Saturday 17 July 2010

கர்ப்பிணி தாய்மார்களுக்கு போலிக் அமிலம் அவசியமா?

கர்ப்பகாலம் பெண்களின் தவக்காலம் என்பார்கள். பத்துமாதங்கள் கருவை சுமந்து அதை ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. அதற்கு
தாயானவள் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியம். ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றெடுத்தால் அது குழந்தையின் தலைமுறையை பாதிக்கும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். எனவே கர்ப்பிணி தாய்மார்களுக்கு எந்தெந்த சத்துக்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் படியுங்களேன்.


துத்தநாகம்..
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு துத்தநாகச்சத்து சரியான அளவில் இருக்கவேண்டும். இது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் ஏற்றது. எனவேதான் கர்ப்பிணி தாய்மார்கள் தினசரி உணவில் 15 மில்லிகிராம் புரதச்சத்து அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி இன்றி பிறக்கும் குழந்தைகளுக்கு தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் தொடரும் என்று மருத்துவர்கள் அச்சுறுத்துகின்றனர்.



மெக்னீசியம்..
கர்ப்பகாலத்தில் உயர்ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க மெக்னீசியம் உதவுகிறது. எனவே தினசரி 200 மில்லிகிராம் அளவிற்கு மெக்னீசியம் சத்து அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தானியங்கள், பருப்புகள், இலைக்காய்கறிகளில் மெக்னீசியம் அதிக அளவில் கிடைப்பதால் கர்ப்பகாலத்தில் அவற்றை தவறாமல் உட்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பி வைட்டமின்கள்
கர்ப்ப காலத்தில் மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. எனவே வைட்டமின் பி உணவுகள் இந்த மனஅழுத்தத்தை தடுக்கிறது. தினசரி 200 மில்லிகிராம் பி6 வைட்டமின்களை உட்கொண்டால் அது கரு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. அதேபோல் வைட்டமின் பி 12 உணவுகள் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு ஏற்றது.
மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனித மூளைக்கு அவசியமானது. டிஹெச்ஏ குறைபாடு ஏற்படாமல் இது தடுக்கிறது. சல்மான், டுனா வகை மீன்களை கர்ப்பிணிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.
அதேபோல் கர்ப்பகாலத்தில் தினசரி 1500 மில்லிகிராம் வரை கால்சியம் சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல் கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி சத்தும் அவசியமானது. கால்சியம் மாத்திரைகளாக உட்கொள்வதை விட யோகர்டு போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.

இரும்பு சத்து
கர்ப்பிணிகள் தினசரி 18 முதல் 36 மில்லிகிராம் வரை இரும்புசத்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து குறைபாடினால் அனீமியா ஏற்படுவதோடு அது பிரசவத்தை சிக்கலாக்கிவிடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும் ஏற்படும் வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பகாலத்தில் தைராய்டு ஹார்மோன் குறைபாடு ஏற்படுவது இயல்பு. எனவே தைராய்டு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அதேபோல் கர்ப்பிணிகள் தினசரி சரியான அளவு தண்ணீர் பருகவேண்டும். இல்லையெனில் உதடு, வாய் போன்றவை வறட்சியாகிவிடும். எனவே கர்ப்பகாலத்தில் உடம்பில் தண்ணீர் சத்து குறையாமல் அடிக்கடி தண்ணீர் பருகவேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
அதேபோல் கர்ப்பகாலத்தில் தினசரி 8000 யூனிட்டிற்கு மேல் வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். அதேபோல் கர்ப்பகாலத்தில் புகைப்பதையோ, மது அருந்துவதையோ தவிர்க்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அதேபோல் கர்ப்பகாலத்தில் கடினமான உடற்பயிற்சி மேற்கொள்வதையோ, 102 டிகிரிக்கு மேல் சூடான நீரில் குளிப்பதையோ தவிர்க்கவேண்டும் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாகும்.


போலிக் அமிலம்
போலிக் அமிலச் சத்தானது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. நரம்பியல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது. எனவேதான் தினசரி 400 முதல் 800 மைக்ரோகிராம் வரை போலிக் அமிலம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கர்ப்பிணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். இது பச்சைகாய்கறிகளிலும், இலைக்காய்கறிகளிலும் காணப்படுகிறது.

கர்ப்பமாயிருக்கும்போதுகர்ப்பிணி பெண்கள்உட்கொள்ள வேண்டும் என்பது இப்பொழுது பரவலாகத் தெரிந்த விடயம்தான். கர்ப்பணி நலம்பேணும் கிளினிக்குகளில் இது அனைத்துத் தாய்மார்களுக்கும் வழமையாக வழங்கப்படுகிறது.

போலிக் அமிலம் என்பது அது ஒரு வகை விட்டமின் ஆகும்.



எத்தகைய பாதிப்பு...

இது எமது உடற்கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களின் (Chromosome) நியுகிலிய அமில உற்பத்திக்கு மிக அவசியமானதாகும்.

எனவே கர்ப்பகாலத்தில் தாய்க்கு இது குறைபாடாக இருந்தால் கருவின் நரம்பு மண்டல வளர்ச்சி பாதிப்படையும்.

இதனால் மண்டை ஓடு, முள்ளந்தண்டு ஆகியவற்றில் பிறவிக் குறைபாடுகள் ஏற்படும்.

இது பாரிய பிரச்சனை என்பதால்தான் இக் குறைபாட்டைத் தடுப்பதற்கு அனைத்துக் கரப்பிணிகளுக்கும் போலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

அத்துடன் அது எமது இரத்தத்தின் செறிவிற்கும் அவசியமானது.

அதாவது செங்குருதிக் கலங்கள் எலும்பு மொச்சையில் உற்பத்தியாவதற்கு அவசியமானது. அதாவது இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கத் தேவையாகும்.


ஏன் குறைபாடு ஏற்படகிறது

எமது உடலில் போலிக் அமிலக் குறைபாடு ஏற்படுவதற்கு போசணைக் குறைபாடே முக்கிய காரணமாகும்.

அத்துடன் கர்ப்பமாயிருக்கும் போதும் பாலூட்டும் போதும் போலிக் அமிலத்தின் தேவை அதிகரிக்கிறது. அந்நேரத்தில் அதன் குறைபாடு இருந்தால் கரு பாதிப்படைவதுடன் தாயும் இரத்த சோகைக்கு ஆளாவாள்.

குறைபாடு எற்படாதிருக்க என்ன செய்ய வேண்டும்.

இதைத் தடுப்பதற்கு போலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.



ஈரல், இறைச்சி, பால், பாற் பொருட்கள். முட்டை, தானியங்கள், கீரைவகைகள் ஆகியவற்றில் அதிகமாக இருப்பதால் அவற்றை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.

சாதாரணமாக ஒருவருக்கு தினமும் 400 மைக்ரோ கிராம் போதுமானது.

ஆயினும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தினமும் 5 மி.கி போலிக் அமிலம் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுப்பதால் நரம்பு மண்டலப் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியம் 72 சதவிகிதத்தால் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

எப்பொழுது எவ்வளவு காலத்திற்கு?

கரு தங்குவதற்கு ஒரு மாதம் முன்னரே  ஆரம்பித்து முதல் 12 வாரங்களுக்கு தவறாது உட்கொள்வது மிகவும் அவசியமாகும். ஆயினும் தொடர்ந்து கர்ப்ப காலம் முழுவதும் உட்கொள்வது நல்லது.  குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து 6மாதங்கள் தொடர்ந்தால்  இரத்தசோகை ஏற்படாமல் தடுக்க உதவும்.

இங்கு பலரும் மாதவிடாய் நின்று கர்ப்பம் என்பது நிச்சமாகிய பின்னரே உபயோகிக்கத் தொடங்குகிறார்கள். இது நல்ல முறை அல்ல. கரு தங்க முன்னரே உபயோகிக்க ஆரம்பிப்பதே சிறப்பானது.

எந்தப் பெண்ணும் மாதவிடாய் தள்ளிப் போன பின்னரே தான் கர்ப்பமாகியதை உணர்வாள். ஆனால் மாதவிடாய் கடப்பதற்கு பதின்னான்கு தினங்களுக்கு முன்னரே அவளது சூலகத்திலிருந்து முட்டை வெளியாகி அது ஆணின் விந்துடன் கலந்து கரு உற்பத்தியாகிறது.

எனவே மாதவிடாய் தள்ளிப் போகும்வரை காத்திருப்பது உசிதமல்ல. பெண்கள் திருமணமாகி கர்ப்பம் தங்குவதற்குத் தாங்கள் தயாராகும் போதே ஆரம்பிக்க வேண்டும். குறைந்தது ஒருமாதம் முன்னரே ஆரம்பிப்பது சிறப்பானது.




மேலதிக தகவல்களுக்கு

பிரித்தானிய தேசிய சுகாதார சேவையின் 'போலிக் அமிலம் ஏன் பெண்களுக்கு அவசியம்?' என்ற தொடுப்பிற்கு Why Folic acid is important in pregnancy

நன்றி : டாக்டர்.எம்.கே.முருகானந்தன்.


தொகுப்பு : .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment