Monday, August 30, 2010

சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving Licence) பெறுவது எப்ப‍டி?


டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களை வாசகர்களுக்கு விளக்கிய சென்னை-மேற்கு வட்டார ப் போக்குவரத்து அதிகாரி இன்னும் பல உபயோகமா ன தகவல்களையும் கூறி னார். அவற்றின் தொகுப்பு …
இங்கே வழங்கப்பட்ட ஓட் டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றா ல் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா?
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட் ட வேண்டிய அவசியம் ஏற் படலாம். அந்த நாட்டில் டிரை விங் லைசென் ஸுக்கு விண் ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடி யாத சூழ்நிலையில், இங்கே இருந் து செல்லும்போதே இன்டர் நேஷனல் டிரைவிங் லைசெ ன்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த த்தின்படி, அந்த டிரை விங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத் துக்குச் செல்லுபடி யாகும்.
சர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி?
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே,இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண் ணப்பிக்க முடியும். அதற்கு ரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர் த்தி செய்து, அதனுடன் டிரை விங் லைசென்ஸ், பாஸ்போ ர்ட், விண்ணப்பதாரர் எந்த நா ட்டுக்குச் செல்கிறாரோ அதற் குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட் டோக்கள் ஆகியவற்றை இணை த்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டு ம். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப் பட்டுவிடும்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவத ற்கான லைசென்ஸ் வைத்திரு ந்து, கார் ஓட்டக் கற்றுக் கொண் டால், அவருக்கு இரண்டு வகை யான வாகனங்களையும் ஓட்ட தனி லைசென்ஸ் வழங்கப்படுமா ? இரண்டுக்குமாக சேர்த்து ஒரே லைசென்ஸ் வழங்கப்படுமா?
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருப்பவர். கார் ஓட்டுவதற்கு முதலில் பழகு நர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இரண்டு சக்கர வாகனத்துக்குண்டான லைசென்ஸ் இருப்பதால் சாலை விதிமுறைகள் குறித்த தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப் படும். முப்பது நாட்களுக்கு கார் ஓட்டப் பழகியவுடன், விண்ண ப்பம் 8 ஐ பூர்த்தி செய்து விண் ணப்பிக்க வே ண்டும். வாகன ஆய்வாளர் முன்பாக நீங்கள் கா ரை ஓட்டிக் காட்ட, அவர் திரு ப்தி அடைந்தால், இரண்டு சக் கரம், நான்கு சக்கரம் என இர ண்டு வகை வாகனங்களை யும் ஓட்டுவதற்கு புதிதாக ஒரே லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.
ஒருவருக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் அதில் குறிப்பிடப்பட்டுள் ள தேதியில் காலாவதியாகிறபோது புதுப்பித்துக் கொள்ள என்னவழிமுறை பின்பற்ற வேண் டும்?
பொதுவாக, போக்குவரத்து அல்லாத வாகனங்களை ஓட் டுவதற்கு உரிமம் பெற விண் ணப்பிப்பவர்களுக்கு ஐம்பது வயது வரை செல்லத்தக்க ஓட்டுநர் உரிமங்கள் வழங்க ப்படும். அதன் பிறகு, அத னை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்குரிய படிவம் 9 ஐ பூர்த்தி செய் து, உரிய கட்டணம் செலுத்தி, மருத்துவச் சான்றிதழுடன் விண்ண ப்பித்தால், அது பரிசீலிக்கப்பட்டு ஐந்தாண்டு காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படும். போக்குவரத்து வாகனங்கள் என்றால்மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இப்போது இரு சக்கர வாக னமோ (பைக்) காரோ வாங்கு ம்போது 15 ஆண்டுகளுக்கு செ லுத்த வேண்டிய சாலை வரி யை ஒரே தடவை யில் ‘ஆயுள் கால வரி’ என்ற பெயரில் வசூ லித்து விடுகிறார்களே? இப்படி ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமா?
1998ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து அல்லாத பிரிவில் வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுட்கால வரி யாக வசூலிப்பது நடைமு றையில் உள்ளது. வாகன உரிமையாளர் களுக்கும், அர சாங்கத்துக்கும் இது செளக ரியம்தானே? போக்குவர த்து வாகனங்களுக்கு காலாண்டு, அரையாண்டு, ஒரு ஆண்டு மற் றும் ஐந்தாண்டுகளுக்கு வரிப்படி சாலை வரி செலு த்த முடியும். (இன்னொரு வி ஷயம், வாகனம் வாங்குகிறபோது சாலை வரி என்ற பொதுவான பெயரில் செலுத்தும் தொகையில், வாகனங்க ளுக்காக செலுத்தப் படும் சாலை வரியைத் தவி ர, வாகன பதிவுக் கட்டணம், சாலை பாதுகாப்பு வரி, சே வைக் கட்டணம் என்று இன் னும் சில செலவுகள் அடக் கம்).
ஒருவர் கார் வாங்கும்போது ஆயுள் வரி செலுத்துகிறார். சில ஆண்டுகள் கழித்து, அவ ர் ஆந்திராவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிடுகிறார். தனது காரை ஆந் திராவுக்குக் கொண்டு செல்லும்போது, அங்கே மறு படியும் சாலை வரி கட்ட வேண்டுமா?
ஆமாம். சாலை வரி என்பது அந்தந்த மாநிலங்களுக்கு செலுத்தப்படும் வரி. எனவே, நீங்கள் உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன் னொரு மாநிலத்துக்கு எடுத் துக் கொண்டு செல்லும்போ து, அங்கே அதை மறுபடியும் ரெஜிஸ்டிரேஷன் செய்யும் பட்சத்தில், அப்படிச் செய்துவிட்டு, அத ற்குரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு விண்ணப்பித்து, மீதி வருட ங்களுக்குரிய வாகன வரியை நீங்கள் திரும்பிப் பெற வழி உண்டு.உதாரணமாக வாகனம் வாங் கிய ஐந்தாவது ஆண்டில் நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து வேறு மாநிலத்து க்கு வாகனத்தை எடுத்துக் கொண் டு சென்று மீண்டும் பதிவுசெய்தா ல், மீதி பத்து ஆண்டுகளுக்குரிய வாகன வரியை நீங்கள் ரீஃ பண்டு வாங்கிக் கொள்ள முடி யும்.
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பா ட்டுச் சான்றிதழ் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது?
இன்று காற்று மண்டலம் எந்த அளவுக்கு மாசுபட்டுப் போயிருக்கி றது என்பதையும், இதில் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகைக்கு எந்த அளவுக்கு பங்கு இருக் கிறது என்பதையும், நான் சொ ல்லித் தெரிந்துகொள்ள வேண் டியதில்லை. இந்த நிலைமை இன்னமும் மோசமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டிய கட மையும், பொறுப்பும் நம் அனைவருக்குமே உண்டு. அத னால்தான், அரசாங் கம் வாக னங்களி லிருந்து வெளிப்படும் புகை இன்ன அளவுக்கு அதிக மாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்துள்ளது.
அதன்படி, வாகன உரிமையாள ர்கள் அனைவரும் தங்களுடை ய வாகனங்களை மாசுக் கட் டுப்பாட்டு பரிசோதனைக்குட்ப டுத்தி, சான்றிதழ் பெற்று அதை யும் வாகனம் ஓட்டுகிறபோது கையில் வைத்திருக்க வேண் டும். இந்தப் பரிசோதனையை, அரசாங்கத் தால் அங்கீகரிக்கப் பட்ட மாசுக் கட்டுப்பாட்டு பரி சேதனை மையங்களில் மட்டு மே செய்ய முடியும். இதற்கென அரசாங்கம் நிர்ணயித் திருக்கும் கட்டணம் செலுத்தி, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற வேண் டியது சட்டப்படி கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ் களுக்கான ஆயுட் காலம் ஆறு மாதங்கள். மாசுக் கட்டு ப்பாடு சான்றி தழுடன், கூடவே ஒரு ஸ்டிக்கர் டோக்கனும் கொடுக்கப் படும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தி ல் ஒட்டி வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மா சுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செ ய்து, சான்றி தழ் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனப் பரிசோதனை யின்போது, அதிகாரியிடம் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழைக் காட்ட வில்லையென்றால், வாகன த்தின் ரகத்துக்கு ஏற்ப அபராதம் வசூலி க்கப்படும்.

பொது மக்களின் வசதிக்காக ஓட்டுநர் பழகுனர் உரிமத்தை LLR (எல்எல்ஆர்)ஆன்லைனில் விண்ணப்பிக்கும் திட்டத்தை போக்குவரத்துறை அறிமுகம் செய்துள்ளது. 


இதற்காக transport.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


அதில் சேவை என்ற பகுதியில் உள்ள முன் பதிவு என்ற பகுதியில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.


பின்பு அதில் உள்ள எண்ணை குறித்துக் கொண்டு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்தி, கணினி மூலம் நடத்தப்படும் எல்.எல்.ஆர். தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக ஓட்டுநர் பழகுனர் உரிமம் பெறலாம். 


இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் மனுதாரர் தனக்கு விரும்பிய நாளையும் மற்றும் நேரத்தினையும் அவரே தேர்வு செய்து கொள்ளலாம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, August 26, 2010

மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள் !! ஒரு தவகல்..


காலை உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்ககூடும். ஆனால், இன்றைய நவீன உலகில் காலை உணவை தவிர்க்கும் இளைய தலைமுறையினர்கள் ஏராளம். அவ்வாறு நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். 

குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் நன்றாக இருக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மூன்று வகை உணவுகள்:
1. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது
2. தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது
3. கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள் என்று எளிமையாக இருந்தால் போதும்.
பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் விட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், விட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கு ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் விட்டமின் சி தாராளமாக இருக்கிறது.
இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் விட்டமின் சி கிடைக்கும். மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் விட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.
அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச்சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது. காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம். பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம்.
அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம். சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். நாம் காலை உணவை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம். 

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல் .

விமானத்தில் என்ன ரிஸ்க் ? விமான விபத்திற்கு 99% காரணம் என்ன ? ஒரு சிறப்பு அறிவியல் பார்வை !!

ரிஸ்க் என்பது எல்லா பயணத்திலுமே உண்டு. என்னைப்பொருத்தவரை சாலைப்பயணத்தைவிட விமானப்பயனம் பாதுகாப்பானது. சராரரியாக உலகத்தில் ஒரு நாளைகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோரமான சாலை விபத்துக்கள் நடக்கிறது. ஆனால் விமான விபத்துக்களை விரல் விட்டு எண்ணி விடலாம்முதலில் விமானத்தில் இருக்கும் முக்கிய பாதுகாப்பு அம்சம் என்னவென்றால்ஒவ்வொரு விமானத்திற்கும் இந்த குறிப்பிட்ட உயரத்தில்தான் பறக்க வேன்டும் என்ற கட்டளை இருக்கும், அது ஒவ்வொரு விமானத்திற்கும் வெவ்வேறாக இருக்கும், அதனால் விமானம், ஒரே கோட்டில் நேருக்கு நேர் வந்தாலும் (அப்படி வருவது கிடையாது, ஒருவேளை தவறுதலாக வந்தாலும்), மோதிக்கொள்ளாது. காரணம், இரண்டு விமானங்களும் இரு வேறு உயரத்தில் இருக்கும். அதனால் விமானங்கள் மோதிக்கொள்வது என்பது அரிதிலும் அரிதானது. பஸ்கள் மோதுவது சராசரியாக தினமும் நடக்கும் ஒன்று, ரயில்கள் கூட மோதுகின்றன, ஆனால் விமானம் மோதிக்கொள்வது என்பது மிக மிக அரிதானது (சாகச காட்சி நடத்தும் விமானங்கள் மோதிக்கொண்டதுண்டு, ஆனால் பயணிகள் விமானங்களில் அந்த வாய்ப்பே கிடையாது)
விமான விபத்திற்கு 99% காரணம் எதுவென்று பார்த்தால், அது நடுவானில் ஏற்படும் இஞ்சின் கோளாறுதான். 

விமானத்தைப்பொருத்தவரை இஞ்சிந்தான் எல்லாமே, அதுதான் மேலுழும்பும் விசையையும், முன்னோக்கு விசையையும் தருகிறது. அது பழுதாவதுதான் மிகவும் சிக்கலான ஒன்று. எந்த ஒரு சிறு விமானத்திலும் இரண்டு இஞ்சின்ங்கள் இருக்கும். நாடு விட்டு நாடுபோகும் பெரிய விமானங்களில் நாலு இஞ்சின்ங்கள் இருக்கும்
எதற்கு இரண்டு, நாலு இஞ்சிஙள் என்று கேட்டால் இவை மனிதனுக்கு எப்படி கிட்னி அவசியத்தை உணர்ந்து இயற்கை இரண்டு கொடுத்துருக்கோ அதேபோல் விமானத்திற்கு இஞ்சினின் அவசியத்தை உணர்ந்து ஒன்றுக்கு மேற்பட்டவை உள்ளது.

ஒரு சிறிய விமானத்தில் ஒரு இஞ்சின் பழுதடைந்தாலும் இன்னொரு இஞ்சின் இயங்கினால், அதை வைத்து அடுத்த ஏர்போர்ட்டில் பத்திரமாக தரையிறங்கிவிட முடியும். ஆனால் சீக்கிரம் இறங்க வேண்டும். காரனம், இப்போது இரண்டு இஞ்சிஙளின் வேலையை ஒரு இஞ்சின் செய்வதால் அத்ற்கு ஓவர் லோடு இருக்கும். அதனால் அதுவும் பழுதாகிவிட வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் ஒரு இன்சின் பழுதாகிய விமானங்கள் அருகிலுள்ள விமான நிலைத்தில் எம்ர்ஜென்சி லேண்டிங் செய்கின்றன.

பெரிய விமானங்களில் நாலு இஞ்சினில் இரண்டாவது இயங்க வேன்டும் . இரண்டு வரை பழுதாகலாம். மூன்று பழுதாகிவிட்டால் தேறாது
ஒரு இன்சின் பழுதாகும்போது, அந்த இன்சின் தானாகவே நின்றுவிடும்படி விமானக்களில் வடிவமைக்கப்பட்டூள்ளது, ஏனெனில் பழுதான இன்சின் தொடர்ந்து ஓடினால் தீப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம், அது நடந்தால் ஒன்றுமே செய்ய முடியாது என்பதால் அது தானாகவே நின்றுவிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு இஞ்சின் பழுதானாலே அருகில் உள்ள விமான நிலயத்தில் எமர்ஜென்சி லேண்டிங் செய்ய வேண்டும் எனபது விதி
இஞ்சின் பழுதைவிட ஒரு கொடூரமான விபத்து விமானக்களில் நடக்கு வாய்ப்பு உள்ளது. சமீபத்தில் க்ரீஸ் நாட்டில் இப்படித்தான் ஒரு விமான விபத்து நடந்தது, ஆனால் இதன் வாய்ப்பு மிகவும் கம்மி
விமானம் உயரத்தில் பறக்கும்போது, விமானத்திற்கு வெளியில் - 50 டிகிரி குளிர் இருக்கும். அது சாதாரண குளிர் அல்ல இரத்த்தை நொடியில் உறையவைக்கும் குளிர். அதேப்போல வெளியே மிக மிக குறைந்த காறழுத்தம் இருக்கும் , அதில் கண்டிப்பாக மனிதனால் மூச்சு விட முடியாது. திடீரென்று விமானத்தின் சுவரில் எங்காவது ஓட்டை விழுந்தாலோ, அல்லது எங்காவது இடுக்கு விழுந்தாலோ, விமானத்தில் உள்ள காற்று அனைத்தும் வெளியில் உரிஞ்சப்பட்டுவிடும்.
அதனால்தான், மூச்சு விடுவதற்கு ஒரு எமர்ஜென்சி முறையை விமானம் கிளம்பும் முன் சொல்வார்கள். அதை பலர் காது கொடுத்து கேட்கமாட்டார்கள். அது மிக முக்கியம். ஏனெனில் அதன் தேவை எப்போதும் வரலாம்.

சிறிய விரிசல் என்றால் இந்த மூச்சு பிரச்சனை மட்டும்தான் வரும், உடனே எமர்ஜென்சி லேண்டிங்க் செய்தால், அந்த எமர்ஜென்சி சுவாசிக்கும் முறையை வைத்து பிழைத்துவிடலாம்
மூச்சைக்கூட அந்த எமர்ஜென்சி முரையை வைத்து சமாளித்துவிடலாம், ஆனால் இடுக்கு அதிகம் இருந்தாலோ, பெரிய ஓட்டை விமான கதவுகளில் விழுந்தாலோ , உள்ளே புகும் குளிரை சமாளிப்பது கடினம். அந்த மாதிரி தருணங்களில் எவ்வளவு சீக்க்கிரம் பைலட் விமானம் போகும் உயரத்தை குறைக்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் குளிர் குறையும்
க்ரீஸ் விமானத்தில் இந்த வகை விபத்துதான் நடந்தது, இதில் பைலட்டுகளும் குளிரில் உறைந்துபோனதால், அது விபத்திற்குள்ளாகியது. ஆனால் பொதுவாக விபத்துக்கள் மற்ற போகுவரத்து முறையை ஒப்பிடும்போது விமானங்களில் மிகவும் கம்மி
உண்மையிலேயே விமானங்களில் மிகவும் ஆபத்து என்றால் அது ஐஜேக் செய்யும் தீவிரவாதிகள்தான் :) , தொழில்நுட்ப கோளாருகள் பயப்படும் அளவிற்கு அதிகம் இல்லை.

ஏர்-பாக்கெட்
பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென உயரத்தை இழந்து (sudden loss of altitude) வானிலேயே கீழே விழுந்தது என்று தெரிகிறது.விமானங்களுடன் உங்களுக்கு பரிச்சயம் இருந்தால், இதை ஏர்-பாக்கெட் (air pocket) என்று சொல்வார்கள் என்று அறிந்திருக்கலாம். (சில வருடங்களுக்கு முன் பாரிஸ் ஏர்-ஷோவில் ஏர்பஸ் நிறுவனம், A-330க்கு பிறகு தயாரிக்கப்பட்ட விமானங்கள் turbulence-ல் பாதிக்கப்படாமல் தயாரிக்கப்பட்டுள்ளன என்று சொன்னது ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது)

2010க்கு பின் நடந்த மோசமான விமான விபத்துகள்!!

* 2010 , மே 12: லிபிய தலைநகர் திரிபோலியில் ஏர்பஸ் ஏ330யில் விபத்து ஏற்பட்டு 103 பேர் பலி.
* 2010, மே 22: ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம், மங்களூரு விமான நிலைய ஓடு பாதையை கடந்து ஓடி விபத்துக்குள்ளானதில் 158 பேர் பலி.
* 2010, ஜூலை 28: மோசமான வானிலை காரணமாக, பாகிஸ்தானின் ஏர்புளூ விமானம், இஸ்லாமா பாத்துக்கு வடகிழக்கு மலைப்பகுதியில் விபத்துக்கு உள்ளாகி, 152 பேர் பலி.
* 2014, மார்ச் 8: 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து -பீஜிங் நோக்கி சென்ற மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் பலி.
* 2014, ஜூலை 17: ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு சென்ற விமானம் ரஷ்ய எல்லை யருகே சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்திலிருந்த 298 பேர் பலி.
* 2014, ஜூலை 24: அல்ஜீரியாவிலிருந்து கிளம்பிய விமானம் மாலி பாலைவனத்தின் வடக்கு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 118 பேர் பலி.
* 2014, டிச.28: இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு கிளம்பிய ஏர்ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகி 162 பேர் பலி.
* 2015, மார்ச் 24: தெற்கு பிரான்ஸ் பகுதியில் ஜெர்மன்விங்ஸ் ஏ320 விமானம் விபத்துக்குஉள்ளானதில் 150 பேர் பலி.

தொகுப்பு : மு அஜ்மல் கான்.

சக்ரவர்த்தி அசோகர் வரலாறு..


சந்திரகுப்த மெளரியர்
மவுரிய பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார் ,மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு அதன் தலை நகரம் பாடலி புத்திரம், இது தற்போதைய பீகார், தலை நகரம் பாட்னா என அழைக்கப்படுகிறது.இவர் இடையர் குலம் , அல்லது சூத்திரர் என சிலர் கூறுவர், மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் மயுரா எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர் அதனால் மவுரியர் எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் நந்த வம்ச மன்னருக்கும் முரா என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர்.காட்டில் இருந்த சந்திரகுப்தரை நந்த மன்னரால் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியர் சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.
சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார்.தென்னிந்தியா வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசி காலத்தில் சமண மத துறவியாகி பெங்களூர் அருகே உள்ள சரவன பெலகுலாவில் பத்திரபாகு என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்கை வாழ்ந்து உயிர் துறந்தார் ,இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது.

பிந்துசாரர்
சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர் ஆவார், பிந்துசாரர் கருவில் இருக்கும் போதே அவர் தாய் இறந்துவிட்டதால் , சுஷ்ருதர் என்ற புகழ்பெற்ற மருத்துவ மேதை முழுதும் வளர்ச்சியடையாத குழந்தையை எடுத்து ஒரு ஆட்டின் கருப்பையில் வைத்து வளர்த்து 10 மாதங்களுக்கு பின்னர் பிறக்க செய்தார் என கூறுகிறார்கள், இதனாலே பிந்து சாரர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்(பிந்து என்றால் ஆடு அல்லது மான் எனப்பொருள் படும்).

பிந்து சாரர் திருனெல்வேலி வரைக்கும் படை எடுத்து வந்து வென்றதாக கூறுகிறார்கள்.இவருக்கு 12 மனைவிகள் 101 புதல்வர்கள் அவர்களில் ஒருவர் தான் அசோகர்.பிந்து சாரருக்கு பிறகு அரியனை ஏறுவதில் ஏற்பட்ட போரில் 99 உடன் பிறந்த சகோதரர்களையும் அசோகர் கொன்றதாக ஒரு வரலாறு உண்டு.திஷ்யா என்ற ஒரு சகோதரியை மட்டும் கொல்லவில்லை என்கிறார்கள்.


சக்ரவர்த்தி அசோகர்!(B.c 271 – 232)
அசோகர் பிந்து சாரருக்கும் அவரது பிராமன மனைவி சுமத்திராங்கி என்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ் நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள். 
அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொருப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்க்களேமகேந்திரனும் , சங்கமிதிரையும் ,பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.

கலிங்க்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.

சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள் ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.
கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிஸா, மகத நாடு தற்போதையா பிகார்,. கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.

கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 10,0000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார். ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் ,குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தன்து சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவிலை எனவே வஞ்சகமாக அவரை வெளினாட்டுககு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்.
கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைனகரம் வந்து பாடலிபுத்திரதின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார் அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து ,திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டிதார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாரா).

தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துனப்மானதாகவும் தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.

தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரில்யே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை மெய்பித்தார் இல்லை எனில் இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.
அசோகருக்கு பினனர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படை வீரர் களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள் மேலும் புத்த மததிற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமன அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமன தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்க வம்ச அரசை நிறுவினார் அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

பின் குறிப்பு:-
அசோகர் என்றால் சாலை ஓரங்களில் மரம் நட்டார், குளம் வெட்டினார் , சத்திரம் கட்டினார் என்பது வரைதான் பள்ளிகளில் சொல்கிறார்கள் என்பதால் என்னால் முடிந்த ஒரு சுருக்கமான அசோக சரித்திரம். பிழை இருப்பின் திருத்தம் தரலாம்!

Monday, August 23, 2010

Make a money through online with free no scams!!(ஆன்லைனில் வருமானம்!!)

அன்பு நண்பர்களுக்கு வணக்கம், ஆன்லைனில் வருமானம் பெற பலரும் முயற்சி செய்கிறார்கள் அனால் ஒரு சிலரே அதில் பயன் பெறுகிறார்கள் காரணம்  எந்த கஷ்டமும் இல்லாமல் சம்பாதிக்கலாம் என்ற ஆசைதான் உழைக்காமல் வருமானம் என்பது கிடையாது, தவறான தொழில் செய்தல் கூட அதற்கும் உழைப்பு வேண்டும், எனவே கொஞ்சம் திறமையும் உழைப்பும் இருந்தால் சம்பாதிக்கலாம், சரி விஷயத்துக்கு வருவோம், 1 பைசா முதல் 50 பைசா வரை ஒரு வேலைக்கு காசு கொடுக்கும் வெப்சைட்கள்  நிறைய உள்ளது, ஆனா இதெல்லாம் ஒரு வருமானமா இன்டர்நெட் பில்லுக்கு கூட உதவாது என்று நீங்க புலம்புறது புரியுது. http://99designs.com/  என்ற அமெரிக்க நிறுவனம் நீங்கள் செய்யும் வேலைக்கு 200 டாலர் முதல் 2000 டாலர் வரை பணம் தருகிறது, இருங்க உடனே கனவு கனதீங்க அது அவ்ளோ சுலபமில்ல அதுக்கு நீங்க ஒரு நல்ல வடிவமைப்பாளராக இருக்க வேண்டும் photoshop, coreldraw போன்றவற்றில் புகுந்து விளையாடுபவராக இருக்க வேண்டும். 200 டாலர் என்றால் நம் நாட்டு மதிப்பு படி 10,000 ருபாய். ஒரு விசிடிங் கார்ட் டிசைன் செய்தல் நம் ஊரில் ருபாய் 200 கிடைக்கும். ஆனால் இந்த தளத்தில் 10,000 முதல் 100,000 வரை சம்பாதிக்கலாம், எனக்கு தெரிந்து ஒரு வருடத்தில் 200,000 லட்சம் வரை சம்பாதித்தவர்கள்  உண்டு, ஆனால் இதை ஒரு பார்ட் டைம் வருமானமாக நினைக்க வேண்டுமே தவிர இதுவே தொழில் என்று இருந்தால் நேரமும் உழைப்பும்  வீணாகலாம். மேலும்  உங்களுக்காக பல ஆன்லைன் சுட்டிகள் ஆங்கில வடிவில் கிழே..

Dear Friends,
Make a Money  Online , No scam,get paid to paypal through these sites, Please take your time to read and bookmark,great sources of web traffic and low cost advertising.My friend  making good money thieving. He only working a few hours at night, and you can make anything from a few hundred quid to a few thousand quid. You've got to have a bit of bottle and be able to look after yourself. If you think you've got through guts to do it? I highly recommend it, I mean it's got to be better that spending hour after hour on a PC, making small chance, how boring is that?  


http://www.rewardscentral.com.au
http://www.swagbucks.com
https://www.yourvoice.com.au/
http://www.clixsense.com
http://www.cashnhits.com
http://www.pureprofile.com
http://www.jillsclickcorner.com
http://www.ayuwage.com
http://www.neobux.com
http://www.adsclickers.com
http://adf.ly/
http://www.tecommandpost.com
http://www.rewardingways.com
http://www.cashcamel.net
http://www.cash-harvest.com
http://www.cashons.com
http://www.cashtrave
http://www.cashtream.com
http://coastercash.com
http://buxp.org
http://www.ctpgem.com
http://dealbarbiepays.com
http://www.getpaidmail.com
http://dollarsignup.com
http://a.easyhits4u.com
http://www.gptplanet.com
http://www.instagc.com
http://www.senkouken.com
http://legacyclix.com
http://www.linkgrand.com
http://www.paidtologin.com/
http://www.morningstarptc.info
http://myfreeshares.com
http://www.newwaysurf.com
http://www.no-minimum.com
http://www.paidtoclick.in
http://www.pointdollars.com
http://quickrewards.net/
http://www.quidscorner.com/pages/index.php?refid=mattjcrane
http://www.sendearnings.com/?r=ref4962188
http://www.superpay.me/welcome?ref=mattjcrane
http://www.successbux.com/index.php?ref=mattjcrane
http://www.uniqpaid.com/sh/main.shtml
http://vasthits.com/splash3.php?r=60325
http://www.uniquerewards.com/
http://vtrafficrush.com
http://wordlinx.net
http://www.youromail.com
http://pureasiangarcinia.com

Nothing in life is free, even if you have full time job you will have to pay for travelling, meals etc.You will also notice I,m not plugging a site or advertising a scam. WHY ? because I DON'T NEED TOO.Good luck to everyone in their new venture.


1. Amazon’s Mechanical Turk.

Mechanical Turk is a great way to make some extra cash. You probably won’t make much more than a few dollars an hour, but it’s also dead simple to complete many of the tasks. Most tasks take less than a minute to complete and pay a few pennies. If you do a lot of MTurk, it could add up to at least some fun spending money. Sign up for free, then complete qualifications to earn access to higher-paying tasks.

2. Sell stock photos.

iStockPhoto is just one site that allows you to sell stock photos; there are others. Before you decide to go crazy and upload your whole album, take note of what’s selling well and try your hand at doing something similar. iStockPhoto also works for those who know how to render images; some of their most popular images were created on a computer! Have three killer stock photos ready for iStockPhoto’s inspection; they will want them when you sign up.

3. Sell stuff on eBay.

Start by selling your own extra stuff. Then, once you get a feel for selling your extra stuff, go door-to-door in nicer neighborhoods in your town. Develop an eye for what will sell and what won’t (old laptops, for instance, could be a gold mine–if you know how to format them to get rid of the previous owner’s personal data.) Sign a contract where you take 25-30% (or more) of the gross sale. Your customers will be happy to get cash for their old junk, and you’ll make some good money selling other people’s stuff. eBay

4. Become a freelance article writer.

It may not pay well, but there is a growing demand for this. Write 200-300 word articles and submit them to article directories. Potential clients include bloggers, marketers, and small businesses. You can write articles in a niche in batches and sell them as a package to one or more clients, or you can offer your services for hire per word or article and let your client give you direction. A foundation ofkeyword research is important to succeed at this job (unless you’re just taking direction from a client), but keyword research is learnable.

5. Write articles for magazines or other publications.

If you have a background in journalism, or just a passion for it, you can try your hand at submitting articles to publications. Don’t just randomly fire off articles, however; have a plan and, preferably, a contact at the publication you wish to submit to. The good news is that there are publications in pretty much any niche you can think of. To see some publications that are hiring, visit Online Writing JobsPoeWar Freelance Jobs, and Writing.com.

6. Transcribe audio files.

An easy job; doesn’t pay well, but also a quick way to make some money. Sign up on eLance oroDesk to start, and/or advertise your services in entrepreneur forums. Requires good hearing and a good command of the English language. You may also want to invest in a foot pedal if you plan to transcribe often. Make sure you know how to transcribe interviews before you start your first job.

7. Become a virtual assistant (VA).

There are entire books written on how to become a virtual assistant, so this job is definitely worthy of more research. My advice: Focus on one niche (I just hired Lisa Morosky of VA for Bloggers, for instance.) Also, reach out to potential customers directly and let them know what you can do for them instead of hitting up freelance web sites. Finally, you may want to consider resources such asAssistU, which provides training for up-and-coming virtual assistants.

8. Write articles on eHow.com.

If you understand the basics of keyword research, you can make a good monthly income from eHow. eHow pays you a percentage of the ad revenue they make from each “How to” article you create. You can crank out a few articles a day with relative ease. Try this for a month; assuming your article titles match up with what people are searching for in Google, you can make a significant income. The great news is that you write your articles once and get paid month after month. I’ve seen figures of $100-$150/month for 30 articles. Make money writing for eHow.com.

9. Do some videos to promote affiliate products.

Enjoy making silly videos? Even short, silly videos can sell products online. Find an product worth promoting that has an affiliate program, then target your video toward potential customers of that product. In your video summary on YouTube, place your affiliate link for the product, and after the video, do a 30-second still frame showing a short URL where people can buy the product. If your video is funny, informative, or useful, you may sell some products. Big tip: Try to promote a product that makes you a fair amount of money for each sale, but doesn’t cost a whole lot for the potential customer. You can find products on Commission Junction, for one.

10. Write an ebook targeted to people who need help.

Alexis Dawes created a product called “Desperate Buyers Only”. I interview her for an upcoming case study on Inspiring Innovators, where she mentions that she is able to make up to $97 from ebooks as small as 12 pages. The key? Finding people who are incredibly desperate for the information you provide and then doing good research to find a real solution to their problems. The result? Happy customers whose problem is solved, and money for you — a win-win situation! Caveat: It may be tough to find a real desperate buyer niche (Alexis reveals some in her case study). Here are some hints: When were you last in a situation where information would have either saved you a lot of money or a lot of pain? Has someone else close to you been in a situation where they could have used information to avert pain? Think legal, medical, and financial niches.

11. Help local businesses develop an online presence.

Local businesses are struggling. Many have websites, but aren’t getting any results from them. Others don’t have websites at all. You can help by learning search engine optimization, how to set up an email list, and more, and then implementing these for local businesses. If you typically hang around geeks, web marketers, or the Web 2.0 crowd, you may be surprised how many business owners are 10 years (or more) behind you! If you can deliver results, business owners will happily pay. Find customers by going door-to-door.

12. Do you have a knack for photography? What about crafting?

 If you have unique images or homemade goods, there's an online market out there for you if you know where to look.
Two great photography sites to take a look at are http://www.imagekind.com or http://fineartamerica.com.They both make it easy to upload your work and start making money.
Imagekind lets you set up three galleries for free. If you need more than that, you can upgrade to a Pro or Platinum account for an extra fee.
This site is great because it does a lot of the work you, including printing and framing images. The site charges customers a basic amount for each print, and then you get to mark up your work and keep the profits.
FineArtAmerica works in much the same way, but you can sell your original artwork 100 percent commission-free. It also offers prints, framing and other accessory options for an added fee. If you have a Premium account, you also make a five percent commission anytime someone purchases a frame with your print.
And if you take lots of high-quality images of everyday items and places, check out stock photo sites likehttp://www.istockphoto.com/ and http://www.shutterstock.com.  These sites sell your pictures to advertisers and businesses for you. The pay can vary, but you can expect to earn 15 to 60 percent of the sale.
If you're not a photographer, but have other hobbies like knitting or crafting, you can sell your goods on sites like https://www.etsy.com/or http://www.artfire.com/

13. Learn WordPress, then offer to install plugins and upgrade it.

I hired David from Web Geek 4 Hire to upgrade my blogs and install new WordPress plugins. He charges $5 to upgrade a plugin…great for him, since most plugins only take a few minutes to upgrade, and great for me, since if anything breaks, David gets to clean up the mess! You can make this a full time position; there is a ton of demand for these services. Find customers by contacting bloggers directly. Get references from bloggers who understand the value of outsourcing these tasks.

14. Become the go-to person for installations of a particular piece of software.

Anything from Amember to Quickbooks is fair game here. In the hosting industry, iDevAffiliate andPlesk Billing were the pieces of software we would have paid a lot of money to have someone else deal with. The more niche and more complex/annoying/frustrating the software, the better! Even if the software company offers free installation, you can make hundreds or thousands of dollars training business owners or their employees on its usage. Focus on one piece of software and become the trusted expert. Create videos and tutorials using screencast software like Camtasia to increase your profitability; this may also lead into a niche product that you can sell. (Amember offers “free installation”, but it took my boyfriend and I over 10 hours to configure it properly. That’s definitely something I would outsource next time!)
I experimented with this in 2008 and made over $800 from one interview. The key here is to understand a pain point that people are experiencing, interview an expert, and ask the expert the questions that the people experiencing the problem are having. Then create a small website and sell the interview. There’s more to this, including having good copywriting skills so your website sells the interview well, and knowing where to advertise, so don’t expect to immediately pull in hundreds of dollars. That said, it’s a neat way to quickly create a product. Get the interviews transcribed, then string a few interviews in the same industry together as a membership site or bundle that you can sell for more money.

16. Become a freelance “web geek.”

From configuring a shopping cart to installing and tweaking blog themes, there are virtually unlimited projects out there for geeks who enjoy working with small business owners to get them up and running online. Find people looking for web geeks on the Warrior Forum or other places where entrepreneurs gather.

17. Enter logo and design contests.

Fancy yourself a good designer? Try your hand at creating a logo or other design that a company loves! 99 Designs is the most popular marketplace. Beware, however; you won’t get paid unless your logo wins against many others, which makes many designers unhappy. In my opinion, this is a great way for a budding designer to build a portfolio and learn quickly what clients love.

18. Create Twitter backgrounds and e-covers.

Competition is stiff, but if you are a savvy designer, this is a good way to pick up extra dollars. Even better, if you are an artist, this is a good way to make your art skills pay off. Consider that every design will need to have a reason why the customer should buy the book or follow that person on Twitter to have a real impact. Twitter backgrounds, in particular, are in hot demand right now. For measurements and caveats of Twitter backgrounds, read “How to create your own Twitter background.”

19. Submit websites or blog posts to social media websites.

Not very exciting work, but in high demand from bloggers and small businesses. This involves setting up accounts on all of the social bookmarking services and then bookmarking your clients’ websites or latest blog posts to help them get more traffic. You may be competing against software that does this, but in many folks’ opinions, it’s better to have a real person do it. Even better is if you can goose your accounts with plenty of friends and become a star on a few of the services; then every site you bookmark has higher credibility and you can charge more. To get an idea of the social media sites you will need to sign up for, start at socialmarker.com.

20. Edit audio for others.

This is something that is fairly easy to learn and also in high demand. On Windows, one good program to edit audio is Sony Sound Forge. I use Sound Forge Audio Studio, but if you are doing this professionally, you might consider the upgrade to Sound Forge 9. Get the hang of editing out “um”s and “ah”s from audio. Even better is understanding the “flow” of an interview conversation and editing out portions that don’t make sense. Finally, learning to find and add intro music really gives podcasts that professional touch. Advertise your services on oDesk or eLance. I pay people to do this for the podcasts I am setting up on Inspiring Innovators, and it’s a job that can definitely be done from your house.

Which One Will You Try? Let Me Know…

There you have it…20 ways for you to make money online fast. Now it’s your turn! I’d like to know which of these methods you would like to hear more about. Please let me know by taking 30 seconds to post a comment below, and I will write more about the most-requested topics.
This post took approximately 6 hours to compile, including research. I’d appreciate it if you would support my efforts by Stumbling this postbookmarking it on Delicious, and Digging it. Finally, if you are not already receiving my free business tips, jump on board! Every week I’ll send you a thought-provoking post about how to build your business and make more money. You won’t want to miss what I have in store for you… Get my free business tips!
Recommended Reading:
Collection by M.Ajmal Khan.

Sunday, August 22, 2010

குற்றால அருவிகள் ( kutralam falls)ஒரு பார்வை ...


குற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது எண்ணெய் குளியல், குளிர்ச்சியான வானிலை, மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்குரோசத்துடன் கொட்டித்தீர்க்கும் தண்ணீர், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பல உயிர்களை பலிவாங்கும் அருவி என பல உண்டு.  இப்படி எவ்ளோ நாளைக்குத்தான் நினைத்துக் கொண்டே இருப்பது, போய் இதெயெல்லாம் எப்போது அனுபவிப்பது என்று ஏங்கிக் கொண்டிருப்போர் பலர். அப்படிபட்ட குற்றால அருவியைப் பற்றி இன்று பார்க்கலாம்.                                                                                                                குற்றால அருவி, அல்வாவுக்கு பேர் போன திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தென்காசிக்கு மிக அருகில் இருக்கிறது.  குற்றால அருவியில் குளிக்கும் சுகமே தனி!  மற்ற அருவிகளில் குளியல் வெறும் பொழுதுபோக்காகவே இருந்துவரும் நேரத்தில், குற்றாலம் மருத்துவக் குணம் வாய்ந்தது. இந்த அருவி பல மூலிகைச் செடிகளைத் தழுவி வந்து பாய்வதால் இந்த அருவி மிகவும் சிறப்பு வாய்ந்தது.  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தண்ணீர் ஆர்ப்பரித்து பாயும் இந்த அருவிக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து போகிறார்கள்.  தண்ணீர் கொட்டும் இந்த மாதங்கள் குற்றால சீசன் என்றழைக்கப்படுகிறது. என்னதான் நாம் ஜூன் முதல் செப்டம்பர் வரை குற்றால சீசன் என்று கணித்தாலும் சில வருடங்கள் இயற்கை மாற்றத்தால் சீசன் நேரம் மாறுபடுகிறது. என்ன செய்வது, இயற்கையை மாற்ற முடியாது.  

குற்றாலம் முழுவதும் மொத்தமாக ஒன்பது அருவிகள் பாய்கின்றன.  இந்த ஒன்பது அருவிகளை பார்க்க, அவற்றில் குளிக்க நாம் மிகவும் சிரமப்படவேண்டாம். நமக்கு உதவ ஆட்டோக்கள் இருகின்றன. காலை தென்காசி அடைந்தவுடன், ஒரு காபி சாப்பிட்டு, எதாவது ஒரு ஆட்டோகாரரிடம் பேரம் பேசி, ஆட்டோவில் ஏறி உட்கார்ந்துவிட்டால் போதும், அனைத்து அருவிகளுக்கும் அழைத்துச் சென்றுவிட்டு உங்களை உங்கள் இடத்திற்கே கொண்டுவந்து விட்டுவிடுவார்கள். (வீட்டுக்கெல்லாம் கொண்டுபோய் விடமாட்டங்க! நீங்க குற்றாலத்துல தங்குற இடத்துல கொண்டுபோய் விடுவாங்க)


குற்றாலத்தின் அழகை ரசித்து குளிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் வேண்டும். குளிக்கிறதுக்கு 
இரண்டு நாள் வேணுமானு கேட்காதீங்க!  வேலைக்கு போற அவசரத்துல தினம் பத்து நிமிஷம் காக்காக் குளியல் போட்டுட்டு அரக்கப் பரக்க ஆபிஸுக்குப் போற நாம,  ரெண்டு நாள் முழுசாக் குளிச்சா ஒன்னும் தப்பில்ல. எல்லா அருவி முன்னாடியும் உங்க உடம்புக்கு எண்ணெய் தேய்க்கிறதுக்குன்னு பல பயில்வான்கள் கடையைத் திறந்து வைச்சிருப்பாங்க. உங்க உடம்ப கொஞ்ச நேரம் அவங்களுக்கிட்ட கொடுத்தீங்கனா,  உடம்பு வலியெல்லாம் ஒரு மணிநேரத்துல போக்கிடுவாங்க. அப்படியே போய் அருவிக்கு கீழ நின்னீங்கனா, பல அடி உயரத்துலே இருந்து கொட்டுற மூலிகை கலந்த தண்ணிர் அப்படியே மஸாஜ் பன்னுறமாதிரி கொட்டும்போது இருக்கிற சுகமே தனி. என்ன சுகத்த அனுபவிக்க ரெடியா? இந்த சுகத்தை எங்கெல்லாம் அனுபவிக்கலாமுன்னு பாப்போம்..


பேரருவி..
குற்றாலத்தின் மிக முக்கியமான அருவி பேரருவி. செங்குத்தான பாறையில் இருந்து பாயும் தண்ணீர், தனது கவர்ச்சியால் சில உயிர்களைக் கூட பலிவாங்கியிருக்கிறது. பல நேரங்களில் செய்திகளில் எல்லாம் நாம் இந்த அருவியின் காட்சிகளை பார்த்திருக்கக் கூடும்.  உயிர்கள் பலியாவதைத் தடுக்க சுற்றுலாத் துறை அருவிக்கு மிக அருகில் ஒரு தடுப்புச் சுவரை கட்டியுள்ளது. இந்தச் சுவர்தான் அருவியின் வீரியத்தை அளக்க உதவுகிறது, ஆம் சுவரையும் தாண்டி தண்ணீர் கொட்டினால் அருவி மிகவும் ஆர்ப்பரிக்கிறது என்று அர்த்தம். அப்படி சுவரைத் தாண்டி கொட்டும் நேரத்தில் குளிக்கத் தடை விதிக்கப்படும்.  மீண்டும் அருவி சுவருக்கு உள்ளே பாயும் வரை இந்தத் தடை நீடிக்கும். எனவே நீங்கள் இந்த அருவியில் குளிப்பதை அருவியே தீர்மானிக்கிறது.  அருவியே தீர்மானிக்குதுன்னா காவல் துறை தீர்மானிக்குதுன்னு அர்த்தம். இப்படி எல்லா அருவிகளிலும் தண்ணீர் மிக வேகமாக பாயும் நேரத்தில் குளிக்க தடை விதிக்கப்படும். அதெல்லாம் ஒருபக்கம் இருக்க தண்ணீர் பாறையிலிருந்து பாயும்போது சில மீட்டர் தொலைவுக்கு தண்ணீர் சாரல் அடித்து நம் உடம்பை கூலாக்கி சந்தோஷப்படுத்தும்.


சிற்றருவி..
பேரருவிக்கு இந்த அருவியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. பேரருவிக்கு மேல் இருக்கிறது. கிட்டத்தட்ட பேரருவி போன்ற சூழலே இங்கும் இருக்கும்


செண்பகாதேவி அருவி..
பேரருவிக்கு மேல் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த அருவி.. பேரருவிக்கு மேல் கிட்டத்தட்ட காடு போன்ற பகுதியில் இயற்கையை ரசித்துக்கொண்டே நடந்து இந்த அருவியை அடையவேண்டும். நடக்கணும், ஆட்டோ உள்ளே போகாது.. இந்த அருவிக்கு அருகில் இருக்கும் செண்பகாதேவி அம்மன் கோவிலில் சித்திரா பவுர்ணமி நாளில் திருவிழா நடைபெறும்.  இந்த அருவியில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு என்றாலும், காவல் துறை சொல்வதைக் கடைபிடித்தாலே நாம் இந்த அருவியில் எந்தவித அச்சமும் இல்லாமல் குளிக்கமுடியும். ஆனால் பல பேர் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளையும் மீறி உல்லாசமாய் குளிக்கிறேன் என்ற பேரில் தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.


தேனருவி..
செண்பகாதேவி அருவிக்கும் மேலே இந்த அருவி இருக்கிறது. பல தேன்கூடுகள் இங்கு இருப்பதால் இந்தருவிக்கு தேனருவி என்ற பெயர் ஏற்பட்டது. தேனீக்களாலும், அருவி அமைந்துள்ள இடத்தாலும் இந்த இடம் மிக அபாயகரமான பகுதியாக் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்த அருவியில் குளிப்பது நிரந்தரமாக தடைசெய்யப்பட்டுள்ளது.  மிகவும் மேலே அமைந்திருப்பதால் இந்த அருவிக்கு போகும் வழிகூட மிக அபாயகரமானது. 


ஐந்தருவி..
பேரருவியில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  திரிகூடமலையில் தோன்றி சிற்றாற்றின் வழியே பாயும் இந்த அருவி பாறையில் இருந்து பாயும் இடத்தில் ஐந்து கிளைகளாக பிரிந்து பாய்கிறது.


பழந்தோட்ட அருவி, புலியருவி, பாலருவி..
பேரருவியில் இருந்து எட்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழந்தோட்ட அருவி. புலியருவி இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.  இவை இரண்டும் பேரருவி போல் பிரமாண்டமாய் இல்லையென்றாலும் கூட மக்கள் கூட்டம் பேரருவிபோல் இல்லாததால் பல மணிநேரம் சுதந்திரமாய் குளிக்கலாம். பாலருவி தேனருவிக்கு அருகில் அமைந்துள்ளது. தேனருவியைப் போல் பாலருவியிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பழைய குற்றால அருவி..
தமிழகத்தில் எல்லாமே பழையது, புதியது என்று இருக்கும். உதாரணமாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் என்று இருப்பது போல.  இதற்கு குற்றாலமும் விதிவிலக்கு அல்ல.  ஏனோ குற்றாலத்தையும் பழையது,புதியது என்று பிரித்து விட்டார்கள். பேரருவிதான் புதிய குற்றாலம்.  பழைய குற்றாலத்துக்கு முன்னர் அதிக அளவில் மக்கள் வந்திருக்கலாம், ஆனால் இப்போது பேரருவியில்தான் அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது. இந்த அருவி பேரருவியில் இருந்து 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பேரருவி போலவே இங்கும் தண்ணீர் மிக உயரத்தில் இருந்து பாய்கிறது. கிட்டத்தட்ட பேரருவிபோலேயெ இருக்கிறது இந்த அருவி.


குளித்து முடித்து வந்தால் மிகவும் பசியெடுக்கும் என்பதை புரிந்து கொண்டு பல அருவிகளில் உணவுப் பொருட்கள் விற்பனையும் அதிகம் நடைபெறுகிறது. குளித்து முடித்து பஜ்ஜி, சொஜ்ஜி என பலவற்றை வயிற்றுக்குள் அனுப்பிவிட்டு பின்னாளில் அவதிப்படாதீர்கள். குளித்தவுடன் ஒரு நல்ல ஓட்டலில் சாப்பிட்டு போய் படுத்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.


தண்ணீர் அருவிகளில் சீசன் நேரங்களில் எந்நேரமும் பாய்வதால், சீசன் காலங்களில் இரவு 12 மணிக்கூட மக்கள் குளிக்கத் தயங்குவதில்லை. மது அருந்தி தண்ணீரில் குளிக்கும் இளைஞர் கூட்டமே இரவு நேரங்களில் காணப்படும், சில நேரங்களில் காலை நேரத்தில் இவர்களின் உயிரற்ற உடல்களே கிடைக்கும்.  குற்றாலத்தில் அதிகம் பலியாவது இளைஞர்களே! இவர்களின் உடல்களை கண்டெடுப்பதையே ஒரு தொழிலாக செய்துவருகிறார் குற்றாலத்தில் இருக்கும் கண்ணன் என்பவர். உயிர்கள் பலியாவது ஒருவருக்கு வேலை அளித்திருக்கிறது, என்ன உலகம் இது!


குற்றாலம் போனால் மிகவும் ஜாக்கிரதையா இருங்கள், காவல் துறை சொல்வதை கொஞ்சமாவது கேளுங்கள். உங்களின் உயிர் உங்கள் கைகளில்தான் இருக்கிறது.  


எப்படி போவது?
1)குற்றாலத்திற்கு திருநெல்வேலி, தென்காசி மற்றும் பல இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


2)அருகில் உள்ள ரயில் நிலையம் - தென்காசி 6 கி.மீ தொலைவில்


3)அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை 200 கி.மீ தொலைவில்