Wednesday 21 July 2010

உப ரத்தினங்கள் மருத்துவ குணங்கள் பற்றிய ஒரு சிறப்பு பார்வை..


ரத்ன கற்கள் நவரத்ன கற்கள் மற்றும் உப ரத்ன கற்கள்  என்று இரண்டு வகைப்படும்.



உப ரத்தினங்கள்
சில உப ரத்தினங்கள் (அகேட் , டர்மலீன், டர்க்குவாய்ஸ்ட், அம்பர், அமேதிஸ்ட் , ஓபல், அகுவாமரின்சூரிய காந்த கல் , லேமிஸ் லூயி, சந்திர காந்த கல், கிட்னி ஸ்டோன், ப்ளட் ஸ்டோன், கார்நெட் , ஆனிக்ஸ், ஜஸ்பெர்  , பெரிடாட்) நவரத்தினங்களுக்கு மாற்றாகவும்  விளங்குகிறது. இந்த கற்களை பெரும்பாலும் அனைவருமே அணியலாம். இந்த கற்களுக்குள் நட்பு,பகை,தோசம்  ஆகியவை ஏதும் கிடையாது.இந்த கற்கள் நன்மை மட்டுமே செய்யும்.ரத்தின நிபுணர்களின் பல வருட ஆராய்ச்சிக்கு  பின்னரே இந்த  வகை கற்கள்  நவரத்தின கற்களுக்கு மாற்றாக பரிந்துரை செய்யபட்டன.
அதிகம் பயன்பாட்டில் இருக்கும் உப ரத்தினங்களைபற்றி காண்போம்.

அமிதிஸ்ட் (amethyst) 

கத்தரி பூ நிறத்தில் அழகாக காட்சி அளிக்கும் இந்த கல் தமிழில் செவ்வந்தி கல் என அழைக்கபடுகிறது.




அமிதிஸ்ட்டின் மருத்துவ குணங்கள்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள்,வயிற்றுவலி,மூட்டுவலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும்.  தூக்கமின்மை,மாலைக்கண் நோய் , தோல் வியாதி ஆகியவற்றில் இருந்து காக்கும்.
கார்னட் 



மருத்துவ குணங்கள் 

விஷத்தை முறிக்கும் தன்மை உண்டு , புற்று நோயால் பாதிக்க பட்டவர்கள் இக்கல்லை அணிந்தால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

ஜேட் 


மருத்துவ குணங்கள்

   சிறுநீரக கோளாறு கொண்டவர்கள் இக்கல்லை அணிந்து நிவாரணம் பெறலாம். வயிற்று வலியை குணமாக்கும். வலிப்பு  நோயைகுணமாக்கும். பிரசவ வலியை  குறைக்கும். அனைத்து தோல்  வியாதிகளையும் குணமாக்கும் .
அலெக்ஸாண்ட்ரைட்

இது மிகவும் விலை உயர்ந்தது. ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படும், வெளிச்சம் பட்டால் சிவப்பு  நிறமாக மாறும் இதுவே  இதன் தனித்தன்மை. 

 மருத்துவ குணங்கள் 
முக வாதம்,வாதம் ஆகிய குறைகளை  போக்கும், திக்குவாய் பிரச்சனை உள்ளவர்கள் இக்கல்லை  அணிந்தால் நல்ல பேச்சாற்றல் பெறலாம்..!

அனைவரும்  இக்கல்லை  அணியலாம்.

அகேட்




 மருத்துவ குணங்கள்

தலைவலி, வாயுத்தொல்லையை போக்கும். அசிட்டிடி யை குணப்படுத்தும்.

    சந்திர காந்த கற்கள்  (Moon Stone)

இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும்.ஜலகண்டதில் இருந்து காக்கும்.நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.

மருத்துவ குணங்கள்   

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று  பிரச்சனைகளை நீக்கும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

சூரிய காந்த கற்கள்(Sun Stone)
  

அம்பர் (Amber)



மருத்துவ குணங்கள் 

ஜீரண கோளாறுகளை  சரி செய்கிறது,கருச்சிதைவை தடுக்கும்,கண்பார்வை கோளாறுகள்,காதுவலி,சிறுநீரகம் சம்பந்த பட்ட வலிகள் நீங்கும்.பிரசவ காலத்தில் அம்பர் பொடியை தூபமிட்டால் நன்மை கிடைக்கும்.

அக்வா மெரின் (Aqua Merune)



மருத்துவ குணங்கள்

உடலில்  எப்போதும்  உஷ்னத்துடன் இருப்பவர்கள் இக்கல்லை  அணிந்து கொண்டால் உஷ்ணம் சமனிலை அடையும். வாதம்,பித்தம்  ஆகிய பிரச்சனைகளுக்கு உகந்தது.பல்,கழுத்து  சம்பந்த பட்ட நோய்களை  குணமாக்கும்.
ஆனிக்ஸ் (Onyx)





பெரில் கற்கள் (beryl stone)


பொதுவில் பச்சை நிறம் கொண்ட இந்த கற்கள் நீலம்,சிவப்பு மற்றும்  தேன்  நிறத்திலும் கிடைக்கிறது. 

மருத்துவ குணங்கள்

சிறுநீரக கோளாறுகள் நீங்கும், நரம்பு தளைச்சியை போக்கி  நரம்புகளுக்கு  நல்ல பலத்தை கொடுக்கும்.ரத்த சோகை நீங்கும். வாதம்,பித்தம் ஆகியவற்றை சமன் செய்யும்.தாம்பத்ய வாழ்வில் ஆர்வத்தை கொடுக்கும். தொண்டை,ஈரல் வியாதிகளை குணமாக்கும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment