியாக முகம் கொடுத்துப் பேசுவதேயில்லை. தொண்டு அமைப்பினர் வலிந்து போய் பேசினாலும் பயந்தபடியே நழுவியுள்ளனர். 

ஒவ்வொரு முறை செல்லும் போது இருந்த பெண் குழந்தைகள் இல்லாமல் போயிருப்பர். வேறு சிலர் வந்திருப்பர். காரணம் கேட்கும் போது அக்குழந்தைகளை அவர்களின் பெற்றோர் வந்து அழைத்துப் போய்விட்டதாகத் தகவல் கூறியுள்ளனர் இல்லத்து உரிமையாளர்கள்.

நண்பரின் தொண்டு அமைப்பினர் உண்மையை தெரிந்துகொள்ள நேராக அந்தச் சிறுமிகள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கே சென்று அவர்களை சந்தித்துப் பேசிய போது அவர்களில் பலர் பாலியல் சித்திரவதைக்குள்ளானது தெரியவந்தது. உரிமையாளருக்கு இதில் ஏதோ பங்கிருப்பது தெரியவந்துள்ளது. இது போக அனாதை இல்லத்தில் வேலை பார்க்கும் சில ஆண்களும் 14 வயது சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

நண்பரின் தொண்டு அமைப்பினர் இதை மேலே சொல்லி பிரச்சனையைக் கிளப்ப முயன்ற போது அவர்கள் எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டார்கள். இதில் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெரிய ரிஸார்ட்டுகள் நடத்தும் பெரிய குழுமம் ஒன்றின் ஆதரவில் இந்த இல்லம் இயங்கி வருவதும் அதன் உரிமையாளருக்கு இல்லத்தின் உரிமையாளினியான மலையாளத்துப் பெண்மணி வேண்டியவர் என்பதும் காரணமாயிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

தொண்டு அமைப்பினரின் முயற்சியால் பல சிறுமிகள் மிஷனரிகள் போன்ற பெரிய சமூக அமைப்புக்கள் நடத்தும் இல்லங்களில் சேர்க்கப்பட்டனர்.


இனி.. இந்த விஷயங்களை இவ்வளவு தூரம் படித்த உங்களுக்கு..
இனிமேல் பிறந்த நாள், நினைவு நாள், திருமண நாள் என்று ஓரு நாள் அனாதை இல்லங்களுக்குச் சென்று உணவளித்து அவர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பது மட்டும் போதாது.

அந்தக் குழந்தைகளை அடிக்கடி சென்று பாருங்கள். அவர்களோடு பேசும் போது அவர்கள் இது போல ஏதாவது பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிய முயலுங்கள். அப்படி ஏதாவது தென்பட்டால் அவர்களுக்கு உதவவும், அது போன்ற தவறான இல்லங்களை சுற்றி வாழும் மக்களுக்கு முடிந்த அளவுக்கு அடையாளம் காட்டவும் செய்யுங்கள்.

அதே நேரத்தில் நல்ல இல்லங்களை ஆதரியுங்கள். அவர்களுடன் சேர்ந்து அக்குழந்தைகளை நம் குடும்பத்தவர் போல நடத்தி சந்தோஷப்படுத்துங்கள்.

சென்னையிலுள்ள முதியோர், அனாதை மற்றும் ஊனமுற்றோர் நல வாழ்வு  இல்லங்களின் தொடர்பு விவரங்கள் கீழே. யாருக்காவது பயன்படும் என்று நினைக்கிறேன்.

Mother Teresa Charitable Trust
43, Nelson Manickam Road,
Chennai - 94.
Ph: 044-23743883
--------------------------------------------
Karunai Illam
75, LDG Road
Little Mount
--------------------
St.Joseph Cluny Hospital
3, Rue suffren street,
Pondicherry.
0413-2334813
--------------
Mr.Govindakrishnan
Nethrodaya Illam
Near Mugapair west bus stand
09382896636
-------------------
Father Samuel  (helps blind people)
Carmel Christian Church
73, Thangam colony,
1st floor, church 2nd cross st,
Anna nagar west,
Chennai-600040
Phone:9840497550
--------------------------
Father Babu (Helps blind people)
Divine Hope in Life for the disabled
9/285, B-type, Sidco nagar,
villivakkam, Chennai -49
Ph: 26173323
Mobile: 94444 77143
------------------------------
TAMILNADU HANDICAPPED FEDERATION CHARITABLE TRUST
NO.21 AA, Earikarai Salai, Kottur,
Chennai - 600 085.
Tamilnadu, India
Ph :+ 91 44 - 32927664
----------------------------
Akshaya Rehabilitation trust,
37-G/168, Prasath Road,Narimedu,
Madurai-625002
Ph:9843070091
info@akshaya-india.org

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment