Saturday 6 March 2010

கொரியா மற்றும் ஜப்பானில் தலைவணங்கும் பழக்க வழக்கம் பற்றிய பார்வை..


பல நூறு ஆண்டுகளாகவே கொரியா   மற்றும் ஜப்பானில் தலைவணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. வரவேற்பு, வழியனுப்பல், மரியாதையைக் காட்டல், மன்னிப்புக் கோருதல், தன்னடக் கத்தைக் காட்டல், புரிதலை உணர்த்தல், அனுமதியைத் தெரிவித்தல், இப்படி ஒரே தலையை தாழ்த்துவதன் மூலம் எல்லாவித மான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவது  கொரியர்களின் பழக்கம். எப்பொழுது இந்தப் பழக்கம் தொடங்கியது என்று அறுதி யிட முடியாது என்பது மிகவும் தெளிவான உண்மை. ஏனென்றால், இது மிருகங்களிடமும் காணப்படுகிறது. பல குரங்குகள் பலம் வாய்ந்த குழுத்தலைவனைக் கண்டதும் தலை தாழ்த்துகின்றன என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக் கிறது. எப்பொழுது, எப்படி, ஏன், எதற்காக இந்த வழக்கம் தோன்றியதுஎன்ற சர்ச்சைக் கெல்லாம் அப்பாற்பட்டது. ஒவ்வொரு கொரியரும் இந்தக் கலையைக் கற்றுத் தேறவேண்டியதன் அவசியம், ஓவ்வொரு நடவடிக்கைச் சூத்திரங்களைப் போலவும் கொரியாவில் தலைவணங்குதல் ஒரு கலையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கலை என்று பொது வில் சொன்னாலும், ஷோகன் காலங்களில் இது ஓர் உயிர்காக்கும் வித்தையாக வும் இருந்திருக்கிறது. சரியான சமயத்தில் சரியான படி தாழாத தலைகள் சாமுராய்களின்வாள் களுக்கு இரையாகியிருக்கின்றன. தன்னைவிட வலியான் முன் தன்னைத் தாழ்த்திக் கொள் வது ஒரு வகையில் மிருகத்தனமான பிழைத்தல் உத்தி. பல வாக்கியங்களில் காட்ட முடியாத பணிவை ஒரே தலையை ஒரு நொடிக்குத் தாழ்த்துவதன் மூலம் சந்தேகத் திற்கு இடமில்லாமல் தெளிவாக்க முடியும். அந்தக் காலங்களில் (கி.பி. 1200-1868) பிறந்த குழந்தைகளுக்கு நடக்கத் தெரியுமுன் தலைவணங்கக் கற்றுக் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 


jappp

அதாவது, குழந்தை தவழ்ந்து தலை நிமிரத் தொடங்கும் காலத்தில் பெரியவர்களின் முன்பும், தெய்வத்தின் முன்னும் குழந்தையின் தலையைப் பிடித்து அமுக்கி எடுத்து அதை ஒருவகையில் அனிச்சைச் செயலாகவே அந்தக் குழந்தைக்கு ஊட்டியிருக்கிறார்கள். “மினோரு ஹொதோ, அதாமானோ ஹிக்குக்கி, இனாஹோ கனா” என்று ஜப்பானிய மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது. அதன் பொருள் “எத்தனை முதிர்கிறதோ அந்த அளவிற்கு நெற்பயிரின் தலை தாழும்”. தலை தாழத்து வது பணிவைக் காட்டுவது மாத்திரமல்ல, நேரமறிந்து தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் அறிவு முதிர்ச்சியாகவும் அறியப்படுகிறது.
இப்படி பல ‘தலை’முறைகளாக தாழ்ந்து கொண்டே இருப்பதால் மரபணுக்களில் கூட ஒரு வளைவு இருக்கலாம் என்று என்னுடைய நண்பர் ஒருவர் (மரபு நுட்ப விஞ்ஞானி) செல்லமாகச் சொல்லுவார். எது எப்படியோ இன்னும் வரும் தலைமுறைகளும் அனிச்சை யாகவே தாழும் என்று ஓரளவிற்கு நம்பிக்கையுடன் சொல்லலாம். அது சரி, புதிதாக ஜப்பான் செல்பவர்கள் எவ்வளவு தூரம் தலை தாழ்த்த வேண்டும்.
பொதுவில் மூன்று நிலைகளில் தலை தாழ்த்த லாம். முதலாவது இடுப்பிற்கு மேலுள்ள பாகங்களை முற்றாக மடக்கி முன் குவிதல். இந்த நிலைக்கு சய்-கிய்ரெய் என்று பெயர். (கோணம் 90). இது ஷோகன்களின் முடிவிற்குப் பிறகு பெரிதும் குறைந்து போய்விட்டது. இன்றைக்கும் கோவில்களில் புத்தர்களின் சிலைக்கு முன்னர் இதுபோல் ட – ப்போல் வளைவதைக் காணமுடியும். அதாவது தனக்கு முன் உள்ளவருக்கு ஒப்பிடும்போது தனக்கு எந்தவிதத் தகுதியும் இல்லை என்ற நிலையில் (கடவுளுக்கு, N ஷாகன்களுக்கு, ஸாமுராய்களுக்கு முன்னால் ) தலை இப்படித் தாழும்.

இந்த நிலையில் கைகள் முழங்காலில் ஊன்றப்படும். இந்த உடல்மொழியில் என்னுடைய கைகளுக்கு உன்னிடம் எதுவும் வேலையில்லை (கத்தியை உருவப் போவதில்லை) என்று அர்த்தமாகிறது. இரண்டாவதாக (கோணம் 45), மரியாதை, மன்னிப்பு, போன்றவையை உணர்த்த தலை கிட்டத்தட்ட நாற்பத்தைந்து டிகிரி தாழ வேண்டும். மரியாதைக்குரிய ஒரு நபரை (உதாரணமாக, நிறுவனத்தின் மேலாளர், கல்லூரி ஆசிரியர்) போன்றவர்களைப்பார்க்கும் பொழுது இந்த நிலையில் வணங்க வேண்டும். துக்கத்தை உணர்த்தவும் இதேதான். இந்த நிலையில் கைகள் இருபுறமும் உடலை ஒட்டினாற்போல் தொங்கவிடப்பட வேண்டும். (கைகளில் ஏதாவது பொருள் இருந்தால் பாதகமில்லை). மூன்றாவதான நிலையில்தான் ஜப்பானியர் களின் தலைகள் கணக்கு வழக்கில்லாமல் காலந்தோறும் தாழ்ந்து உயருகின்றன.
இதற்குத் தேவையான கோணம் இருபது டிகிரி. சராசரி சக ஊழியருக்குக் காலை வணக்கம் தெரிவிக்க, அவருக்கு மாலையில் விடை சொல்லிக் கொள்ள என்று பொதுவான எல்லா நிகழ்வுகளுக்கும் இந்த வணக்கம் போதுமானது. இதற்கு ஜப்பானிய மொழியில் ஓ-ஜிகி என்று பெயர். இந்த ஓஜிகிதான் ஜப்பானை இயக்கிக் கொண்டிருக்கிறது. இதில் கோணம் மாத்திரம் போதாது, தலைதாழும் கால அளவும் முக்கியம். மிகவும் ஆபத்தான கட்டங்களில் ஜப்பானியர்கள் எதிரில் இருப்பவர் பொறுமையிழந்து ஒரு வார்த்தை சொல்லும்வரை தலை தாழ்ந்து நிற்பதைக் கண்டிருக்கிறேன்.
தவறு செய்த ஆய்வக மாணவன் என்னுடைய ஆசிரியருக்கு முன்னால் அப்படி அங்கம் புழுவாக நெளிய அண்டத்தை முழுவதும் அவருடைய காலடியில் சமர்ப்பிப்பதுபோல் நின்றிருந்ததைப் பார்த்திருக்கிறேன். பொதுவில் முதல்வகை சய்-கிய்ரெய் வணக்கம் நான்கு அல்லது ஐந்து நொடிகளுக்கு நீடிக்கும். இரண்டாம் வகை மரியாதை சராசரியாக இரண்டு நிமிடம். மூன்றாவது, வழக்கமான வகை, பெரிதும் தாழ்ந்து-உயருவதுடன் முடிந்துபோகும். எனவே தெரிவிக்கப்படும் மரியாதையின் அளவு (தலைதாழ் கோணம் ஓ தாழ்ந்த நேரம்) பெருக்கத்தின் நேரடி விகிதத் தில் அமையும். என்றாலும் கோணம்தான் மிகவும் முக்கியம். அதாவது தலையை 20 டிகிரி ஐந்து நொடிகளுக்குத் தாழ்த்திக் கொண்டிருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லை.

இன்னும் சில கட்டங்களில் பெரும் தவறு செய்தவர்கள் தலையை சய்-கிய்ரெய்யில் குனிந்த வாக்கில் இரண்டு மூன்று முறை குலுக்குவதையும் கண்டிருக்கிறேன். இதுபோன்ற அதீத மரியாதைகள் மன்னிப்புக்கு மாத்திரமே கடை பிடிக்கப்படும். பொதுவில் ஜப்பானியர்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் தலை வணங்குகிறார்கள். (ஜப்பானிய சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி இன்னொரு நாள்). ஒருமுறை நடத்தப் பட்ட ஆய்வில் டோக்கியோவில் பரபரப்பான இக்கிபுக்குரோ என்ற இடத்தில் இருக்கும் மிட்சுகோஷி பேரங்காடியில் விற்பனை பெண்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 2600 முறை தலைவணங்குகிறார்கள் என்று கணக்கிட்டிருக் கிறார்கள்.
சுற்றியிருப்பவர்கள் இப்படித் தலை வணங்கிக் கொண்டேயிருக்கும்போது எவ்வளவு உறுதியான வணங்காமுடியாக இருந்தாலும் வெளிநாட்டவரின் தலைகளும் தாழுவதைக் கண்ணால் கண்டிருக்கிறேன் (என்னுடைய தாழ்ந்த தலையின் கண்களால்தான்). இன்னும் பலமுறை வெளிநாட்டு நண்பர்கள் தொலை பேசியில் பேசும்போதும் தலை தாழ்த்துவதைக் கூடப் பார்த்திருக்கிறேன். இப்படித் தொற்று வியாதியாகவும், அனிச்சைச் செயலாகவும் பரவியிருக்கும் கொரியா சமூகத்தில் தலைதாழ்த்தல் இல்லாமல் போய்விடும் என்று யாராவது சொன்னால் அவர்களைப் பார்த்துச் சிரிக்கத்தான் தோன்றும். எப்பொழுது, எப்படி, ஏன், எதற்காக இந்த வழக்கம் தோன்றியது என்ற சர்ச்சைக்கெல்லாம் அப்பாற்பட்டது ஒவ்வொரு கொரியா  மற்றும் ஜப்பானியரும் இந்தக் கலையைக் கற்றுத் தேறவேண்டியதன் அவசியம். ஒவ்வொரு நடவடிக்கைச் சூத்திரங்களைப் போலவும்கொரியா  மற்றும்  ஜப்பானில் தலைவணங்குதல் ஒரு கலையாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment